31/10 /2024 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி 29 கோடி ரூபாய் வசூலித்து இந்த ஆண்டின் அதிக வசூல் படைத்த கன்னடப் படம் என்ற பெருமையைப்பெற்றது .இது ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் படம் . பிரபுதேவாவின் கேரியர் ஓர்ஸ்ட் படமான பகீரா (2023)என்ற டப்பாப் படத்தின் கதைக்கும் , இதற்கும் சம்பந்தம் இல்லை
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் சிறுவனாக இருந்தபோதே ஸ்பைடர் மேன் , சூப்பர் மேன் டைப் படங்களின் ரசிகனாக இருக்கிறான் . தானும் அதே போல் ஆக வேண்டும் என நினைக்கிறான் . அவனது அம்மா அவனுக்கு புது ஐடியா தருகிறாள் .. அவனது அப்பா போல போலீஸ் ஆபீசர் ஆகி விடடால் நிஜவாழ்வில் சூப்பர் மேன் ஆகி விடலாம் என்பதே அது .
நாயகனும் பெரியவன் ஆகி ஐ பி எஸ் ஆபீசர் ஆகிறான் .சிங்கம் , சாமி , மூன்று முகம் படங்களின் ஹீரோக்கள் போல ரவுடிகளை பந்தாடுகிறார் . முதல் 50 நிமிடப்படம் மாமூல் மசாலா டெம்ப்ளேட்டில் போகிறது . ஒரு கட்டத்தில் ஹையர் ஆபீசர் நாயகனுக்கு ஸ்பீடு பிரேக்கர் போடுகிறார் . இனிமேல் பெரிய இடத்து விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்கிறார் . நாயகனின் அப்பாவும் நாயகனை க்கண்டிக்கிறார் . இது நாயகனுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது . அதை விடப்பெரிய அதிர்ச்சி அப்பா நேர்மையானவர் இல்லை , லஞ்ச்ம வாங்குபவர் என்ற கசப்பான உண்மை தெரிய வருகிறது
நாயகனால் இனி நேர்மையான போலீஸ் ஆபீசர் ஆக இருக்க முடியாது .அதே சமயம் கொடுமைகளுக்குத்துணை போகவும் முடியாது . ஒரே வழி பகலில் சாதா போலீஸ் , இரவில் சூப்பர் மேன் பகீரா அவதாரம் . இதனால் அவரது ஏரியாவில் ரவுடிகளின் அட்டகாசம் குறைகிறது . .
சிபிஐ பகீரா யார் ? என்பதை கண்டுபிடிக்க ஒரு டீமை அனுப்புகிறது . இதற்குப்பின் என்ன ஆனது ? என்பது மீதிக்கதை
நாயகன் ஆக ஸ்ரீ முரளி நடித்திருக்கிறார் . ஆக்சன் ஹீரோவுக்கான எல்லா வேலைகளும் செய்கிறார் . பின்
பாதியில் தாடி கெட்டப் எடுபடவில்லை . நாயகி ஆக ருக்மணி வசந்த் கண்ணியமான உடைகளில் வருகிறார் , நடிப்பும் நல்லாருக்கு . சிபி ஐ ஆபீசர் ஆக பிரகாஷ் ராஜ் கடைசியில் பின் பாதியில் வருகிறார் . மற்ற அனைவர் நடிப்பும் ஓகே ரகம்
பி அஜனீஷ் லோக்நாத் இசையில் 5 பாடல்கள் . 3 சுமார் ரகம் . பின்னணி இசை பரவாயில்லை அர்ஜூன் ஷெட்டியின் ஒளிப்பதிவில் காட் சிகள் பிரமாண்டம் . பிரசாந்த் நீல் என்பவரின் கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் டாக்டர் சூரி
சபாஷ் டைரக்டர்
1 முதல் பாதி மாமூலான போலீஸ் கதை டெம்ப்லேட்டில் இருந்தாலும் கமர்ஷியலாக விறுவிறுப்பாகக்காட் சிகள் அமைத்தது
2 பின் பாதி சூப்பர் ஹீரோ கான்செப்ட்டில் யூகிக்கும்படியான காட் சிகள் என்றாலும் சுவராஸ்யமானதாக இருந்தது
ரசித்த வசனங்கள்
1 இந்த உலகத்துல எல்லாரும் எதோ ஒரு காரணத்துக்காகத்தான் பிறக்கறாங்க , ஆனா பலர் அந்தக்காரணம் தெரியாமயே செத்துடறாங்க
2 தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழும் எல்லாருமே சூப்பர் மேன் தான்
3 போலீஸ் யூனிபார்ம்ல இருக்கும்போது சரக்குக்குடிச்சா அது தப்பா ?
ஆமா, அது க்ரைம்
4 கடவுள் ரொம்ப மோசம் . எல்லா வலிகளையும் பெண்களுக்கே தந்திருக்கார்
5 முகமூடி போட்டு வாழக்கத்துக்கோ
6 உலகம் பூரா என்ன சிஸ்ட்டம் பாலோ பண்ணுதோ அதையே நீயும் பாலோ பண்ணு , எதிர்த்து நின்னா எதுவும் பண்ணமுடியாது
7 நியாயத்தைக்காப்பாத்த காக்கிச்சடடை தான் போடணும்னு அவசியம் இல்லை , காப்பாத்தற மனசு இருந்தாப் போதும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் சிறுவனாக இருக்கும்போது அவன் அம்மா அவனுக்கு பிறந்த நாள் பரிசா போலீஸ் யூனிபார்ம் கிப்ட் பேக்கிங்க்ல தர்றாங்க . புது டிரஸ் . அதை எடுக்கும்போது அயர்ன் பண்ணிதான் போடணும்கறாங்க . புது டிரஸ் நீதிடாதான் இருக்கு .அதை எதுக்கு அயர்ன் பண்ணனும் ?
2 நாயகன் பகீராவா இருக்கும்போது ஒரு கர்ச்சீப்பை முகத்துல கட்டிக்கறான் .ஒரு பொண்ணு செல்பி எடுத்துடுது . மீடியாக்களில் போட்டோ வருது . கண்கள் , தலை , ஹேர் ஸ் டைல் எல்லாம் நல்லாத்தெரியுது . ஆனா யாருக்கும் டவுட் வரலை .குறிப்பா சி பி ஐ .. ஐயோ பாவம்
3 நாயகன் பகலில் போலீஸ் .இரவில் பகீரா . எப்போ தூங்குவாரு ? டெய்லி நைட் வெளில போகும்போது அப்பாவுக்கு டவுட் வராதா?
4 நாயகனின் உயிருக்கு ஆபத்து எனில் நாயகியை வெறுப்பது போல நடிப்பார் . இது வாழ்வே மாயம் , பயணங்கள் முடிவதில்லை கால கட்டங்களிலேயே வந்துடுச்சு
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பல படங்களில் பார்த்த மாமூல் டெம்ப்லேட் தான் . போர் அடிக்காமல் போகுது . பார்க்கலாம் . ரேட்டிங் 2.25 / 5
பகீரா | |
---|---|
இயக்கியவர் | டாக்டர் சூரி |
மூலம் திரைக்கதை | டாக்டர் சூரி |
மூலம் உரையாடல்கள் | டாக்டர் சூரி |
மூலம் கதை | பிரசாந்த் நீல் |
தயாரித்தது | விஜய் கிரகந்தூர் |
நடிக்கிறார்கள் | ஸ்ரீமுரளி ருக்மணி வசந்த் பிரகாஷ் ராஜ் அச்யுத் குமார் ரங்கயான ரகு கருடா ராம் பிரமோத் ஷெட்டி சுதா ராணி ஷரத் லோஹிதாஷ்வா |
ஒளிப்பதிவு | அர்ஜுன் ஷெட்டி |
திருத்தியது | பிரணவ் ஸ்ரீ பிரசாத் |
இசை | பி. அஜனீஷ் லோக்நாத் |
தயாரிப்பு நிறுவனம் | |
வெளியீட்டு தேதி |
|
இயங்கும் நேரம் | 158 நிமிடங்கள் [ 1 ] |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
பாக்ஸ் ஆபிஸ் | ₹ 29 கோடி [ 2 ] |