Showing posts with label BARROZ (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label BARROZ (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, January 11, 2025

BARROZ (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் (பேன்ட்டசி டிராமா )

             

  மலையாளம் சினிமா   உலகில்  முதல்  100 கோடி  வசூல் சாதனை செய்த  படம் புலிமுருகன் (2016) .அந்த  தெம்பில்  100 கோடி ரூபாய் பட்ஜெட்டில்  நேரடி  3  டி படமாக  ஒரு படத்தைக்கொடுத்திருக்கிறார் இயக்குனராக முதன் முதலாக அவதாரம் எடுத்திருக்கும் மோகன் லால் . மை  டியர் குட்டிசாத்தான் (1984)  இந்தியாவின் முதல் 3 டி படம் .அந்தப்படத்தின் இயக்குனர் ஆன ஜிஜோ  பொன்னூஸ்  எழுதிய பெரோஸ் -கார்டியன் ஆப்  டி காமாஸ்  ட்ரெஷர் என்ற   நாவலை  மையமாக  வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் .பாக்ஸ் ஆபீசில்  இந்தப்படம்  வெறும்  13 கோடி  மட்டுமே  வசூலித்து  தோல்வி  அடைந்திருக்கிறது . குழந்தைகளை க்கவரும் வகையில்  இருக்கும் இந்தப்படம்  எதனால்  எல்லோரையும் கவரவில்லை என்பதைப்பார்ப்போம்  .இந்தப்படத்தின்  தயாரிப்பாளரும் மோகன் லால்  தான்             


ஸ்பாய்லர்  அலெர்ட்


கதைக்களம்  1600 ல்  நடக்கிறது . நாயகன் ஆன பரோஸ்  போர்த்துக்கீசிய  மன்னரிடம்  பணி  புரிகிறார் . மன்னருக்கு மிகவும் நம்பிக்கையானவர் . ஒரு வேலை விஷயமாக வெளியூர் போக நேரிடும்போது  மன்னர்  நாயகனை  அழைத்து   ஒரு பூதமாக  அவரை  மாற்றி   நான் திரும்பி வரும் வரை  அல்லது என்  சந்ததியினர் வரும் வரை   இந்த பொக்கிஷத்தைப்பாதுகாக்கும்பணி உன்னுடையது என கட்டளை  இடுகிறார் .400  ஆண்டுகளாக  அதைப்பாதுகாத்து வருகிறார்நாயகன்  .இடைப்பட் ட  காலத்தில்  பலரும்  அந்த பொக்கிஷத்தை அடைய நினைத்தும் யாராலும் முடியவில்லை 


13  வயது   சிறுமி  ஒருத்தி  அவள் தான்  அந்த மன்னரின்  கடைசி  வாரிசு  அங்கே  வருகிறாள் . நாயகன்  அந்தப்பெண்ணை  அடையாளம்  கண்டு கொண்டாரா ?  சிறுமி  பூதத்தைப்புரிந்து கொண்டதா?  என்ன ஆனது என்பது   மீதி திரைக்கதை 


நாயகன் ஆக  மோகன் லால்  மொட்டை கெட்டப்பில்  வருகிறார் . நடிக்க அதிக வாய்ப்பு இல்லை .குழந்தைகளைக்கவரலாம் , அவ்வளவு தான் .நாயகனுக்கு   வழி காட்டும்  பொம்மையாக  வூடு  என்னும்   கேரக்ட்டர்   ரசிக்க  வைக்கிறது .குழந்தைகளை மிகவும் கவரும் . வாரிசு  சிறுமியாக  மாயா ராவ் அழகாக வந்து போகிறார் . ஆனால்  இவருக்கும் நடிக்க  அதிக    வாய்ப்பில்லை 


 பி அஜித்  குமாரின் எடிட்டிங்கில்  படம் 157  நிமிடங்கள்   ஓடுகிறது . சந்தோஷ்  சிவன்தான்  ஒளிப்பதிவு .கலக்கி இருக்கிறார் பாடல்களுக்கான இசையை லிடியன் நாதஸ்வரம் , பெர்ணான்டோ,  மைக்கேல்  ஆகிய மூவரும்  அமைத்து  இருக்கிறார்கள் .பின்னணி இசை  -  மார்க்  கில்லியன் .வசனம் - கலவூர் ரவிக்குமார் 


சபாஷ்  டைரக்டர்


 1    2 டி  கேமராவில்  படமாக்கி பின் அதை 3 டி யில் மாற்றி  ஏமாற்றாமல்  நேரடியாக  3 டி யில் படமாக்கிய விதம் அருமை . குழந்தைகளைக்கவரும் காட்சிகள்  செம 


2  நாயகனுக்கு   வழி காட்டியாக  வரும்   அந்த  வூடு பொம்மையின்  சுட்டித்தனங்கள் செம .அனிமேஷன்  கேரக்ட்டர்   தான் என்றாலும்  கலக்கல் டிசைனிங்க் 


3 ஒளிப்பதிவின்  பிரம்மாண்டம் , ஆழ் கடல்  காட்சிகள் ,ஆர்ட்  டைரக்சன் , கோவாவின் அழகைக்காட்டிய விதம் 


4   சவுன்ட்  டிசைனிங்  ஒர்க் , சி ஜி  ஒர்க்   எல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான பிரம்மாண்டம், செய் நேர்த்தி 

 ரசித்த  வசனங்கள் (கலவூர் ரவிக்குமார் ) 


1  அதிகப்பிரசங்கித்தனத்துக்கு அப்ரிசியேசன்  தந்திருக்கேன் 


2   ஒரு அப்பாவுக்கு  அம்மாவாக  இருக்கவும்  தெரியணும் , குறிப்பா  அம்மா  இல்லாத குழநதைக்கு அப்பாவா இருப்பவருக்கு .....


3  மறக்க  வேண்டிய  வேதனைகளை  திரும்பி  திரும்பி  நினைச்சிட்டு இருக்கக்கூடாது 


4 அழுது  புலம்பவே உனக்கு உரிமை இல்லை .எல்லாம் கர்மாப்படி தான் நடக்கும் 


5  கொடுத்த வாக்கு   என்  உயிருக்கு சமம் 


6 எஜமான் மேல  அளவுக்கதிகமான  விசுவாசம்   பூதத்தின்  குணாம்சம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  கங்குவா  படத்தில்  நாயகனுக்கும் அந்த சிறுவனுக்கும் உள்ள பாண்டிங்க்  ஆடியன்ஸான  நமக்கு எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது . ஒரு கனெக்ட்டே  உருவாக்கி இருக்காது . அதே  பிரச்சனை  இந்தப்படத்திலும் . நாயகன் ஆன பூதம் ,இசபெல்லா ஆன அந்த வாரிசு  சிறுமி   இருவருக்குமான  பாண்டிங்க்  சரியாக சொல்லப்பட வில்லை . அது மாபெரும்   மைனஸ் 


2  பாடல்கள்  தேவையற்ற திணிப்பு .ஆல்ரெடி  திரைக்கதை  செல்ப் எடுக்காமல்  தடுமாறும்போது  அப்பப்ப   பாடல் காட்சிகள் வந்து பாடாய்ப்படுத்துது 


3   வில்லனை  நாயகன் எப்படி சமாளிக்கப்போகிறார்   என்பதை  முந்திரிக்கொ ட்டைத்தனமாக  முன் கூட்டியே  சொல்லி விடுவதால்   சுவராஸ்யம் இல்லை 


4  பரோஸ்  என்னும் பூதம் யார் ? என்பதை  அடிக்கடி  இடம் சுட்டிப்பொருள்  விளக்கிக்கொண்டு இருப்பது எதுக்கு ? 


5   13   தலைமுறைகளாக  மன்னரின் வாரிசுகள்  எல்லாம் எதனால் சைலன்ட் மோடில்  இருந்தன ?என்ற கேள்விக்கு விடை இல்லை 

6  காட் சிகள்  ஒவ்வொன்றும்  டி வி சீரியல்  மாதிரி  ரொம்ப நீளம் .டக் டக் என கட் பண்ண வேண்டாமா? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-CLEAN U 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - குழந்தைகள் , பெண்கள்  ரசித்துப்பார்ப்பார்கள் . ஆண்களுக்குப்பொறுமை இருக்காது .மோகன் லால்  ரசிகர்கள்  கடுப்பாகிடுவாங்க . தவிர்த்தல் நலம் . ரேட்டிங்  2/ 5 

 இந்தியன் எக்ஸ்பிரஸ்  ரேட்டிங்  = 1/ 5 

த  வீக்  ரேட்டிங்  = 1/ 5 


Barroz
Mohanlal with an armoured outfit
Theatrical release poster
Directed byMohanlal
Dialogues byKalavoor Ravikumar
Based onBarroz: Guardian of D'Gama's Treasure
by Jijo Punnoose
Produced byAntony Perumbavoor
Starring
  • Mohanlal
  • Maya Rao West
CinematographySantosh Sivan
Edited byB. Ajithkumar
Music bySongs:
Lydian Nadhaswaram
Fernando Guerreiro
Miguel Guerreiro
Score:
Mark Killian
Production
company
Distributed by
Release date
  • 25 December 2024
Running time
154 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget100 crore[2]
Box office13.50 crore[3]