அரசியலில் புதுத்திருப்பம்.வை கோவை அவமானப்படுத்திய அம்மா பாடம் கற்க வேண்டிய தருணம் வந்து விட்டது.3 வது அணி உருவானால் கலைஞருக்கு கொண்டாட்டம். தமிழனுக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் போச்சு.எம்ஜிஆரையே மதிக்காதவர் தான் இந்த ஜெ.கூட்டணிக்கட்சித்தலைவர்களை இவரைப்போல் கேவலப்படுத்தியவர்கள் யாரும் இலர்..
1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பரதன்: தொழில் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் போவதாக திரிணமுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழில் துறையினருடன், எதிர்க்கட்சியினர் தொடர்பு வைத்துள்ளது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இவ்வளவுதானா? நான் கூட நீரா ராடியா கூட வர்த்தகத்தொடர்போன்னு நினைச்சு பயந்துட்டேன்..
--------------------------------------------------
2. சர்வதேச ஆடிட்டிங் நிறுவனமான கேபிஎம்ஜி: கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் அதிகரித்து வரும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் நாட்டின் நம்பகத்தன்மை, குறிப்பாக சர்வதேச அளவில், பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களில் பதட்ட சூழலை உருவாக்கியுள்ளது.
அப்போ 2 வருஷத்துக்கு முன்னால மட்டும் இவனுங்க யோக்கியமா நடந்திருப்பாங்கன்னு அர்த்தம் இல்லை.. அப்போ வெளில தெரியலை. இப்போ வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு.. அவ்வளவுதான்
-----------------------------------------------
3. இந்திய கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன்: காங்., - தி.மு.க., கூட்டணியின் தவறான கொள்கைகளை முறியடிக்கும் வகையில், அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணி, மக்கள் ஆதரவு பெற்ற மகத்தான கூட்டணி.
எங்கே.. அம்மா இந்த வை கோவை கேவலப்படுத்தி ஆப்பு வெச்சுக்கிட்டாங்களே..3வது அணி உருவானா அம்மாவுக்கு சங்கு... கலைஞருக்கு நுங்கு.
----------------------------------------------------
4. தமிழக காங்., தலைவர் தங்கபாலு: கடந்த தேர்தலில் நாங்கள் 48 இடங்களில் போட்டியிட்டோம்; தற்போது, 63 இடங்களில் போட்டியிடுகிறோம். 2004 லோக்சபா தேர்தலில், இந்தக் கூட்டணியில், 10 தொகுதிகளில் போட்டியிட்டோம்; 2009 லோக்சபா தேர்தலில், 16 இடங்களைப் பெற்றோம். இப்படி, காங்கிரசுக்கு முன்னேற்றம் ஏற்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆமாமா.. செம முன்னேற்றம் தான்.. அப்பவெல்லாம் காங்கிரஸ்ல 4 கோஷ்டிதான் இருந்தது.. இப்போ 32 கோஷ்டி இருக்கே.. கட்சி எம்பூட்டு வளர்ந்திருக்கு...
----------------------------------------
5. தி.மு.க., செய்தித் தொடர்பாளர் இளங்கோவன்: கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகளைப் பகிர்ந்துள்ளது, புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது. தொகுதிகள் பற்றிய புதிய நிலவரத்தை அறியவும், இதன் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. லாப, நஷ்ட கணக்கில் தொகுதிகளை பிரித்துக் கொள்ளவில்லை; விட்டுக் கொடுத்து தொகுதிகளைப் பிரித்துக் கொண்டுள்ளோம்.
அண்ணே.. விட்டுக்குடுத்துன்னு மொட்டையா சொன்னா மக்களுக்கு என்ன புரியும்? தன்மானத்தை விட்டுக்குடுத்துன்னு விளக்கமா சொல்லுங்க...
---------------------------------
6. நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக்: அ.தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தியதில், நாங்கள் கோரிய தொகுதிகளைக் கொடுக்க அவர்களுக்கு மனமில்லாதது தெரிந்தது; அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வதே சுயமரியாதைக்கு ஏற்றதென முடிவெடுக்கப்பட்டது; இதனால், அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து எங்கள் கட்சி விலகிக் கொள்கிறது.
உள்ளத்தை அள்ளித்தா படம் தான் உங்க மாஸ்டர் பீஸ் காமெடின்னு எல்லாரும் நினைச்சுட்டு இருந்தாங்க.. இப்போ இந்த பேட்டியால அந்த ரெக்கார்டையே உடைச்சுட்டீங்க..மானங்கெட்டுப்போய் 3 சீட் கேட்டிருப்பீங்க.. அந்தம்மா ஒரு சீட் மட்டும் தர்றேன்னு கேவலப்படுத்தி இருக்கும்..
----------------------------------
7. தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: பா.ஜ., ஆளும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் குறுகிய காலத்தில், மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளன. அப்படியொரு வளர்ச்சியை, தமிழகத்தில் கொண்டு வர பா.ஜ., பாடுபடும் என்பதால், தேர்தலில் எங்களுக்கு உறுதியான வெற்றி கிடைக்கும். குறுகிய காலத்திற்குள், தமிழகத்தை ஆளும் நிலையை அடைவோம்.
குறுகிய காலம்னா எவ்வளவு ? குத்து மதிப்பா 2000 வருஷம் ஆகுமா?
----------------------------------
குறுகிய காலம்னா எவ்வளவு ? குத்து மதிப்பா 2000 வருஷம் ஆகுமா?
----------------------------------
8. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் பேட்டி: தேர்தலில், எல்லா விதிமுறை மீறல்களுமே கைது செய்யக் கூடியவை அல்ல. வன்முறையில் ஈடுபடுவது மாதிரியான சில வகை மீறல்களுக்குத்தான் வழக்கு தொடரப்படுகிறது. அந்த வழக்கு விசாரணை முடிய வெகு நாட்களாகக் கூடும். அதில், தேர்தல் கமிஷன் தலையிட முடியாது.
விதியை மீறல்னாலே அது குற்றம் தானே.. அப்புறம் என்ன இதுக்கோசரம் சட்டம் இயற்றனும்?
---------------------------------------------
விதியை மீறல்னாலே அது குற்றம் தானே.. அப்புறம் என்ன இதுக்கோசரம் சட்டம் இயற்றனும்?
---------------------------------------------
9. தமிழக தலைமைத் தேர்தல் முன்னாள் அதிகாரி நரேஷ் குப்தா பேட்டி: ஒரு ஓட்டை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், ஓட்டை சரியாகப் பயன்படுத்தாத நாம் தான் அதற்குப் பொறுப்பு.
பேசாம ஆட்சியில் பங்குன்னு கூட்டணிக்கட்சிகள் நெருக்கற மாதிரி ஊழலில் பங்குன்னு வாக்காளர்களும் பாண்ட் பேப்பர்ல அரசியல் வாதிகளோட ஒரு ஒப்பந்தம் போட்றலாமா?
-----------------------
பேசாம ஆட்சியில் பங்குன்னு கூட்டணிக்கட்சிகள் நெருக்கற மாதிரி ஊழலில் பங்குன்னு வாக்காளர்களும் பாண்ட் பேப்பர்ல அரசியல் வாதிகளோட ஒரு ஒப்பந்தம் போட்றலாமா?
-----------------------
10. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் தாவூத் மியாகான் பேட்டி: கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தோம். ஆனால், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, தி.மு.க., கூட்டணிக்கு கொடுத்த ஆதரவை ரத்து செய்து, அடுத்த கட்டமாக அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
அம்மா மட்டும் அப்படியே உங்களை மதிச்சு சோபால உட்கார வெச்சுட்டாலும்..
----------------------------------------
அம்மா மட்டும் அப்படியே உங்களை மதிச்சு சோபால உட்கார வெச்சுட்டாலும்..
----------------------------------------
11. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேட்டி: "ஸ்பெக்ட்ரம்' பற்றி தொழில் நுட்ப ரீதியாகத் தெரியாவிட்டாலும், அதிகளவு பணத்தை கொள்ளையடித்து விட்டனர் என மக்களுக்கு தெரிந்துள்ளது. இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப, விலைவாசி ஒன்றே போதும். இவர்கள் கொண்டுவந்த நலத்திட்டங்களால் கட்சிக்காரர்கள் தான் பயனடைந்துள்ளனர்.
வேற யார் பயனடையனும்னு எதிர்பார்க்கறீங்க..? கஷ்டப்பட்டு கொள்ளை அடிக்கறாங்க.. உங்களுக்கு எல்லாம் ஒரு பங்கா குடுக்க முடியும்?
வேற யார் பயனடையனும்னு எதிர்பார்க்கறீங்க..? கஷ்டப்பட்டு கொள்ளை அடிக்கறாங்க.. உங்களுக்கு எல்லாம் ஒரு பங்கா குடுக்க முடியும்?