Showing posts with label ALMOST PYAAR WITH DJ MOHABBAT (2023) -ஹிந்தி- சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ALMOST PYAAR WITH DJ MOHABBAT (2023) -ஹிந்தி- சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, April 04, 2023

ALMOST PYAAR WITH DJ MOHABBAT (2023) -ஹிந்தி- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா )@ நெட் ஃபிளிக்ஸ்


இயக்குநர்  அனுராக்  கஷ்யாப்  பற்றி அறியாதவர்கள்  இருக்க  முடியாது 2004 ல்  ரிலீஸ்  ஆன  பிளாக்  ஃபிரைடே  எனும்  படம்  தான்  இவரது  முதல் படம்  என்றாலும் 2012 ல் ரிலீஸ்  ஆன  கேங்க்ஸ்  ஆஃப்  வாஷிபர் தான்  இவரை  புகழின்  உச்சிக்கு  ஏற்றியது . இவரது  லேட்டஸ்ட்  ரிலீஸ்கள்  2020 - சோக்கட் , 2022  துபாரா .

இப்போது  ரிலீஸ்ஆகி  இருக்கும்  படம்  ரிலீஸ்  ஆகும்  முன்பே  இரு  இண்ட்டர்நேசனல்  ஃபிலிம்  ஃபெஸ்டிவல்களில்  கலந்து  கொண்டு  பலரது  பாராட்டுதல்களைப்பெற்றது . பத்திரிக்கை , மீடியாக்களின்  பாசிட்டிவ்  விமர்சனங்கள்  அமைந்தும்  ஏனோ  கமர்ஷியல்  சக்சஸ்  ஆகவில்லை . 16 கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்   தயாரான  இப்படம்  2  கோடி  மட்டுமே  வசூலித்துள்ளது 


இரு  வெவ்வேறு  காதல்  கதைகள், ஆனா அடுத்தடுத்து  நிகழ்பவையாக  காட்டப்படும் , அதாவது  ஒரு  காதல்  ஜோடியின்  கதை  முதல்  ஷாட்  எனில்  அடுத்த  ஷாட்  இன்னொரு  காதல்  ஜோடியின்  கதை.  . இப்படியே  மாறி  மாறி  காட்சிகள்  வரும், இதில் சவாலான  விஷயம்  இரு  கதைகளிலும்  நாயகன்  , நாயகி  இருவரும்  ஒருவரே. அதாவது  நாயகன், நாயகி  இருவரும்  டூயல்  ரோல். கதைப்படி  இருவருக்கும்  எந்த  உறவு  முறையும்  இல்லை . ஒரே  தோற்றம்  உடைய  நாயகர்கள்  இருவரும்  அண்ணன், தம்பி  கிடையாது . அதே  போல்  ஒரே  தோற்றம்  கொண்ட  நாயகிகள்  இருவரும்  அக்கா , தங்கை  கிடையாது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


முதல்  காதல்  ஜோடியின்  கதை - நாயகி  ஒரு  இந்து . ஸ்கூலில்  படிக்கும்  ஒரு  மைனர்  பெண் இவளது  பொழுது  போக்கே  உள்ளூரில்  இருக்கும்  வீடியோ  கேசட்  கடையில்  டிவிடி  வாடகைக்கு  எடுத்து  வந்து  படம்  பார்ப்பதே. நாயகன்  ஒரு  முஸ்லீம்.,அந்த டிவிடி  கடை  முதலாளியின்  மகன், நம்ம  ஊர்  டிக்  டாக்  போல  அங்கே  டிங்க்  டாங்க்  என்ற  ஒரு  ஆப்பில்  வீடியோஸ்  போட்டு  பிரபலம்  ஆகி  வருபவன், அவனுக்கு  ஏகப்பட்ட  ஃபாலோயர்ஸ்  இருக்கிறார்கள் . நாயகியின்  பெரிய  லட்சியமே  ஹோலி  பார்ட்டியை  ஒரு  ரக்சியமான  இடத்தில்  தன்  ஃபிரண்ட்ஸ்  உடன்  கொண்டாட  வேண்டும்  என்பதே . ஆனால்  அவளது  பெற்றோர்  பாரம்பரியம்  மிக்க  குடும்ப  பழக்க  வழக்கங்கள்  கொண்டவர்கள்  என்பதால்  இந்த  டிக்  டாக்  வீடியோ, பாய்  ஃபிரண்ட்  என்பதை  எல்லாம்  விரும்பாமல்  நாயகியை  ஹவுஸ்  அரெஸ்ட்டில்  வைக்கிறார்கள் . ஆனால் நாயகன்  வீட்டுக்கு  வ்ந்து  இரவோடு  இரவாக  நாயகியை  அழைத்துக்கொண்டு  ஊரை  விட்டு  ஓடி  விடுகிறான்.இவர்களைத்தேடி  நாயகியின்  அப்பா, சகோதரன்  போலிஸ்  படையுடன்  கிளம்ப  இந்த  ஜோடிக்கு  என்ன  ஆனது  என்பது  க்ளைமாக்ஸ் 


இரண்டாவது  காதல்  கதை -நாயகி  ஒரு  பாகிஸ்தானி , அப்பா  ஒரு  செல்வந்தர் , பிஸ்னெஸ் மேன். நாயகன்  இசைக்கலைஞர்  ஆக  முயற்சி  செய்து  வருபவர் , இருவரும்  காதலிக்கிறார்கள் , இந்தக்கதையிலும் நாயகியின்  பெற்றோருக்கு  இது  பிடிக்கவில்லை . நாயகனை  சிறையில்  தள்ளுகிறார்கள் . நாயகன்  ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆகி  வந்த  பின்  என்ன  முடிவு  எடுக்கிறான்  என்பதே  கதை 


 இரண்டு  கதைகளிலும்  க்ளைமாக்ஸ்  சோக  முடிவு  என்பதுதான்  ஒரு  பெரிய  சோகம் 


 நாயகியாக அலயா  எஃப்  என்பவர் அருமையாக  நடித்துள்ளார் , இரு  வேடங்களிலும்  நல்ல  வித்தியாசம்  காட்டுகிறார். உடல்  மொழியிலும் சரி  முக  பாவனைகளிலும்  சரி. சிறப்பான  பங்களிப்பு. . கிளாமர்  கொஞ்சம்  தூக்கல் 


 நாயகன் ஆக கரன்  மேத்தா லாங்  ஹேர்  ஸ்டைலில்  கலக்குகிறார். சில  சமயங்களில்  லாங்க்  ஷாட்டில்  இவர்  நாயகனா? நாயகியா? என  சந்தேகம்  வருகிறது . கோபப்ப்டும்  காட்சியில்  கச்சிதம் 


டிஜே மொகபத் எனும் பாடகர்  வேடத்தில் விக்கி கவுசல்   கவுரவ  வேடத்தில்  வருகிறார். அவர்  பாடும்  பாடல்கள்  எல்லாம்  தத்துவ  முத்துக்கள் 


அமில்  திரிவேதியின்  இசையில்  லட்டு  மாதிரி  எட்டு  பாடல்கள் ., 3  பாடல்கள்  செம  ஹிட் கோனார்க்  சக்சேனாவின்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  2  மணி  நேரத்தில்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்., ஆனால்  3  மணி  நேரம்  ஓடுவது  போல  ஒரு  பிரமை 


சில்வெஸ்டர்  ஃபோன்சேகா  தான்  ஒளிப்பதிவு . ஃபாரீன்  லொக்கேஷனை  பிரமாதமாக  படம்  பிடித்துள்ளார்


காதலர்களுக்குப்பிடிக்கும்  இந்தப்படத்தை  நெட்  ஃபிளிக்ஸ்  ஓ டி டி  யில்  காணலாம்


சபாஷ்  டைரக்டர்


1  இரு  கதைகளும்  வெவ்வேறு  ஜோடியுடையது, நாயகன், நாயகி  இருவரும்  டூயல்  ரோல் , இரு கதைகளுக்கும்  எந்த  கனெக்சனும்  இல்லை  என்று  தெரியவே  3  மணி  நேரம்  ஆகிறது , ஆனால்  மொத்தப்படமே  2  மணி  நேரம்  தான் , படம்  முடிஞ்சு  ஒரு  மணி  நேரம்  கழித்து  வீட்டுக்குப்போய்  யோசித்துப்பார்த்த  பின்  தான்  கதையே  புரிகிறது 


2  நாயகியின்  அழகு , ஆடை  அலங்கார  வடிவமைப்பு 


3  இரு  லவ்  ஜோடி  என்றாலும்  ஒரு  காட்சியில்  கூட  லிப்  கிஸ்  அல்லது  நெருக்கமான  காதல்  காட்சி  எதுவும்  இல்லாதது , குடும்பத்துடன்  காணத்தக்க  படம் 



  ரசித்த  வசனங்கள் 


1  மே  ஐ  கம்  இன்? என  அனுமதி  கேட்டு  வருவதில்லை  காதல் . எந்த  விஷ  எச்சரிக்கையும் தராமல்  திடீர்  என  வருவதே  காதல் 


2 காதலின்  வரையறைய  ஒரு  சமூகம்தான்  தீர்மானிக்கிறது 


3  செல்ஃபோன்  இந்த  ஜெனரேஷனின்  அழிவிற்கு  முக்கியக்காரணம்


4  என்னை  எந்தப்பையனும்  நிராகரிக்கவே  கூடாது, ஒருத்தன்னா  ஒருத்தன்  கூட... 


5  காதல்  என்பது  உனது  பலவீனம்  எனில்  பிரேக்கப்  என்பது  ஒரு கம்ப்பெல்சன்


6  ஒரே  நாளில்  என்  ஃபாலோயர்ஸ்  ஒரு  கோடி  ஆகிட்டாங்க 

 எப்படி?


 1 கே  எனக்காட்டுது  கே  ஃபார்  க்ரோர்  தானே?


 அது  சரி .. 1 கே = 1000


7  கோயில்  அல்லது  மசூதி  அல்லது  சர்ச்சுக்குள்  அமர்ந்து  சரக்கு  அடிக்கக்கூடாதுன்னா  க்டவுள்  இல்லாத  இடம்  ஒன்றைக்காட்டனும், அங்கே  அடிக்கலாம் 



8  முதல்  முறையா  நாம  சரக்கு  அடிக்கறோம்

, டேஸ்ட்கேவலமா  இருக்கு, எப்படி  இதைக்குடிக்கறாங்கஜனங்க?


  எப்படிக்குடிக்கறாங்க? என்பதை  விட  ஏன்  குடிக்கறாங்க  என்பதே  முக்கியம்


9   காதல்  என்பது  எது  தெரியுமா? விழி  ஒளி  இழந்தவன் ஒருவன்

 இருட்டான  அறையில்  கறுப்புப்பூனையைத்தேடுவது  போல 


10  இந்த  உலகம் ஏன்  இப்படி  இருக்கு ? தானும்  சந்தொஷமா  இருப்பதில்லை , மற்றவர்களையும்  சந்தோஷமா  இருக்க  விடுவதில்லை ?


11  காதலிப்பவர்களுக்கு  ம்ரியாதை  கிடைப்பதில்லை , அல்லது  யாரும்  அவர்களை  மதிப்பதில்லை  , அது  ஏன் ?


12  காதல்  என்பது  கத்தி  அல்ல,  அது  ஃபேமிலியை  கட்  ஆக்கிடாது


13 இந்த  உலகத்தில் எதற்கும்  கேரண்டி  இல்லை 


14   அவன்  ஒரு  முஸ்லீம், நான்கு  திருமணம்  வரை அவனுக்கு  அனுமதி  உண்டு , அவனை  நம்பாதே


15   வயசு  அதிகம்  ஆக  ஆக மனிதன்  முட்டாள்  ஆகிறான்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  வீட்ல  பிரச்சனை . ஹவுஸ்  அரெஸ்ட். அப்பா, அண்ணன்  எதிரிகள் ஆகிட்டாங்க , ஆனா  காதலன்  வீடு  தேடி  வரும்போது  பாட்டி  ரொம்ப  கூலா  அவ  மேலே  தான்  இருக்கா  அப்டினு  ரூட்  சொல்லுதே? எந்த  வீட்ல  அப்படி  ந்டக்கும் ?

\

2  நாயகி  வீட்ல  மற்றவர்கள் தூங்கும்  முன்  கதவை  லாக்  பண்ற  பழக்கமே  இல்லையா? பெப்பரப்பேனு  ஹால். பெட்ரூம்கதவு  எல்லாம்  ஓப்பனா  இருக்கு ? அது  என்ன  கட்சி  ஆஃபீசா?  மெடிக்கல்  ஷாப்பா? 24  மணி  நேரமும்  திறந்திருக்க?

3  ப்பூ..  இதெல்லாம்  ஒரு பூட்டா? என விடுதலை  படத்தில்  ரஜினி  சொல்றார்னா  அதுல  அவர்  கேரக்டரே  திருடன்  தான். ஆனால்  குடும்பப்பெண்ணான  நாயகி அறிமுகம்  இல்லாத  வீட்டின்  பூட்டை  நாயகன்  கல்லால்  உடைக்கப்போகும்போது  தன்  ஹேர்  பின்னால்  அசால்ட்டாகத்திறப்பது  எப்படி ?


4  நாயகியின்  தம்பியின்   பைக்கை  ஆட்டையைப்போட்ட  நாயகன்  அதை  ஒரு  பெட்ரோல்  பங்க்கில்  அடமானமாக  வைத்து  5000  ரூபாய்  பெற்றிருக்கிறார். ஏதாவது  மெக்கனைக்  ஷாப்  அல்லது ஒர்க் ஷாப்பில்  வைத்தால்  இன்னும் அதிகமாககிடைக்குமே? 


5ஆண்களின்   தன்  பால்  ஈர்ப்பு  (  ஹோமோ)  பற்றி  பல  இடங்களில்  நக்கல்  அடிக்கிறார்  இயக்குநர் ., அது  இந்தக்கதைக்கு  சம்பந்தம்  இல்லாதது 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  எல்லோருக்கும்  பிடிக்காது . காதலர்களுக்கும்  காதலில்  தோற்றவர்களுக்கு  மட்டுமே  பிடிக்கும். பெண்ணை  நம்பாதே  உன்னை  ஏமாற்றும்  என்ற  நீதியும்  இதில்  இருக்கு  , ரேட்டிங்  2.5 / 5 


Almost Pyaar with DJ Mohabbat
Almost Pyaar with DJ Mohabbat film poster.jpg
Theatrical release poster
Directed byAnurag Kashyap
Written byAnurag Kashyap
Produced byZee Studios
Ranjan Singh
Akshay Thakker
Dhruv Jagasia
Kabir Ahuja
Ajay Rai
Starring
  • Karan Mehta
  • Alaya F
  • Amber Arya
  • Vicky Kaushal
CinematographySylvester Fonseca
Edited byKonark Saxena
Music byAmit Trivedi
Production
companies
Good Bad Films
Zee Studios
Release date
  • 3 February 2023
CountryIndia
LanguageHindi
Budget₹15 crore[1]