Showing posts with label BADHAAI HO (2018) - HINDI - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி காமெடி மெலோ டிராமா). Show all posts
Showing posts with label BADHAAI HO (2018) - HINDI - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி காமெடி மெலோ டிராமா). Show all posts

Friday, June 17, 2022

BADHAAI HO (2018) - HINDI - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி காமெடி மெலோ டிராமா) @ டிஸ்னி ஹாட் ஸ்டார்

 


கொரோனா  நம்மை  ஆக்ரமிக்கும்  முன்பே  நம்  உள்ளங்களை  ஆக்ரமித்தவர்  தான்  ஆயுஸ்மான்  குரரானா நான்  பார்த்த  இவரது  முதல்  படம் அந்தாதூன் ( தமிழில்  பிரசாந்த்  நடிக்க  அந்தகன்)   இப்போ  சமீபத்தில்  உதய  நிதி  நடிப்பில்  வந்த  நெஞ்சுக்கு  நீதி  கூட  இவர்  நடித்த  ஆர்ட்டிக்கிள் 15  ரீமேக்  தான். தாராள  பிரபு  அடல்ட்  காமெடி  படம்  விக்கி  டோனார்  ரீமேக் .இப்போ  ஆர்  ஜே  பாலாஜி  நடிப்பில்  வெளிவரும்  வீட்ல  விசேஷம்  படத்தின்  ஒரிஜினல்தான்  இந்தப்பட,ம்

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோவுக்கு  ஒரு  அம்மா , அப்பா , பாட்டி   ஒரு  தம்பி  இருக்காங்க . மிடில்  கிளாஸ்  ஃபேமிலி/ ஒரு  காதலியும்  உண்டு . காதலியின்  விருப்பத்தின்  பேரில்  காதலியின்  அம்மா வை  சந்திச்சு பேசுறான் அவங்களுக்கு  ஓக்கே . காதலுக்கு  க்ரின்  சிக்னல்  கிடைச்ச  மகிழ்ச்சில  ஹீரோ  இருக்கும்போது   ரெட்  சிக்னலா  ஒரு  விசயம்  தெரிய  வருது 


 ஹீரோவோட  அம்மா  கர்ப்பமா  இருக்காங்க  50  வயசுல  எதிர்பாராத விதமா கரு  உருவாகிடுது  அப்பா கலைச்சுடலாம்கறார்  அம்மா  ஒத்துக்கலை .  .இந்த  விஷயம்  கேள்விப்பட்டு  ஹீரோவுக்கு  செம  ஷாக் , இந்த  சமூகம்  என்ன  நினைக்கும், எப்படி  அணுகும்? இதெல்லாம்  போக  காதலியோட  அம்மா  எப்படி  இதை  ஃபேஸ்  பண்ணுவாங்க  என்ற  கவலை  வேற   இந்த  பிரச்சனையை  ஹீரோவோட  குடும்பம்  எப்படி  ஃபேஸ்  பண்ணுது  என்பதுதான்  மொத்தக்கதையும்


ஹீரோவாஆயுஸ்மான்  குரானா, இவரோட  ஆக்டிங்கைப்பற்றி  புதுசா  சொல்ல  என்ன   இருக்கு ? செம  ஆக்டிங்.தர்மசங்கடமான  நிலையில்  பல  காட்சிகளில்  இவரது  முகத்தை  வெச்சுக்க  வேண்டிய  கட்டாயம்.  காதலியுடனான  குதூகல தருணங்களில்  உற்சாகம், தம்பியுடன்  சினேகம் வருங்கால  மாமியாருடன்  வாக்குவாதம்  என  பல  காட்சிகளில்  சபாஷ்  வாங்குகிறார்


 ஹீரோயினா  சான்யா  மல்ஹோத்ரா , இவங்க  பெற்றோர்  தீர்க்கதரிசி  போல , மல்கோவா  மாம்பழம்  மாதிரி  அழகா  வருவார்னு  முன்னமே  உணர்ந்துதான்  பேர்  வெச்சிருக்காங்க , ஆக்டிங்  ஆல்சோ  =குட் . iஇவரோட

  ஹேர்ஸ்டைல் ,காஸ்ட்யூம்ஸ்  ரசிக்க  வைக்குது

ஹீரோவின் அப்பாவாக  வரும்  கஜராஜ் ரா  செம  ஆக்டிங் , ஹீரோவ  விட  இவருக்குதான்  ஆக்டிங்  ஸ்கோப்  அதிக,ம்  ஹீரோவின்  அம்மாவாக  நீனா  குப்தா  மெச்சூர்டு  ஆக்டிங்  ஹீரோவின்  பாட்டியாக  வரும்  சுரேகா சிக்ரி  தமிழில்  பாட்டி  சொல்லைத்தட்டாதே , சம்சாரம்  அது  மின்சாரம்  மனோரமா  கேரக்டருக்கு  இணையான  நடிப்பு. அதகளப்ப்டுத்தி  இருக்கார் 


டெக்னிக்கள்  விஷயங்களில்  இசை  சுமார்  ரகம் தான்  பிரமாதப்படுத்தி  இருக்க  வேண்டிய்து  மிஸ்  பண்ணிட்டாங்க ,  பின்னணி  இசையும்  சுமார்  தான். ஒளிப்பதிவு   அருமை  கமலின்  விஸ்வரூபம்  பாகம்  1  பாகம்  2  ஆகிய  படங்களுக்கும்  டேக்  ஆஃப்  என்ற  மலையாளப்படத்துக்கும்  ஃபோட்டோகிராஃபி  செஞ்ச  சனு  வர்கீஸ்  யானைப்பசிக்கு  சோளப்பொறி  கதை தான்  என்றாலும்  கச்சிதம் 


ச்பாஷ்  டைரக்டர் 


1   ஹீரோயினும்  அவர்  அம்மாவும்  ஹீரோ  குடும்பத்தைப்பற்றி  பேசும்போது

  அதைக்கேட்க  நேரும்  ஹீரோ  தன்  வருங்கால  மாமியாரிடம்  கொடுக்கும்  கவுண்ட்டர்  செம 


2  மனைவி  மாசமா  இருக்கா  என்பதை  அம்மாவிடம்  சொல்லும்போது  ஏற்படும்  தயக்கம்  அதுக்கு  அம்மாவின்  ரீ ஆக்சன் மருமகளை  வைவது  அதே அம்மா  சொந்தக்காரங்க  கிட்டே  மருமகளை  விட்டுக்கொடுக்காம  பேசுவது 


3  மூடு  அவுட் ஆக  இருக்கும்  ஹீரோவிடம்  ஹீரோயின்  வீட்ல யாரும்  இல்லை  என  தகவல்  சொல்ல  அடுத்த செகண்டே  உற்சாகம் ஆகும்  ஹீரோ  எல்லா  ஆஃபீஸ் ஒர்க்கையும்  தூக்கிக்கடாசி  விட்டு  ஹிரோயின்  பின்  நாய்க்குட்டி  போல்  செல்வது 


4 கத்தி  மேல்  நடப்பது  போன்ற  அபாயகரமான  கதைகரு  , திரைகக்தை  , கொஞ்சம்  பிசகினாலும்  இது  அடல்ட்  காமெடி  ஜர்னர்க்கு  போய்  இருக்கும், சாமார்த்தியமா  ஃபேமிலீஈஈஈ  ,மெல்;ஓ ட்ராமா  ஆக்கி  ருக்காங்க 


5  ஹிரோவின்  பாட்டி  திருமண  விழாவில்  மருமகளை  க்லாய்க்கும்  லேடிசை  வாங்கு  வாங்கு  என  வாங்குவது  , கிரிட்டிக்கல்  ஆன  சிச்சுவேஷனை  ஹீரோவின்  அப்பா  சமாளிப்பது 


6  திருமண  விழாவுக்கு  வந்தா  சொந்தக்காரங்க  கலாய்ப்பாங்க  என  ஹீரோ  வர  மறுப்பது  விழா முடிந்து  விட்டுக்கு வரும்  பெற்றோரிடம்  ஹீரோ  மன்னிப்புக்கேட்பது  பார்வையாலேயே  நீ  வராம  இருந்ததே  பெட்டர்  என  அப்பா  உணர்த்துவது  டச்சிங்  சீன்




லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1 ஹீரோவின்  தம்பி  சக க்ளாஸ்மேட்டிடம்  நோஸ்கட்    வாங்குவது  அண்ணனிடம்  காட்டுவது  அண்ணன்  கோபப்பட்டு பேசுவது  எல்லாம்  ஓக்கே  , ஆனா  தம்பியின் க்ளாஸ்மேட்டை  மிரட்டுவது தம்பியை  விட்டே  அடிக்க  வைபப்து  என்ன  ஹீரோயிசம்? இத்தனைக்கும்  அவரது  தம்பியின்  மேலும்  தப்பு  இருக்கு , க்ளாஸ்மேட்டின் அம்மாவை  தப்பா  பேசறான்


2  ஹீரோயின்  கேரக்டர்  ஸ்கெட்ச்  தெளிவாக  இல்லை .ஹீரோவின்  அம்மா  கர்ப்பம்  என்ற  செய்தி  கேட்டு  முதலில்  நக்கலாக  சிரிப்பதும்  பின்  இதுல  என்ன  இருக்கு ?  என  கேட்பது  வரை  ஓக்கே  அவ்ளோ  மெச்சூர்  ஆக  இருப்பவர்   ஹிரோவிடம்  வேறு  இரு  சந்தர்ப்பங்களில்  சின்னப்பிள்ளைத்தனமாக  கோபிப்பது  ஊடல்  கொள்வது  பாத்திரத்தின்  தன்மையையே  கேள்விக்குரியாக்குது  


3   ஒரு  திருமண  விழாவில்  பெண்  தன்மை  உள்ள  ( திருநங்கை கிட்டத்தட்ட ) ஒரு  ஆளை  ,மேடையில்  நடனமாட  விட்டு  அவரை  அவரது  அப்பாவே  வெறுப்பது  போல்  காட்டி  இருப்பது கதைக்கு  தேவை  இல்லாத  காட்சி 


4  ஹீரோவின்  ஒரு  நண்பன்  ஹீரோ மீண்டும்  அண்ணன்  ஆகப்போறான் எல்லாரும்  வாழ்த்துங்க  என  பெட்டிக்கடையில்  கலாய்க்கும்போது  நீ  என்னைக்கும்  அப்பா  ஆகப்போறதில்லை,  உன்  மனைவியை  என்  கிட்டே  அனுப்பு  அல்லது  என்  அப்பா  கிட்டே  கோச்சிங்  போ  என்பது  கொடூரம்


5  ஹீரோ ஹீரோயின்  ஊடலில். சில  நாட்களாக  பேசிக்கொள்வதில்லை.. ஒரு சந்தர்ப்பத்தில்  ஹீரோயின்   ஃபோன்  பண்றப்ப  ஹிரோ  அட்டெண்ட்  பண்ணலை .  அப்போ  தம்பி  பாட்டி  இருவரும்  ஃபோனை  பார்க்கறாங்க  யாராவது  அட்டெண்ட்  பண்ணி  எமெர்ஜென்சிச்சுவேஷன்னு  நிலைமையை  விளக்கி  இருக்கலாமே? 


ரசித்த  வசனங்கள் \

\

1  இந்த  வாழ்க்கை  உனக்கு  என்ன  தருதோ  அதை  மகிழ்ச்சியா  ஏத்துக்கோ.அது  வாழ்த்தா  இருந்தாலும்  சாபமா இருந்தாலும்  


2  குடிக்கற  பழக்கம்  இல்லைன்னே , இப்போ  குடிக்கறே?


 ரெகுலரா  கிடையாது , எப்பவாவதுதான்


3   அம்மா,  நீ  மறுபடியும்  பாட்டி  ஆகப்போறே?  என்  சம்சாரம்  மாசமா  இருக்கா


 அடப்பாவி.. குழந்தைங்க  அவங்க  பெற்றோருக்கு  சந்தோஷம்  குடுப்பாங்க  என்பது  உண்மைதான்,  ஆனா  நீ  அவங்களுக்கு  ஒரு  சான்ஸ்  தர  மாட்டியா?  அவங்க  சந்தோஷமா  இருக்க? 


4  நான்  நியூஸ்  போடும்போதெல்லாம்  அதை  ஆஃப்  பண்ணுவே, இப்போ நீயே  நியூஸ்ல  வரப்போறே


5  என்ன  ஆச்சு ?  

ஆகிடுச்சு


புரியல

பிரெக்னண்ட்  ஆகிடுச்சு


6    என்ன  பிரச்சனை ? ஆஃபிஸ்க்கு 7  நாளா  வர்ல  என்  ஃபோன்  அட்டெண்ட்  பண்ணலை, மெசேஜூக்கு  ரிப்ளை  பண்ணலை


 அது  வ்ந்து  அம்மா  கர்ப்பமா  இருக்காங்க


  யாரோட  அம்மா?


 எஙக்ம்மா  தான், பின்னே  உங்க  அம்மாவா? 


7   இந்த  விஷயத்தை  எல்லாம்  எப்படி  உங்க  அம்மா  கிட்டே  டிஸ்கஸ்  பண்ணமுடியும்?


பொதுவா  பொண்ணுங்க  அவங்க  அம்மா  கிட்டே  எல்லா  விஷயமும்  பேச  முடியும் 


8   என்  பிரச்சனை  உனக்குப்புரியாது , எங்க  அம்மா  மாதிரி  உங்க  அம்மாவும்  இப்போ  கர்ப்பம்  ஆனாதான்  உனக்கு  புரியும்


 எங்க  அம்மா  இப்போ  கர்ப்பம்  ஆக  சான்ஸ்  இல்லை அப்டியே  ஆனாலும்  அது  இதை விடப்பெரிய  பிரச்சனை  ஆகிடும்

‘ ஏன்?


 ஏன்னா  எங்க  அப்பா தான்  இப்போ  இல்லையே? 


9   டேய், என்னடா  உங்க  அப்பா  இந்த  வயசுல  உங்க  அம்மா  கூட இப்படி  பண்ணீட்டாங்க?


 பின்னே? எங்க  அப்பா  என் அம்மா  கூட  பண்ணாம  உன்  அம்மா  கூடவா  பண்ணுவாரு? 


10   உன்   அம்மா  அப்பா  இந்த  வயசுல  ரொமான்ஸ்  பண்றாங்கனு  சங்கடப்படறியே?  உன்னை  மேரேஜ்  பண்ணிக்க  யோசனையா  இருக்கு, குறிப்பிட்ட  வயசுக்கு  அப்புறம்  நீ  கூட  என்னை  விலக்கி  வெச்சிடுவியோனு பயமா  இருக்கு  


11   உன்  ஆள்  இங்கே  வந்தான்  கம்மியாதான்  பேசுனான் ஆனா  நல்லா  பேசுனான், ஏற்கனவே நான்  சொன்ன  மாதிரி  அவன்  மோசமான  ஆள்  இல்லைனுதான்  தோணுது 

12   தப்பு  உன்  மேல  இருந்தா  மன்னிப்பு கேட்டுடு,  ஈகோ  பார்த்துட்டு  இருந்தா  அவ  வேற  யாரையாவது  செலக்ட்  பண்ணிடுவா


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - குடும்பத்துடன்  பார்க்கத்தகுந்த  ஃபேமிலி  டிராமா , பெண்களுக்கு  ரொம்ப பிடிக்கும், ஹிந்தியில்  அதிரி புதிரி  ஹிட்  ஆன  படம்  ரேட்டிங் 3 / 5