
அடையாலம் தெரியாத சில எதிரிகள் பூமியை தாக்கறாங்க... அப்போதான் நிக்ஃபெரி என்பவர் (Director of the international peacekeeping agency known as S.H.I.E.L.D.,) நம்ம ஹீரோஸ் iconic Marvel Super Heroes 1. Iron Man, 2. The Incredible Hulk, 3. Thor, 4. Captain America, 5. Hawkeye and 6.Black Widow இவங்க 6 பேரையும் வர வெச்சு அவங்களை முடிச்சுக்கட்டறார்.. அதான் கதை..
பசங்களை கவர்ந்தது ஹல்க் எனும் பச்சை மனிதன் தான்.. சம்சாரம் மேல கோபப்பட்ட புருஷன் துணி துவைக்கற மாதிரி அவர் வில்லனை நிஜமாவே துவைப்பது செம கலக்கல்.. கால்ல 2 ராக்கெட்டை பற்ற வெச்சது மாதிரி வர்றவரும் குழந்தைகளை குதூகலப்படுத்தறார்.. கைல சுத்தியை வெச்சு அலையறவர் செம காமெடி.
கிராஃபிக்ஸ் காட்சிகள் பல இடங்களீல் கலக்கல் என்றாலும் சில இடங்களீல் சலிப்பு.. எப்போ பாரு யாராவது ஷூட் பண்ணிக்கிட்டே இருப்பது கண் வலியைத்தான் தருது..

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்
1. டென்சனே இல்லாம இருக்க இந்த இடம் தானா உனக்கு கிடைச்சுது?
நோ நோ
பின்னே , இங்கே எதுக்கு வந்தே? யோகா பண்ணவா?
2. ஹல்க்கா மாறாதவரை அவன் கிளவராத்தான் இருந்தான்
3. மனித இனத்தின் மாபெரும் விஷயம் அடிமைத்தனத்தை உள்ளூர விரும்புவதே
4. சரித்திரம் என்னை மாதிரி யாரையும் பார்த்திருக்காது
உன்னை மாதிரி பலரைப்பார்த்ததால தான் அது சரித்திரம்
5. தாக்கறதுக்கு முன்னால திட்டம் போடனும்
திட்டம் ஆல்ரெடி போட்டாச்சு.. இப்போ தாக்கப்போறேன்..
6. கூடிய சீக்கிரம் உனக்குத்தெரிய வரும்.
கூடிய சீக்கிரம்னா எத்தனை நாள்?

7. உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சா?
ஆமா, சீரியஸான விளையாட்டு
8. நீ கூப்பீட்டேங்கறதுக்காதுக்காக நான் இங்கே வர்லை. எனக்கே வேலை இருந்தது ஹி ஹி
ஓஹோ நீ கூமுட்டை இல்லைங்கறே..
9. ஹல்க் - ஒரு ரகசியம் சொல்லவா? பிறந்ததுல இருந்தே நான் பயங்கரக்கோபக்காரன் ( நர்சை கடிச்சு வெச்சுட்டியா?) நன்னாரிப்பயலே.. )
10. மனித நேயம் இல்லாதவன் வாழ்ந்தா என்ன? செத்தா என்ன?
11. எங்க மக்கள் எல்லாருமே அமைதியை விரும்பறாங்க .
ஆனா சிலர் ஃபைட்டையும் விரும்பறாங்களே..
12. ஹீரோ மாதிரி நடிக்காதே ..
அப்போ நீங்க பண்ணிட்டு இருக்கறதுக்குப்பேரு என்ன?
13. உங்களால என்னைக்கொல்ல முடியாது, ஏன்னா என்னாலயே என்னை கொல்ல முடியலை.. ஒரு தடவை என்ன நானே கன் ல சுட்டேன்.. அப்போ எனக்குள்ள இருந்த இன்னொரு ஆள் அந்த குண்டை துப்பீட்டான்

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஓப்பனிங்க்ல ஒரு ஃபிகரு சேர்ல கயிறால கட்டி உட்கார வைக்கப்பட்டிருக்கு. ( தல அஜித் பில்லா - 2 ல போஸ் குடுக்கறாரே அது போல ) அவளை சுத்தி 3 பேரு. அப்போ அவளுக்கு ஒரு ஃபோன் வருது.. பேசரவ 2நிமிஷம் லைன்ல வெயிட் பண்ணுனி சொல்லி ஒரு ஜம்ப் பண்ணி செம ஃபைட் போடறா பாருங்க.. தியேட்டரே அதிருது கிளாப்ஸ்ல.. செம சீன்.. ( பி கு - அந்த சீனில் ஃபிகர் லோ கட் டி சர்ட் ஹி ஹி )
2. மெஷின் மேன் நடந்து வரும்போதே ரோபார்ட் அவரோட எல்லா பார்ட்ஸையும் டக டக என உள் வாங்கி க்ளோஸ் ஆவது கலக்கல் ஸ்பீடு
3. கடலில் பயணீக்கும் பிரம்மாண்ட கப்பல் திடீர்னு ஹெலிகாப்டரா மாறி பறப்பது சூப்பர்
4. சாதா மனுஷன் நீ என்ன பண்ன முடியும் ? என வில்லன் கேட்கறப்ப ஹல்க் எனும் பச்சை மனிதன் அவனை காலை பிடிச்சு ஒங்கி தரைல அடிக்கறாரே ஆக்ஷன் செம

இயக்குநர் சொதப்பிய இடங்கள்
1. சாதா மனுஷனா இருக்கும் ஆள் 42 சைஸ் சர்ட்டும், 90 சைஸ் பனியனும் அணீஞ்சிருக்கார். ஹல்க்கா மாறூம்போது அவர் சட்டை , பனியன் எல்லாம் கிழியுது.. ஏன்னா அவர் ராட்சச மனுஷனா ஆகிடறார்.. ஆனா பேண்ட் மட்டும் கிழியல/./ அது எப்படி? ஹி ஹி ( குழந்தைங்க எல்லாம் பார்க்கறதுக்காகவா இருக்கும் )
2. ஹல்க் ஒரு ஜெட் விமானத்துல போற வில்லனை பிடிச்சு டக்னு விமானியா இருக்கற அந்த ஆலை தூக்கி எறிஞ்சுட்டா மேட்டர் ஓவர்.. அதை விட்டுட்டு வேலை மெனக்கெட்டு விமானம் இஞ்சினை டேமேஜ் பண்ணி 10 நிமிஷம் கழிச்சு விமானியை ஏன் தூக்கிப்போடனும்?
3. ஹல்க் ஒரு இடிஞ்ச கட்டடம் அருகே விழுந்ததும் ஒரு ஆள் நீங்க இரு மாறுனா யூஸ் ஆகும்னு எடுத்து வெச்சேன்னு அந்த பேண்ட்டை குடுக்கறார்.. அவருக்கு எப்படி ஹல்க் பற்றி தெரியும்? அதே சீனில் அவர் ஹல்க்கை நீங்க ஏலியனா? என விசாரிக்கும் சீன் வருது.. அப்போ அவரைப்பற்றி தெரியாதவர் எப்படி ஆர்டினரியா மாறுவார்னு கண்டு பிடிச்சார்>?

சில படங்களை கேள்வி கேட்காம ரசிக்கனும்பாங்க.. அந்த வகைல இதுவும் குழந்தைங்க , பசங்க ரசிக்கும் படமே
ஈரோடு ஆனூரில் இந்தப்படம் பார்த்தேன்..
டிஸ்கி - http://www.hotlinksin.com
திரட்டி குறித்து நேற்றே நாம் எழுதியிருந்தோம். நேற்று ‘மாலைச்சுடர்’ மாலை நாளிதழில் www.hotlinksin.com
திரட்டி குறித்து வெளியாகியிருந்த கட்டுரையில் இந்த திரட்டி பதிவுகளை எழுதும் பதிவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. விரைவில் இதற்கான அறிவிப்புகளை www.hotlinksin.com
திரட்டி அறிவிக்க உள்ளது. எனவே பதிவுலக நண்பர்கள் உடனே ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து பரிசுகளை வெல்லத் தயாராகிக் கொள்ளுங்கள்