Showing posts with label AJAYANTE RANDAM MOSHANAM (2024) மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label AJAYANTE RANDAM MOSHANAM (2024) மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Sunday, September 15, 2024

AJAYANTE RANDAM MOSHANAM (2024) மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் அட்வென்ச்சர் )

   

அஜயண்ட்டே  ரெண்டாம் மோசனம்  என்ற டைட்டிலுக்கு  அஜயனின்  இரண்டாம் திருட்டு  என்று பொருள் . இதை சுருக்கமாக   ஏ ஆர் எம்  என டைட்டில் வைத்துள்ளார்கள்     .ஓணம் பண்டிகை வெளியீடாக 12/9/24 முதல்  திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆகி உள்ள பட,ம் இது . 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாள் வசூலாக 6 கோடி  கலெக்சன் செய்துள்ளது                


ஸ்பாய்லர்  அலெர்ட்

சம்பவம் 1  - ஒரு நாட்டு மன்னனிடம் விலை மதிப்பில்லாத    விளக்கு ஒன்று உள்ளது , பூமியில் வந்து விழும் அபூர்வமான விண்கல்லிலிருந்து உருவாக்கப்பட்டது . ஒரு சமயம் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்ட அரச குல நபரை நாயகனின் கொள்ளுத்தாத்தா காப்பாற்றுகிறார் .பரிசாக எதை வேண்டுமானாலும்  கேள்  என்றதும் அந்த அபூர்வ விளக்கைக்கேட்கிறார் . மன்னரும்  கொடுத்த வாக்கைக்காப்பாற்ற  அதைத்தந்து விடுகிறார் ( ஆனால் அது போலி விளக்கு என்பது பிறகு தெரிகிறது )


சம்பவம் 2 - நாயகனின் தாத்தா  ஒரு திருடர் . அவரது மனைவி  அதாவது நாயகனின் பாட்டி  கோயிலில்; இருக்கும் அபூர்வ விளக்கைப்பார்க்க ஆசைப்படுகிறார் . ஆனால் அவர் பிற்படுத்தப்பட்ட  இனத்தைச்சேர்ந்தவர்  என்பதனால்  கோயிலுக்கு உள்ளே வர அனுமதி இல்லை . இதனால்; நாயகனின் தாத்தா  அந்த அபூர்வ விளக்கை  சாமார்த்தியமாக திருடி மனைவியிடம் கொடுக்கிறார் . ஒரிஜினல் விளக்கு இருந்த இடத்தில் டூப்ளிகேட்  விளக்கை வைக்க செல்கையில் மாட்டிக்கொள்கிறார் . அப்போது அவர் கையில் இருந்த விளக்கை  மீட்டு விட்டதாக நினைத்து அதைக்கோயிலில் வைக்கின்றனர் . ஆனால் கோயிலில்; இருக்கும் விளக்கு ஒரிஜினல் இல்லை என்ற உண்மை  நாயகனின் தாத்தா , பாட்டி  இருவருக்கு மட்டுமே தெரியும் 


சம்பவம் 3 - நாயகன்  ஒரு எலக்ட்ரீசியன் . உள்ளூரில்  பெரிய மனிதர் மகளைக்காதலிக்கிறார் நாயகி உயர் குடி  ,இவர் பிற்படுத்தப்பட்ட  இனத்தைச்சேர்ந்தவர்  . ஆனாலும் நேர்மையாக  வாழ்பவர் . ஆனால் இவரது தாத்தா  திருடர் என்பதால்  இவரும்  திருடராகத்தான்  இருக்க வேண்டும் என  ஊர் நினைக்கிறது .வில்லன் அந்த ஊர் கோயிலில் இருக்கும்  அபூர்வ விளக்கு  ஒரிஜினல் இல்லை என்ற உண்மை  தெரிய  வர  ஒரிஜினலை க்கண்டு பிடிக்க   நாயகனால் தான் முடியும் என நினைத்து அவனை மிரட்டுகிறான் . வில்லன் சொன்னபடி செய்தால்  நாயகனின் காதல் நிறைவேறும்  என வாக்கு தருகிறான் .


 இதற்குப்பின் நிகழும்  சம்பவங்கள்  தான் மீதி திரைக்கதை 


நாயகன் ஆக டொவிநோதாமஸ்  3 வேடங்களில்  நடித்திருக்கிறார் . திருடர் ஆக தாத்தா ரோலில் தான்  நடிக்க அதிக வாய்ப்பு . அவருக்குத்தான் காட்சிகள் அதிகம் .மாறுபட்ட நடிப்பு . கமல் , விக்ரம்  படங்களைப்பார்த்த பிறகு ;இந்த நடிகர்களுக்கும் கெட்டப் சேஞ்ச் மேனியா  தொற்றிக்கொண்டிருப்பது கண்கூடு 


நாயகிகள் ஆக கீர்த்தி ஷெட்டி சுரபி லட்சிமி  மூவரும் நடித்திருக்கிறார்கள்: . அதிக வேலை இல்லை . கீர்த்தி ஷெட்டி கண்ணுக்கு அழகு . ரோகிணி ரகுவரன் நாயகனின் அம்மாவாக கவனம் ஈர்க்கிறார் நாயகனின் நண்பனாக பஸீல் ஜோசப் , பாட்டியாக  மாலா பார்வதி  இருவரும் வீணடிக்கப்பட்ட நல்ல கலைஞர்கள் 

நினு நிபன் தாமஸ்  தான் இசை ஒரே ஒரு பாட்டு . திருப்பதி லட்டு .பின்னணி இசை ஓகே ரகம் , ஆனால் காது வலிக்கும் அளவு சத்தம் . ஜெமோன்  டி ஜானின் ஒளிப்பதிவு  3 வெவ் வேறு  கால கட்டங்களை கண் முன் நிறுத்துகின்றது  ஆர்ட் டைரக்ஸன்  குட் . சி ஜி ஒர்க்கும் ஓகே ரகம் 

சபாஷ்  டைரக்டர்


1  கரையெல்லாம் செண்பகப்பூ (1981) , அரவாண் (2012) , ஆயிரத்தில் ஒருவன் (2010) ஆகிய மூன்று படங்களை பட்டி டிங்கரிங்   மன்னன் அட்லீயிடம் தந்து ஒரு படம் உருவாக்கச்சொன்னால் எப்படி  இருக்குமோ அது போல  ஒரு உட்டாலக்கடிக்கதை  ரெடி செய்தது 


2  கமல் , விக்ரம் , சூர்யா ரேஞ்ச்சுக்கு மூன்று  மாறுபட்ட  கெட்டப் என ஆசை காட்டி  டொவிநோதாமஸ் கால்ஷீட்  வாங்கியது 


3  மெயின் கதை  40 நிமிட கண்டடென்ட் தான் என்பதால் பிளாஷ்பேக்  கதையை ஜவ்வாக இழுத்த விதம் 

4    க்ளைமாக்ஸுக்கு முன்பு வரும்  அந்த களறி  சண்டை   ஸ்டன்ட்  ,மாஸ்டரின் பெயர் சொல்லும் காட்சி 


  


ரசித்த  வசனங்கள் 


1      மோட்டாரை நீ திருடுனதா அவங்க சந்தேகப்படறாங்க 


 ஆனா நான்  கஷ்டப்பட்டு உழைச்சு வாழ்றவன் 


 திருடுவது கூட கஷ்டமான வேலை தான் 


2  சண்டை நடந்தா அதை வேடிக்கைபா ர்ப்பது ஊர் மக்களோட குணாதிசய,ம் 


3 இந்த உலகத்துல முதல்ல  திருடன்  வந்தானா? போலீஸ் வந்ததா? தெரியுமா?  முதல்ல திருடன் தான்  வந்தான் . அதுக்குப்பின்  தான் அவனைப்பிடிக்க போலீஸ் வந்தது 


4  என்னோட   ஆகாயமும்  நீ தான்  ,என் பூமியும் நீ தான் 


5   ஒரு திருடனுக்கு அதிர்ஷடம்  எப்போதும்  எதிராபாராத இடத்தில் இருந்து தான் வரும் 


6   ஆட்சில  இருக்கும் ராஜா திருட்டுத்தனம் செஞ்சா அதுக்குப்பேரு ராஜதந்திரம் 


7 நான் ஆடும்  இந்த ஆட்டத்தில்; ; நீ  வெறும் ;சிப்பாய் மட்டும்தான் 


8 நீ பாரம்பரியமான  திருட்டுக்கூ;ட்டத்தின் பரம்பரையிலிருந்து வந்தவன் ,; எங்களு க்கு உன் பாரம்பரிய திருட்டுத்தனம் தான் தேவை 


9  இரு நாடுகளுக்கு இடையே போ;ர் வந்தா மக்களுக்கு பயம்  உண்டாகும்,;ஆனா இரு ஊர்களுக்கு இடையே சண்டை; வந்தா  மக்களுக்கு யார் ஜெயிப்பாங்கணு ஆர்வம் வரும்; 

10  அடேங்கப்பா , ரிசர்வ் பேங்க்கையே  கொள்ளை அடிக்கும்   அளவு   சாதனங்கள் இங்கே இருக்கு போலயே? ; 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   வயசுப்பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு அடிக்கடி  எலக்ட்ரீஷியனை  வீட்டுக்கு வரவைத்து அவர்கள் காதலிக்க வழி வகை செய்வது  நம்பும்படி இல்லை 


2  நாயகன் சம்பந்தப்பட்ட  ஒரு வீடியோ காட்சியை வைத்து வில்லன் மிரட்டுவது காதில் பூ 


3 கோயிலில்  இருக்கும் சிலையை  நாயகனின் காத்தா நேரில் பார்த்தது கூட இல்லை ,அவரால் டூப்ளி க்கெட் சிலையை எப்படி  உருவாக்க முடிந்தது ? டீடடெய்லிங்க் இல்லை 


4  ஆக்சன் அட்வென்ச்சர்   என்று சொல்லி விட்டு வெறும் 20 நிமிடங்கள் தான்  அப்படிப்பட்ட காட்சி கள் வருகின்றன . தூக்கம் வருது  

5  வில்லனின் கேரக்டர் டிசைன் வலிமையாகஇல்லை . டம்மி  வில்லன் என்னும்போது நாயகன் எப்படி ஜெயிப்பான்? என்ற ஆர்வம் வராது 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கேரளாவில் இது ஹிட் ஆகலாம் . ஆனா நம்ம ஊர் ஆடியன்ஸுக்கு பிடிக்காது . இது மாதிரி பல படங்கள் பார்த்துட்டோம் .சராசரிக்கும்   கீழே தான் . ரேட்டிங்  2.25 / 5  மலையாளப்படங்கள்  என்றாலே பிரமாதம் தான்  என ஒரு கூட்டம்   சுத்திட்டு  இருக்கு . நம்பி  ஏமாற வேண்டாம் 


ARM
Theatrical release poster
Directed byJithin Laal
Written bySujith Nambiar
Additional screenplayDeepu Pradeep
Produced byListin Stephen
Zachariah Thomas
Starring
Narrated byMohanlal
CinematographyJomon T. John
Edited byShameer Muhammed
Music byDhibu Ninan Thomas
Production
companies
Magic Frames
UGM Entertainment
Distributed byMagic Frames
Release date
  • 12 September 2024
Running time
142 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget₹30 crore[2]
Box officeest. ₹13.50 crore[3]