Showing posts with label BSNL. Show all posts
Showing posts with label BSNL. Show all posts

Wednesday, August 29, 2012

BSNL நிறுவனத்தின் கணிணி மோசடி , பொது மக்கள் அதிர்ச்சி

http://chennai.bsnl.co.in/News/netone221108.jpgபி.எஸ்.என்.எல். நடத்திய கம்ப்யூட்டர் சீட்டிங்!''



மாட்டிக்கொண்ட திண்டுக்கல் மக்கள்



'ஒன்பதாயிரம் ரூபாய் பணம் செலுத்தினால் இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர் தருவதாக விளம்பரம் செய்தனர். அதை நம்பிப் பணம் செலுத்திய எங்களுக்குப் பட்டை நாமம் சாத்திவிட்டனர்’ என்று, வாயிலும் வயிற் றிலும் அடித்துக்கொள்கின்றனர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மலைக் கிராம மக்கள். அவர்களை ஏமாற்றியது ஏதோ ஒரு தனியார் நிறுவனம் அல்ல... பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். என்பதுதான் அதிர்ச்சி!



பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வல்லரசு விடம் பேசினோம். இவர், கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள மண்ணவனூரில் செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். ''நான் செய்யும் தொழிலுக்கு கம்ப்யூட்டருடன் நெட் கனெக்ஷன் இருந்தால்தான் தொழில் போட்டியைச் சமாளிக்க முடியும். அதனால், கம்ப்யூட்டர் வாங்க ஆசைப்பட்டேன்.

 அப்போது, கொடைக்கானல் டெலிபோன் ஆபீஸில் (பி.எஸ்.என்.எல். அலுவலகம்) 'ஒன்பதாயிரம் ரூபாய் செலுத்தினால், கம்ப்யூட்டருடன் நெட் கனெக்ஷன் கொடுக்கப்படும். இந்தச் சேவையை பி.எஸ்.என்.எல். மற்றும் அமரன் அசோசியேட் நிறுவனம் இணைந்து தருகிறது. தேவைக்கு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இருக்கும் அமரன் அசோசியேட் நிறுவனத்தாரைத் தொடர்பு கொள்ளவும்’ என்று விளம்பரம் செய்து இருந்தனர்.




குறைந்த பணத்தில் கம்ப்யூட்டரும் நெட் இணைப்பும் கிடைக்கிறது என்ற ஆசையில் என்னைப் போல பலர் பணம் கட்டினோம். வில்போன் இணைப்புக்கு 500 ரூபாய் தனியாகக் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். அதையும் கட்டினோம். மூன்று நாட்களில் போன் இணைப்பு வந்தது. இரண்டு நாட்கள் கழித்து போனில் பேசிய அமரன் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், 'ஒரு வாரத்தில் உங்கள் வீடு தேடி கம்ப்யூட்டர், மோடம் வந்து சேரும்’ என்றார். ஒரு வாரம் கழித்தும் யாரும் வரவில்லை. மலைப் பகுதி என்பதால் தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். அடுத்த ஒரு வாரத்துக்குப் பிறகும் வராததால், அமரன் அசோசியேட் நிறுவனத்தாரின் மொபைல் நம்பர்களில் தொடர்புகொண்டேன். அனைவரது போன்களும் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டு இருந்தன.

http://chennai.bsnl.co.in/News/Instn_En.jpg


அப்போது. வில்போன் நம்பரில் பேசிய தேவி என்பவர் 'அமரன் அசோசியேட் மதுரைக் கிளையில் இருந்து பேசுகிறோம். நிர்வாகம் மாறிவிட்டது. நாங்கள்தான் உங்களுக்கு கம்ப்யூட்டர் கொடுக்கப்போகிறோம். இரண்டு நாட்களில் உங்களைச் சந்திக்கிறோம்’ என்றார். அவரும் பேசியதோடு சரி... ஆறு மாதங்களாகியும் கம்ப்யூட்டர் வரவில்லை.



'உங்களை நம்பித்தானே பணம் கட்டினோம்’ என்று கொடைக்கானல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கேட்டோம். 'எங்களுக்கு எதுவும் தெரியாது. வத்தலக்குண்டு டி.இ-யை சந்தியுங்கள்’ என்றனர். அவரைச் சந்தித்துக் கேட்டால், 'இது மத்திய அரசின் திட் டம். எங்களுக்கு எதுவும் தெரியாது. உங்களைப்போல நூற்றுக்கணக்கானோர் எங்களிடம் வந்து பணம் கேட் கிறார்கள். உங்கள் புகாரைக் கொடுங்கள். நாங்கள் சென்னை அலுவலகத்துக்கு அனுப்புகிறோம்’ என்று பொறுப்பே இல்லாமல் பதில் சொன்னார்.



மதுரையில் தெற்கு ஆவணி மூல வீதியில் இயங்கிய அமரன் அசோசியேட் அலுவலகத்தைக் கண்டுபிடித் தோம். 'இங்கு ஆபீஸ் இருந்தது உண்மைதான். அதைக் காலிசெய்து ஆறு மாசமாச்சு’ என அருகில் உள்ளவர்கள் சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் முதல்வர் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் புகார் அனுப்பிவிட்டுக் காத்திருக் கிறோம். எந்த நடவடிக்கையும் இல்லை'' என வருத்தத்தைக் கொட்டினார்.



பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் பேசினோம். ''ஆறு வருடங்களுக்கு முன் தனியார் ஒத்துழைப்புடன் அந்தத் திட்டத்தை அறிமுகப் படுத்தினர். தொழில்நுட்பக் குறைபாடுகளால் அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. அந்தத் திட்டத்தில் பணம் கட்டிப் பலரும் ஏமாந்தனர். இந்தத் திட்டத்தில் அதிக அளவுக்கு மோசடி வடகிழக்கு மாநிலங்களில்தான் நடந்துள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இந்த மோசடி அதிகம் நடந்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் ஏதாவது ஒரு திட்டத்தைப் போட்டு இப்படி மோசடிக்கு வழிவகுக்கிறார்கள். அலுவலர்களான எங்களால் இதைத் தடுக்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவோ முடியவில்லை. ஏன், ஒழுங்கான பதிலைக்கூட சொல்ல முடியவில்லை'' என்று வருத்தப்பட்டனர்.



வத்தலக்குண்டு டி.இ.விசாலாட்சியிடம் பேசினோம். ''இந்தத் திட்டம் மத்திய அரசின் திட்டம். பாதிக்கப்பட்டவர்களின் புகார் குறித்து சென்னைக்குத் தகவல் கொடுத்துள்ளோம். அமரன் அசோசியேட் நிறுவனத்தார் சிலருக்கு செக் கொடுத்தும், அது பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் பி.எஸ்.என்.எல். மீதும் வழக்கு தொடுத்துள்ளனர்'' என்றார்.

http://telecomtalk.info/wp-content/uploads/2010/06/BSNL-Ties-Up-With-Indian-Railways-to-Promote-3G-Services.jpg



இதுகுறித்து தொலைத் தொடர்புத் துறை ஊழல் தடுப்புப் பிரிவு தலைமை பொது மேலாளர் ஜெயராமனிடம் பேசினோம் ''இப்படி ஒரு மோசடி நீங்கள் சொல்லித்தான் என் கவனத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.



இதுவரை அரசு நிர்வாகம் மீது நம்பிக்கையுடன் இருந்தவர்கள் இப்போதுதான் போலீஸில் புகார் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இனியாவது இவர்களுக்கு விடியட்டும்!


நன்றி - ஜூ வி




http://chennai.bsnl.co.in/homeimgs/megastu_100908.jpg

Thursday, June 02, 2011

தயாநிதி மாறனின் 440 கோடி ஊழல்,ஆதாரம் சிக்கியது,சி பி ஐ அதிர்ச்சி- தினமணி அம்பலம்

 http://www.thehindu.com/multimedia/dynamic/00003/DAYANIDHI_MARAN_AGEND_3888f.jpgநினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.

 இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு. 

 பொதுச் சொத்துகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த புத்திசாலியான அமைச்சர் யார்? அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா? இல்லையில்லை, இன்னமும் மத்திய அமைச்சராகப் பெயருடனும் புகழுடனும் வலம் வருகிறாரே அந்த தயாநிதி மாறன்தான் அவர். 

ஆ. ராசாவுக்கும் முன்னதாக அந்தத் துறையை வகித்துவந்தார், இப்போது ஜவுளித்துறையில் அமைச்சராக இருக்கிறார்.  அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. 

இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.  323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. 
http://cdn.wn.com/pd/c7/3d/a1d2a393b9a381f561d57b0e160d_grande.jpg
சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். 

தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். 

 இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது

.  இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.
http://www.hindu.com/gallery/0274/027406.jpg
 டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.  இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும்.

ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.  இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. 

 மேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.

 கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும். 
http://www.cinepicks.com/blog/wp-content/uploads/2009/06/jayam-ravi-marriage-reception-photo-15.jpg
 இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.  2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 

ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக - ரூ.440 கோடியைவிட - அதிகமாக இருக்கக்கூடும்.

கதை இத்தோடு முடியவில்லை.  இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை. 

நன்றி - தினமணி

Sunday, January 09, 2011

பெண்மையை கேவலப்படுத்தும் BSNL-ன் அத்து மீறிய விளம்பரம்

 http://telecomtalk.info/wp-content/uploads/2009/04/bsnl-postpaid-plans-1024x703.jpg
சமீபத்துல ஒரு மொக்கைப்படத்துக்குப் போயிருந்தேன்,(நாம என்னைக்கு
நல்ல படத்துக்கு போயிருக்கோம்?)அது என்னமோ தெரியல ,என்ன மாயமோ
புரியல,நான் போற படம் எல்லாம் மொக்கையாவே ஆகிடுது.(நன்றி - குணா
வசனகர்த்தா பாலகுமாரன்)

படம் போடறதுக்கு முன்னால சில விளம்பரங்களை போட்டாங்க..
அதுல BSNL-ன் 3G  சேவை பற்றிய விளம்பரமும் வந்துச்சு.ஆ ராசோவோட
ஸ்பெக்ட்ரம் ஊழல் கூட எனக்கு இவ்வளவு பெரிய ஷாக் குடுக்கல,(வழக்கமா
அரசியல்வாதிங்க பண்றதுதானே - வாழ்க தமிழனின் சகிப்புத்தன்மை)

ஆண்கள் உபயோகப்படுத்தும் ஷேவிங்க் கிரீம் விளம்பரத்தில்,அடுத்தவனோட புது பொண்டாட்டிய கரெக்ட் பண்ண ஐடியா குடுக்கும் மெண்ட்டோ ஃபிரஸ் விளம்பரத்தில் என பெண்களை போகப்பொருளாய்,பகடைக்காயாய் சித்தரிக்கும் விளம்பரங்கள் அதிகரித்து வரும் சூழலில் BSNL-ன் 3G  சேவை பற்றிய விளம்பரமும் நெம்பர் ஒன் மோசமான விளம்பரம் என பெயர் பெற்றுள்ளது.

ஒரு பஸ்சில் ஒரு நவ நாகரீக மங்கை மிடியுடை அணிந்து அமர்ந்துள்ளார்.(மாடர்ன் கேர்ள் சுடிதாரோ ஜீன்சோ போட மாட்டாரா?)அருகில் அமர்ந்து உள்ள இளைஞனிடம் வழிகிறாள்.அந்த இளைஞன் ஃபிகர் நமக்கு சிக்னல் குடுத்துடுச்சு,என அடுத்த கட்ட  நடவடிக்கையில் இறஙகுகிறான். இப்போதான் கதை(!?)ல ஒரு பெரிய ட்விஸ்ட். ஸ்டேண்டிங்கில் நிற்கும் இன்னொரு இளைஞன் கையில்  BSNL-ன் 3G  சேவை உள்ள ஒரு ஃபோனை வைத்துக்கொண்டு அவனது கேர்ள் ஃபிரண்டிடம் படம் காண்பிக்கிறான்.உடனே  சிட்டிங்கில் இருக்கும் சிட்டு (சி-னாவுக்கு சி-னா,நமக்கு எதுகை மோனை நல்லா வருதே கவிஞன் ஆகிடலாமோ? #டவுட்) உடனே பச்சோந்தி ஆகி அருகில் இருக்கும் இளைஞன் மீது எரிந்து விழுகிறாள்.

ஏய், மிஸ்டர், கையையும் காலையும் வெச்சிட்டு சும்மா இருக்க மாட்டீங்க?
எந்திரிங்க ,எந்திரிங்க  முதல்ல என அவனை துரத்தி விடுகிறாள்.(இவருக்கான
டப்பிங்க் வாய்ஸ் மகா மட்டம்),பிறகு ஸ்டேண்டிங்கில் இருக்கும் இளைஞனிடம்
மிஸ்டர்,நீங்க இங்கே வந்து உட்கார முடியுமா? என கேட்கிறாள்.உடனே ஷாக் சர்ப்பரைஸ் ஆகும் அவன், அவனது கேர்ள் ஃபிரண்டை அம்போ என விட்டு விட்டு( ராம்தாசை கழட்டி விட்ட கலைஞர் மாதிரி)அவள் அருகே போய் அமர்ந்து கொள்கிறான்.

க்ளைமாக்சில் அந்தப்பெண் அவளது காலைத்தூக்கி அவனது காலில் போட்டு
அவனது தோளில் சாய்ந்து கொள்கிறாள்,(ஏதோ 10 வருடம் காதலித்த காதலனுடன் இருப்பது போல).விளம்பர வாசகம் வருகிறது. BSNL-ன் 3G  சேவை பெற்றிடுங்க, கொண்டாடுங்க என.

கலாச்சார சீர்கேட்டின் உச்சம் அல்லவா இது?முன்னே பின்னே அறிமுகம் இல்லாத  இளைஞனுடன் ஒரு பெண் இப்படி நடப்பதாக காட்டுவது பெண் இனத்தையே கேவலப்படுத்துவது போல் உள்ளது.நான் இடைவேளையில் தியேட்டர் ஆப்பரேட்டரிடம் ,இந்த விளம்பரம் எத்தனை நாளா வருது? என்றேன்?அது ஒரு மாசமா வருதே என்றார் சர்வ சாதாரணமாக. சும்மா சின்ன விஷயத்துக்கு எல்லாம் பொங்கி எழும் பெண்னிய அமைப்புகள்,மாதர் சங்கங்கள் எல்லாம் என்ன செய்கின்றன?

பொறுப்புள்ள இடத்தில் ,நாடு முழுதும் பரவி இருக்கின்ற, அரசு மேற்பார்வையில் இயங்கும் ஒரு நிறுவனம் இப்படி நடக்கலாமா? அந்த விளம்பரம் தடை செய்யப்பட வேண்டும். வருத்தம் தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்த மேட்டரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஹிந்து நாளிதழுக்கும்,தமிழில்
குமுதம் இதழுக்கும் அனுப்பி இருக்கிறேன்.அதிகமான மக்களை போய்ச்சேர..

பார்ப்போம்.