5/6/2024 அன்று அமெரிக்காவில் ரிலீஸ் ஆன இப்படம் இப்போது அமேசான் பிரைம் ஓ டி டி யில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது .இது 2009 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம் . வெஸ்ட் மெஸாஜ் பாலைவனப் பகுதியில் 11 பெண்களின் பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன . ஆனால் குற்றவாளிகளைக்கடைசி வரை கண்டு பிடிக்கவே முடியவில்லை . அந்த சம்பவத்தில் கொஞ்ச்ம கற்பனை கலந்து திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள்
நான் சோழமண்டலம் டி பி எஸ் வஙகியில் லோன் செக்சனில் ரிசீவபிள் டீமில் டீம் லீ டராக இருந்த போது லோன் டியூ 3 தவணைகள் தொடர்ச்சியாக கட்டாதவர்கள் வண்டிகளை சீசர் ஏஜென்ட் மூலம் சீஸ் செய்து வண்டியை பார்க்கிங்க் யார்டில் வைப்போம் .எங்கள் கம்பெனிக்கும் , யார்டுக்கும் இருக்கும் தூரம் 8 கிமீ .க்ஸ்ட்மர்ஸுக்கு அந்த யார்டு இருக்குமிடம் தெரியாது . மீண்டும் பணத்தைக்கட்டினால் வண்டி ஒப்படைக்கப்படும் , இல்லை எனில் ஏலம் விடப்படும் . இந்தக்கதையில் கொலைகாரன் அதே போல தான் கொலை செய்தவர்களின் பிணங்களை குறிப்பிடட இடத்தில் ரெகுலராக புதைத்து வருகிறான்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு ஏரியாவில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் த போன் கலெக்ட்டர் என்ற குற்றவாளி யைத்தீட்டி வருகிறார்கள் .அவன் ரூ சீரியல் கில்லர் . அந்த் சுடேஷனில் பணியாற்றும் வில்லன் ஒரு போலீஸ் ஆபீசர்தான் .அவன் மேல் ஆல்ரெடி பல குற்றச்சாட்டுகள் உண்டு . சில கேஸ்களும் பைல் ஆகி இருக்கிறது .இப்போது அவன் சஸ்பென்ஷனில் இருக்கிறான் . இந்தக்கேஸை விசாரிக்க ஸ்பெஷல் ஆபீசர் அந்த ஊருக்கு வருகிறார்
ஆல்ரெடி ஸ்டேஷனில் ஒரு ஆபீசர் அவருக்கு அஸிஸ்டெண்ட் ஆக ஒரு லேடி ஆபீசர் அந்த கேஸை விசாரிக்கிறார்கள் . அந்த அ ஸிஸ் டெண்ட் லேடி தன்னிடம் பல விபரங்களை தன ஹையர் ஆபீசர் மறைப்பதாக புகார் தருகிறார் . . இப்போது அந்த சீரியல் கில்லர்
1 வில்லன் ஆன போலீஸ் ஆபீஸரா?
2 விசாரிக்கும் ஆபீஸரா?
3 ஹையர் ஆபீஸரா?
4 விசாரிக்க வரும் ஸ்பெஷல் ஆபீசரா? என்பதுதான் க்ளைமாக்ஸ்
படம் மிக மெதுவாக நகர்ந்தாலும் கதை தெளிவாக நமக்குப்புரிகிறது
கேஸை விசாரிக்க வரும் ஸ்பெஷல் ஆபீசர் ஆக மேல் ஜிப்சன் நடித்திருக்கிறார் . வில்லன் ஆக வரும் போலீஸ் ஆபீசர் தெனாவெட்டாக நடித்த்திருக்கிறார்
ஆன்றோ மோர்கன் ஸ்மித்தின் பின்னணி இசை அங்கங்கே திகில் ஊட்டுகிறது ஜாவா ரெய்ஸ் தான் ஒளிப்பதிவு , மிகத்தெளிவான ஒளிப்பதிவு ஆர் ஜெ கூப்பரின் எடிட்டிங்கில் படம் 90 நிமிடங்களில் முடிகிறது . ஒரு குயிக் வாட்ச் ஆகவே பார்த்து விடலாம்
ரசித்த வசனங்கள்
1 கஷ்டத்துல இருக்கும்போது கூட சந்தோஷமா இருக்கணும்னு பைபிள்ல சொல்லி இருக்கு
2 அவனோட சஸ்பென்ஷனை அவன் ஒரு வெக்கேஷனா எடுத்துக்கிடடான்
3 அவனை அவனாலேயே தடுக்க முடியாது
4 கொலை பண்றது மட்டும்தான் அவனுக்கு திருப்தி தரக்கூடிய ஒரே விஷயமா இருந்தது
5 நான் உருவாக்கியதை நீ அழிக்க விட மாடடேன்
6 கொலை பண்றவன் யாரும் நான் தான் கொலைகாரன்னு சொல்லிட்டு இருக்க மாடடான்
7 எனக்கு வயசானதால உடம்பு டயர்டு ஆகிடுச்சு , கண் பார்வை மங்கிடுச்சு , எல்லாம் சரி , ஆனா என் மூளை இன்னும் ஷார்ப்பாதான் இருக்கு
8 நமக்குப்பிடிச்சவங்க கிட் ட பொய் சொல்றது ரொம்பக்கஷ்டமான விஷயம்
9 வலி இல்லாம ஒருவரால் வாழவே முடியாது
10 சிலர் மனசுல அக்கிரமங்கள் தான் அதிகமா படிஞ்சிருக்கும் , அவன் மனசுல அரக்கத்தனம் புதைஞ்சிருக்கும்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பிரமாதமான படம் எல்லாம் இல்லை . ஆனால் பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 / 5
Boneyard | |
---|---|
Directed by | Asif Akbar |
Screenplay by |
|
Story by | Vincent E. McDaniel |
Produced by |
|
Starring | |
Cinematography | Joshua Reis |
Edited by | R.J. Cooper |
Music by | Andrew Morgan Smith |
Production companies |
|
Distributed by | Lionsgate |
Release date |
|
Running time | 96 minutes |
Country | United States |
Language | English |