Showing posts with label APPUDO IPPUDO EPPUDO (2024) தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label APPUDO IPPUDO EPPUDO (2024) தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Monday, December 09, 2024

APPUDO IPPUDO EPPUDO (2024) தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் ஆக்சன் டிராமா ) @ அமேசான் பிரைம்

       

                 8/11/2024 அன்று  திரை அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம் இப்போது  அமேசான் பிரைம்   ஓ  டி டி இல்   தமிழ்  டப்பிங்கில்  காணக்கிடைக்கிறது . ஜாலியான  டைம் பாஸ்  படம்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன் நாயகியைப்பார்த்தவுடனேயே  காதலிக்கிறான் . ஆனால்  இதயம் முரளி மாதிரி  வெளில சொல்லலை . நண்பனிடம்  சொல்றான் . நாயகி தன்  தோழியுடன்  வரும்போது  நாயகன்  தனது  நண்பனிடம்  இவள் தான் என் ஆள் என்கிறான் . நாயகனின் நண்பன்  நாயகியின் தோழியைத்தான்  நாயகனின் ஆள் என  தவறாகப் புரிந்து கொண்டு  தோழியின்  போன்  நெம்பரைத்தருகிறான் . நாயகன்  நாயகிக்கு ஐ லவ் யூ அனுப்பவதாக நினைத்து நாயகியின்தோழிக்கு  மெசேஜ் அனுப்பி விடுகிறான் . இதனால் உருவாகும் காமெடி கலாட்டாக்கள் கொஞ்சம்  ரசிக்கும்படி  இருக்கிறது 


ஒரு இடைவெளிக்குப்பின்  நாயகன்  நாயகியை  வெளிநாட்டில்  பார்க்கிறான் . அப்போது  நாயகி  வேறு ஒரு நபரின்  குழந்தையுடன் இருக்கிறாள் . வழி அனுப்ப வந்தவள் . ஆனால் நாயகிக்கு திருமணம் ஆகி விட்டது  என தவறாக  நாயகன் நினைக்கிறான் . இந்தக்குழப்பங்களும்  ரசிக்கும்படி  இருக்கின்றன 


வில்லி  ஒரு டுபாக்கூர்  பார்ட்டி . வசதியான ஆள் சிக்கினால்  அவனை  மொட்டை  அடிப்பவள் . நாயகனை  வசதியானவர் என  தவறாக நினைத்து  காதலிப்பதாக நடிக்கிறாள் . நாயகன்  வில்லியைக்காதலிக்கிறான் . இருவரும்  திருமணம் செய்ய முடிவெடுக்கும்போது  வில்லி க்கு  நாயகன்  பணக்காரன் இல்லை என்ற உண்மை தெரிந்து  கழட்டி விடுகிறாள் 

வில்லனிடம்  500 கோடி  ரூபாய்  பெறுமானம் உள்ள  ஒரு டிவைஸ்  இருக்கிறது . அதை ஆட்டையைப்போட   வில்லி  வில்லனிடம் பழகி அதை சுடுகிறாள் . அந்த  டிவைஸை த்தேடி  வில்லன்  கிளம்புகிறான் .


 பல ஆள்மாறாட்டக்குழப்பங்களுக்கு இடையே அந்த  500 கோடி  டிவைஸ்   யாருக்குக் கிடைத்தது ? என்பது க்ளைமாக்ஸ் 


நாயகன் ஆக நிகில்  சாக்லேட்  பாய் ரோலுக்கு ஓகே , ஆனால் அவர் கேப்டன்   மாதிரி பைட் போடுவது எல்லாம் ஓவர் . நாயகி  ஆக  ருக்குமணி   வசந்த் குடும்பப்பாங்கான கண்ணிய கிளாமர்  நாயகி , சிரிப்பும் , காதலும் நன்கு  வருகிறது .வில்லி ஆக திவ்யான்ஸா கவுசிக் . பரவாயில்லை  ரகம் .நாயகனின் நண்பன் ஆக சத்யா  காமெடி நடிப்பு குட் . வில்லன் ஆக   ஜான் விஜய் கலகலப்பு ஊட்டுகிறார் . வில்லனின்  நண்பனாக அஜய் நல்ல நடிப்பு 


ரிச்சர்ட்  பிரசாத்தின்  ஒளிப்பதிவு  குட் . நாயகி , வில்லி  இருவரையும் அழகாய்க்காட்டி  உள்ளார் . பாரீன் லொக்கேஷன்களில்  கேமரா  களை  கட்டுகிறது .கார்த்திக்கின்  இசையில் ஒரே  ஒரு பாட்டு . பின்னணி  இசை  எம் ஆர் சன்னி , பரவாயில்லை ரகம் . நவீன் நூலின் எடிட்டிங்கில்  படம் 2 மணி நேரம் ஓடுகிறது .கதை , திரைக்கதை , இயக்கம்  சுதீர் வர்மா 

சபாஷ்  டைரக்டர்


1   2002 ல்  ரிலீஸ் ஆன கமலின் பஞ்ச தந்திரம்  படமே 1998 ல் ரிலீஸ் ஆன  " வெரி பேடு திங்க்ஸ் " படத்தின்  அபிசியல்  ரீமேக்  தான் .ஆனால் அன் அபிஷியலாக  அந்தக்கதைக்கருவை  சுட்டு   புதிய  திரைக்கதையில்  தந்த சாமர்த்தியம் 


  2   காமெடியன்   வில்லனைக்கலாய்க்கும் காட்சி  கலக்கல்  ரகம் . சொந்தமா  யோசித்து  அந்த காமெடி டிராக்கை  அமைத்திருக்கிறார்கள் 


3 தயாரிப்பாளர்  செலவில் லண்டன் சுத்திப்பார்த்தது 




  ரசித்த  வசனங்கள் 

1   ஒரு திருடனை  இன்னொரு திருடன் நம்பலைன்னா வேற யாரு நம்புவாங்க? 


2  இந்தாடா  அவ போன்  நெம்பர் 


 அதை ஏண்டா  கஞ்சா பொட்டலம் தர்ற மாதிரி ஒளிச்சுத்தர்றே ? 


3  காதலிக்கப்பொண்ணு பின்னாடி போனாப்போதும் , ஆனா புரப்போஸ் பண்ண  பொண்ணு முன்னாடி போய் நிக்கணும் 


4  அவளுக்கு பெரிய மெஸேஜா அனுப்பு 


ஏண்டா? 


 படிக்க  டைம் இல்லாம ஓகே  என ரிப்ளை அனுப்பிடுவா 


5  ஹவ் ஈஸ்  லைப் ?


 'குட் 


எனி கேர்ள்  பிரண்ட் ?


நோ , கேர்ள்  பிரண்ட் இல்லாததால்தான் லைப் ஈஸ்   'குட் 

6  நான் போய் பாடிட்டு  வர்றேன்  


 அப்படின்னா ?


 நெம்பர்  ஒன்  பாத்ரூம் 


அப்போ  நானும்  வர்றேன் 


 கோரசாப்பாட இது என்ன டூயட்டா? 


7 ஏண்டா ?இவளை விட  வேற  யாரும்  கிடைக்கலையா? 


 என் ரேஞ்ச்சுக்கு  இவளே அதிகம் 


8  பொண்ணுங்களை  பெட்ரூமோட  விட்டுட்டு  வந்துடனும் பிஸினெஸ்ல  சேர்த்த வேணாம் 


நான்  பெட் ரூம்லயே பிஸ்னஸ்  செய்வேன் 


9  உலகில் 90% ஆண்கள் குடிக்கக்காரணம்  பெண்கள்  தான் 


10  பெண்கள்  தங்கள் மனசில் இருப்பதை நம்ம கிட் டே  சொல்லிடுவாங்க  , ஆனா நம்மைப்பேச விட மாட் டாங்க 

11  லண்டன்  ல லுங்கி கட்டி  இருக்கான் . மேஸ்த்திரியா இருப்பானோ? 


12 ஒரே  பையன்  கிட் டே ரெண்டு  தடவை  லவ் பெயிலியர்  ஆகிடுச்சு , எனக்கு மட்டும் எதனால இப்படி ஆகுது ? 


13  ஏண்டா , ஐசியூ  வுக்கும்  , மார்ச்சுவரிக்கும்  இடையே  உன் வாழ்க்கை ஓடிட்டு இருக்கு , உனக்கு எதுக்கு இவ்ளோ பணம் ? 


14  ஏண்டி , நீ  சும்மாவே  இருக்க மாட்டியா?  சைக்கிள் கேப் ல   இன்னொருத்தனைப்பிடிச்சுட்டியா? 


15  வாட்ச்  இட்  பேஷண்ட்லி  (  அமைதியாக அதைக்கவனி ) 


ஆல்ரெடி  ஐ ஆம் பேஷண்ட் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1    500 கோடி மதிப்பில்  இருக்கும்  டிவைஸ்  பற்றி  வில்லனுக்கும் , அவனது நண்பனுக்கும் மட்டும்  தான்  தெரியும் . வில்லி க்கு எப்படித்தெரிந்தது ? பாஸ்வோர்டு  எப்படிக்கண்டுபிடித்தார்? 


2  வில்லி  நாயகனின்  வீட்டுக்குள் நுழைந்து  கதவைத்தாழ்  போட்டு விடுகிறாள் . வில்லனின் ஆட்கள்  வரும்போது  எப்படிக்கதவை திறக்கிறார்கள்  ? 


3  வாரமலர்  மாதிரி சின்ன புக்கை சுருட்டி  நாயகன்  வில்லனின் ஆட்களை  அடிப்பது, அவர்கள்  சுருண்டு  விழுவது    எல்லாம் காமெடி 


4 வில்லனின்  நண்பன்  வில்லியைப்பார்க்க  வரும்போது  10 பேருடன்  வருகிறான் . நாயகன்  தனி ஆள் .வில்லனின்  நண்பன் எதற்குப்பயந்து  ஒளிகிறான்  ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பஞ்ச  தந்திரம் பார்த்தவர்கள் , பார்க்காதவர்கள்  எல்லோரும் பார்க்கலாம் .  ஜாலியா  இருக்கு . ரேட்டிங்  2.5 / 5