Showing posts with label BUTTERFLY (2022) தெலுங்கு - திரை விமர்சனம். Show all posts
Showing posts with label BUTTERFLY (2022) தெலுங்கு - திரை விமர்சனம். Show all posts

Sunday, January 08, 2023

BUTTERFLY (2022) தெலுங்கு - திரை விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்


 நாயகியின்  அக்கா  ஒரு  கிரிமினல்  லாயர், அக்காவின்  கணவரும்  லாயர் தான். இருவருக்கும்  மனத்தாங்கல்  ஏற்பட்டு  பிரிந்து  வாழ்கிறார்கள் . தம்பதிக்கு  இரண்டு  குழந்தைகள் . குழந்தைகள் நாயகியின் அக்காவுடன் தான்  இருக்கிறார்கள். நாயகியின்  அக்கா  ஒரு  லாயர்  என்பதால்  தொழில்  முறையி  சில  எதிரிகள்  அவ்வப்போது  அவரை  மிரட்டுகிறார்கள் 

இப்படி  இருக்கும்போது  நாயகியின் அக்காவுக்கு  ஜட்ஜாக  பிரமோஷன் கிடைக்க  இருக்கிறது, அது  சம்பந்தமான  அஃபிசியல்  மீட்டிங்கிற்காக  டெல்லி  போகிறார்.நாயகி தான்  இப்போது  குழந்தைகளைப்பார்த்துக்கொள்ள  வேண்டும்


காலையில்  ஸ்கூலுக்குப்போகும்போது  குழந்தைகள்  மிஸ்  ஆகி  விடுகிறார்கள். அபார்ட்மெண்ட்டில்  தான்  இருந்தார்கள். போலீசில்  புகார்  கொடுக்கலாம்  என்றால்  போலீஸ்  அசால்ட்டாக  24  மணி  நேரம்  கழித்துத்தான்  புகாரைப்பதிவு  செய்ய  முடியும்  என  சொல்லி  விடுகிறார்கள்


நாயகி  தன்  பாய்  ஃபிரண்டுடன்  சேர்ந்து  பல  இடங்களில்  தேடுகிறார், ஆனால்  கிடைக்க வில்லை. அப்போது    ஒரு  ஃபோன்  கால்  வருகிறது . குறிப்பிட்ட  இடத்துக்கு  ரூ  5  லட்சம்  கொண்டு  வந்து  கொடுக்க  வேண்டும் என  மிரட்டுகிறது  அந்தக்குரல் .


பணம்  கொடுத்த  பின்னும்  குழந்தைகள்  வர வில்லை . அப்போதுதான்  அப்பார்ட்மெண்ட்டில் இருப்பவன் தான்  இந்த  சூழ்நிலையைப்பயன்படுத்தி  கேம்  ஆடுகிறான்  என்பது  தெரிய  வருகிறது 


 இப்போது  அடுத்த  ஃபோன்  கால்  வருகிறது

.  ரூ  15  லட்சம்  கேட்கிறது. இதற்குப்பின்  நாயகி  எடுத்த  முடிவு  என்ன ?  அந்த  நிஜமான  கிட்நாப்பர்  யார்?  என்பதை  எப்படிக்கண்டு  பிடிக்கிறார்கள்    என்பது  மீதி  திரைக்கதை 


நாயகியின்  அக்காவாக  பூமிகா. சில  காட்சிகள்  தான்  என்றாலும்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். 


நாயகியாக அனுபமா  பரமேஸ்வரன்  படத்தின்  முதுகெலும்பு. படம்  பூரா  தானும்  பதட்டமாக  இருந்து  பார்க்கும்  நம்மையும்  பதட்டத்தில் ஆழ்த்துகிறார். 


ஆனால் போலீசுக்கு  ஏன்  முதலிலேயே  போகவில்லை ? அக்காவுக்கு  தகவல்  தெரிவித்திருந்தால்  அவர்  ஏதாவது எளிய  வழி  காட்டி இருப்பாரே? என்ற  கேள்விகளுக்கு  பதில்  இல்லை 


காந்தா  சதீஷ்  மேலும்  பாபு  என்பவர்கள்  தான்  திரைக்கதை  , இயக்கம்  எல்லாம். க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டிலும் , கூடவே  இருந்துதான்  ஒருவர்  குழி  பறிக்கிறார்  என்பதும்  எதிர்பாராதவை.

சமீர்  ரெட்டியின்  ஒளிப்பதிவு  கச்சிதம்.அர்விஸ் அண்ட்  ஜிடியன்  கட்டா  இருவரும்தான்  இசை.  பாடல்கள்  சுமார்தான். பிஜிஎம்  ஓக்கே  ரகம் . மது  சிண்ட்டாலாவின்  எடிட்டிங்கில்  ரெண்டேகால்  மணி  நேரம்  படம்  ஓடுகிறது


 குடும்பத்துடன்  பார்க்கத்தக்க இந்தப்படம்  டிஸ்னி  ஹாட்  ஸ்டார்  பிளஸ்  ஓடிடி  தளத்தில்  தமிழ்  டப்பிங்குடன்  கிடைக்கிறது 


ரசித்த  வசனங்கள் 


1 பெண்களுக்கு அம்மாவின்  கருவறையிலும் ,  சமாதிலயும்  மட்டும் தான்  பாதுகாப்பு இருக்கு 


2   எல்லா வேலைகளையும் நாம  பிடிச்சுதான்  செய்யறமா  என்ன? சில  நேரங்களில்  நம்ம தேவைக்காக  பிடிக்காத  வேலைகளையும்  செய்ய நேரிடும்


3 பணத்துக்கு  முன்னாடி  பாவம் ,புண்ணியம்  பார்க்கக்கூடாது


4  பொதுவா கிட்நாப் நடந்து  பிளாக்மெயிலர் பணம்  கேட்கும்போது  நம்ம  கிட்டே  இருந்து  எவ்வளவு  பணம் கறக்க  முடியுமோ  அதை  கறந்துட்டு  கடத்தியவர்களைக்கொன்னுடுவாங்க. ஏன்னா  கடத்தியவனைப்பார்த்த  சாட்சியை  உயிரோட  விடமாட்டாங்க . அதனால  எப்பவும்  இந்த  மாதிரி  கடத்தல்  கேஸ்ல  போலீஸ்  ல  புகார்  கொடுப்பதுதான்  நல்லது 


5  இரண்டு  பெண்கள்  ஆண்  துணையே  இல்லாமல்  இந்த  ஸ்டேஜ்க்கு  முன்னேறி இருக்காங்கனனா   அவங்க  எத்தனை  வாசல்  ஏறி  இருப்பாங்களோ ?> யாருக்குத்தெரியும்?அப்படினு  அபாண்டமாப்பேசும்  ஆட்கள்  உண்டு 


6  செண்ட்டிமெண்ட்டல்  முட்டாள்கள்   இருக்கறவரை   அவங்க  பாசம்  தான்  நம்மை  மாதிரி  கிட்நாப்பர்களுக்கு  ஆதாரம் 


7  நாங்க மிருக  பரம்பரை . பசிக்கும்போதுதான்  வேட்டை  ஆடுவோம்,  மூட்  வரும்போதுதான்  சுகத்துக்கு  ஆள்  தேடுவோம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  நாயகியின்  அக்காவுக்கும், அக்கா  கணவருக்கும்தான்  ,மனத்தாங்கல். குழந்தைகள்  மீது  அவர்  பாசமாகத்தான்  இருக்கிறார். குழந்தை  கடத்தல்  மேட்டரை  அக்கா  கணவரிடம்  சொன்னால்  அவர்  பணம்  தருவார். அவரிடம்  அதை  மறைத்து  பணத்தேவை  மட்டும்   தெரிவிப்பது  ஏன்?


2  நாயகியின்  காதலன்  பெரிய  பணக்காரன். அவன்  பணம்  ஏற்பாடு  செய்ய  முயற்சியே  எடுக்கவில்லை. பெற்றோர்  முன்  தலை  குனிந்து  நிற்பது  போல்  காட்டி  பின்  ட்விஸ்ட் என்ற  பெயரில்  திடீர்  என  பணத்துடன்  வீட்டை  விட்டு  வெளியேறுவது  நாடகத்தனம் 


3  டெல்லி  சென்ற  அக்கா  அங்கே  உடல்  நிலை  பாதிப்படைந்து  ஹாஸ்பிடலில்  இருந்தாலும்  சுய  நினைவுடன்  தான்  இருக்கிறார். ஆனால்  ஒரு  முறை  கூட  தன்  தங்கையிடமோ, குழந்தைகளிடமோ  ஃபோன்  பேச  முயலவில்லை 


4   பதினைந்து  லட்சம்  கடனுக்கு கந்து  வட்டியே  150  நாட்களுக்கு 10%  தான். ஆனால்  வங்கி  3  நாட்கள்  லீவ்  என்பதால்  3  நாட்கள்  ரொட்டேஷனுக்கு  வங்கி  அதிகாரியே  நாயகியிடம்  10%  வட்டி  கேட்பது  எப்படி ?  அதுக்கு  கந்து  வட்டியே  தேவலை  என  நாயகி  அவர்களை  ஒதுக்காதது  ஏன் ? 


5 சிக்கலான  சூழலில்  நாயகி  இருக்கும்போது  அவர்  செய்யும்  காரியங்கள்  எல்லாம்  நமக்கு  அவர் மீது  பரிதாபம்  ஏற்படுத்தும்  வகையில்  இருக்கனும், ஆனால்  நமக்கு  எரிச்சல்  தான்  வருது . இவர்  என்  இப்படிப்பண்றார்? இப்படிப்பண்ணி  இருக்கலாமே? என  யோசிக்க  வைக்கிறது 


6   குறிப்பாக  ஒரு  ஆள்  ஒரு  நைட்  சுகத்துக்கு  15  லட்சம்  என  விலை  பேசும்போது  ஒரு  சோகப்பாட்டு  போட்டு  விட்டு நாயகி  அந்தப்பணத்துக்காக  விலை  போய்  விடுவாரோ  என்ற  பதட்டத்தை  எற்படுத்த  பாடல்  வரிகளில்  சிலவற்றை  சேர்த்து  விட்டிருப்பது  கடுப்பாக  இருக்கிறது 


சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல்  பாதி  கொஞ்சம்  இழுவை . பின்  பாதியில்  வரும்  ட்விஸ்ட்டும், க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டும்  தான்  படத்தைக்காப்பாற்றும் ., ரேட்டிங்   2.25 / 5