யுனைட்டட் ஸ்டேட்டோட FBI நிறுவனம் வில்லனோட தம்பியை போட்டுத்தள்ளிடுது.. உடனே வில்லன் என்ன செய்வாரு? ஆள் வெச்சு பழிக்கு பழி வாங்குவாரு.. எஸ் அதே தான்... உலக அளவில் புகழ் பெற்ற வாடகை கொலையாளி ப்ரூஸ் வில்ஸ் ஸை நியமிக்கறாரு. அண்ணன் ப்ரூஸ் வில்ஸ் இப்போதான் ஹீரோ.. அப்போ ( 1997) சத்யராஜ் மாதிரி பயங்கர வில்லன் போல ..
அண்ணன் களம் இறங்குனது FBI நிறுவனத்துக்கு தெரிஞ்சுடுது.. அதை தடுக்கனும்.. இன்னா பிரச்சனைன்னா ப்ரூஸ் வில்ஸ்ஸை நேர்ல பார்த்த ஆள்ங்க யாரும் இல்லை, ஃபோட்டோவும் இல்லை.. எப்படி ஆளை பிடிக்க?குரூப் டிஸ்கஷன் நடக்குது.
விசாரணைல இஸபெல்லான்னு ஒரு ஃபிகர்.. ப்ரூஸ் வில்ஸ் பற்றி தெரிஞ்ச ஆள்னு கண்டு பிடிக்கறாங்க.. ஆனா அந்த ஃபிகரை எப்படி கண்டு பிடிக்க? கடவுள் ஒரு கதவை மூடுனா இன்னொரு கதவை திறப்பாரு.. ரஞ்சிதா அந்தாண்ட போனா இந்தாண்ட ஆர்த்தி ராவ் வர்ற மாதிரி..
அந்த இஸபெல்லா இப்போ கடத்தல், கொலை எல்லாம் விட்டுட்டு ஃபேமிலி விமன் ஆகிட்டாங்க.. அதாவது பங்களா ஒயிஃப். வீட்டோட இருந்தா அது ஹவுஸ் ஒயிஃப்.. அந்த ஃபிகருக்கு ஒரு முன்னாள் காதலர்.. அவர் தான் படத்தோட ஹீரோ.. அவரு ஜெயில்ல இருக்காரு.. இவரும் கேடிதான்.. ஆனாலும் நல்ல கேடி..
கேடின்னாலே மோசம் தான். அதென்ன? நல்ல கேடி? கெட்ட கேடி? கேடி ஹீரோவா இருந்தா அவன் நல்ல கேடி, வில்லனா இருந்தா அவன் கெட்ட கேடி.. இந்த கேசை டீல் பண்ற ஒரு லேடி இன்ஸ்பெக்டர் தான் ஹீரோயின்.. இசபெல்லாவை சந்திச்சு ப்ரூஸ் வில்ஸ் பற்றி டீட்டெயில் வாங்கற பிராசஸ்ல ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் லவ் பிராசஸ் ஆகிடுது..
வில்லன் ஒரு பக்கம் கொலை செய்ய செம பிரில்லியண்ட்டான ஐடியாவோட களம் இறங்கறார்.. ஹீரோ, ஹீரோயின் , போலீஸ் குரூப் இன்னொரு பக்கம் அந்த வில்லனை தேடி களம் இறங்கறாங்க.. க்ளைமக்ஸ்ல ஒரு ட்விஸ்ட்.. என்ன நடக்குதுன்னு படத்துல பாருங்க.. பர பர ஆக்ஷன் த்ரில்லர்.. ஒரு சீன் கூட போர் அடிக்கலை..
படத்துல முத பாராட்டு ஹீரோவுக்கு.. ஆ. சாரி வில்லன் ப்ரூஸ் வில்ஸ்க்கு.. என்னா தெனாவெட்டு.. நடிப்பு, ஆக்ஷன், பாடி லேங்குவேஜ் எல்லாம் அசத்தல்..
ஹீரோ அவ்வளவா எடுபடலை.. ஹீரோயின் 65 மார்க் ஃபிகர்.. ஓக்கே.... அந்த இசபெல்லா ஒரு மொக்கை ஃபிகர்.. வேற ஆளை போட்டிருக்கலாம்..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஒரு ஆக்ஷன் படம் ஹிட் ஆகனும்னா எப்பவும் பவர் ஃபுல் ரோல்ல வில்லன் இருக்கனும்.. அந்த வில்லனை ஹீரோ ஜெயிச்சா தான் கெத்து.. நம்ம ஊர்ல கேப்டன் பிரபாகரன் மன்சூர் அலிகான் ஏற்று நடிச்ச வீரபத்ரன் கேரக்டர் மாதிரி.. அந்த வகைல இந்தப்படத்துல வில்லன் கேரக்டரைசேஷன் செம.. அதுக்கு ப்ரூஸ் வில்ஸ் உயிர் கொடுக்கும் நடிப்பு.. அம்சம்..
2. போலீஸ் ஆஃபீசரா வர்ற ஹீரோயின் , ஹீரோ இருவருக்குமான காதல் அரும்பும் இடங்கள் ஏ ஆர் முருக தாஸ் படமான தீனா - அஜித் -லைலா மாதிரி ஒரு அழகிய கவிதை.. ரொம்ப நுணுக்கமா சொல்லபப்ட்டிருக்கு..
3. வில்லன் கொலை பண்ண யூஸ் பண்ணும் மெகா பீரங்கி ஷேப் கன்னை வடிவமைக்கும் ஆள் அதிக தொகைக்கு ஆசைப்படுவதும் டெஸ்ட் ஷூட் ல வில்லன் அவனை போட்டுத்தள்ளும் பரபரப்பான பத்து நிமிடங்கள் சபாஷ் டைரக்சன்
4. வில்லன் ஆயுதக்கிடங்கில் பார்வையிடும்போது பல துப்பாக்கிகளைப்பட்ட விபரங்களை ஃபிங்கர் டிப்ஸில் வைத்திருந்து துல்லியமாக அது பற்றி விவரிப்பது..
5. கதைக்கு தேவை இல்லாத கேரக்டர் என தீர்மானித்து இசபெல்லா கேரக்டரின் கணவரை கடைசி வரை சீன்க்கு கொண்டுவராதது..
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. மாறுவேஷத்தில் வரும்போது வில்லன் ஜஸ்ட் ஒரு ஒட்டு மீசைதான் வெச்சிருக்கார்? எங்க ஊர்ல கமல், சூர்யா எல்லாம் டோட்டலா முகத்தையே மாத்திக்கறாங்க.. இன்னும் எம் ஜி ஆர் காலத்துல இருந்தா எப்படி?
2. ஸ்பெஷல் கன்னை வடிவமைச்சுக்கொடுத்தவன் எதுக்காக திடீர்னு அதிக பணத்துக்கு ஆசைபப்டறான்.. இந்த மாதிரி சட்டத்துக்கு புறம்பான வேலைகளில் இந்த மாதிரி பேச்சு மாறுவது டேஞ்சர்னு தெரியாதா? அப்படியே கேட்டாலும் வில்லன் டெஸ்ட் ஷூட்க்கு தனி இடத்துக்கு கூப்பிட்டதும் பலி ஆடு மாதிரி யாராவது தனியா போய் மாட்டுவாங்களா?
3. வில்லன் தன்னை கொலை பண்ணப்போறான்னு தெரிஞ்சுடுச்சு.. முடிஞ்ச வரை எதிர்த்து போராடாம ஏன் அவன் அப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி நடுங்கறான்? பல துப்பாக்கிகளை வடிவமைப்பவன் தன் பாதுகப்புக்கு ஒரு கன் கூட வெச்சிருக்க மாட்டானா? ஏன் வில்லன் சொல்ற படி எல்லாம் ஆடறான்?
4. ஒரு சீன்ல ஹீரோ வில்லனை பார்பர்ல அடச்சே ஹார்பர்ல பார்க்கறான்.. அப்போ ஹீரோ நிராயுத பாணி.. வில்லன் கிட்டே கன் இருக்கு.. டக்னு சுட்டிருந்தா மேட்டர் ஓவர். வில்லன் ஸ்டைலா எதுக்கு டாட்டா எல்லாம் காட்டி டைம் குடுக்கறாரு?
5. பங்களாவுல நுழைஞ்ச போலீஸ் குரூப்பை டைவர்ட் பண்ண வில்லன் டேப் ரெக்கார்டரை தோட்டத்துல வெச்சு கவனத்தை திசை திருப்பறார்.. போலீஸ்ல பாதிப்பேரு திசை மாறுனா ஓக்கே./. டோட்டல் குரூப்பும் பேக்கு மாதிரி அங்கே வந்து மாட்டுமா.?
6. படத்துல ஹீரோவோட முன்னாள் காதலிதான் இசபெல்லா.. இந்நாள் காதலி போலீஸ் ஆஃபீசர்.. அதனால வில்லன் இசபெல்லாவை ஷூட் பண்ற மாதிரி காட்டி இருக்கலாம்.. போலீஸ் ஆஃபீசரை அவன் ஏன் ஷூட் பண்ணனும்? அவனுக்கும், அந்தம்மாவுக்கும் என்ன பகை? சும்மா ஆடியன்ஸிடம் இரக்கத்தை சம்பாதிக்கவா? தன் இருப்பிடத்தை, தன்னைப்பற்றிய தகவலை தந்த இசபெல்லாவை சுட்டா அதுல ஒரு லாஜிக் இருக்கு..
7. க்ளைமாக்ஸ்ல ஹீரோ வில்லன் காரை பார்த்துடறார்.. அதுல தான் ஆட்டோமெடிக் ஷீட்டிங்க் கன் ஃபிட் பண்ணி இருக்கு. பார்த்த உடனே அதை ஷூட் பண்ணி இருந்தா மேட்டர் ஓவர்.. ஆனா ஹீரோ நல்ல நேரம் பார்த்து டைம் வேஸ்ட் பண்றாரே? ஏன்?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. என் நண்பனுக்கே இந்த கதின்னா என் எதிரிக்கு என்ன ஆகும்னு கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாரு.
2. ஒரு ஆர்ட் என்பது எங்கே வேணாலும் இருக்கலாம்.. போலி ஐ டி கிரியேட்டிங்க்ல கூட ஆர்ட் ஒளிஞ்சிருக்கும்
3. எதுக்காக கனடா போறே?
மீன் பிடிக்க
4. இசபெல்லா எங்களுக்கு உதவி செஞ்சா ஸ்பெயினுக்கு எந்த மேட்டரும் தெரியாம நாங்க பார்த்துக்கறோம்..
ஹா ஹா அப்போ மொத்தத்துல உங்களுக்கு இசபெல்லா,ஜாக்கல் 2 பேர் பற்றியும் எதுவும் தெரியாது..?
5. உங்க ஆஃபரை குப்பைல போடுங்க .. ரஷ்யாவுல எல்லாம் சரண்டர் ஆனா யாரா இருந்தாலும் பெயில் குடுப்பாங்க
6. அழகான பெண்ணைப்பார்த்தா எல்லாம் மறந்துடுது
7. என் பழைய விஷயம் எதையும் என் கணவர் தெரிஞ்சுக்க விரும்ப மாட்டார். அவரை நான் லவ் பண்ணாலே அவருக்கு போதும்
8. சாரி.. உங்களால அந்த நிம்மதியை தர முடியாது.. நைட் நான் கண்ணை மூடினா நிம்மதியா இப்போ தூங்கறேன்.. உங்க கூட இருந்தா அது முடியாது.
( ஹலோ மேடம் தூங்க விடறவனை விட தூங்க விடாம அன்புத்தொல்லை தருபவன் தான் நல்ல புருஷன் ஹி ஹி )
9. பாஸ்கியோ இனத்தவர் கொடூரமானவர்கள், யாராவது பிடிகலைன்னா உடனே அவங்களை மர்டர் பண்ணிடுவாங்க ( ஜெயா டி வி பாஸ்கிக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?)
10. யாரையாவது கொல்றதை யே பெருமைன்னு அவன் நினைக்கறவன்.. ஒரு பெரிய மனுஷனை, வி ஐ பியை கொல்றோம்கறது அவனுக்கு ஒரு திருப்தி, ஈகோ
11. தப்பு பண்ணுனா மன்னிப்பே கிடையாதுங்கற தொழில்ல அவன் இருக்கான். அவன் தப்பு பண்ணுவான்னு நீ எப்படி எதிர்பார்க்கறே?
12. தைரியசாலிங்க எப்பவும் ஓடி ஒளிய மாட்டாங்க
13. ரஷ்யன் கவர்மெண்ட் கிட்டே உளவாளியா ஒர்க் பண்றது சாதாரண விஷயம் இல்லை
14. வாழ்க்கைல யாரையாவது நம்பனும்......
சி.பி கமென்ட் - படம் விறு விறுப்பான ஆக்ஷன் த்ரில்லர்.. பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் கண்ணியமாக நெறியாள்கை செய்யப்பட்டிருக்கு.
Cast
- Bruce Willis as The Jackal
- Richard Gere as Declan Mulqueen
- Sidney Poitier as Preston
- Diane Venora as Valentina Koslova
- Mathilda May as Isabella
- J. K. Simmons as Witherspoon
- Richard Lineback as McMurphy
- John Cunningham as Donald Brown
- Jack Black as Lamont
- Tess Harper as The First Lady
- Leslie Phillips as Woolburton
- Stephen Spinella as Douglas
- David Hayman as Terek Murad
Directed by | Michael Caton-Jones | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Produced by | James Jacks Sean Daniel Michael Caton-Jones Kevin Jarre | ||||||||||||||||||||||||||||||||
Written by | Chuck Pfarrer | ||||||||||||||||||||||||||||||||
Based on | screenplay The Day of the Jackal by Kenneth Ross | ||||||||||||||||||||||||||||||||
Starring | Bruce Willis Richard Gere Sidney Poitier Diane Venora | ||||||||||||||||||||||||||||||||
Music by | Carter Burwell | ||||||||||||||||||||||||||||||||
Cinematography | Karl Walter Lindenlaub | ||||||||||||||||||||||||||||||||
Editing by | Jim Clark | ||||||||||||||||||||||||||||||||
Distributed by | Universal Pictures | ||||||||||||||||||||||||||||||||
Release date(s) |
| ||||||||||||||||||||||||||||||||
Running time | 124 min. | ||||||||||||||||||||||||||||||||
Language | English Russian | ||||||||||||||||||||||||||||||||
Budget | $60 million[1] | ||||||||||||||||||||||||||||||||
Box office | $159,330,280[1] | a |