Showing posts with label ARUNVIJAY. Show all posts
Showing posts with label ARUNVIJAY. Show all posts

Tuesday, February 05, 2013

இயக்குநர் ஹரி எனக்கு மாமா வா இருந்தும் நோ யூஸ் - தடையறத்தாக்க அருண் விஜய் டீல் -ல் விட்ட பேட்டி

http://www.kollywoodtoday.net/gallery/actors/arun_vijay/images/arunvijay_0001.jpgஅஜித் விஜய் சூர்யா விக்ரம் லிஸ்ட்ல நானும் இருப்பேன் !

க.நாகப்பன் 
தடையறத் தாக்க’ படத்துக்குப் பிறகு இப்போலாம் சினிமா விழாக்களுக்குப் போனா என்னை முதல் வரிசைல உக்காரவைக்கிறாங்க. ஆனா, இதே அருண் விஜயைச் சில வருஷங்களுக்கு முன்னாடி அதே நிகழ்ச்சிகளில் ஆறாவது, ஏழாவது வரிசையில் உக்காரவைப்பாங்க. அப்பவும் இப்பவும் நான் ஹீரோவாகத்தான் நடிச்சுட்டு இருக்கேன். ஒரு வெற்றியோட மதிப்பு என்னன்னு ரொம்ப அழுத்தமா உணர்ந்துட்டேன்!''- அழகாகச் சிரிக்கிறார் அருண் விஜய். 'தடையறத் தாக்க’ பட வெற்றிக் குப் பிறகு மிகவும் கவனமாகக் காய் 


நகர்த்தத் தொடங்கியிருக்கும் பக்குவம் தொனிக்கிறது அருணிடம்.  


  ''ஆமாங்க... போதும் போதும்கிற அளவுக்குப் பாடம் படிச்சுட்டேன். அடுத்த படத்தில் 'தடையறத் தாக்க’ சாயல் இருக்கக் கூடாது. ஆனா, அந்த வெற்றியின் பிரதிபலிப்பு தொடரணும்னு ஆசை. இந்த நிபந்தனைகளைப் பூர்த்திசெஞ்சது 'டீல்’. துறுதுறுனு சாதிக்கணும்கிற வெறியோட இருக்கார் படத்தோட டைரக்டர் சிவஞானம். குறும்படம் பார்த்திருக்கோம். அதையே சினிமாவாகூடப்  பண்ணியிருக்கோம். ஆனா, தான் எடுக்க நினைக்கிற படத்தையே சின்னதா, அழகா படம் பிடிச்சு, ஒரு டிரெய்லரோட என்னைப் பார்க்க வந்தார் சிவஞானம். அந்த வீடியோ பார்த்து அசந்துட்டேன். முழு நம்பிக்கையோட களம் இறங்கிட்டேன்!''



''பல ஹீரோக்கள் இப்ப பண்ணிட்டு இருக்கிற டான்ஸ், ஃபைட்லாம் நீங்க எப்பவோ பண்ணீங்க. ஆனா, ஒரு பிரகாசமான ஓப்பனிங்குக்கு இத்தனை வருஷம் காத்திருக்க வேண்டியதாயிருச்சே?'' 



''என்கிட்ட என்ன தப்புனு எனக்குத் தெரியலை. ஒவ்வொரு படம் பண்ணும்போதும் பெஸ்ட் தரணும்னுதான் உழைச்சேன். ஒரு வேளை ப்ளஸ் டூ முடிச்சவுடனே சினிமாவுக்கு வந்தது தப்போன்னு இப்பத் தோணுது. சூர்யா எனக்கு கொஞ்சம் சீனியர். எனக்கும்  கார்த்திக்கும் ஒரே வயசு. ஆனா, அவங்கஎல்லாம் சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சப்ப ஃப்ரெஷ்ஷா தெரிஞ்சாங்க



 ரொம்ப சீக்கிரமே வந்துட்டதால, எனக்கு அந்த மெச்சூரிட்டி லெவல் இல்லாமப் போயிருச்சு. 'பாண்டவர் பூமி’ வரைக்கும் என்ன ரூட்ல போறதுன்னே தெரியலை. இத்தனைக்கும் அப்போதைய சினிமா ஹீரோக்கள் பண்ணிட்டு இருந்த பல விஷயங்களைத் தாண்டியும் நான் மெனக்கெட்டேன். இண்டஸ்ட்ரியில முதல்ல சிக்ஸ்பேக் வெச்சது நான்தான்னு சொன்னா நம்ப முடியுமா உங்களால?



 'ஜனனம்’ படத்துக்காக சிக்ஸ்பேக் வெச்சேன். ஆனா, க்ளைமாக்ஸ்ல சட்டையைக் கிழிச்சு எறிஞ்சு அதை வெளியே காமிக்கலை. தப்பான படங்கள் பண்ண மாதிரியும் தெரியலை. யோசிச்சா 18 படங்களில் ரெண்டு படங்கள் தப்பான படங்களா இருந் திருக்கலாம். ஆனா, அதைத் தாண்டி பேர் சொல்லக் கூடிய படங்களும் இருக்கு.


இவ்வளவு உழைச்சும் யாருமே என்னைக் கண்டுக்கலையேன்னுதான் வருத்தமா இருந்துச்சு. அப்போ என்னைச் சுத்தி இருந்த தனிமைதான் எனக்கு நிறைய கத்துக் கொடுத்துச்சு. அந்த விதத்துல சினிமாவுக்கும், எனக்கு வாய்ப்பு கொடுத்தவங்களுக்கும், கொடுக்காதவங்களுக்கும் நான் நிறையவே நன்றிக்கடன் பட்டிருக்கேன். ஆனா, இதுதான் எனக்கான ஸ்டார்ட் பட்டன். நான் நிறையப் பேருக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கு. அஜித், விஜய், சூர்யா, விக்ரம் லிஸ்ட்ல சீக்கிரம் நானும் இருப்பேன்!'' 


 
''இவ்வளவு ஃபீல் பண்றீங்க. பல ஹீரோக்களுக்கு மாஸ் ஹிட் கொடுத்த டைரக்டர் ஹரி உங்க மாமாதானே! 'எனக்காக ஒரு படம் பண்ணித்தாங்க’னு அவர்கிட்ட அன்புக் கட்டளை போட்டிருக்கலாமே?'' 



''புரொஃபஷன் வேற, ரிலேஷன்ஷிப் வேற. நான் அவரை ஹரி மாமான்னு கூப்பிடுற அந்த ரிலேஷன்ஷிப்தான் எனக்கு முக்கியம். 'அவங்க வீட்ல இருக்குற டைரக்டரே அவரை வெச்சுப் படம் பண்ணலையே’னு பலர் சொன்னது எனக்கு மைனஸ்தான். ஆனா, எங்க மாமா தன்னை நிரூபிச்சுதான் அந்த இடத்துக்கு வந்திருக்கார். நானும் என்னை நிரூபிப்பேன். இந்த கேரக்டருக்கு அருண் பொருத்தமா இருப்பான்னு அவருக்குத் தோணுச்சுன்னா, அவரே என்கிட்ட வருவார். அது சீக்கிரமே நடக்கும்!''


நன்றி - விகடன்