Showing posts with label Brahmanandam. Show all posts
Showing posts with label Brahmanandam. Show all posts

Wednesday, January 02, 2013

ORANGE ( 2010 )- சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUCG2acvtJIFAe7i2DKWyO_jkwYiaADwr9oldJXX3zVMBrTFSEKn-L5aAOYTlPi1o_bsmHFshyICakSs8hi8aH5zswpyoJDKtXRHrcP2XmkTQxXvATyDe5aSXXKYbLY7O7lmNlxEJIdpE/s1600/orange_movie_desktop_new_wallpapers_02.jpgகோடம்பாக்க குலவழக்கப்படி ஹீரோயின் ஒரு அரைக்கேனம். எப்போ பாரு கேனம் மாதிரி பல்லைகாட்டிட்டே இருக்கும். ஹீரோ லவ் பிரபோஸ் பண்ணதும் 2 வது ரீலிலேயே ஓக்கே சொல்லுது. 2ம் ஊரைச்சுத்துதுங்க . ஒரு டைம் எதேச்சையா பேச்சு வாக்குல “ என்னை லைஃப் லாங்க் இதே மாதிரி லவ் பண்ணுவியா?ன்னு கேட்டதும்  ஹீரோ “ அதை எல்லாம் உறுதியா சொல்ல முடியாது , இப்போதைகு லவ் பண்றேன்னு குண்டைத்தூக்கிப்போடறார் ஹீரோ . ஹீரொயின் செம காண்ட் ஆகி பிரிகிறார்.


ஹீரோ விடலை, பின்னாலயே சுத்தறார். யாரோட காதலும் நிரந்தரமானது இல்லைன்னு வாதாடறார். 12 ரீல் தியேட்டர்ல இருக்கறவங்க எல்லாம் செம காண்ட் ஆன பின் ஹீரோ தன் ஃபிளாஸ்பேக்கை ஓப்பன் பண்றார். ஆல்ரெடி அண்ணன்  ஒரு ஃபிகரை லவ் பண்ணி இருக்காரு. அது சும்மா டார்ச்சர் பண்ணிட்டே இருந்திருக்கு. கழட்டி விடுட்டார். அந்த பாதிப்புல தான் இப்படி எல்லாம் பேக்கு மாதிரி உளறிட்டு இருக்கார்.

 ஹீரோயின் என்ன முடிவு எடுத்தார் என்பதுதான் கதை .


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmh9JCh56qFhsVcdyV-Xvwqq1nCLw7ZyrgDxp8v58wdg-WxNf47YaNSYWzIv8MwBV41wTyA-cmLMzhcZ_xHYiu-e2R8-0ra9YY2DGoqtZnPeE9BeXJ9S9-CBmbsSc8SHkSIhLUUunAmOw/s1600/orange_movie_latest_stills_pics_wallpapers_03.jpg



ஹீரோ ராம் சரண் . நம்ம ஊர் கார்த்திக் மாதிரி . இளமைத்துடிப்பான நடிப்பு . லைட்டான தாடியில் அக்னி நட்சத்திரம் கார்த்திக் கெட்டப்பில் வர்றார். இளமையான ஃபிளாஸ்பேக் கதையில் மீசை எடுத்து நந்தவனத்தேரு கார்த்திக் மாதிரி சகிக்கலை . எப்போ பாரு பொண்ணு  பின்னாலயே சுத்திட்டு இருப்பது செம கடுப்படிக்குது


ஹீரோயின் ஜெனிலியா டிசவ்சா , எனும் ஹரிணி . இவர் உருப்படியா நடிச்ச படங்கள் அல்லது நல்ல கேரக்டர் அமைஞ்ச படங்கள் சந்தோஷ் சுப்ரமணியம் , உருமி . இவர்  கண்ணில் படும் ஆள்களிடம் எல்லாம் வழிவதும்  உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் உலக அழகி ஆனதும் அவங்க செயற்கையா அழுவாங்களே அந்த மாதிரி படு செயற்கையாக அபரிதமான ஆச்சரியத்தை வெளிப்”படுத்துவதும்” சத்தியமா முடியல


ஃபிளாஸ்பேக்ல இன்னொரு பேக்கு வருது . குதிரை முகம் . சுமார் ரகம் , நடிப்பு ஓக்கே(Shahzahn Padamsee)



காமெடிக்கு பிரம்மானந்தம்  ஓர:ளவு கை கொடுக்கிறார்



http://chakpak.com/sites/default/files/styles/photoessay/public/_DSC1828.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. படத்தில் 7 நிமிடங்கள் மட்டுமே வரும் கெஸ்ட் ரோல் கேரக்டர் பிரகாஷ் ராஜ் ஃபோட்டோவை மெயின் வில்லன் மாதிரி போஸ்டரில் போட்டு  பில்டப் கொடுத்த சாமார்த்தியம்


2. தெலுங்கு பட போஸ்டர்களை லவ் சப்ஜெக்ட் மாதிரி ஆந்திராவில் ஒட்டி , தமிழ்நாட்டில் ஆக்‌ஷன் படம் மாதிரி  போஸ்டர் டிசைன் அமைத்து மார்க்கெட்டிங்க் செய்த  லாவகம்


3. ஒளிப்பதிவு , லொக்கேஷன்கள் , பாடல்கள்  முழுக்க இளமைக்கொண்டாட்டம்


4. ஹீரோ ஹீரோயின் எப்படி லவ் பண்றாங்க என ஒளிஞ்சிருந்து பார்க்கும் பிரம்மானந்தத்தை இருவரும் திடீர் என க்ளோசப்பில் பார்த்து அதிர்ந்து அலறுவது  செம காமெடி


5. ஹீரோயினுக்கு அப்பாவாக டம்மி கேரக்டரில் பிரபுவை நடிக்க ஒத்துக்க வைத்தது



http://moviegalleri.net/wp-content/gallery/shraddha-das-in-orange-saree/shraddha_das_hot_orange_saree_stills_photos_gallery_5f94b53.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. ஹீரோயின்  ஓப்பனிங்க் சீன்ல  3 பசங்களை செலக்ட் பண்ணி 3 பேர் பேரையும் சீட்ல எழுதி குலுக்கி போட்டு அதுல இருந்து ஒருத்தனை செலக்ட் பண்ணி லவ்வப்போறதா சொல்றார். படு கேவலமா இருக்கு. சும்மா கிளாப்ஸ் வாங்கறதுக்காக கண்ட் படி சீன் வைக்கக்கூடாது



2. ஹீரோ முதன் முதலா ஹீரோயினை நடு ரோட்ல பார்க்கறார், அடுத்த ஷாட்லயே ஹீரோயினுக்கு ஃபோன் பண்றார், அவர் செல் நெம்பர் இவருக்கு எப்டி கிடைச்சுது?


3. வில்லனோட அடியாள் ஹீரோ கிட்டே “ நீ யார்? “ அப்டினு கேட்கறார் ஒண்ணா ஹீரோ செல்ஃப் இண்ட்ரோ கொடுக்கனும், இல்லை ஃபைட் போடனும், அதை விட்டுட்டு என்னமோ வரைஞ்சு காட்டி இதுதான் என் பேரு அப்டிங்கறார், இந்த கேனகிறுக்கு வில்லன் கோஷ்டிங்க 10 நிமிஷம் வெயிட் பண்ணீ ஆ-ன்னு அதைப்பார்த்துட்டு நிக்குதுங்க



4. ஒரு சிட்டி கேர்ள் ஜூவுல , சர்க்கஸ்ல சிங்கத்தை நேர்ல பார்த்திருக்காதா? ஹீரோயின் சிங்கத்தை தன்னோட 28 வது வயசுல முதன் முதலா நேர்ல பார்த்ததும் ஓவரா எக்ஸ்பிரஷன் காட்டி ஓவர் ஆக்டிங்க் பண்றார். அந்த கண்ராவி கூட தேவலை , சிங்கத்தை காடினதுக்கு நன்றிக்கடனா ஹீரோவை லவ்வறார், முடியலை



5. ஃபைட் சீன்ஸ் வைக்க 1008 சிச்சுவேஷன்ஸ் இருக்கும்போது ஆகாயத்தில் பாரசூட்ல பறந்துக்கிட்டே ஃபைட் போடும் காட்சி எதுக்கு? இது என்ன ஜேம்ஸ் பாண்ட் படமா?  சாதா லவ் சப்ஜெக்ட்தானே? மோசமான கிராஃபிக்ஸ் வேற



http://cdn2.supergoodmovies.com/FilesFive/shazahn-padamsee-hot-stills-2f31eabf.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. லவ்ல பிராப்ளம் வந்தா ஓக்கே, லவ்வே பிராப்ளம்னா?



2. அந்தப்பொண்ணு எங்கேன்னு கண்டுபிடிக்கனும் வாங்கடா..


 ஹீரோவுக்கு ஃபிரண்ட்னா இந்த மாமா வேலையை செஞ்சே ஆகனுமா?



3. இந்த ஒரு தெருவுல இத்தனை ஃபிகர் இருந்தா இந்த ஏரியாவுல எத்தனை ஃபிகர் இருக்கும் ?


4. உங்களுக்கு எப்படி இவ்ளவ் பெரிசா..... ?

 ஜிம்க்குப்போறேன் மிஸ் , ஹி ஹி

 ஹலோ, நான் கேட்டது உங்க கன்னம் எப்படி இப்படி பெருசா உப்பி இருக்குன்னு..



5.  சிங்கம் , எறும்பு ஜோக் சொல்லட்டுமா?

 யா

 சிங்கம் கிட்டே எறும்பு கேட்டுச்சாம் உன் உதட்டை என்னால கடிக்க முடியும், என் உதட்டை உன்னால கடிக்க முடியுமா?




6. பிரச்சனைல இருந்து எப்பவும் விலகியே இருக்கனும்



7. நீ ஏன் என் பின்னாலயே சுத்தறே?


 லவ் பண்றேன்



8. இந்தியாவுல எதை கிறுக்கினாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க




9. ஒரு பொண்ணு நம்ம கிட்டை நிஜமா என்னை லவ் பண்றியா?ன்னு கேட்டா “ ஆமா, ஏழேழு ஜென்மத்துக்கும்”னு அள்ளி விடனும்



10. லவ்வ்வுன்னா 4 ஃபோன் கால், 10 எஸ் எம் எஸ் ,  2 மொக்கை ஜோக்குங்க போதும்


 என்னால அப்படி முடியாது , உண்மையை சொல்லித்தான் லவ் பண்ண முடியும்


http://www.chitramala.in/photogallery/d/497974-1/Genelia-HOT-at-CNBC-Awards4.jpg



11. அந்தப்பொண்ணை விட்டு ஏன் பிரிஞ்சே?


 ரொம்ப நாள் லவ் பண்ணிட்டேன் இல்லையா? அதான்


12. எங் கிட்டே 9 லவ் ஸ்டோரிஸ் இருக்கு , நாலாங்கிளாஸ் படிக்கும்போதே டீச்சரை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்


13. அய்யய்யோ, ராமன் கிடைப்பான்னு பார்த்தா கிருஷ்ணன் கிட்டே மாட்டிக்கிட்டமே?


14.  உன் லவ் ஸ்டோரி 9 இருக்கே, அதுல பெஸ்ட் யாரு?

 நோ டவுட், நான் தான்



15.ஆறாவது லவ்வரை நீ ஏன் பிரிஞ்சே?

 நாள் முழுக்க ஐ லவ் யூ சொல்லசொல்லி டார்ச்சர் பண்ணிட்டு இருந்தா , முடியாதுன்னுட்டேன்


16. என் லவ் ஸ்டோரியை எத்தனை டைம் சொன்னாலும் எனக்கு போர் அடிக்காது



 ம்க்கும் , ஒண்ணை வெச்சுக்கிட்டே இந்த அலப்பரையா?  அவன் கிட்டே 9 லவ் ஸ்டோரி இருக்காம்



17. டு டே ஹாலி டே

 அடப்பாவி, லவுக்குக்கூட ஹாலி டேவா?


18. அவன் ஐடியா ஓக்கே , ஆனா அவன் ஐடியாலஜி நாட் ஓக்கே


19.  பொண்ணுங்க எப்பவும் மொக்கையாத்தான் யோசிப்பீங்களா?



20. நிஜம் என்பது சிங்கம் மாதிரி , அதை சந்திக்க எல்லாரும் பயப்படுவாங்க



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyDHAT5gsdSsa4akGNB30brW6Uoup86mkeiwvEjPbsrYzJ-8185btcUDkR2w0cCAeTBRac5bOmDaGJSI2iC5HUDunhWGwq5v-aXPzqyHhC_3fCDw542v_fdE27DoTNICi9kbMWuvNKVds/s1600/genelia-dsouza-images-c1b02.jpg


21. நான் 9 பேரை லவ் பண்ணினாலும் ஒரே டைம்ல 2 பேரை லவ் பண்னலையே? என் காதல் நேர்மையானதுதான்



22. உன் செல்லுக்கு எஸ் எம் எஸ் வந்திருக்கு

 என் அக்காவா இருக்கும்

 குடு பார்ப்போம்

 ஏன் , என் மேல நம்பிக்கை இல்லையா?
\

அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?




23. லவ் பண்றதுக்கு ஒரு நேரம் இருக்கும்போது பிரியறதுக்கு ஒரு நேரம் இருக்கும்தானே?



24.  என் லவ்வை நம்ப்றது என்பது நாம பயணம் செய்யும் கார் ஹெட் லைட்ஸை நம்பி பயணம் செய்வது மாதிரி , ஃபியூச்சர் லவ் ஸ்டோரியை நம்பறது அதாவது காலா காலத்துக்கும் இவன் நம்மை காப்பாத்துவான் , காதலிப்பான் என நம்பிக்கை வைப்பது  எதிர்ல வர்ற கார்களின் ஹெட் லைட் வெளிச்சத்தை நம்ப்பறது மாதிரி



25ஆரமப்த்தௌல தம்பதிகள் சேர்ந்து வாழ காதல் காரனம், அப்புறம் குழந்தைகள் காரணம்


26. லைஃப் லாங்க் லவ்ல எனக்கு நம்பிக்கை இல்லை



 27. காதலிக்கும் நாட்கள் அதிகமாக அதிகமாக காதல் குறைஞ்சுக்கிட்டே போகும்



28. லவ் இல்லாத 2 பேர் சேர்ந்து வாழ்ந்தா அது நரகம்


29. உண்மையான காதலிலும் பொய் கொஞ்சம் கலக்கும்


30 இன்னைக்கு இருக்கற மாதிரியே என்னைக்கும் உன் மேல லவ் இருக்கும்னு நான் இப்போ உன் கிட்டே சொன்னா அதுதான் நான் சொல்லும் முதல் பொய்



http://f1.pepst.com/c/90BD09/445554/ssc3/home/059/sandy.fucker/albums/genelia_hot_skirt.jpg_480_480_0_64000_0_1_0.jpg



31. வாழ்க்கைல காரனங்கள் , சால்ஜாப்புகள் ,மட்டுமே மிச்சம் இருக்கக்கூடாது


32. பிரச்சனைக்குத்தீர்வு பிரிந்து செல்வது அல்ல  அன்பு காட்டுவது


33 லவ் பண்றவங்க கிட்டே  லவ் பண்றதா பொய் சொல்றது ரொம்ப தப்பு


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40 ( சும்மா ஒரு ஒப்பீடு )

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே



ரேட்டிங்க் - 6 / 10


சி.பி கமெண்ட் -
-->தெலுங்குல இது அதிரி புதிரி வெற்றியாம் , முடியல . லவ்வர்ஸ்  மட்டும்தான் படம் பார்க்க முடியும் , நீ எ பொ வ படம் மாதிரி 3 மடங்கு இழுவை   



http://www.bollyone.com/wp-content/uploads/2009/08/Genelia-Hot-Actress-8.jpg


Genre: Romance

Type:
Straight


Banner:
Anjana Productions

 
Cast: Ram Charan Tej, Genelia, Shahzahn Padamsee, Brahmanandam, Prabhu, Nagababu, Sanjay Swaroop, Manjula Swaroop, Sanchita Shetty, Madhurima Benarjee, Srinivas Avasarala, Vennela Kishore, Praneeth, Gayatri Rao, Kalpika, Pavitra Lokesh etc

Music: Harris Jayaraj

Cinematography
: Raja Sekhar & Kiran Reddy

Editing: Marthand K Venkatesh

Art: Anand Sai

Dialogues:
Thota Prasad & Surendra Krishna

Story - screenplay - direction
: Bhaskar

Producer: K Nagababu

Release date
: 26 November 2010

Theater watched:erode sangeetha


No.TitleLyricsPerformer(s)
1."O Range"  Benny Dayal
2."Rooba Rooba"  Shail Hada, Chinmayi
3."Nenu Nuvvantu"  Naresh Iyer, Nadeesh
4."Chilipigaa"  Karthik
5."Ola Olalaa Ala"  Surendra KrishnaKarunya, Ranina Reddy
6."Hello Rammante"  Rama Jogayya ShastryVijay Prakash, Devan Ekambaram

Saturday, September 29, 2012

REBEL - சினிமா விமர்சனம்

http://www.apherald.com/ImageStore/images/Movies/Movies_Reviews/Rebel-Movie-Review647x450.jpgரிபல்னா இன்னா மீனிங்க்னா நிறுவப்பட்ட அரசாங்கம் , அல்லது ஆட்சியாளருக்கு எதிராக போர் தொடுக்கும்  தனி மனிதனின் செய்கைகள்.கிட்டத்தட்ட கூடங்குளம் அணு உலைக்கு எதிரா போராடும் ஒவ்வொரு தனி மனிதனும் ரிபல் தான். படத்தோட கதையை பார்ப்போம். 


ஹீரோ ஸ்டீபன் ராபர்ட்னு ஒரு ஆளை தேடி வர்றார். அவன் ஒரு தாதா கம் கொலைக்குற்றவாளி கம் ரவுடி .ஆனா ஆளை கண்டு பிடிக்கவே முடியல. அவன் ஃபோட்டோ கூட யார் கிட்டேயும் இல்லை. எல்லாரும் மணி பர்ஸ்ல வெச்சுட்டு சுத்த அவன் என்ன  ஐஸ்வர்யாராயா? 


ஹீரோ எதுக்காக அந்த கேப்மாரியைத்தேடறார்ங்கறது சஸ்பென்ஸ். அப்போதான் அவருக்கு ஒரு தகவல் கிடைக்குது. அதாவது இன்னொரு கேப்மாரி கம் தாதாவுக்கு அந்த கேப்மாரி நெம்பர் ஒன்னை பற்றி தெரியும்.இது எப்படின்னா 2 ஜி ஊழல்ல ஆ ராசா அடிச்ச பணம் எவ்வளவு என்பது கலைஞர்க்கு மட்டும் தான் கரெக்டா தெரியும்கற மாதிரி.. 


அந்த தாதா நெம்பர் 2வுக்கு ஒரு மகள். அவ பாங்காங்க்ல இருக்கா .ஏன்னா படம் மெகா பட்ஜெட். லோ பட்ஜெட்னா அவ எங்காவது குப்பத்துல குப்பை பொறுக்கிட்டு இருந்திருப்பா.ஹீரோ பாங்காங்க் போறாரு. நேரா போய் உங்கப்பா கிட்டே எப்படியாவது நெம்பர் ஒன் கேப்மாரி ஃபோட்டோவை மட்டும் வாங்கிக்குடுன்னா குடுத்திருப்பா. ஆனா கதை 2 ரீல்லயே முடிஞ்டுமே?

 அதனால அவளை லவ் பண்ற மாதிரி நடிக்கறார்.அந்த கேனமும் ஹீரோவை லவ்வுது. இந்த காமெடி மொக்கை லவ் ஸ்டோரி 5 ரீல் ஓடுது. அப்புறம் அந்த ஃபோட்டோவை ஹீரோவுக்கு ஹீரோயின் எடுத்து தந்துடறா .


http://3.bp.blogspot.com/-0EJTbPMljEE/UENq5rF0LwI/AAAAAAAAClg/fuJ-jODglgI/s1600/Tamanna+Stills+in+Rebel.JPG



 இப்போ ஃபிளாஸ்பேக். சண்டைக்கோழி படத்துல வர்ற மாதிரி ஹீரோவோட அப்பாவும் ஒரு படா தாதா. ஆனா தன் மகன் தன்னை மாதிரி ஆகிடக்கூடாதுன்னு நினைக்கறவர்.அவருக்கு லோக்கல் தாதா கூட ஒரு பகை.அதுல அவனை இவர் அவமானப்படுத்த  அவன் இவரை ஸ்டீபன் ராபர்ட் எனும் தாதா மூலமா கொன்னுடறான்.

சுருக்கமா சொல்லனும்னா 1980ல வந்த 2000 படங்களோட கதைதான் . அப்பா ,அம்மாவை கொன்னவங்களை பையன் தேடி பழிக்கு பழி வாங்கறது.


 இயக்குநர் ராகவா லாரென்ஸ்ஸை ஒரு வகைல பாராட்டனும், ஏன்னா தான் ஹீரோவா நடிக்கற படம்னா காஞ்சனா ,முனி மாதிரி நல்ல காமெடி எண்டர்டெயிண்மெண்ட்டா எடுக்கறது, அடுத்தவன் ஹீரோன்னா எவனோ எக்கேடோ கெட்டு நாசமாப்போறான், நமக்கு சம்பளம் வந்தா சரின்னு குப்பைப்படத்தை எடுத்து கடனைக்கட்டறது.




ஹீரோ பிரபாஸ் ஆள் செம பர்சனாலிட்டி. தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்துப்போகும் தெலுங்கு முகம். அவருக்கு டான்ஸ், ஃபைட், பஞ்ச் டயலாக்ஸ் எல்லாமே நல்லா வருது, காமெடில கூட சமாளிக்கறாரு. ஆனா இவருக்கு என் தனிப்பட்ட அட்வைஸ் என்னான்னா  சிரஞ்சீவி நடிச்ச படங்களை 10 டி விடியாவது போட்டுப்பார்த்து.  கதையை கொஞ்சமாச்சும் புதுமையா இல்லாட்டி பரவாயில்லை, அரதப்பழசா இல்லாம செலக்ட் பண்ணனும்கறதுதான். 



ஹீரோயின் தமனா.எலுமிச்சைல 3 வகை இருக்கும் ஊறுகாய்க்குன்னு போடுவாங்க, ரொம்ப சின்னதா இருக்கும், ஜூஸ் பிழியறதுக்குன்னு இரு வகை இருக்கும். இது கொஞ்சம் பெரிசா இருக்கும், லெமன் சாதம் கழறுதுக்குன்னு ஒரு வகை இருக்கும். இது நல்லா தளதளன்னு செம மஞ்சளா இருக்கும். தமனா  3 வது வகை..



 சில பேரு தமனாவைப்பற்றி என்ன குறை சொல்றாங்கன்னா  அவருக்கு உதடு அமைப்பு சரி இல்லை , முக லட்சணம் சரி இல்லைன்னு. ஆனா அவங்க தன்னை கண்ணாடில பார்க்கவே மாட்டாங்க.. என்னை பொறுத்தவரை நான் இயக்குநர் விக்ரமன் டைப். எதையும் பாசிட்டிவா பார்க்கனும். எந்த ஒரு டொக்கு ஃபிகர்ட்டயும் நாம்  ரசிக்கும் ஒரு அம்சம் கண்டிப்பா இருக்கும், அதை ரசிக்கறதை விட்டுட்டு அது சரி இல்லை இது சரி இல்லைன்னு நொட்டு சொல்லிட்டு இருக்கக்கூடாது..


படத்துல இடைவேளை வரை இவர் ராஜ்யம் தான். டான்ஸ் டீச்சரா வர்றார்.


 இன்னொரு ஹீரோயின் தீக்‌ஷா சேத். இவர் உதட்டழகி.வரைஞ்சு வெச்ச மாதிரி ஒரே அளவு உள்ள மேல் கீழ் உதடுகள். ஆனா இவரை சரியா யூஸ் பண்ணிக்கலை. கோவை சரளா கூட  இவரும் , பிரமானந்தம் கூட ஹீரோவும் போடும் காமெடிக்கூத்துகள் மொக்கைதான் என்றாலும் சிரிக்க வைக்குது. 



கஜினி பட வில்லன், கிருஷ்ணம் ராஜூ,தீக்‌ஷா தேத்னு நட்சத்திரங்கள் ஏகப்பட்ட பேர்  கூட்டத்துல கோவிந்தா போட்டுட்டு வர்றாங்க. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD4CHirZEimDf98vJiwKhXgWtVtr3ocxfLgIu9zQvxz2lF7D5PiDKil-gYehm2GjX6WsHc-8MKuCF7blse0zLgz3QpguxIwkEbs0gEoTOrgpN3Z3ngZ9r-_pH2PYPJteJJrCFS-ZR5K08/s1600/Deeksha+short+&+bikni.jpg




 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. போக்கிரி  வடிவேல் கெட்டப் மேக்கப்பில் கோவைசரளா + பிரம்மானந்தம் காமெடி, டான்ஸ் பிராக்டீஸ் காட்சிகள்



2.  ஹிப் ஹோப் எனப்படும் ஒரு வி வி சி மூவ்மெண்ட் காமெடி ( வி வி சி = விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடி 



3. ஹீரோ ஃபிளாஸ்பேக்கில் தனது லவ்வரை  பாட்டு டீச்சர்  என வயதான கெட்டப்பில் கூட்டி வருவதும் தீபாசேத்துடன் நடக்கும் காமெடிகளும்


4. சங்கீதம் தெரியாத ஹீரோவை அவர் அப்பா  டெஸ்ட் வைக்க ஏற்பாடு செஞ்ச ஆளுக்கும் சங்கீதத்தின் அரிச்சுவடி கூட தெரியாது. அந்த லட்சணத்துல 2 பேருக்கும்  பாட்டுப்போட்டி வேற. அந்த காமெடி நல்லாருக்கு.



5. பாடல்களில் டம் டம் டக்கா டக்கா , எக்சலண்ட் நீ ஃபிகரு 2ம் செம ஃபாஸ்ட் பாட்டு. ஹிட் ஆகிடும் ( ஆல்ரெடி அங்கே ஹிட்)


 http://www.mirchiphotos.com/wp-content/uploads/2011/05/tamanna-hot-navel-stills-photos-06.jpg




 மனம் கவர்ந்த வசனங்கள்


1. பிரம்மானந்தம் - நீ ஆறு அடில ஹீரோ  மாதிரி இருந்து என்ன யூஸ்? நான் ஜஸ்ட் 5 அடிதான் இருக்கேன். நான் அடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா?



2. பிரம்மானந்தம் - இப்போ நல்லா நேரம்.. இவ கிட்டே ஐ லவ் யூ சொல்லு

 ஹீரோ - இந்த மூஞ்சி கிட்டேயா? 



ஹீரோயின் - யோவ்!! 



3. XQSமீ மேடம், கொஞ்சம் நீச்சல் குளத்தை விட்டு வெளீல வாங்க, இவர் உங்க கூட பேசனுமாம்.. 


 நான் குளிச்சுட்டு இருக்கேன்


 பரவாயில்லை, வெயிட் பண்றோம் ஹி ஹி 



4. என்னப்பா? சங்கீதம் கத்துக்கிட்டு இருக்கியா? 


 எஸ் டாடி, பாத்ரூம்ல குளிக்கும்போது கூட பாடிட்டுதான் குளிக்கறேன்



5. இந்த லேடிக்கு  கூந்தல் முடி மட்டும் நரைச்சு ஒயிட்டா இருக்கு, ஆனா பாடி செம டைட்டா ஃபிட்டா இருக்கே?


 யோவ்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVkdIUE_IvOCOrD7AurC4l816mI6JAtxO7W4dAnd2xz_nmsKiH0y6b4AAsEwvh05d_yOfNqnCwTql3jqpQjj0SRkkMfGcafNMG3A3Hs900ByHmGi8iCSPU8JV5fUAtMdSNNleb8dRC6Hs/s1600/Deeksha_Seth_Hot_Saree5_5.jpg


 இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் சில கேள்விகள்



1. நல்ல வேளை மைக்கேல் ஜாக்சன் உயிரோட இல்லை, இல்லைன்னா தமனாவை மைக்கேல் ஜாக்சன் கெட்டப்க்கு ஆட விட்டதுக்கு. ஹி  ஹி ஹி . அதுலயும் காதலன் பட முக்காலா முக்காபுல பிரபுதேவா பாட்டு நடன ஸ்டைல் உல்டா. 



2. தாதாவோட ஆளுங்க அவ்வளவு வெய்யிலிலும் டார்க் ப்ளூ  அண்ட் ப்ளூ கோட் சூட் சிவப்புக்கலர் டை போட்டு வர்றது செம கூத்து


3. கோவை சரளாவுக்கு ஸ்விம் சூட் படு கேவலம். அதுல பேக் ஓப்பன் முதுகு வேற .. 


4. ஹீரோ ஹீரோயின் கிட்டே என் ஆள் எப்படி இருப்பா தெரியுமா?  அவ கண் எப்படி இருக்கும் தெரியுமா? உதடு எப்படி இருக்கும் தெரியுமா? என பார்ட் பார்ட்டாக ஹீரோ வர்ணித்து அவரை ஒரு கண்னாடியின் முன் நிற்க வைப்பது ஸாரி, நாங்க வசந்த மாளிகையிலேயே பார்த்தாச்சு..


5. காருக்கு பாம் வெச்சு அதை வெடிக்க வைக்கும் ஹீரோ 3 அடி பக்கத்துலயே ஸ்லோ மோஷன்ல நடந்து வர்றார். அதெல்லாம் அவர் மேல தெறிக்காதா? பாதுகாப்பான தூரம் ஓடிப்போய் அப்புறமா அந்த ஸ்லோமோஷன் பந்தாவை வெச்சுக்க மாட்டாரா? 



6. தன் அப்பாவுக்கு தெரியாம அவர் செல் ஃபோன்ல இருந்து  ஒரு இமேஜை தன் செல் ஃபோனுக்கு அனுப்பும் ஹீரோயின் அப்படியே ஃபோனை அவர் கிட்டே கொடுக்கறார். செண்ட் ஐட்டத்துல போய் அதை எரேஸ் பண்ண வேணாமா? 


 http://reviews.in.88db.com/images/deeksha-hot/deeksha-seth-hot-stills-pics-images-gallery-19.JPG



7. இந்த காலத்துல வேலைக்கு ஆள் சிக்குவதே கஷ்டம் இந்த லட்சணத்துல வில்லன் சம்பந்தமே இல்லாம தன்னிடம் வேலை செய்யும் 4 பேரை ஓப்பனிங்க் சீன்ல கொலை பண்றார். அவர் கொடூரமானவர்னு காட்டவா?


8. வில்லன் ஒரு சீன்ல நெஞ்சுல சுடறார். உடனே டிரைவர் வாய்ல ரத்தம் கக்கி சாகறார். செய் வினையா? 


9. கன்யாஸ்த்ரீ ( மதர் சுப்பீரியர்) கூட லிப்ஸ்டிக் போட்டு காட்டனுமா? 


10. தன் மகனுக்கு ஃபைட் எல்லாம் தெரியாது என நம்பும் தாதா அப்பா ஒரு இக்க்டட்டான சூழலில்  65 பேரை அடிச்சுப்போடும் மகனைப்பார்த்து பிரம்மிப்பது பாட்ஷா உல்டா.. ( உள்ளே போ டயலாக் உட்பட அடிக்கனுமா? )


11. வில்லன்  5 அடி வாளை ஓங்கறார், ஹீரோ அதை இறுக்கிப்பிடிச்சு என்னமோ வாழைத்தார் பிடுங்குவது போல பிடுங்கறார், அவர் கைல இருந்து 2 படி ரத்தம் கொட்டுது. ஆனா உள்ளங்கைல ஒரு துளி காயம் ஆகலை. 


12. கஜினி வில்லன் எதுக்கு சம்பந்தமே இல்லாம க்ளைமாக்ஸ்ல ஹீரோ கிட்டே வந்து நான் தான் உங்கப்பாவை  ஆள் வெச்சு கொன்னேன், இப்போ உன்னால என்ன பண்ண முடியும்?னு கேட்டுட்டு எதுக்கு தற்கொலை பண்றார்? அதுக்கு அங்கே வராமயே இருந்திருக்கலாமே? 

12. ஹீரோ ஹீரோயினைப்பார்த்து இதெல்லாம் ஒரு மூஞ்சியா? அப்டினு டீஸ் பண்றாரு, உடனே ஹீரோயினுக்கு லவ் வருமா? நிஜவாழ்வுல செருப்படிதான் கிடைக்கும்.. 


http://www.andhrabulletin.com/admin/images/tamanna%20hot%20pics%20(10).jpg



சிபி கமெண்ட் - முதல் பாதி காமெடி ஆட்டம் பாட்டம். பின் பாதி தலை வலி அடிதடி வெட்டுகுத்து.. ஆந்திராவுக்கு ஓக்கே , நமக்கு நாட் ஓக்கே.. இந்த தலைவலியை ஈரோடு அண்ணா வில் பார்த்தேன், அண்ணா நாமம் வாழ்க !


டிஸ்கி -

தாண்டவம் - சினிமா விமர்சனம் |