ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் விமான நிலையத்தில் செக்கிங்க் செக்சனில் வேலை பார்ப்பவர் .பயணிகளின் லக்கேஜ்களை மானிட் ட ர் செய்து கிளியர் பண்ணி விடும் வேலை . இவருக்கு ஒரு போலீஸ் ஆபீசர் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம் . பல வருடங்களாக நன்றாக வேலை பார்த்தும் பிரமோஷன் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இவருக்கு உண்டு . இவருக்கு ஒரு காதலி உண்டு . லிவ்விங்க் டுகெதர் வாழ்வில் இப்போது அவர் கர்ப்பமாகஇருக்கிறார் . காதலியும் அதே விமான நிலையத்தில் வேறு செக்சனில் வேலை பார்ப்பவர் .
ஒரு நாள் வில்லன் நாயகனுக்கு கால் பண்ணி இப்போ ஒரு லக்கேஜ் வரும், அதைக்கண்டுக்காம விட்டுடு . என் ஆள் சிவப்புக்கலரில் தொப்பி போட்டிருப்பான் . என் பேச்சை மீறி நீ ஏதாவது செய்ய நினைத்தால் உன் காதலி காலி என மிரட்டுகிறான் . நாயகன் வில்லன் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு ஹையர் ஆபீசர்சை எச்சரிக்க முயற்சிக்கிறான் , ஆனால் அது நடக்கவில்லை . வில்லன் நாயகனை கேமரா மூலம் கண்காணிக்கிறான் .எதுவும் செய்ய முடியாத சூழல் . இப்படி இருக்கும்போது நாயகன் அந்த சூட்கேசில் டைம் பாம் இருப்பதைக்கண்டு பிடிக்கிறான் . இதற்குப்பின் அவன் மேற்கொள்ளும் சாகசங்கள் தான் மொத்தத்திரைக்கதையுமே
டாரூன் எஜ்ர்டடன் தான் நாயகன் .படம் முழுக்க அவரது ஆதிக்கம் தான் .கலக்கி இருக்கிறார் நடிப்பில் . ஆக்சன் சீக்வன்சில் .நாயகி ஆக சோபியா கர்சன் அழகாக வந்து போகிறார்
டேனியல் டெட்லியர் ஏர் போர்ட் ஸ்பேஷல் ஆபீசர் ஆக வருகிறார் . ஜேசன் பேட்மான் தான் வில்லன் .கடுப்பேற்றும் வில்லத்தனம்
லைல் வின்செண்ட்டி ன் ஒளிப்பதிவு கலக்கல் ரகம் . லாரன் பெல்லீவின் பின்னணி இசை விறுவிறுப்பு . எடிட்டிங்க் காண கச்சிதம் 119 நிமிடங்கள் ஓடுகின்றன . ஒரு சீன கூட போர் அடிக்கவில்லை
சபாஷ் டைரக்டர்
1 ஓடும் காருக்குள் ஒரு தள்ளு முள்ளு பைட் சீன் செமையாக படமாக்கப்பட்டவிதம் . இதற்கு முன் எந்தப் படத்திலும் வராத சீன்
2 கமலின் குருதிப்புனலி ல் வில்லனால் மிரட் டப்பட்டு நாயகன் வேறு வழி இல்லாமல் வில்லன் சொன்னபடி கைப்பாவையாக மாறுவதும் , பின் சாகசம் செய்வதுமான ஒன் லைன் தான் இதுவும் என்றாலும் மாறுபட திரைக்கதை
3 டைம் பாம் இருக்கும் விமானத்தை நிறுத்தினால் வில்லன் பாமை வெடிக்க வைத்தது விடுவான் . அப்போ ஏர்போர்ட்டில் சேதம் அதிகமாகும், .இந்த சூழலை நாயகன் கையாளும் விதம் கை தட்ட வைக்கும்
ரசித்த வசனங்கள்
1 கர்ப்பிணிப்பெண்கள் காபி குடித்தால் கருவுக்கு /பிறக்கப்போகும் குழந்தைக்கு ஆபத்து .அவங்க ஐ க்யூ பாதிக்கபப்டும்
2 பொறுமைன்னா என்ன?ன்னே தெரியாத 2 லட் சம் கஸ்டமர்ஸை சமாளிக்கணும்
3 மீட்டிங்க்கு கேடடா வந்துட்டு பிரமோஷன் வேற வேணுமாக்கும் ?
4 ஒரு விஷயத்தை முயற்சி பண்ணாமயே ஒதுக்குவது தப்பு
5 நீ என்ன செய்யணும்? தெரியுமா? நீ பண்ண வேண்டிய எதையுமே பண்ணாமல் இருக்கனும்
6 உலகம் உன்னைத்தோற்கடிக்க நினைச்சா நீ தோத்துடுவியா ?
7 இந்த உலகம் எப்படி இயங்குது தெரியுமா? கட்டுப்படுத்தறவங்க இருப்பாங்க .அவங்களுக்குகட்டுப்படுபவர்கள் இருப்பாங்க . இந்த இரு தரப்புகள் தான் மொத்த உலகத்தையும் இயக்குது
8 காரியம் பெருசா இருந்தா அதை செயல்படுத்துபவர்கள் இந்த உலகத்துல கம்மியாத்தான் இருப்பாங்க
9 இந்த உலகத்துல யார் கிட் டயாவது மனம் விட்டுப்பேசலாம்னா அது இந்த உலகத்துக்குப்பிடிக்காது போல
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கு .தப்பிக்கணும் .டைம் பாமை வெடிக்க வைக்கநும் .இதை எல்லாம் விட்டுட்டு நாயகியைத்துரத்தி கொலை செய்ய முயற்சிப்பது லாஜிக்கே இல்லை
2 நாயகன் யூனிபார்ம் போட்டிருக்கிறான் .ஏர்போர்ட்டில் அனைவர் முன்னும் செக்கிங்க் லைனைத்தாண்டி ஓடுகிறான் .ஹையர் ஆபீஸரஸ் க்கு எதோ விபரீதம் என்பது தெரியாதா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - விறுவிறுப்பான ஆக்சன் படம் பார்க்க விரும்பும் அனைவரும் பார்க்கலாம் . ரேட்டிங் 3 / 5
Carry-On | |
---|---|
Directed by | Jaume Collet-Serra |
Written by | T.J. Fixman |
Produced by | Dylan Clark |
Starring | |
Cinematography | Lyle Vincent |
Edited by |
|
Music by | Lorne Balfe |
Production companies |
|
Distributed by | Netflix |
Release date |
|
Running time | 119 minutes |
Country | United States |
Language | English |
Budget | $47 millio |