Showing posts with label BLUE STAR (2024) -ப்ளூ ஸ்டார் - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label BLUE STAR (2024) -ப்ளூ ஸ்டார் - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Sunday, March 03, 2024

BLUE STAR (2024) -ப்ளூ ஸ்டார் - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


விமர்சன  ரீதியாகவும், வசூல்  ரீதியாகவும்  பலரின்  பாராட்டுதல்களைப்பெற்ற  இப்படம்  25/1/2024  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 


அசோக்  செல்வனுக்கு  போர்த்தொழில் , நித்தம்  ஒரு  வானம் ,சபா நாயகன்  என  தொடர்ந்து  வெற்றிப்படங்களாகவே  அமைந்து  வருவது  திருமணம்  ஆன  ராசியால்  கூட இருக்கலாம். சாந்தனு  கே  பாக்யராஜ்க்கு  நீண்ட  இடைவெளிக்குப்பின்  பெயர்  சொல்லும்  விதமாய்  ஒரு  படம் . 


 தனது  படங்களில்  ஜாதி  ரீதியிலான  கருத்துக்களை  முன்  வைக்கும்  இயக்குநர்  பா  ரஞ்சித்தின்  சொந்தப்படம்  இது . எஸ்  ஜெயக்குமார்  என்ற  இயக்குநரின்  வெற்றிப்படம்  இது கிரிக்கெட் விளையாட்டின்  மீது  ஆர்வம்  உள்ளவர்கள்  மிகவும்  ரசித்துப்பார்க்கும்  படமாக  அமைந்தாலும்  கிரிக்கெட்டே  தெரியாதவர்களும்   பார்த்து  ரசிக்கும்  ஜனரஞ்சகமான  ஸ்போர்ட்ஸ்  டிராமா  தான்  இது  


ஸ்பாய்லர்  அலெர்ட்


தமிழ்  நாட்டில்  திமுக , அதிமுக  என  இரு  பெரும்  கட்சிகள்  எதிரும்  புதிருமாய்  பல  ஆண்டுகளாக  மாறி  மாறி  ஆட்சி  அமைத்து  வருகின்றன.சமீபத்தில்  அதிமுக  பாஜக  உடன்  கூட்டணி  அமைத்து   தேர்தலை  சந்தித்தது. ஒரு  கட்டத்தில்  5 %  வாக்கு  வங்கி  உள்ள  பாஜக 37 %  வாக்கு  வங்கி  உள்ள  அதிமுக  வை  மிகவும்  மட்டமாக  நடத்த  அதிமுக  தன்  கூட்டணியை  முறித்துக்கொண்டது . இ[போது   திமுக, அதிமுக  என  இரு  கட்சிகளுமே  பாஜக  வை  தீவிரமாக எதிர்க்கின்றன . இது  தான்  படத்தின் மையக்கரு 


ப்ளூ  ஸ்டார் , ஆல்ஃபா  என  இரு  வெவ்வேறு  கிரிக்கெட்  டீம்  அந்த  ஊரில்  மிகப்பிரபலம்.  இரு  அணிகளுக்கும்  அடிக்கடி  மோதல். ஒரு  முறை   ஆல்ஃபா  டீம்  வெளியூர்  அணி  ஒன்றின்  உதவியுடன் ப்ளூ  ஸ்டார் அணியைத்தோற்கடிக்கிறது .பணத்துக்காகத்தான்  அந்த  வெளியூர்  அணி  ஆல்ஃபா  அணியுடன்  கூட்டணி  வைத்தது  என்றாலும்  ஒரு  கட்டத்தில்  ஆல்ஃபா  அணியை  வெளியூர்  அணி  மட்டம்  தட்டுகிறது . இதனால்  வெகுண்டு  எழுந்த  ஆல்ஃபா  அணி  ப்ளூ  ஸ்டார்  அணியுடன்  கூட்டணி  அமைத்து  வெளியூர்  அணியை  எப்படி  வெற்றி  கொள்கிறது  என்பதுதான்  திரைக்கதை 


 நாயகன்  ஆக  அசோக்  செல்வன், மீசை  இல்லாத  தமிழ்  சினிமா  ஹீரோக்களில் இவரும்  இடம்  பிடிக்கிறார். அவரது  முகத்தில்  கோபம்  நன்கு  வருகிறது . முந்தைய  படங்களில்  எல்லாம்  ஏ  செண்ட்டர்  ஆடியன்சுக்கான சாஃப்ட்  ஹீரோ  ஆக  மோகன்  போல, சுரேஷ்  போல  பெண்களைக்கவர்ந்த  அவர்  இப்போது பி  செண்ட்டர்  ஆடியன்சைக்குறி  வைக்கிறார். 


 இன்னொரு  நாயகன்  ஆக சாந்தனு  கே  பாக்யராஜ் கேரக்டரை  உணர்ந்து  நடித்து  இருக்கிறார். நாயகனுக்காக  மோதிரத்தைக்கழற்றித்தரும்  காட்சியில்  கை  தட்டலை  அள்ளுகிறார். 


நாயகி  ஆக  கீர்த்தி  பாண்டியன்  அழகான முக  அமைப்பு , வித்தியாசமான  டயலாக்  டெலிவரி  என  அசத்துகிறார். பகவதி  பெருமாள்  கோச்சர்  ஆக  நன்கு  நடித்து  இருக்கிறார். நாயகனின்  அப்பாவாக  இளங்கோ  குமாரவேல்  அமைதியாக  வந்து    போகிறார். 


கோவிந்த்  வசந்தா  வின் இசையில்  ஐந்து  பாடல்கள் . மூன்று  ஹிட் ஆர்  கே  செல்வாவின்  எடிட்டிங்கில் இரண்டே  கால்  மணி  நேரம்  ஓடுகிறது . பின்னணி  இசை  பல இடங்களில்  கலக்கல்  ரகம் 


தமிழ்  ஏ  அழகனின்  ஒளிப்பதிவில்  நாயகர்கள் , நாயகிக்கான  க்ளோசப்  ஷாட்களில்  அவர்களை ஆழகாகக்காண்பிக்கிறார். 


தமிழ்பிரபாவின்  உதவியுடன்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்  எஸ்  ஜெயக்குமார் 

சபாஷ்  டைரக்டர்


1  நாயகியின்  கேரக்டர்  டிசைன்  அருமை . வழக்கமாக  லைலாக்கள் , ஜெனிலியாக்கள்  மாதிரி  லூஸ்  நாயகிகளையே  பார்த்து  இது  மாதிரி  மெச்சூர்டு  பர்சனைப்பார்க்க்க  அவ்ளோ இதமாக  இருக்கிறது 

2  க்ளைமாக்சில்  புது  பிளேயர்  புல்லட் பாபுவுக்கான  பில்ட ப்  பிரமாதம் .டான்சிங் ரோஸ்க்கு  நிகர். அம்ப்பயர்  அவுட்  கொடுக்காத போதும்  ஜெண்ட்டில் மேனாக  நடந்து  கொண்டு  தானாக  வெளியேறுவது  சச்சின்  பாணி 

3  நாயைக்க்ல்லால்  அடிப்பதற்கும், தேன்  கூட்டின் மேல்  கல்  அடிப்பதற்கும்  உள்ள வித்தியாசத்தை  விளக்கும்  இடத்தில்  வசனகர்த்தா  சிக்சர்  அடிக்கிறார்


  ரசித்த  வசனங்கள் 

1  மோதிப்பார்க்கும்வரை  அவனவனுக்கு  அவனவன்  தான்  வெயிட்டு 


2  ஸ்போர்ட்ஸ்னு ஒண்ணு  இருந்தாதான்  டிசிப்ளின்  இருக்கும் 


3   யார்  கிட்டே  தோத்தோம்னு  பார்க்கக்கூடாது , ஏன்  தோத்தோம்னு பார்க்கனும், அதை  எபப்டி  சரி  பண்றதுன்னு  பார்க்கனும்


4  நம்மை  எல்லாம்  மதிக்கவே  மாட்டாங்க 


 திறமையைக்காட்டினா  மதிக்கப்போறாங்க 


5  நம்மை  ஏதாவது  ஒண்ணு அழ  வைக்குதுன்னா  அதுக்கு  நாம  உண்மையா  இருக்கனும்னு  அர்த்தம்


6 முத  தடவையே  ஜெயிச்சுட்டா  அதனோட  அருமை  தெரியாது 


7  என்ன  விவேகானந்தர்  மாதிரி  பேசறே?


 நல்லவங்க  எல்லாரும்  ஒரே  மாதிரிதான்  நினைப்பாங்க , பேசுவாங்க 


8  நம்ம  எதிரி  இவன்  தான்னு  முடிவானபின்  அவனை  விட  பலமா  நாம்  உழைக்கனும் 

9  வெறுப்பு  அழிவுக்குதான்  அழைத்துச்செல்லும், நிதானம்  நிறைய  சொல்லித்த்ரும் 

10  சேராம  இருக்க 1000  காரணங்கள்  இருக்கலாம், ஆனா  சேர்ந்து  விளையாட  ஒரே  காரணம்  போதும்,அது  என்ன?னு  நீங்களே  யோசிங்க

11  உனக்குன்னு  ஒரு  நேரம்  வரும்  காத்திரு, விட்ராத

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நீங்க  ரெண்டு  பேரும் சேரனும்  என  பக்ஸ்  வீர  வசனம்  பேசும்போது  அந்த  இடத்தில்  நாலஞ்சு  பேர்  தூக்கக்கலக்கத்தில் இருப்பதாகக்காட்டியதைத்தவிர்த்திருக்கலாம்

2  இரு  நாயகர்களும்  எலியும்,  பூனையுமாக  அடித்துக்கொண்டு  இருந்தபோது  இருந்த  வீரியம்  இருவரும்  இணையும்போது  கூஸ்பம்ப்  மொமெண்ட்  ஆக  காட்டி  இருக்க  வேண்டும்,  ரொம்ப  சாதா  சீனாக  இருந்தது 

3  நாயகியின்  கேரக்டர்  ஸ்கெட்ச்  பிரமாதம்,  அவரது நடிப்பும்  அட்டகாசம், ஆனால்  சில காட்சிகளில்  லைட்டா  ஓவர்  ஆக்டிங் 

4 ஃபைனல்  மேட்ச்  நடக்கும்போது கிரவுண்டில்  வந்து  பக்ஸ்  எதிரணி  டீமின்  பலம்  என்ன? பலவீனம்  என்ன?  என  பாடம்  ந்டத்திக்கொண்டு  இருக்கிறார். இது  இரண்டு  நாட்கள்  முன்னமே  செய்தால்  என்ன? அப்போதுதான்  எதிர்  டீம்  எது ? என  தெரிந்ததா? 

5   ஜென்மப்பகைவர்களாக  இருந்த  ப்ளூ ஸ்டார்  டீம், ஆல்ஃபா  டீம்  இரண்டும்  இணையும்போது  டீம்  பேரு  புதுபேர்  வைக்கனும், அல்லது  இரு  டீம்  பேரின்  பாதிப்பெயர்கள்  மெர்ஜ்  ஆகி  இருக்கனும், இரண்டும்  இல்லாமல்  ப்ளூ  ஸ்டார்  பேர்  வைக்க  எப்படி  ஆல்ஃபா  டீம்  ஒத்துக்கொண்டது ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இயக்குநர்  ரஞ்சித்  தயாரித்த  படங்களிலேயே  ஜாதி  சம்பந்தப்பட்ட  காட்சிகள்  அதிகம்  இல்லாமல்   ஜனரஞ்சகமான  சினிமாவாக  அமைந்த  படம்  இது . ரேட்டிங்  3 / 5 


Blue Star
Theatrical release poster
Directed byS. Jayakumar
Written byS. Jayakumar
Thamizh Prabha
Produced byPa. Ranjith
R. Ganesh Murthy
G. Soundarya
StarringAshok Selvan
Shanthanu Bhagyaraj
Keerthi Pandian
CinematographyThamizh A. Azhagan
Edited bySelva R. K.
Music byGovind Vasantha
Production
companies
Neelam Productions
Lemon Leaf Creation Pvt Ltd
Distributed bySakthi Film Factory
Release date
25 January 2024
CountryIndia
LanguageTamil