Showing posts with label ASTROLOGY. Show all posts
Showing posts with label ASTROLOGY. Show all posts

Friday, January 18, 2013

27 நட்சத்திரத்துக்கான ஒரு வருட பலன்கள்- 2013 part 2



விசாகம் 1,2,3 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் குரு பகவான். இவர் தன காரகர் மற்றும் புத்திர காரகர் ஆவார். உமது ராசிக்கு 3ஆம் இடமான தைரிய ஸ்தானம் மற்றும் 6ஆம் இடமான ரோக ருண ப்ராப்த ஸ்தானம் ஆகியவற்றுக்குடையவர். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் விபத்துத் தாரையில் வருவதால் போக்குவரத்தின் போது மிகவும் எச்சரிக்கை தேவை. பணம் கையாளும் பொறுப்பில் இருக்கும் அனைத்துப் பிரிவினரும் மிகவும் கவனமுடன் கடமையைச் செய்யவும். விவாகரத்து வழக்கில் இழுபறி நிலவும். அறுவை சிகிச்சைக்கு முனைவோர் அதனை ஒத்திப் போடுவது நன்று.
ஒருமுறை ஆலங்குடி, திருச்செந்தூர், திருவலிதாயம் போன்ற ஸ்தலங்களுக்கு சென்று வரவும். ஓம் குருப் பரம்மனே நம’- என்று தினசரி 108 முறை ஜபிக்க நன்று. கந்த சஷ்டி கவசம்’, ‘ஸ்கந்த குரு கவசம்’, ‘சண்முகக் கவசம்’, ‘தட்சிணாமூர்த்தி அஷ்டகம்இவற்றில் ஏதாவது ஒன்றினை தினசரி பாராயணம் செய்க.
அதிர்ஷ்ட எண்கள்: 3,4, 6,9 / அதிர்ஷ்ட தெய்வம்: திருச்செந்தூர் முருகன், ஆலங்குடி குரு பகவான் / அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
விசாகம் 4ம் பாதம்: உமது நட்சத்திர நாதன் குரு பகவான்: அவர் தன, புத்திர காரகர் ஆவார். அவர் உமது ராசி 2ஆம் இடம் என்னும் தனம் வாக்கு நேர்கிற ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தானம் என்னும் 5ஆம் இடத்துக்கும் உடையவர் ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் விபத்துத் தாரையில் உதயமாவதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடம் சுமுக உறவைப் பராமரிக்கவும். கண் சம்பந்தமான உபாதைக்கு இடமுண்டு. எனினும் குரு பலம் மற்றும் குரு பார்வை 2ம் வீட்டுக்கு இருப்பதால் அச்சமடையத் தேவை இல்லை. பாகப் பிரிவினையை தற்சமயம் வற்புறுத்த வேண்டாம். குரு யந்திரம் பூஜிக்கவும். குருவின் ஆசியைப் பெறுவது நன்று. குரு கவசம்படிக்கவும். கந்தசஷ்டி கவசம்பாராயணம் நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட தெய்வம்: திருச்செந்தூர் முருகன், ஆலங்குடி குரு பகவான் / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு

அனுஷம்: உமது நட்சத்திரநாதன் சனி பகவான். அவர் ஆயுள் காரகர். உமது ராசிப்படி 3 ஆம் இடமான வீரிய விக்ரம பராக்ரம ஸ்தானம் 4ஆம் இடமான சுக, வாகன, கல்வி மற்றும் மாத்ரு ஸ்தானம் ஆகியவற்றுக்கு உடையவர். புத்தாண்டு பிறப்பு சம்பத் தாரையில் வருவதால் சரளமான பணப்புழக்கம் உண்டாகும். வாக்கினால் ஜீவனம் புரிபவர்கள் ஏற்றம் அடைவர். பிரயாணங்கள் நல்ல பலன் தரும். பழைய வீட்டைப் புதுப்பிக்கலாம். புதிய வீடு, மனை, பூமி, வண்டி, வாகனம் வாங்கலாம். பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம். தினசரி வெங்கடேச சுப்ரபாதம்கேட்கவும். பிரதி சனிக்கிழமை வெங்கடாஜலபதியை வழிபடவும். நவக்கிரகத்துக்கு தீபம் ஏற்றவும். சுதர்ஸன அஷ்டகம்பாராயணம் செய்க. ஒருமுறை திருப்பதி மற்றும் மதுரை அருகே உள்ள திருமோகூர் சென்று வரவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,4,6,9 / அதிர்ஷ்ட திசை: மேற்கு/ அதிர்ஷ்ட தெய்வம்: வெங்கடாசலபதி / அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கேட்டை: உமது நட்சத்திர நாயகன் புதன். அவர் உமது லாப ஸ்தானம் என்னும் 11ஆம் வீட்டுக்கும் உடையவர் ஆவார். வித்யா புத்தி, தொழில் ஆகியவற்றுக்கு புதன் காரகத்துவம் வகிக்கிறார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் ஜென்ம தாரையில் வருவதால் உடல் நலனில் கவனம் தேவை. கண் சம்பந்தமான உபாதைக்கு இடமுண்டு. கவனம் தேவை.
ஒருமுறை திருவெண்காடு புதன்ஸ்தலம், குருவாயூர் சென்று வருக. கிருஷ்ணக்கவசம், சுதர்ஸன அஷ்டகம், பஜகோவிந்தம் பாராயணம் செய்ய நன்று. இயன்றவர்கள் சுதர்ஸன ஹோமம் செய்க.
அதிர்ஷ்ட எண்கள்: 1,3,5,6,9 / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: சக்கரத்தாழ்வார் மற்றும் குருவாயூரப்பன் / அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மூலம்: உமது நட்சத்திர நாயகன் கேது பகவான். இவர் ஞான காரகர். ஞான மார்க்கம், இறை வழிபாடு, ஆராய்ச்சி, முனைவர் பட்டம் பெறுவது போன்றவற்றுக்கு இவரே காரகத்துவம்.
புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் சம்பத் தாரையில் வருவதால் தெய்வ பலம் மிகும். பிரார்த்தனைகள் நடந்தேறும். நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை.
கேது ஸ்தலமான கீழ்ப் பெரும்பள்ளம், விருத்தாசலம் என்ற திருத்தலத்தில் உள்ள ஆழத்துப் பிள்ளையார், காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்த சுவாமி, குடை வரைக் கோயிலில் உள்ள பிள்ளையார்பட்டி போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட நன்று.
விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய ஸித்திமாலை, கணேச புஜங்கம், ருணஹர கணபதி ஸ்தோத்திரம் படிக்க நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 3,6,7 / அதிர்ஷ்ட தெய்வம்: விநாயகர் மற்றும் சித்திரகுப்த சுவாமி / அதிர்ஷ்ட திசை: கன்னிமூலை என்னும் நிருதி திசை (தென்மேற்கு) / அதிர்ஷ்ட நிறம்: சித்திர வண்ணம்

பூராடம்: உமது நட்சத்திர நாயகன் சுக்கிரன். இவர் களத்திர காரகர் என்னும் போக சாரகர் என்றும் அழைக்கப்படுவர். உமது ராசிக்கு 6 ஆம் இடமான ருண ப்ராப்த ஸ்தானம் 11ஆம் இடமான லாப ஸ்தானம் ஆகியவற்றுக்கு அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் விபத்துத் தாரையில் உதயமாவதால் கணவன் மனைவி இடையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வர இடமுண்டு. எனினும் குரு பலமும் குரு பார்வையும் இருப்பதால் அச்சத்துக்கு இடமில்லை. சிலரது காதல் திருமணங்கள் கடைசி நேரத்தில் தடைப்பட்டுப் போகக்கூடும். பாகப் பிரிவினையில் சிக்கல் உண்டாகும். ஒருமுறை கஞ்சனூர் மற்றும் ஸ்ரீரங்கம் சென்று வழிபடவும்.
வீட்டில் வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் விளக்குப் பூஜை செய்யவும். தினசரி காலை மாலை 5 1/2 - 6 தீபம் ஏற்றி வழிபடவும். இது மிகவும் சிறப்பான பூஜை. சந்தோஷம் நிலவும். சாந்தி பெருகும். மகாலட்சுமி அஷ்டோத்திரம், மகாலட்சுமி ஸத நாமஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ர நாமம் போன்ற ஏதேனும் ஒன்றை மனமுருக வாசிக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: மகாலட்சுமி / அதிர்ஷ்ட நிறம்: வெண்மை மற்றும் ரோஸ், ஆரஞ்சு
உத்திராடம் 1 ம் பாதம்: உமது நட்சத்திர நாயகன் சூரியன். அவர் ஆத்ம காரகர். அவர் உமது ராசிக்கு 9ம் வீடு என்னும் பாக்ய ஸ்தானத்துக்கு உடையவர் ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் கேஷமத் தாரையில் உதயமாவதால் சுக சௌக்யம் பெருகும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். அரசு வழியில் அனுகூலம் கிட்டும். எதிர்பார்த்த ஏஜென்ஸி, டெண்டர்கள், தடையின்மைச் சான்று போன்றவை கிடைக்க இடமுண்டு. புத்திர பாக்கியம் கிட்டும். எதிர்பார்த்திருந்த விசா தடையின்றி வரும். ஒருமுறை சூரியனார் கோயில் சென்று வருவது நலம். பிரதோஷக் காலத்தில் சிவபெருமானை மனமுருக வழிபடவும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. பிரதோஷ கால அபிஷேகத்துக்கு பால் தயிர் தருவது நன்று. ஆதித்ய ஹிருதயம்’, ‘சிவ புராணம்பாராயணம் செய்க.
அதிர்ஷ்ட எண்கள்: 1,3,9,5 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: பரமசிவன் / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

உத்திராடம் 2,3,4 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் சூரியன். அவர் ஆத்ம காரகர். ஆயுள் ஸ்தானமான 8ஆம் வீட்டுக்கு உடையவர் ஆவார். தந்தை, அரசாங்கம், உயர் அதிகாரிகள், அரசாணைகள் போன்றவற்றுக்கு அதிபதி. இவைகளுக்கு காரகத்துவம் வகிப்பவர் சூரியன். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் கேஷமத் தாரையில் உதயமாவதால் செய்தொழிலுக்கு தக்கக் கூட்டாளி கிடைக்க இடமுண்டு. கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் பரஸ்பர நிதி உதவி கிட்டும். கண், நரம்பு சம்பந்த கோளாறு விலகும். பிரிந்து வாழும் தம்பதிகள் இணைந்து வாழ இடமுண்டு. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கிட்டும்.
ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்க. பிரதி திங்கள் கிழமை சிவாலயத் தரிசனம் செய்க. பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடவும். வழிபாட்டுக்கு பால், தயிர், புஷ்பம் வாங்கிச் சமர்ப்பிக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள் 1,3,5,9 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: சூரிய நாராயணர் மற்றும் பரமசிவன் / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
திருவோணம்: உமது நட்சத்திர அதிபதி சந்திரன். அவர் உமது ராசிக்கு 7ஆம் வீட்டுக்குடையவர். சந்திரன் மனம் காரகர் மற்றும் மாத்ரு காரகர் ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் பிரத்யக்கு தாரையில் உதயமாவதால் கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையில் அடிக்கடி வீண் வாக்குவாதம் வரும். அரசுப் பணியிலிருப்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். வங்கிக்கடன் பெறுவதில் இழுபறி நிலவும். ஜாமீன் கையெழுத்து போட்ட வகையில் சங்கடம் உண்டாகும். ஒருமுறை திருவெண்காடு சென்று சேவித்து வரவும். உங்கள் இன்னல் குறைய, திருப்பதி வருவதாகப் பிரார்த்தனை செய்க. தினசரி காலையில் வெங்கடேச சுப்ரபாதம்படிக்கவும் / கேட்கவும்.
அதிர்ஷ்ட எண்: 5,6,9 / அதிர்ஷ்ட திசை: கிழக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: சூரிய நாராயணர் / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அவிட்டம் 1,2 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் செவ்வாய். உமது ராசிக்கு 4 ஆம் வீடான வண்டி வாகன, கல்வி மற்றும் மாத்ரு ஸ்தானம், 11ஆம் வீடான லாபஸ்தானம் ஆகியவற்றுக்கு அதிபதி செவ்வாய். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் சாதகத் தாரையில் உதயமாவதால் தெய்விக அனுகூலம் மிகும். ரியல் எஸ்டேட், அரசியலில் லாபம் உண்டு. சகோதர உறவுகள் பலமடையும். ஸ்திர சொத்துகள் சேரும். வழக்குகளில் வெற்றி கிட்டும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். சிலர் நம்பிக்கையான முக்கிய பொறுப்பில் அமர்த்தப்படுவர். பதவி உயர்வு பெறவும் இடம் உண்டு. ஒருமுறை வைத்தீஸ்வரர் கோயில் சென்று வருவது நலம். பழநி, திருவேற்காடு போன்ற திருத்தலங்களுக்கும் செல்லலாம். அங்காரகனே அல்லல் களைந்து ஆனந்தம் தருவாய்!என்று பிரார்த்திக்கவும். ஓம் ஸ்ரீ அங்காரகாய நமஹ" என தினசரி 108 முறை ஜெபிக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட தெய்வம்: திருவேற்காடு கருமாரியம்மன் மற்றும் பழனி முருகன் / அதிர்ஷ்ட திசை: தெற்கு / அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அவிட்டம் 3,4 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் செவ்வாய். சகோதர காரகர், இரத்தகாரகர் ஆவார். அவர் உமது ராசி வீரிய விக்ரம பராக்ரம ஸ்தானமான 3ம் வீட்டுக்கும் கர்மஸ்தானம், தஸம ஸ்தானம் எனும் 10ஆம் வீட்டுக்கும் அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் சாதகத் தாரையில் உதயமாவதால் பெயரும் புகழும் சேரும். செய்தொழிலில் முன்னேற்றம் கிட்டும். அரசியலில் ஈடுபட்டோர் மிகுந்த செல்வாக்கு பெறுவர். ரியல் எஸ்டேட், செங்கல் மற்றும் பீங்கான் தொழில், நெல் அரவை ஆலைகள், சாயப்பட்டரை போன்ற பிரிவுகளில் பணிபுரிவோர் மிக்க அனுகூலமடைவர். செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயில், பழநி முருகன் திருக்கோயில், கருமாரியம்மன் கோயில் சென்று வழிபட நன்று. அங்காரகனே ஆனந்தம் அருள்வாய்!என மனமுருகி வேண்டுங்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட திசை: தெற்கு / அதிர்ஷ்ட தெய்வம்: கருமாரியம்மன், பழநி முருகன்/அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
சதயம்: உமது நட்சத்திர நாயகன் ராகு பகவான். அவர் யோக காரகர். எதிர்பாராத தன வரவு, எதிர்பாராத சந்திப்பு போன்றவற்றுக்குக் காரகர் இராகுவே. புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் வதை தாரையில் உதயமாவதால் உடல் நலனில், பயணத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடு செய்வதில் பதற்றம் வேண்டாம். தந்தை வழியில் எதிர்பாராத செலவுகள் வர இடம் உண்டு. அருகில் உள்ள அய்யனார் கோயில், ஐயப்பன் கோயில் சென்று வழிபடவும். ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபம் ஏற்றி வழிபடவும். துர்க்காஷ்டகம்’, ‘துர்க்காஸ்த்தவம்பாராயணம் நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 46,9 / அதிர்ஷ்ட தெய்வம்: அய்யனார், ஐயப்ப சுவாமி / அதிர்ஷ்ட திசை: வடமேற்கு / அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

பூரட்டாதி 1,2,3 பாதங்கள்: உமது நட்சத்திர நாயகன் குரு பகவான். இவர் தன, புத்திரகாரகர். உமது ஆளுமை மற்றும் திறமைக்கும் குரு பகவானே காரகர் ஆவார். உமது ராசிக்கு தனம் வாக்கு, நேத்திரம் ஆகியவற்றுக்கான 2ஆம் வீட்டுக்கும் லாப ஸ்தானம் எனும் 11ஆம் வீட்டுக்கும் குரு பகவானே அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் மைத்ர தாரையில் உதயமாவதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். வாக்கினால் வளமும் நலமும் சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றலாம். பணம் கொடுக்கல், வாங்கல் செய்வோர் மிக்க அனுகூலம் பெறுவர்.
திருச்செந்தூர் முருகன், திருவலிதாயம் குருபகவான், ஆலங்குடி குருபக வான் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று வரவும். கந்தசஷ்டி கவசம்’, ‘கந்த சரணப் பத்து’, ‘சண்முகக் கவசம்ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினசரி பாராயணம் செய்யவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,6,9 / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: திருச்செந்தூர் முருகன் / அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
பூரட்டாதி 4ம் பாதம்: உமது நட்சத்திர நாயகன் குருபகவான். அவர் உமது ஜென்ம ராசிக்கும் 10 ஆம் இடத்துக்கு உடையவர் ஆவார். தன, புத்திர காரகர் குருபகவான். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் மைத்ர தாரையில் உதயமாவதால் நீண்டகால கனவுகள் நனவாகும். நீண்ட கால நோய்கள் விலகும். தொழில் வளம் பெருகும். புதிய கிளைகள் உருவாகும். சொந்த கட்டடம் வாங்குவீர்கள். அடிக்கடி வெளியூர் செல்ல நேரும். சரளமான பணப்புழக்கம் உண்டாகும். எனினும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தொழில் ரீதியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கேட்ட உதவியை தடையின்றிப் பெறலாம்.
ஒருமுறை ஆலங்குடி குரு ஸ்தலம், திருச்செந்தூர், திருவலிதாயம் போன்ற இடங்களுக்குச் சென்று வரவும். குருவே துணை!என சதா காலமும் ஜெபித்தால் கஷ்டங்கள் தீரும். நினைத்த காரியம் நடக்கும். குரு கவசம்படிக்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1,3,9 / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: திருசெந்தூர் முருகன் / அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

உத்திரட்டாதி: உமது நட்சத்திர நாயகன் சனி பகவான். அவர் உமது ராசிக்கு 11ஆம் வீடான லாபஸ்தானம் மற்றும் 12 ஆம் இடமான விரயஸ் தானம் ஆகியவற்றுக்கும் உடையவர். அவர் ஆயுள்காரகர் ஆவர். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் பரமமைத்ர தாரையில் உதயமாவதால் சுபமே உண்டாகும். செய் தொழிலில் லாபம் மிகுந்து காணும். கடன் தொல்லை தராது. நல்ல பணியாட்கள் கிடைப்பர். தொழிலில் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நலம். இல்லற வாழ்வில் ஊடலும் கூடலும் சேர்ந்தே நிகழும். இடமாறுதல் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வு கிட்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்.
குச்சனூர் சனி பகவான் கோயில், திருஆவினங்குடி மற்றும் திருப்பதி சென்று வர நன்று. தினசரி வெங்கடேஸ்வர சுப்ரபாதம்கேட்கவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,4,6,8 / அதிர்ஷ்ட திசை: மேற்கு / அதிர்ஷ்ட தெய்வம்: வெங்கடாஜலபதி/அதிர்ஷ்ட நிறம்: நீலம்
ரேவதி: உமது நட்சத்திர நாதன் புதன் பகவான். அவர் வித்தை, புத்தி போன்றவற்றுக்கு காரகர். இவரே தொழில் காரகரும் ஆவார். உமது ராசிக்கு சுகஸ்நானம் என்னும் 4ஆம் வீட்டுக்கும் களத்திர ஸ்தானம் எனும் 7ஆம் வீட்டுக்கு அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் ஜென்ம தாரையில் உதயமாவதால் உடல் நலனில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். கூட்டுத் தொழிலில் புதிய ஒப்பந்தம் போடும்போது கவனம் தேவை. கணவன் மனைவி புரிந்துணர்வுடன் பரஸ்பர அன்புடன் செயல்படவும். குடும்பத்தில் வேற்று மனிதர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், திரு விடைமருதூர் புதன்ஸ்தலம், ஏதேனும் ஒரு இடத்துக்குச் சென்று தரிசனம் செய்ய நன்று. விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்ய நன்று.
அதிர்ஷ்ட எண்: 5,6 / அதிர்ஷ்ட திசை: வடக்கு / அதிர்ஷ்ட தெய்வம்: சூரிய நாராயணர் மற்றும் சக்கரத்தாழ்வார்/அதிர்ஷ்ட நிறம்: பச்சை


thanx - kalki  


 part 1 - http://www.adrasaka.com/2013/01/27-2013-part-1-p.html