சரஸ்வதின்னு பேர் வெச்சிருந்தா மட்டும் நல்ல கல்வி அறிவு வந்துடாது, வளர்மதின்னு பேர் இருந்தா மட்டும் அறிவு வளர்ந்துட்டே போகும்னும் சொல்லிட முடியாது, கல்வித்தந்தைன்னு தனக்குத்தானே பட்டம் கொடுத்துக்கிட்டா மட்டும் அவர் பண்ற தப்பு எல்லாம் சரி ஆகிடாது. இது தான் படத்தோட ஒன் லைன்.
பிரைவேட் பேங்க் ல ஹீரோ லோன் செக்சன் ல ஒரு கலெக்சன் ஏஜெண்ட் / எக்ஸ்க்யூட்டிவ் ( எதுக்கு இந்த குழப்பம்னா டயலாக்ல அவரு ஏஜெண்ட் ,க்மிஷன் அப்டிங்கற வார்த்தை 3 டைம் வருது, ஆனா டிரஸ் கோடு பேங்க் எக்ஸிக்யூட்டிவ் போல் ). வராத கடனை வசூல் பண்ணி தருவாரு.
ஹீரோயினுக்கு ஒரு பிரச்சனை, அதை ஹீரோ தீர்த்து வைக்கறாரு. ஹீரோயின் ஃபிளாஸ் பேக் என்ன? மெடிக்கல் காலேஜ்ல நடக்கும் முறைகேடுகள். அடிப்படை வசதிகள் இல்லாம ஃபீஸ் மட்டும் கரெக்டா வாங்கிட்டு நடத்தும் நிர்வாகத்தை தட்டிக்கேட்கும் கதை
ஹீரோவா இளைய தளபதி விஜய். விக் வெச்சது பெரிய குறையா தெரியல. வழக்கம் போல் ஸ்மார்ட் லுக், அசால்ட் பர்ஃபார்மென்ஸ்.. 2 கலக்கல் டான்ஸ் , 3 பஞ்ச் டயலாக்ஸ் , 4 ஃபைட். இது போதாதா ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு?
ஹீரோயினா ஆர் டி ஓ ஆஃபீஸ் போய் சும்மா சிரிச்செ வாய்ல
எட்டு போட்டு காட்டி லைசன்ஸ் வாங்கிய கீர்த்தி சுரேஷ். பொம்மை மாதிரி வந்துட்டுப்போறார்,ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைனு தெரிஞ்சும் பெரிய அளவில் முயற்சி எடுக்கலை
காமெடிக்கு சதீஷ், ட்விட்டர்ல , தினத்தந்தி குடும்ப மலர்ல வ்ந்த மொக்கை ஜோக்ஸ் 4 சொல்லி 15 ரீல் படத்தை கவர் பண்ண முடியுமா?
அவர் ராமராஜன் போல் லிப்ஸ்டிக் போட்டு வருவது , அதை வெச்சு கா,மெடி தேத்துவது எல்லாம் ரண கொடூரம்
வில்லன் ஒரு மாங்கா மடையன் போல.ஒண்ணுக்கும் லாயக்கில்ல .
அவரோடு ஒப்பிடும்போது கிளை வில்லன் தேவலை.
பாடல்கள் , இசை ஓக்கே ரகம் . வரலாம் வரலாம் வா பைரவா கலக்கல் பிஜிஎம், 2 டப்பாங்குத்து பாட்டு சிவகாசி பேரரசுவை நினைவு படுத்துது. ஒரு மெலடி சாங்கில் விஜய் டான்ஸ் அருமை
கோர்ட் சீன்கள் எல்லாம் அந்தக்கால எஸ் ஏ சந்திர சேகர் படங்கள் பார்ப்பது போல் ரொம்ப போர். இன்னும் பக்காவா பண்ணி இருக்கலாம்
படம் ரொம்ப நீளம் . ரெண்டே முக்கால் மணி நேரப்படத்தை ரெண்டே காலாக ட்ரிம் பண்ணனும்
அழகிய தமிழ் மகன் படத்தை விட இதை ஒரு படி நல்லாவே பண்ணி இருக்கார்
ஆனா பிரச்ச்சனை என்னான்னா துப்பாக்கி , தெறி , கத்தி அளவுக்கு இல்லைனு பொது ஜ்னங்க கம்பேர் பண்ணி கமெண்ட் அடிப்பாங்க
தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்
1 Bairava 168 minutes
3 Opening shot of some heroes may b bike shot .next level cycle shot #bairava
4 As usual vijay handsome look.
5 The director knows the pulse of the fans .opening shot ,first fight shot ,the bgm all good #bairava
7 The dialogue writer slipped.the bank loan section collection executive get incentive.not commission. #bairava
9 Comedy actor sathese has no scope due to poor comedy script.his lipstick comedy not work out #bairava
10 The total audiences of the theatre stand up during varalaam varalaam vaa bairavaa song & fight
12 A commercial hero film screenplay must b with full & full hero oriented scenes.the director missed it.20 minutes without hero
13 The first half of azhagiya Tamil Magan consists of thrilling scenes and un expected twist.but in bairava the suspense fails
17 The court scenes r remembering S.A.Chandrasekaran films #bairavaa
18 Bairavaa - an average commercial masaala movie better than sura,puli,vaettaikaran.vikatan mark may b 40.rating 2.5 / 5
19 Kalakkal dappaanguthu song vaappaa vandhaadappaa sema dance.the director becomes sivakasi paerarasu #bairavaa
நச் வசனங்கள்
1 டைமிங்கை மட்டும் ஒருத்தன் சரியா கீப் அப் பண்ணிட்டா டைம் சரி இல்லைனு அவன் புலம்ப வேண்டிய அவசியமே இருக்காது #பைரவா
=============
2 இன்னைக்கு சம்பாதிக்கும் பணத்தை இன்னைக்கே செலவு பண்ணிட்டாதான் நாளை சம்பாதிக்க இன்னும் உத்வேகம் பிறக்கும் #பைரவா
==============
3 சேமிச்ச உணவு ஃபிரிட்ஜ்ல வெச்ச உணவு போல பழசா இருக்கும், வேட்டையாடி சாப்பிடறதுதான் ஃபிரஷ்சா இருக்கும் #பைரவா
===============
4 ஐ டி ல ஒர்க் பண்ற பொண்ணு கூட நைட்டில நல்லாருக்காது #பைரவா
==============
5 என் ஆளு 1000 பேர் நிற்கற கூட்டத்தில் கூட தனியா தெரிவா
ஒரு வேளை தனியா போய் நின்னிருப்பாளோ?
#பைரவா
--
--
===============
6 வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு குடிக்க எதுனா கொண்டு வாடா
அவங்க லேடி, குடிக்கற பழக்கம் இருக்குமா? #பைரவா
===============
7 plan பண்ணி வந்த உனக்கு எதும் மாட்டலை, ஆனா PLAIN னா வந்த எனக்கு ஒரு ஃபிகர் மாட்டி இருக்கு #பைரவா
==============
8
டிராஃபிக் போலீஸ் - ஹெல்மெட்?
ஹீரோ - அதான் நீங்க போட்டிருக்கீங்க இல்ல?
லைசென்ஸ்?
எடுத்தாச்
பேப்பர்?
படிச்சாச் #பைரவா
=============
9 நீயா நானா கோபினாத்தை நக்கல் அடிச்சு ஒரு டயலாக் - கனம் கோட்டார் அவர்களே! #பைரவா
===========
10 வாழ்க்கைல எதை இழந்தாலும் திரும்ப மீட்டுக்கலாம், ஆனா உறவை மட்டும் இழந்துடவே கூடாது #பைரவா
================
11
==============
சபாஷ் டைரக்டர்
1 டீசர் , ட்ரெய்லர் எடிட்டிங் , கட்டிங் ஒட்டிங் எல்லாம் பக்கா. ஒரு பக்கா கம்ர்ஷியல் ஹீரோ ரசிகர்களை திருப்திப்படுத்தும்படி படம் இருக்கு
2 நெருப்புடா கபாலி பஞ்ச் போலவே சிறப்பு , வெகு சிறப்பு என ரஜினி ரூட்டில் விஜயை திருப்பி விட்டது
3 விஜய் படங்களுக்கே உரித்தான ஆடல் பாடல் கொண்டாட்டங்கள், பஞ்ச் கள், பிஜிஎம்கள்
இயக்குநரிடம் சில கேள்விகள் , லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 ஒரு சீனில் ஹீரோ மேல் பெட்ரோல் ஊத்திடறாங்க அடியாட்கள். தீ பத்த வைக்க ட்ரையிங்.. உடனே ஹீரோ ஓடறாரு. புத்திசாலித்தனமா எதுனா செய்வார்னு பார்த்தா வில்லனோட பெட்ரோல் பங்க் போய் பைப்பை எடுத்து பெட்ரோலை அடியாட்கள் ,மேல் பீய்ச்சி அடிக்கறாரு. அவங்க தீ பற்றி எரியறாங்க. மறு முனை இவர் கிட்டே தானே இருக்கு, அதே நெருப்பு அவர் கிட்டே வராதா?
2 கிளை வில்லன் ஒரு சீன்ல ஹீரோயின் கிட்டே “ குழந்தை எப்டி பிறக்குது? சொல்லு” அப்டினு டீட்டெய்லா கேட்க அதுக்குப்பழி வாங்கும் விதமா ஹீரோ வில்லனோட மகளுக்கு ஃபோன் போட்டு உன் மக கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்கோ என்பதெல்லாம் விரசம். எம் ஜி ஆர் ஃபார்முலாவில் நடக்கும் விஜய் பேரை இப்படி கெடுக்கனுமா/
3 க்ளைமாக்சில் திடுதிப்பென பிரதமர் கொலை முயற்சி வ்ழக்கில் வில்லனை சிக்க வைக்கும் ஹீரோ செயல்கள் எடுபடவில்லை.அவ்ளோ ஈசியாவா போலீஸ் ஏமாறும்?
4 வாய்ப்பிருந்தும் கோர்ட் காட்சிகள் பிரமாதமாக கையாளப்படவில்லை
சி.பி கமெண்ட் - பி, சி செண்ட்டர்களில் ஓடும். அதுக்குள்ளே சிங்கம் 3 வராம இருக்கனும். விஜய் ரசிகர்கள் பார்க்கலாம்.எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40 , ரேட்டிங் 2.5 /5
16 Kerala CHANGANASERRY apsara bairava fdfs fans celebration 1
a===================
2 Bairava celebration 2 CHANGANASERRY kerala
a===================
3 Bairava celebration 3 CHANGANASERRY Kerala apsara theatre