நாயகி ஒரு பெரிய தொழில் அதிபர். அவருக்கு ஒரு புருஷன் , ஒரு குழந்தை , ஒரு கள்ளக்காதலன் இருக்கு, ரொம்ப நல்ல பொண்ணு ,எல்லாமே 1 தான். தன் கள்ளக்காதலன் கூட கார்ல போறப்ப ஒரு விபத்து நடந்துடுது. ஆள் அவுட். அந்த டெட்பாடியை ,மறைச்சிடறாங்க . சரி , கிளம்பலாம்னு காரை ஸ்டார்ட் பண்ணா கார் ரிப்பேர். அந்த வழியா ஒரு ஜோடி கார்ல வர்றாங்க, அவங்க இவங்க காரை டோ பண்ணி எடுத்துட்டுப்போக உதவி பண்றாங்க. விபத்தில் இறந்த ஆளோட பெற்றோர்தான் அவங்க .
பெற்றோருக்கு இவங்க மேல டவுட் வந்துடுது. நாயகியோட கள்ளக்காதலன் கொலை செய்யப்படறான்,அந்தக்கொலையை செஞ்சது விபத்தில் இறந்த ஆளோட பெற்றோராத்தான் இருக்கனும், பழிக்குப்பழி வாங்கறாங்கனு நாயகி நினைக்குது,ஆனா போலீஸ் நாயகியை கைது பண்றாங்க . நாயகியோட வக்கீல் இந்த கேசை எப்படி நடத்தறார், உண்மையை எப்படி கண்டுபிடிக்கறார் என்பதே கதை
ஹீரோவா அமிதாப் பச்சன், அசால்ட் பண்ணிட்டாரு, ஒரே அறையில் ஒரு சேரில் உட்கார்ந்து விசாரணை பண்றதுதான் கொடுக்கப்பட்ட கேரக்டர், அடி தூளு
ஹீரோயினா டாப்சி பன்னு. செம கெத்து நடிப்பு, டென்சன் ஆனா டக்னு தம் அடிக்கறது இவரது ஹேபிட்டா காண்பிப்பதை தவிர்த்திருக்கலாம், டென்சன் ஆனா தம் அடிச்சா சரி ஆகிடும் போலனு ஒரு கூட்டம் கிளம்பிடும், தவறான முன் உதாரணம், நம்மாளுங்க ஒரு நல்ல விஷயத்தை சினிமால சொன்னா ஃபாலோ பண்ண மாட்டாங்க, ஆனா கெடுதல் சொன்னா டக்னு பத்திக்கும்,
விபத்தில் மரணம் அடைந்த ஆளோட அம்மாவா நடித்தவரும் நல்ல நடிப்பு
நாயகியின் கணவர் டம்மி, கள்ளக்காதலன் வந்தவரை ஓக்கே
க்ரைம் த்ரில்லருக்கு உண்டான எல்லா நல்ல அம்ப்சங்களூம் இருக்கு, திரைக்கதை விருமாண்டி பாணியில் சொல்லப்பட்டிருக்கு, களைமாக்ஸ் குருதிப்புனல் போல் அமைக்கப்பட்டிருக்கு
வெல்டன் டைரக்டர்
ஒலிப்பதிவு , ஒளிப்பதிவு . இசை அனைத்தும் குட்
பெண்களும் பார்க்க்கக்கூடிய கண்ணீயமான நெறியாள்கை
நச் டயலாக்ஸ்
1 சொன்ன டைம்க்கு 5 நிமிஷம் முன்னாடியே வந்துட்டீங்க, நான் உங்களை 10 மணிக்குதான் எதிர்பார்த்தேன்
ஓக்கே மேடம், நான் வேணா போய்ட்டு 10 நிமிசம் கழிச்சு வரவா?
2 ஒரு வக்கீல்ட்ட கட்சிக்காரன் முதல்ல நடந்த உண்மையை முழுசா சொல்லிடனும், அப்பதான் வக்கீலால என்ன ஜோடிச்சு அவனைக்காப்பாத்தலாம்னு தீர்மானம் எடுக்க முடியும்
3 ஒரு கொலைக்கேஸ்ல சின் ந் அச்சின்ன விஷயமும் முக்கியம்
4 உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு
குடும்பங்களால் சூழப்பட்டது நல்ல வீட்டுக்கான அடையாளம்
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 மகளிர் தின சிறப்புத்திரைப்படம் −2016 ல் வெளியான ஸ்பானிஷ் படமான The invisible guest க்ரைம் த்ரில்லர் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் Badla (hindi) அமிதாப் பச்சன் !+ டாப்சி பன்னு #badla
2 ஒருவர் செய்த ஒரு தவறை ஒரு தடவைதான் மன்னிக்கனும்,திரும்பத்திரும்ப அதே தவறை அதே நபர் செய்யும்போது ஒவ்வொரு முறையும் மன்னிப்பது சரிவராது,இதுதான் படத்தோட கதையம்சத்தின் சாராம்சம் #badla(hindi)
3 அதர்வா நடித்த பூமாரங் தமிழ்ப்படம் முதல்ல பார்க்காம ஹிந்திப்படத்தை பார்க்கறீங்களே?நீங்க எல்லாம் ஒரு தமிழரா?னு யாரும் ஷோல்டரை தூக்க வேணாம்,நான் இருக்கற கேரளா,கோட்டயம் ஏரியா ல மார்னிங்க் ஷோ தமிழ் படம் திரையிடப்படலை
4 கேரளா.கோட்டயம் தன்யா Badla(hindi) ,அமிதாப்பச்சனுக்கு ரசிகர்கள் கம்மி போல,FDFS ஷோ க்கு 11 பேருதான் வந்திருக்காங்க,இன்னும் 4 பேரு வந்தாதான் படம் போடுவாங்க #badla(hindi)
5 ஒவ்வொரு தியேட்டர் ஏசி க்கும் ஒரு பிரத்யேக வாசம் உண்டு,ஈரோடு அபிராமி தேங்காய்பன் வாசம்,கோட்டயம் தன்யா ரோஜா பாக்கு வாசம் #badla(hindi)
6 பொதுவா எல்லா மார்க்கெட்டிங்க் டெக்னிக்கல்களும் பெண்களை மையப்படுத்தியே இருக்கு,குடி,தம் க்கு எதிரான விழிப்புணர்வுப்பிரச்சாரத்துல குடிகாரனை,கேன்சர் பேஷண்ட்டை (தம் பார்ட்டி) பெண்கள் கண்டுக்கறது இல்லை டைப் காட்சிகள் வைக்கலாம்,!100% மாற்றம் வரலைன்னாலும் 1% பயம் வந்தாலே வெற்றிதான்
சபாஷ் டைரக்டர்
1 செம ஹிட் ஆன 10 படங்கள்ல இருந்து 10 வெவ்வேற சீன்களை திருடி தொகுப்பது, அசிஸ்டெண்ட் டைரக்டர் கதையை திருடி தன் கதை ,மாதிரி டைட்டில்ல போட்டுக்கறது இப்ப்டி நடந்துக்கற டைரக்டர்கள் நடுவே நேர்மையா , முறைப்[படி அனுமதி வாங்கி ஒரு ஃபிரெஞ்ச் பட்த்தை ரீமேக்குனது குட்
2 கதை சொல்லும் உத்தி அழகு, தன் திறமையைக்காட்றேன்னு கசமுசா பண்ணாம ஒரிஜினலை அப்படியே ரீமேக்கினது ,குட்
3 வாய்ப்பிருந்தும் , வசதி இருந்தும் படத்தில் கில்மா சீனோ, கிளாமர் சீனோ மருந்துக்கூட வைக்காதது
லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)
1 லாஜிக் மிஸ்டேக் 1− தான் கொலை செய்த/விபத்தில் ஏற்பட்ட மரணத்துக்கு காரணமாக இருந்தவர் டெட்பாடியிடம் செல்போனை திருடுபவர் முதல் வேலையாக ஸ்விட்ச் ஆப் பண்ணனும்,அல்லது சிம்மைக்கழட்டி கடாசீடனும்,வில்லன் ஏன் செய்யலை? #badla(hindi)
2 லாஜிக் மிஸ்டேக் 2− ஒரு பெண்ணை கைவிலங்கிட்டு இழுத்துச்செல்லும் ஆண் போலீஸ் ,இதுதான் சீன்,சட்டப்படி ஒரு பெண்ணைக்கைது செய்யும்போதும்,விசாரிக்கும்போதும் ஒரு பெண் போலீஸ் உடன் இருக்கனுமே? #badla (hindi)
3 ஹோட்டல் ரூம்ல நிலைக்கண்ணாடியில் நெற்றியில் இடிச்சுக்கிட்ட நாயக்கியின் தலையில் ரத்தம் வருது, அடுத்த காட்சியில் நெற்றியில் தழும்போ , பிளாஸ்திரியோ இல்லாமல் க்ளீனா இருக்கு
4 அத்துவானக்காட்டில் ஒரு விபத்து நடந்தா அதை அப்படியே விட்டுட்டுப்போவது பாதுகாப்பு, மெனக்கெட்டு காரை டெட்பாடியோட குளத்தில் தள்ளுவது ரிஸ்க் . ( அந்த வழியே போன ஒரு டிரைவர் பார்த்ததால்னு சால்ஜாப் சொன்னாலும் )
5 நாயகி எடுத்தது ஏ சி ரூம் ., ஃபைவ் ஸ்டார் ஹோட்டல். ரூம்ப என்ன நடந்தாலும் வெளில சத்தம் கேட்காது, ஆனா சத்தம் கேட்டு ஆட்கள் கூடுவது எப்படி?
சி.பி கமெண்ட்- BADLA(HINDI) - அபாரமான திரைக்கதை உத்தி , யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்,சிறந்த க்ரைம் த்ரில்லர், ரேட்டிங் 4 / 5 , பிங்க் ரீமேக்கை விட இதை ரீமேக்கினால் நாயகனுக்கு அப்ளாஸ் அதிகம் கிடைக்கும், குடும்பப்பெண்களூம் திரை அரங்கில் காணக்கூடிய அளவு கண்ணியமான நெறியாளகை