2015 ஆம் ஆண்டு வெளியான திதி என்னும் கன்னடப் படத்தின் அஃபிசியல் ரீமேக் தான் இந்த பாலகம் எனும் தெலுங்குப்படம் , ஒரிஜினல் வெர்சன் ஆன திதி சர்வதேச திரைப்பட விழாவில் தங்க சிறுத்தை விருதை வென்றது , மேலும் 63 வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த கன்னடப்பட விருதை வென்றது . மேலும் சிறந்த இயக்கம் , சிறந்த படம் , உட்பட 18 விருதுகளை வென்ற படம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு கிராமத்தில் தன் தாத்தாவுடன் வசித்து வருகிறான். நாயகனுக்கு முக்கியமாக ஒரு கடனை அடைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது . அந்த கடனை அடைக்க வசதியான ஒரு பெண்ணைக்காதலித்துக்கல்யாணம் பண்ண திட்டம் இடுகிறான்.
ஆனால் அதற்குள் அவன் எண்ணத்தில் இடி விழுந்தாற்போல நாயகனின் தாத்தா இறந்து விடுகிறார். இனி 11 நாட்கள் வீட்டில் விசேஷம் வைக்க முடியாது ., அதனால் நாயகன் கடன்காரரிடம் 12 நாட்கள் கால அவகாசம் கேட்கிறார்
ஈமக்கிரியை நடத்த சொந்தபந்தம் எல்லாம் ஒன்று கூடுகிறது . அப்போதுதான் நாயகனுக்கே தனக்கு ஒரு முறைப்பெண் இருப்பதே தெரிய வருகிறது . மிக வசதியான் பெண். ஆனால் சில சச்சரவுகள் காரணமாக இப்போது அவர்கள் குடும்பத்துடன் போக்குவரத்து எதுவும் இல்லை
உடனே நாயகன் தான் கல்யாணம் பண்ணலாம் என நினைத்த பெண்ணை ஓபிஎஸ் சை கழட்டி விட்ட இபிஎஸ் மாதிரி அம்போ என நட்டாத்தில் விட்டு விட்டு இந்த அத்தை பெண்ணுடன் நட்பு , பழக்கம் ஏற்படுத்திக்கொள்ள விழைகிறார்
தாத்தாவுக்கு படையல் வைக்கும்போது காகம் அதை ஏற்று உண்ணவில்லை , அப்போ தாத்தாவுக்கு ஏதோ மனக்குறை என முடிவாகிறது . அந்த கிராமத்து பஞ்சாயத்து கூடி காகம் படையலை ஏற்கவில்லை எனில் இந்த குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைக்க முடிவாகிறது
காகம் ஏன் படையலை ஏற்றுக்கொள்ளவில்லை , அதற்கு பரிகாரமாக என்ன செய்தார்கள் ? சண்டையில் பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா? நாயகன் தன் முறைப்பெண்ணை மணந்தாரா? எனப்துதான் மீதி திரைக்கதை
நாயகன் ஷைலுவாக பிரியதர்ஷி பக்கத்து வீட்டுப்பையன் போன்ற எதார்த்தமான தோற்றம் , மிகை இல்லாத அடக்கி வாசிக்கும் நடிப்பு என மனம் கவர்கிறார், கடனை அடைக்க கடன்காரர்களிடம் கெஞ்சுவது , பெண்ணைப்பார்த்ததும் வழிவது , க்ளைமாக்சில் தாத்தாவின் மரணத்தை தன் சுயநலத்துக்காக உபயோகித்தது குறித்து வருந்துவது என கனகச்சிதமான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்
நாயகி சந்தியாவாக காவ்யாகல்யாணராம் கிராமத்து அழகியாக அடக்கமான பெண்ணாக வருகிறார். அதிக வாய்ப்பில்லை என்றாலும் வந்தவரை ஓக்கே ரகம்
மற்ற சொந்த பந்தங்கள்: அனைவரும் புதுமுகங்கள் நடிப்பா? யதார்த்தமா வாழ்ந்துட்டுப்போய் இருக்கிறார்களா ? என கண்டு பிடிக்க முடியாதபடி அவ்வளவு யதார்த்தமான நடிப்பை வழங்கி இக்ருக்கிறார்கள்
ஆச்சர்யா வேணுவின் ஒளிப்பதிவில் ஒரு கிராமத்தின் அழகை கண் முன் கொண்டு வந்திருக்கிறார்
ஹிமல்ராஜ் ரெட்டியின் எடிட்டிங்கில் 2 மணி நேரம் 5 நிமிடம் ஓடும் படமாக கச்சிதமாக ட்ரிம் பண்ணி இருக்கிறார்
பீம்ஸ் சிசிரேலியா வின் இசையில் 3 பாடல்கள் செம ஹிட் மெலோடிஸ் .பின்னணி இசை மனம் கனக்க வைக்கிறது
ஓப்பனிங் சீனில் இருந்து முதல் 20 நிமிடங்கள் காமெடியாகப்போகும் படம் தாத்தாவின் இறப்புக்குப்பின் ஸ்லோ ஆகி க்ளைமாக்சில் கடைசி 20 நிமிடங்கள் நெஞ்சை கனக்க வைக்கிறது
வருசம் 16 படத்தில் எப்படி கதை மாந்தர்கள்:உடன் நாம் ஒன்றி இருந்தோமோ , காதலுக்கு மரியாதை படத்தின் க்ளைமாக்ஸ் எப்படி நம் மனதை கொள்ளை கொண்டதோ அது போல் இந்தப்படத்தின் க்ளைமாக்சும், திரைக்கதையும் நம் மனதில் தங்கி விடுகிறது
சபாஷ் டைரக்டர் ( வேணு ஏள்தந்தி )
1 கிராமத்து பாரம்பர்ய நம்பிக்கைகள் , சம்பிரதாயங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லப்பட்ட விதம்
2 ஃபிளாஸ்பேக் காட்சியில் இரு குடும்பத்துக்கும் எப்;படி பகை வந்தது ? என்பதில் சாதாரண சாப்பாட்டு விஷயத்தில் ஈகோ எப்படி எட்டிப்பார்க்கிறது? என்பதை யதார்த்தமாக காட்சிப்படுத்திய விதம்
3 க்ளைமாக்ஸ்க்கு முன் க்டைசி 20 நிமிட காட்சிகள் பெண்களின் கண்களைக்குளம் ஆக்கி விடும் , குறிப்பாக அந்த சோகப்பாட்டு அட்டகாசம்
4 படம் முழுக்க ஒரு இழவு வீட்டில் நடக்கும் சம்பவங்கள் என்றாலும் அதை எந்தவிதமான சினிமாத்தனமும், இல்லாமல் இயற்கையாக சொன்ன விதம்
ரசித்த வசனங்கள்
1 ஏம்மா மின்னல் , கவர்மெண்ட் உத்தியோகமா பார்க்கறே? இப்படி வேலைக்கு வர மதியம் 12 க்கு மேல ஆகுதே?
தாத்தா, நைட் படுக்க லேட் ஆகிடுச்சு
ஏன்? உன் வீட்டுக்காரன் உன்னை தூங்க விட மாட்டேங்கறானா?
அவரு ஊர்லயே இல்லை
அட, முதல்லியே சொல்லி இருந்தா நான் வந்திருப்பேனே?
பிள்ளை இல்லாத ஊரில் கிழவன் துள்ளி விளையாண்ட கதையா இருக்கு பெருசு
2 யோவ் , டெய்லரே , அளவெடுக்க வரச்சொன்னா வரமாட்டீரோ?
கொஞ்சம் பிசி
ஓஹோ , பெரிய வீட்லயா? சின்ன வீட்லயா?
3 ஏன் என் ஃபோனைம் நீ அட்டெண்ட் பண்ணலை ?
பக்கத்துலயே என் அம்மா படுத்திருந்தாங்க ‘
அய்யய்யோ , மேரேஜூக்குப்பிறகும் இப்படித்தான் செய்வாங்களா?
டேய் .. ச்சீய்
4 உலகத்துல எத்தனையோ பறவை இருந்தாலும் காகத்துக்கு மட்டும் ஏன் படைக்கறோம்னா மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஒரு சக்தி காகங்களுக்கு இருக்கு , மற்ற உயிரினங்கள் கண்களுக்குத்தெரியாத ஆன்மாக்கள் காகங்கள் கண்களுக்கு தெரியும்
5 ஆன்மாக்களின் செய்திகள் காகங்களால் புரிந்து கொள்ள முடியும், அதனால்தான் சுடுகாட்டில் காகங்கள் அலைந்து கொண்டிருக்கும்
6 ஆன்மாக்களுக்கு திருப்தி இல்லை எனில் காகம் படையலைத்தொடாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் நாயகி மீது உண்மையான அன்பு வைக்காமல் பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கொள்ள நினைப்பது உறுத்துகிறது , என்னதான் அவர் திருந்தியதாக ஒரு காட்சி இருந்தாலும், சர்க்கரைப்பொங்கலில் கல்லாய் அந்த நினைவு மனதில் தங்கி விட்டது
2 ஓப்பனிங் காட்சிகளில் தாத்தாவின் குறும்புகள் , லொள்ளுகள் தான் காட்டப்படுகி]றது. தாத்தா மற்றவர் மீது எப்படி எல்லாம் பாசமாக இருந்தார் என்பது பாடல் வரிகள் மூலமாகவும் வசனமாகவும் மட்டும் தான் நமக்கு காட்டப்படுகிறதே தவிர விஷூவலாக ஒரு காட்சி கூட தாத்தா பாசம் காட்டப்படவே இல்லை
3 சில காரணங்களுக்காக காகம் படையலை சாப்பிடவில்லை எனில் கிணற்றில் அலலது குளத்தில் மீன்களுக்கு படையல் இடலாம், அந்தக்காட்சி வைக்கப்படவே இல்லை
4 படத்தின் முதுகெ;லும்பு மாதிரி ரொம்ப ஸ்ட்ராங்க் ஆக அமைந்த காட்சி க்ளைமாக்ஸில் காகம் படையலை சாப்பிடும் காட்சி தான் . அந்த சீனில் பிஜிஎம் சும்மா உற்சாகமாய் தெறிக்க விட்டிருக்க வேண்டாமா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் சீரியல் டைப் கதைதான் ஆனால் குடும்பத்துடன் ரசிக்க வைக்கும் நல்ல படம் , மாமூலான மசாலா அம்சங்கள் , ஆட்டம் பாட்டம் காமெடி டிராக் என எதிர்பார்த்துப்போக வேண்டாம், மனதைத்தொடும் படம் ரேட்டிங் 3 / 5
Balagam | |
---|---|
Directed by | Venu Yeldandi |
Written by | Venu Yeldandi |
Produced by | Harshith Reddy Hanshitha Reddy |
Starring | Priyadarshi Kavya Kalyanram Sudhakar Reddy Muraleedhar Goud |
Cinematography | Acharya Venu |
Edited by | Himaj Reddy |
Music by | Bheems Ceciroleo |
Production company | |
Release date | 3 March 2023 |
Country | India |
Language | Telugu |
Box office | est. ₹15.20 crore[1] |