Showing posts with label BAD NEWS (2024) - - ஹிந்தி - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label BAD NEWS (2024) - - ஹிந்தி - சினிமா விமர்சனம். Show all posts

Monday, September 16, 2024

BAD NEWSZ(2024) - - ஹிந்தி - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்

       


     80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு  ரூ 115 கோடி கலெக்சன்    செய்த படம் இது .உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் . இரட்டைக்குழந்தை  என்பதே  அபூர்வம் , அதிலும்  இரு குழந்தை களுக்கும்  இரு   வேறு அப்பா  என்பது அரிதிலும் அரிது . கோடி யில் ஒருவருக்குத்தான் அப்படி அமையும் .அப்படி  நடந்த ஒரு சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கதைதான் இது .சிக்கலான இந்தக்கதைக்கருவை காமெடியாக சொல்லி இருக்கிறார்கள் 19/7/2024 அன்று  திரை அரங்குகளில்  வெளியான  படம் இப்போது 13/9/24 முதல் அமேசான் பிரைம் ஓ டி டி  யில் காணக்கிடைக்கிறது     

1990 ல் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த அவசரப்போலீஸ் 100  படத்தில்  இரு வேடங்களில் வருவார் . அவரது மகன் அடிக்கடி  எனக்கு ரெண்டு அப்பா என காமெடியாக  சொல்வான் . அந்த காட்சியை   வேறு யாராவது படமாக்கி இருந்தால் விரசமாக அமைந்திருக்கும் . ஆனால்  ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும்படி அந்தக்காட்சியை திரையில்  காண்பித்தார் . அதே போல்  இந்த  இயக்குனரும்  சீரியஸான , சிக்கலான கதையை  காமெடியாக  மேலோட்டமாக சொல்லி இருக்கிறார்        


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு சமையல்காரர் .பைவ் ஸ்டார் ஹோட்டலில்  செப்  ஆக பணியாற்றும் அவருக்கு மேரகி ஸ்டார் ஆக வேண்டும் என்பது லட்சியம் . சினிமாவில் ஆஸ்கார் போல ,இலக்கியத்தில் நோபல் பரிசு போல  சமையல் கலையில் மேரகி ஸ்டார்  என்பது உயர்ந்த  பட்டம் 


நாயகி நாயகனை  ஒரு பார்ட்டியில் சந்திக்கிறார் . இருவரும் மனதைப்பறிகொடுக்கிறார்கள் . பெற்றோர்  நிச்சயித்த திருமணமாக அது நடக்கிறது . ஆனால்   திருமணத்திற்குப்பின் நாயகனின் அன்புத்தொல்லை தாங்க முடியவில்லை . அடிக்கடி நாயகி பணியாற்றும் இடத்துக்கே  வந்து அன்புத்தொல்லை  தருகிறார் . ஐஸ்வர்யாராயை  சல்மான்கான்  டார்ச்சர் செய்தது போல  , நயன் தாராவை சிம்பு லவ் டார்ச்சர் செய்தது போல  நாயகன் நாயகியை  டார்ச்சர் செய்கிறார் .இதனால் நாயகிக்கு   ஹோட்டல்  செப் பதவி பறிபோய் விடுகிறது .இதனால்  கடுப்பான  நாயகி நாயகனுக்கு டைவர்ஸ்  நோட்டிஸ் கொடுத்து விட்டு   புதிய  இடத்துக்குச்செல்கிறார் 


 அங்கே  ஒருவருடன் பழக்கம் ஆகிறது நாயகிக்கு  ஒரு நண்பன்  வாட்சப்பில் ஒரு மெசேஜ் அனுப்புகிறான் .அதில்  நாயகியின் கணவன்  இன்னொரு பெண்ணுடன்  ஜோடியாக  சுற்றுவது போல  போட்டோ இருக்கிறது . இதைப்பார்த்து செம  கடுப்பான  நாயகி சரக்கு அடித்து விட்டு  ஒரு கோபத்தில் , போதையில்  புதிய நண்பர் உடன் உறவு வைத்துக்கொள்கிறார் . அடுத்த  நாளே  நாயகி இருக்கும் இடத்துக்கே  நாயகன் வந்து அவள்: மனதை  மாற்றி  உறவு வைத்துக்கொள்கிறார் 


 நாயகி  கர்ப்பமாக  இருக்கிறார் .இரட்டைக்கரு .இரட்டை அப்பாக்கள் . இந்தப்பிரச்சினையை  நாயகி , நாயகன் , புது நண்பர் . மூவரின் குடும்பங்கள் எப்படி சமாளிக்கிறது  என்பதே மீதி திரைக்கதை 


நாயகி ஆக திருப்தி ட்ரீமரி  நடித்திருக்கிறார் . ஒருவர் அணியும் உடையை வைத்துத்தான் சமூகம் அவரை மதிப்பிடும் . நதியா , ரேவதி , சுஹாசினியை இந்த சமூகம் பார்க்கும் பார்வைக்கும், த்ரிஷா , அனுஸ்கா , நயன் தாரா  இவர்களைப்பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு . நாயகி  ஏற்றிருக்கும் கேரக்ட்டருக்கு அவரது ஆடை அலங்காரங்கள்  பொருந்தவில்லை . கவுரமான பணியில்  இருப்பவர் , குடும்பப்பெண்  இப்படித்தான்  அரை  குறையாக ஆடை அணிவார்களா?  மற்றபடி  நடிப்பு குட் 


நாயகன் ஆக விக்கி கவுசல் கலக்கல் நடிப்பு , இவர் முக சாயலில் சாந்தனு போல்  இருக்கிறார் .காமெடி ,நடனம்  ,சென்ட்டிமென்ட் மூன்றும் நன்றாக   வருகிறது  இன்னொரு  நாயகனாக  நாயகியின் புதுக்காதலன் ஆக அமி விரக  நடித்தருக்கிறார் . ஐயோ பாவம்  எனும் முக பாவம் .கச்சிதமான நடிப்பு 


 நாயகனின் அம்மாவாக வரும்  ஷீபா சத்தா  பிரமாதமான நடிப்பு , மற்ற அனைவருமே சிறப்பாக  நடித்திருக்கிறார்கள் 


பாடல்களுக்கான  இசையை  எட்டு பேரும் , பின்னணி இசையை இருவரும்  கவனித்து இருக்கிறார்கள் . பல இடங்களில் காமெடி களை  கட்டஉதவுகிறது .ஒளிப்பகிவு  டோபோஜிக் ரே  .குட் ஒர்க் 


ஷான் ,முகமது  தான் எடிட்டிங்க் . 2 மணி   நேரம் 8 நிமிடங்கள்  படம்  ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்

1   நாயகி  ஒரு மன மாற்றத்துக்காக வந்த இடத்தில் இன்னொருவருடன் பழக்கம் ஆவதை யதார்த்தமாக சுவராஸ்யமாக காட்சிப்படுத்திய விதம் 


2   கர்ப்பமாக  இருக்கும்  டைவர்ஸ் ஆன  நாயகியைப்பெண் பார்க்க நிச்சயம் செய்ய நாயகியின் பெற்றோருடன்  ஒருவன்   வருகிறான் , நாயகி கர்ப்பமாக இருப்பது  நாயகியின் பெற்றோருக்குத்  தெரியாது . கணவனுடன்  ராசி ஆன விஷயமும்  தெரியாது . அந்த சிச்சுவேஷனில்  நாயகியின்    தற்காலக்காதலனும்  வர  அப்போது நடக்கும் சமாளிபிகேஷன்கள் காமெடிக்கலக்கல்ஸ் 


3   நாயகிக்கு  திருமணம் ஆன புதிதில்  நாயகனின் அம்மா  அடிக்கடி  அவர்களுக்கு அன்புத்தொல்லை தரும் காட்சிகள்   அதற்கு  நாயகன்   சென்ட்டிமென்ட்  சமாளிப்புகள்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  மேரேஜ் என்பது ஒரு ஐ டி ப்ரூப்  அல்ல , மனசுக்கு எப்போத்தோனுதோ அப்போ பண்ணிக்கலாம் 


2  சாரி மிஸ் , நீங்க அழகா  இருந்ததால நீங்க டான்ஸ் ஆடும் ஸ்டெப் சை எல்லாம் கவனிக்கலை  உங்க அழகை மட்டும் தான் ரசிச்சுட்டு இருந்தேன் 


3    என் ஆர்டினரி  வாழ்க்கை யை எக்ஸ்டரா ஆர்டினரி  வாழ்க்கையா மாற்ற அவன் வந்தான் 


4  என்னது ?உன் இடையில்  டாட்டூ குத்தி இருக்கே? 

 அதனால என்ன? 

டாட்டூ  போட்டிருக்கும்   பெண்கள்  நல்ல மனைவியாக  இருக்க மாட்டார்கள்னு கேள்விப்பட்டிருக்கேனே ?  

 சும்மா  இந்த  வாட்ஸப் பார்வார்டுகளை எல்லாம் நம்பாதீங்க 


5  சார் ,நீங்க  வெர்ஜினா?

ஆமா சின்ன  வயசுல இருந்தே ...


6  எந்தப்பெரிய பிரச்சனை வந்தாலும் முதல்ல என் அப்பா கிட்டே   டிஸ்கஸ்  செய்வேன் 


7  டைவர்ஸ் பேப்பர்ல  நான் சைன் பண்ணிட்டேன் , அதனால லாஜிக்கலி டெக்ணிக்கலி  ஐ ஆம் சிங்கிள் 


8 THIS IS THE CASE OF  HETEROPATERNALSUPERFECUNDATION


9   உங்க  வாழ்க்கைல நடந்தது காமடியா?   டிராஜெடியா? 

நம்ம வாழ்க்கைல  நடந்தா அது டிராஜெடி , அடுத்தவங்க வாழ்க்கைல நடந்தா அது காமெடி 

10 டைவர்ஸுக்குப்பின்  தம்பதிகள் நண்பர்களாக  இருக்கக்கூடாதா?


11       ஒவ்வொரு அம்மாவுக்கும் அவளோட குழந்தை  கிரேட்டஸ்ட்   ஆப்  ஆல்  டைம் தான் 


12  நாம் பசிக்காக மட்டும்  சாப்பிடுவதில்லை , இந்த வாழ்க்கையைக்கொண்டாடவும்  சாப்பிடுகிறோம் 


13  சண்டைல . ஜெயிக்க உன் முட்டியை பயன்படுத்து , ஆனா இதயங்களை  ஜெயிக்க  உன் மூளையை பயன்படுத்து


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகிக்கு  கணவன் , புதுக்காதலன்   என்ற  இரு உறவுகள்  இருக்க  இந்த உண்மையை உணர்ந்தும்  மூன்றாவதாக  ஒரு ஆள்  அவளை மணக்க முன் வருவது  ஜீரணிக்கும்படி   இல்லை  

2   நாயகியைக்கவர   கணவனும் , காதலனும் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் அடடகாசங்கள்  கடுப்பு .மானம் கேட்ட குடும்பத்தில் பிறந்தவர்களா  என  எண்ண  வைக்கிறது 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  2கே  கிட்ஸ்  தான் இதை ரசிக்க முடியும் . அந்தக்கால ஆசாமிகள்  ஒன்  ஸ்டெ ப்  பேக் . ரேட்டிங்  3 / 5 


மோசமான நியூஸ்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்ஆனந்த் திவாரி
எழுதியவர்இஷிதா மொய்த்ரா
தருண் துடேஜா
தயாரித்ததுகரண் ஜோஹர்
ஹிரூ யாஷ் ஜோஹர்
அபூர்வா மேத்தா
அம்ரித்பால் சிங் பிந்த்ரா
ஆனந்த் திவாரி
நடிக்கிறார்கள்விக்கி கௌஷல்
ட்ரிப்டி டிமிரி
அம்மி விர்க்
ஒளிப்பதிவுடெபோஜீத் ரே
திருத்தியதுஷான் முகமது
இசைபாடல்கள்:
ரோசக் கோஹ்லி
விஷால் மிஸ்ரா
டிஜே சேடாஸ்-லிஜோ ஜார்ஜ்
பிரேம்-ஹர்தீப்
கரன் அவுஜ்லா
அபிஜீத் ஸ்ரீவஸ்தவா
ஸ்கோர்:
அமர் மொஹிலே
உற்பத்தி
நிறுவனங்கள்
மூலம் விநியோகிக்கப்பட்டதுஏஏ பிலிம்ஸ்
வெளியீட்டு தேதி
  • 19 ஜூலை 2024
இயங்கும் நேரம்
140 நிமிடங்கள் [ 1 ]
நாடுஇந்தியா
மொழிஹிந்தி
பட்ஜெட்மதிப்பிடப்பட்ட ₹80 கோடி [ 2 [ 3 ]
பாக்ஸ் ஆபிஸ்மதிப்பிடப்பட்ட ₹115.74 கோடி [ 4 ]