Showing posts with label AUTORICKSHAWKARANTE BHARYA (2022) மலையாளம். Show all posts
Showing posts with label AUTORICKSHAWKARANTE BHARYA (2022) மலையாளம். Show all posts

Tuesday, January 17, 2023

AUTORICKSHAWKARANTE BHARYA (2022) மலையாளம் - ஆட்டோ டிரைவரின் மனைவி - திரை விமர்சனம் ( மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


நாயகிக்கு  ஒரு  ஆட்டோ  டிரைவருடன்  திருமணம்  நடக்கிறது. ஆட்டோ  அவருக்கு  சொந்தமானதுதான், ஆனால்  அவர்  ஒரு சோம்பேறி. காலையில்  அவர்  எழுவதே  மதியம்  12  மணிக்குத்தான். அதற்குப்பின்  ஆட்டோ  ஸ்டேண்டில்  வண்டியை  நிறுத்தி  விட்டு  தூங்கி  விடுவார். மாலையில்  எழுந்து  நண்பர்களுடன்  அரட்டை . வீடு  திரும்பும்போது  வெறும்  கையுடன்  வருவார் 

அது  போக  நாயகியின்  கணவனுக்கு  சில  கடன்கள்  இருக்கிறது , திருமண  செலவுக்காக  வாங்கியது . கடன்காரன்  வீட்டுக்கு  வருவது  நாயகிக்குப்பிடிக்கவில்லை . தனக்கு  கட்டப்பட்ட  தாலியை  விற்று  கடனை  அடைக்கலாம்  என்றால்  அந்தத்தாலியும்  தங்கம்  இல்லை , கவரிங்  என்பது  தெரிய  வர  அதிர்ச்சி  ஆகிறாள் 


நாயகி  நாயகனிடம்  தெளிவாகசொல்லி  விடுகிறாள்  . எல்லாக்கடன்களையும்  அடைத்து  விட்டு  தனக்கு  தங்கத்தில்  தாலி  கட்டிய  பின்  தான்  நமக்குள்  தாம்பத்யம், அது  வரை  தனித்தனியாக  ஒரெ  வீட்டில்  இருப்போம்  என்கிறார்


ஆனால்  நாயகன்  தன்  குணத்தை  மாற்றிக்கொண்டதாகத்தெரியவில்லை . எனவே  டிரைவிங்  ஸ்கூல்  போய்  டிரைவிங்  கற்றுக்கொண்டு  நாயகி   ஆட்டோ  ஓட்டி  குடும்பத்தை  நடத்த  முடிவெடுக்கிறாள் , ஆனால்  நாயகன்  அதற்கு  ஒத்துக்கொள்ளவில்லை 


ஒருவழியாக நாயகி  ஆட்டோ  டிரைவர்  ஆகி  சம்பாதிக்கத்தொடங்கியதும்  கொஞ்சம்  கொஞ்சமாக  கடன்  அடைபடுகிற்து.  எதிர்  பாராத  விதமாக  நாயகி  ஒரு  விபத்தில்  ஒரு  குழந்தை  மீது  மோதி  விட  குழந்தை  இறக்கிறது


இதற்குப்பின்  கதையில்  ஏற்படும்  திருப்பங்கள்  தான்  திரைக்கதை 


ஆட்டோ  டிரைவராக  நாயகனாக  சுராஜ்  வெஞ்சாரமூட் த  கிரேட்  இண்டியன்  கிச்சன்  மூலம்  தமிழ்  ரசிகர்களின்  மனம்  கவர்ந்தவர்  இதில்  அப்படியே  சோம்பேறி  ஆளை  பிரதி  எடுத்திருக்கிறார். அவர்  மீது  எரிச்சல்  வருவதே  அந்த  கதாபாத்திரவடிவமைப்புக்குக்கிடைத்த  வெற்றி 


நாயகியான  ஆன்  அகஸ்டின். மொத்தப்படத்தையும்  இவர்  தான்  தாங்குகிறார் . கோபம்  , பொறூமை ,இயலாமை   என  பல  விதமான  முக  பாவங்களில்  நன்கு  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்


டீச்சர்  உட்பட  படத்தில்  வரும்  அனைத்துக்கதாபாத்திரங்களும்  உணர்ந்து  நடித்திருக்கிறார்கள் 


எம்  முகுந்தன்  எழுதிய  சிறுகதையை  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்   ஹரி  குமார் .  அழகப்பனின்  ஒளிப்பதிவில்  இயல்பான  காட்சி  அமைப்புகள்  கண்களைக்கவர்கின்றன.அயூப்கானின்  எடிட்டிங்கில்  இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம்,பல  காட்சிகள்  மெதுவாக  நகர்கின்றன், அவுசப்பேச்சன்  தான்  இசை . கச்சிதம் 



 பார்க்கத்தகுந்த  இந்தப்படம்  அமேசான்  பிரைமில்  கட்டணம் செலுத்திப்பார்க்கும்  விதத்தில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது