Showing posts with label AJAL KUJAL FILM REVIEW. Show all posts
Showing posts with label AJAL KUJAL FILM REVIEW. Show all posts

Friday, September 23, 2011

ஆயிரம் விளக்கு - சனாகான் +சத்யராஜ் + சாந்தனு கே பாக்யராஜ் +கூட்டணி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoBOTOTfNIsHcX_GTj0LvQn191GzRssHEsm3K11bApumlKIYe9AJfyzm7utTwzAT9lhg6tujb0XkEAmcCgX83hyphenhyphenXbIrK-_h5iNWrhi7a6rB_WZB48uPAm3tifuP3hgdgdcCzIuTPACV4zH/s1600/av1.jpgசத்யராஜ் பாசத்துக்கும் அன்புக்கும் ஏங்கும் ஒரு தாதா.. சாந்தனு ஆள் நல்ல பர்சனாலிடியாக இருந்தாலும் மொக்க ஃபிகர் மோஹனா (சனாகான்)வை லவ்வும் ஒரு சாதா இளைஞன். இந்த சாதா இளைஞனை அந்த தாதா தத்துப்பிள்ளையாக வளர்க்க நினைக்கிறார்... அவர் தாதா என இந்த சாதாவுக்கு தெரியாது..  இருவருக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் கதை.. 


ஹீரோ சாந்தனு - நேர்ல பார்க்க சாக்லெட் பாய் மதிரி இருக்கும் கே பாக்யராஜ் வாரிசு இந்தப்படத்துல ஏன் தூங்கி எழுந்த விடியா வெள்ளி போல் இருக்கார்னு தெரில.. எப்பவும் ஆள் டல்லா இருக்கார்.. ஹீரோயின் கூட 3 டூயட்டும், சத்யராஜ் கூட ஒரு பாட்டும் பாடறார்.. 2 ஃபைட் போடறார்..  அவ்ளவ் தான்...!


ஹீரோயின் சனாகான் சாதாரண 40 மார்க் ஃபிகர்.. இவர் படம் முழுக்க நடிப்பையும் காட்டலை.....குணச்சித்திரத்தையும் காட்டலைன்னு சொல்ல வந்தேன் ஹி ஹி .. ஃபேஸ் எக்ஸ்பிரஸ்னா என்ன?ன்னு பாப்பாக்கு சுத்தமா தெரில பாவம்.. ஒரு சீன்ல வாய்க்கால்ல தண்ணியைப்பார்த்ததும் அசால்ட்டா எந்த தயக்கமோ, கூச்சமோ இல்லாம தாவணியை கழட்டி வீசிப்போட்டுட்டு வாய்க்கால்ல குதிச்சுடறார். அட ஆண்டவா!!! பார்க்கற மத்தவங்கதான் கூச்சப்படறாங்க.. ( நான் அக்மார்க் அப்பாவி என்பதால் அந்த சீனில் கண்களை க்ளோசிங்க். )இது அப்போ தெரிஞ்ச சனாகானின் லோஹிப் மேல சத்தியம்...

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/09/aayiram-vilakku-movie-still.jpg

கிளை வில்லன் சுமன்... அண்ணன் கேப்டன் மாதிரி எப்பவும் மப்புலயே இருப்பார் போல.  இவருக்கு கொடுக்கப்பட்ட வேலை என்னான்னா தனது போட்டி தாதாவை அப்பப்ப சவால் விடறது..உறுமுவது .... எமாந்த இ வா எவனாவது வந்தா அவனை கொலை பண்றது. . 

இணை வில்லன் சானா கான்க்கு மாமா பையன். இவருக்கு 24 மணி நேரமும் என்ன வேலைன்னா பைக் பெட்ரோல் டேங்க் உள்ளே ஒரு பெரிய அரிவாள் வெச்சு அலையறது.. எவனாவது தன் முறைப்பெண்ணை கையை ப்பிடிச்சு இழுத்தா அவன் கையை வெட்டறது..  டேய்.. திருந்துங்கடா...

கஞ்சா கறுப்பு. நல்ல குணச்சித்திர நடிகரும், ராம் படம் மூலம் அறிமுகம் ஆன காமெடி நடிகரும் ஆன இவர் இன்னும் எத்தனை நாளுக்கு உப்பு சப்பு இல்லாத படத்துல கிச்சு கிச்சு மூட்டுவாரோ... ஒரு சீன்ல கூட சிரிப்பே வர்ல பாஸ்.. சாரி.. 


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=2374&option=com_joomgallery&Itemid=77

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1. வாத்தியார் சார். பசங்க  தப்பு பண்ணுனா  நீங்க மார்க் கம்மியா போடுவீங்க.. நாங்க ஆளையே போடுவோம்..  ( டேய் ரவுடிங்களே.. முதல்ல குளியல் போடுங்கடா!)


2. மிஸ் .. ஐ லவ் யூ..

உங்க மணிபர்ஸ் குடுங்க.

எதுக்கு?

என்னை யார் லவ் பண்ணாலும் அவங்க மணிபர்ஸை செக் பண்ணுவேன். ( சோனாவை விட கேவலமான மைண்ட் தாட்டோ?!!)

3. மிஸ்... உங்க பேக்கை கொடுங்க..  ( யாரும் ஜெர்க் ஆக வேணாம்.. அவரு கேட்கறது ஹேண்ட் பேக்கை ஹி ஹி )

எதுக்கு?

எனக்கும் லவ் பண்றவங்க பேக்கை செக் பண்ணி பழக்கம் .. ( நல்ல வேளை... )

4.  நான் இந்த ஆத்துல குதிச்சு தற்கொலை பண்ணிக்கப்போறேன்..

உள்லே தண்ணிப்பாம்பு நிறைய இருக்குமே?

கொத்துமா?


தெரில.. கேட்டு சொல்றேன்.. ( அஞ்சாங்கிளாஸ் தமிழ் நான் டி டெயில்ல வர்ற கதை உல்டா... )



5. லிங்கத்துக்கும், உனக்கும் என்னா லிங்க்.. ?

அவருக்கு நான் தாங்க ரைட் ஹேண்ட்... ( அப்போ அவருக்கு பதிலா நீ தான் ஊட்டி விடுவியா? )


http://indiansamachar.in/wp-content/uploads/2011/09/Tamil-Actress-Sana-Khan-Hot-pictures1.jpg
6.  இவருதான் என் புது ஃபிரண்ட் கண்ணாயிரம்...

பாப்பா யாரு... உன் புது கேர்ள் ஃபிரண்டா..? ( அப்போ நிறைய பழைய கேர்ள் ஃபிரண்ட் இருக்கா? அவ்வ்வ்)


7. இந்த சட்டை எங்கப்பாவுது.. ஆனா நான் அவரைப்பார்த்ததே இல்ல.. அவர் சட்டையை நீ போட்டிருக்கறதைப்பார்க்கறப்ப அப்பா மாதிரிதான்யா என் கண்ணுக்கு தெரியறே..

8. அந்த கொதிக்கற பால் தேக்ஸாவை எடு..


எதுக்குங்கய்யா.. குடும்பத்தோட புரூ காஃபி போட்டு குடிக்கவா?

இல்ல... உன் தலை மேல கொட்ட....

9. பெத்தவங்களையே மத்தவங்களா நினைக்கற பசங்களுக்கு மத்தில மத்தவங்களைக்கூட  பெத்தவங்களா நினைக்கற மனுஷங்களும் இந்த உலகத்துல இருக்காங்கப்பா...

http://flicksbuzz.com/Assets/Images/Mollywood/Mollywood-News/Sana-Khan-Hot-Stills-Overview.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ரூ 2 லட்சம் மார்க்கட்ரேட் உள்ள இடத்தை ஃபேக்டரி கட்ட சாந்தனுவிடம் பேரம் பேசும் ரவுடி 5 லட்சம் தர்றதா சொல்றாரு.. ஓக்கே.. பேரம் படியாம 20 லட்சம் வரை இறங்கி வர்றாரே? அது எப்படி? அவனே ரவுடி... ஏன் பம்பனும்? மிரட்னா சைன் பண்ணிடறாரு.. ?

2. அதே நிலத்தை சாந்தனு அவர் அவசரத்தேவைக்கு விற்க முன் வரும்போது மார்க்கெட் ரேட்டை விட பாதி விலைக்குத்தர்றாரே.. ஏன்? நிலமும், தங்கமும்  எப்போதும் மதிப்பை இழக்காதே?


3. ஹீரோயினை ஹீரோ தான் புளூ கிராஸ் மெம்பர்னு ஏமாத்தி லவ் பண்றாரு ஓக்கே.. அதுக்குப்பிறகு 2 மாசம் கழிச்சு ஹீரோயின் ஹீரோ வீட்ல இல்லாதப்ப ஹீரோ வீட்டுக்கு போறப்ப இந்தா பார்த்துக்கோன்னு சொல்ற மாதிரி அந்த ஏமாத்துனதுக்கான ஆதாரங்களை டேபிள் மேலயே வெச்சிருக்காரே? அது ஏன்?


4. பெரும்பாலான ஹீரோயின்கள் சமூக சேவை செய்யும் ஆண்கள், தாதாக்கள் ரவுடிகளைத்தான் லவ் பண்றாங்க. அப்போ என்னை மாதிரி 3000 ரூபா சம்பளத்துக்கு வேலைக்குப்பொறவங்களுக்கு எல்லாம் ஜோடியே கிடைக்காதா?


http://7blues.com/wp-content/gallery/sana-khan/sana-khan-movies-stills.jpg
இந்தப்படம் எல்லா செண்ட்டர்களீலும் 7 நாட்கள் ஓடும்.. ஏன்னா அடுத்த வெள்ளீக்கிழமை வரை வேற படம் எதுவும் வர்லை.

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 35

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - டி வி ல போட்டாக்கூட பார்த்துடாதீங்க.. என் மார்க் - 25

ஈரோடு சண்டிகாவில் இந்தப்படம் பார்த்தேன்

பிப்ரவ‌ரி 14 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹோசிமின் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் தனது இரண்டாவதுப் படத்தை இயக்கியுள்ளார்.இந்தப்படம் இயக்குனதுக்கு அண்ணன் சும்மாவே இருந்திருக்கலாம்.




Friday, June 10, 2011

சாந்தி அப்புறம் நித்யா -கில்மாவா? ஜொள்மாவா?- சினிமா விமர்சனம்

https://lh5.googleusercontent.com/-aJAYqxRnmMI/TX0R8BDHflI/AAAAAAAAtbs/ONtvS0NQfL0/s1600/shanthi-appuram-nithya-hot-romancing-stills%25286%2529.jpgபடத்தோட டைட்டிலைப் பார்த்ததும் விக்கி தக்காளி மாதிரி ஒரு சபலிஸ்ட் பேர்வழி சாந்திங்கற ஃபிகரை முதல்ல கரெக்ட் பண்ணி நெல்லை அல்வாவை குடுத்துட்டு நெக்ஸ்ட் டார்கெட்டா நித்யாவுக்கு பிட் போடற கதைன்னு யாராவது எதிர்பார்த்தா ஏமாந்தே போனீங்க.. 

2 கதை படத்துல.. முதல் ட்ராக் நாஞ்சில்மனோ மாதிரி ஒரு சின்சியர் லவ்வர் தன் காதலை ஒரு சுமாரான ஃபிகர்ட்ட சொல்றான்,அவ ஆள் பார்க்க படு திராபையா இருக்கா.. படத்துல 13 தடவை 13 வெவ்வேற லவ் லெட்டரை தர்றான் ( சொல்ல முடியாது, 13 தடவையும் ஒரே பேப்பரை தர்றானோ என்னவோ?)அவ கடைசி வரைக்கும் அவனுக்கு ஓக்கே சொல்லாம ஒரு புரோக்கர்ட்ட, லேடி புரோக்கர்ட்ட (மாமா) வாழ்க்கையை தொலைக்கறா..

இந்த கதையை அப்படியே தொடர்ந்தாற் போல அரை மணி நேரம் காட்னாக்கூட கல்லடி அபாயம் இருக்கறதால மெயின் கதைல கில்மா உண்டு,, அது என்னான்னா விக்கி தக்காளி மாதிரி ஒரு ப்ளே பாய் ஹாஸ்பிடல்ல இருக்கற நர்ஸூக்கு ( ஹாஸ்பிடல்ல இருந்தாத்தானே அது நர்ஸ்?) ரூட் போடறான்,பட்சி சிக்கிடுது..ஆனா தக்காளி மேட்டர் முடிச்சதும் குவாட்டர் அடிச்சுட்டு கிளம்பிடறான், (பின்னே இருந்து 10 நாள் விருந்து சாப்பிட்டு இருப்பானா?)


படத்தோட நீதி என்னான்னா பொண்ணுங்க சின்சியரா லவ் பண்ற ஆம்பளையை நம்ப மாட்டாங்க.. ஏமாத்திட்டு அல்வா குடுக்கற அயோக்கியனை நம்புவாங்க.. 

http://www.celluloidtamil.com/wp-content/gallery/shanthi-movie/shanthi-movie32.jpg
இந்த கேவலமான படத்திலும் வந்த கில்மா வசனங்கள்

1.  மகா ஜனங்களே.. இவன் என்ன தொழில் பண்றான் தெரியுமா?அவன் பண்ற தொழில் ரெண்டே எழுத்து.. ரெண்டும் ஒரே எழுத்து..  ( மாமா)

2. அடேய் பாவி.. இப்போ எல்லாம் இதுலயும் அக்கவுண்ட் வைக்க ஆரம்பிச்சுட்டீங்களாடா?

3. இவன் என்ன கேரக்டர்னா பொண்ணுன்னு பேப்பர்ல எழுதி கீழே போட்டா  போதும், பையன் பேப்பர் பின்னாலயே போயிடுவான்..


4. எனக்கு 2 ரூபா தேவைப்படுது.. 

இவ்ளவ்தானா? உனக்காக இது கூட செய்ய மாட்டேனா?இந்தா 2 ரூபா...


அடப்பாவி.. நான் கேட்டது ரெண்டாயிரம் ரூபா.. 


5. பச்சை ( டஞ்சன்) ஃபிகர் கிடைச்சாலே பம்முவான்,இப்படி பச்சைக்கிளி மாதிரி பொண்ணு கிடைச்சா...?

6. காலம் கெட்டுக்கிடக்கு மேடம்.. அதனால தான் எலக்ட்ரீசியனைக்கூட நம்பாம நானும் உங்க பாதுகாப்புக்கு வந்தேன்

ஆமாமா , எல்லாம் பொறுக்கிப்பசங்களா இருக்காங்க.. 

7.  டேய். உனக்கு தண்ணி வேணுமா?


இருந்தா குடு.. 

இரு , பார்த்துட்டு வர்றேன்.. 

ம் ம் , நல்லா பார்த்துட்டு வா.. அவ டிரஸ் மாத்தறதை.. 

8. காஃபி சாப்பிடறீங்களா?

வேணாம் மேடம், வழில தான் சாப்பிட்டுட்டு வந்தோம்.. நீங்க சாப்பிடுங்க.. 

அடப்பாவி, இவன் பால் சாப்பிட ஆசைப்பட்டு நமக்கு கிடைக்க இருந்த காஃபில கை வெச்சுட்டானே.. 

9. நான் தப்பு பண்றேனா?ன்னு செக் பண்ண அவரு நிறைய தப்பு பண்ண ஆரம்பிச்சுட்டாரு... 

10. நீ செம அழகுடி.. நான் பார்த்த ஃபிகர்லயே நீ தான் செம அழகு.. 

அட நீ கூட இப்படி பேசுவியா?

ஹூம், அதான் வருத்தம்.. பேச மட்டும் தான் முடியுது.. 

11. என்னடா? ரத்தத்தாலயே எழுதி இருக்கே? வலிக்கலை?

அவ குடுத்த வலியை விட இது ஒண்ணும் மோசம் இல்லை.. 

12.  நீ வர மாட்டேன்னு நினைச்சேன்.. 

ஏன்?

2 மாசத்துல வேற எவ பின்னாலயாவது சுத்திட்டு இருப்பேன்னு நினைச்சேன்.. 

அடிப்பாவி.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS9T3hAgxobOlcg9iF2GdZxxCIXK3lQbSix875fKvObG5IX7crhHpQl15LRqcAiioaTuWRqarf1YaIoLFzxICAE7YfqxrNMbJ-che-Wbogcea3DsHD0KEeq1kH54tNc9IFqghaW1GCub1z/s400/Shanthi-Tamil-Movie-Hot-gallery-6.jpg
இந்த கில்மா படத்துல இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நீதிகள்

1. ஒரு ஃபிகர் வீட்டுக்கு போறப்ப நாம அவளை கரெக்ட் பண்ண ட்ரை பண்றோம்னு அவளுக்கு தெரிஞ்சிட்டா அவ கிச்சன் ரூம்ல இருந்து ஹால்க்கு அடிக்கடி எட்டி பார்ப்பா.. 

2. நீங்க வர்ற நேரம் பார்த்துத்தான் பாத்ரூம்ல குளிப்பா.. (கதவை தாழ் போடாம)

3. நீங்க காலிங்க் பெல்லை அடிச்சா.. வெயிட் பண்ணுங்க அப்டின்னு சொல்லி நல்லா டிரஸ் பண்ணிட்டு வர மாட்டா.. அப்டியே ஓடி வருவா.. (வித் டர்க்கி டவல்)

4. ஹால்ல அவ உங்க கூட இருக்கறப்ப நீங்க எதுவும் ட்ரை பண்ண வேணாம். ஏன்னா முகத்தை முகம் நேருக்கு நேரா பார்க்க வேண்டி இருப்பதால் தயக்கம் வரும், அதனால கிச்சன் ரூம்ல அவ சமையல் பண்றப்ப நைசா பின்னால இருந்து மெதுவா கட்டிப்படிக்கலாம்.. ( ஏன்னா செருப்பு வாசலுக்கு வெளில இருக்கும், விளக்குமாறு வாசலுக்கு உள்ள ஹால்ல இருக்கும் ,சேஃப்டி.. )

5. கரெக்ட் பண்ணுன ஃபிகரை கடைசி வரை கரெக்ட் பண்ணிட்டே இருக்கனும் ,கழட்டி விட்றக்கூடாது.. பாவம் செஞ்சாக்கூட அதுக்குள்ள சப் டிவிஷன் பாவம் தான் கரெக்ட் பண்ணுன பிறகு அந்த ஃபிகரை கழட்டி விடறது..

6. ஒரு ஃபிகருக்கு லவ் லெட்டர் குடுக்கறப்ப அவ தூன்னு துப்பிட்டா விடு கழுதைன்னு அடுத்த ஃபிகரை பார்க்க கிளம்பிடனும்.. அதே ஃபிகரை துரத்திட்டே இருக்கக்கூடாது.. ..

7, க்ளினிக் போறப்ப டாக்டர் இல்லாதப்ப & நர்ஸ் இருக்கும்போது போகனும்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilgbGJk9ZhVLTBXGkEhx9-f_yZKYeob3vSNNAL7TNkFfrQoNPq_e3_0T73rKzOeTBt_OmrE380vdJw7eEFXxFTCI_f2aZsWJt8dIOtW-XzyN-3-To1jG06oF7bzgwt_q6LTLj9bT9Hfws/s1600/shanthi-movie-stills-020.jpg
ஜிக் ஜாக் கதை சொன்ன படத்திலும் சில லாஜிக் இல்லா மேஜிக்..


1. எந்த ஊர்ல நர்ஸ் வெள்ளை யூனிஃபார்ம் போடாம சேலை கட்டி இருகு? அதுவும் பேக் லோ யூ நெக் ஜாக்கெட் போட்டுட்டு?


2. நர்சோட வீடு-  சாரி பங்களா அவ்வளவு ஆடம்பரமா இருக்குமா?

3. கில்மா படத்துல வர்ற ஹீரோயின்கள் எல்லாம் டெஸ்ட் டியூப் பேபிஸா இருக்காங்களே? எப்படி? அம்மா, அப்பா, புருஷன் யாருமே இருக்க மாட்டாங்களா?

4. இந்த காலத்துல கால் லிட்டர் பால் பாக்கெட் முதல் ஒரு லிட்டர் பால் பாக்கெட் வரை வந்தாச்சு.. அப்பப்ப பால் வாங்கி யூஸ் பண்ணிக்கலாம்.ஆனா ஹீரோயின் ஒரு பாட்டில்ல பால் சேமிச்சு வைச்சிருக்கு.. அது ஏன்? ( ரொம்ப முக்கியம்..)

5. நெற்றில காயம்னு வந்த பேஷண்ட்டை நெற்றியை தவிர மற்ற எல்லா இடங்களிலும் அந்த கில்மா நர்ஸ் தொடுதே அது ஏன்? ( ஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை-நன்றி எம்.ஜி .ஆர்@ஆயிரத்தில் ஒருவன்)

6. ஒரு ஃபிகருக்கு ஒருத்தனை பிடிக்கலைன்னா பிடிக்கலைனு ஓப்பனா சொல்வா. எந்த கேனக்கிறுக்கியாவது ( நிஜமான கேனக்கிறுக்கிகள் மன்னிக்க) 2 மாசம் என்னை பார்க்காம இருந்தா உன்னை லவ் பண்றேன்னு சொல்வாளா?


7. மாமா வேலை பார்க்கும் ஆள் இன்னும் கல்யாணமே ஆகாத தன் வருங்கால மனைவியை கூட்டிக்குடுக்க நினைப்பானா?
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. ஹீரோயின் செலக்‌ஷன், அவரை கண்ணியமாக காட்டியது..

2. ஒரு சீன் கூட மருந்துக்கு கூட  இல்லாத படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் வாங்கியது.. 

3. யூ டியூப்ல சில க்ளிப்பிங்க்ஸை காட்டி பரபரப்பு ஏற்படுத்தியது.. 

4. ஒவ்வொரு ஊர்லயும் 2க்கும் மேற்பட்ட தியேட்டர்ல ரிலீஸ் பண்ணி செம படம் போல எனும் மாயையை ஏற்படுத்தியது..

5.போஸ்டர் டிசைனை கிளாமராக வடிவமைத்தது.. 

மொத்தத்துல படத்துல சீன் கிடையாது.. ஆனா தக்காளி மாதிரி ஃபிகரை மடக்கற டைப் பசங்களுக்கு பாடம் எடுக்கறாங்க ஜனங்களே.. கண்டு ரசியுங்கள்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் போட்டா வீடு தேடி வந்து உதைப்பாங்க

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் போட்டா ஃபோன் பண்ணியே திட்டுவாங்க.. 

இந்த கில்மா படம் ஈரோடு அன்ன பூரணி, ஸ்டார் 2 தியேட்டர்ல ஓடுது..

Saturday, April 16, 2011

Lake Consequence (1993) - சினிமா விமர்சனம் 18 +

http://img.getglue.com/movies/lake_consequence/rafael_eisenman/normal.jpg

A MAN AND TWO WOMEN  -என்னதான் ஹோட்டல்ல வெரைட்டியா சாப்பிட்டாலும்,கல்யாண மண்டபத்துல பஃபே சிஸ்டத்துல ஓ சி ல ஒரு வெட்டு வெட்டினாலும் ,கிராமங்கள்-ல சாப்பிடற பழைய சோறும், மோர் மிளகாய் அல்லது வத்தல் காம்பினேஷனும் செம டேஸ்ட்டா இருக்கும்..( இது கில்மா பதிவா ?உப்புமா பதிவா? #டவுட்டு) 

 அது சாப்பிட்டாத்தான் உண்மையிலேயே வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கும்.. அந்த மாதிரி தான் இந்த மாதிரி பழைய படங்களை ஒரு ரிவிஷன் பண்றதும். (ம்க்கும்.. எட்டாங்க்ளாஸ் படிக்கறப்ப இப்படி ரிவிஷன் பண்ணி இருந்தா பாஸ் ஆகி இருப்பே..# மனசாட்சி )


 படத்தோட கதை என்ன? ஓப்பனிங்க்ல (என்னது எடுத்ததுமே ஓப்பனிங்கா?)
ஒரு சந்தோஷமான தம்பதி சந்தோஷமா இருக்காங்க.. ( இதென்ன கேனத்தனமான லைனா இருக்கு? சந்தோஷமான தம்பதி சந்தோஷமா த்தான்இருப்பாங்க. இதுல என்ன இருக்கு?ன்னு தங்கபாலுத்தனமா கேள்வி கேட்கறவங்க எல்லாம் ஒன் ஸ்டெப் பேக் மேன்..)


மங்களகரமா முத எடுத்ததும் சீன் பார்த்த சந்தோஷம் தியேட்டர்ல இருந்த 890 பேர்ல 760 பேருக்கு.. (பெரிய சைக்காலஜி சகுந்தலான்னு நினப்பு) மீதி 130 பேரோட கருத்து என்னான்னா புருஷன் பொண்டாட்டி குஜாலா இருக்கறதுல என்ன சுவராஸ்யம் வந்துடப்போகுது?அது காங்கிரஸ்காரங்க கோஷ்டி சண்டை போடற மாதிரி..ரெகுலரா நடக்கறதுதான்.

http://kinofilms.tv/images/films/8/7090/pict/3.jpg

ஏதாவது கள்ளக்க்காதல் சீன் வந்தாத்தான் விறுவிறுப்பா இருக்கும்னு நயன் தாராத்தனமா  அடச்சே.. நாதாரித்தனமா  நினைக்கறப்பத்தான் படத்துல ஒரு டர்னிங்க் பாயிண்ட் வருது.. ( ம் ம் இப்பத்தான் கொட்டாவி விட்டவனெல்லாம் நேரா உட்கார்றான்)


ஹீரோயின் தனிமைல இருக்கா ( ஹி ஹி சீன் கன்ஃபர்ம் # பட்சி சொல்லுது) ஹீரோ ஆஃபீஸ்க்கு போயிட்டான் ( தொலைந்தான் எதிரி )
இப்போ வில்லன் ஹீரோயின் வீட்டுக்கு பக்கத்துல ஒரு வேன்ல வந்து மரங்களை வெட்றான்.( இவன் படத்துக்குத்தான் வில்லன்.. நமக்கு ஹீரோ எப்படின்னா இவனாலதானே சீன் வருது?# வாஸ்கோடகாமா தோத்தான் போ)
ஏன் இப்படி  சத்தம் வர்ற மாதிரி மரம் வெட்றே?ன்னு ஹீரோயின் சண்டை போடறா..( மரத்தை வெட்றப்ப கோடாலியை அல்லது ரம்பத்தை சைலண்ட் மோடுலயா போட முடியும்?)வில்லன் சிரிக்கறான்.ஒரு கட்டத்துல ஹீரோயின் வில்லனோட வேன் ல ஏற வேன் கிளம்பிடுது. (வேன் மட்டுமா? ஹி ஹி )

 ஒரு ஏரி.. ஒளிப்பதிவு  சூப்பர்னு ஒருத்தன் சிலாகிக்கறான்.. அப்போ ஒரு கமெண்ட்.. டே கூமுட்டை... கேமராவைப்பாராட்ற நேரமா இது?அப்போ இன்னொரு ஃபிகரு சேரில அடச்சே ஏரில குளிக்குது... அவள் புன்னகையை மட்டுமே அணிந்திருந்தாள் ( நன்றி அமரர் சுஜாதா @நில்லுங்கள் ராஜாவே)

Lake_Consequence___Un_uomo_e_due_donne_Joan_Severance_Rafael_Eisenman-008.jpg
இப்போ நம்ம பழைய ஹீரோயினும், புது ஹீரோயினும் சேர்ந்து குளிக்கறாங்க. பாவம் ரொம்ப நாளா குளிக்கல போல. 17  நிமிஷம் ரெண்டு பேரும் கம்பைன் பாத் பண்றாங்க.. ( கம்பைன் ஸ்டடி பண்றப்ப கம்பைன் பாத் பண்ணக்கூடாதா?)

அப்புறம் வில்லன் வந்து 2 பேரையும் ஒரு கிளப்புக்கு கூட்டிட்டு போறான்.அங்கே புது ஹீரோயின் கூட வில்லன் சந்தோஷமா இருக்கான். அது பழைய ஹீரோயினுக்கு  பிடிக்கலை.. ( ஆனா நமக்கு பிடிக்குது ஹி ஹி )

இப்போ அந்த பழைய ஹீரோயின் வில்லி ஆகறா.. அதாவது ஹீரோவுக்கு ஜோடியா இருந்தப்ப அவ ஹீரோயின்.. வில்லனுக்கு ஜோடி ஆன பின்னே அவ வில்லி... ( நம்ம பழைய ஹீரோயின் வில்லன் கூட மேட்டரை முடிச்சுட்டா என்பதை இவ்வளவு கண்ணியமா ,மறைமுகமா சொன்னதுக்காக இந்த நூற்றாண்டின் சிறந்த கண்ணிய எழுத்தாளர் என்ற விருதை எனக்கு நானே வழங்கிக்கறேன் ஹி ஹி )


http://content.internetvideoarchive.com/content/photos/266/011179_3.jpg
இப்போ டைம் ஆகிடுச்சு.. ( ஹீரோயினுக்கா/) அதாவது ஹீரோ வீட்டுக்கு வர்ற டைம் ஆகிடுச்சு.. வீட்டுக்கு திரும்பி போகனுமே.. வில்லன் டிராப் பண்ணலை.. இவ கோவிச்சுக்கிட்டு தானே போறா.. இது வில்லனுக்கு பிடிக்கலை.. துரத்தறான்... ஒரு காட்டுல சேஸிங்க் சீன்.. ( சேஸிங்க்கின் முடிவில் ஒரு சீன் உண்டு என்பதால்  சேஸிங்க் சீன். என்ற பதம் உருவக அணியாகவும், தற்குறிப்பேற்ற அணியாகவும் இங்கே இடம் பெறுது. # தமிழ் இலக்கணத்துல பின்றேடா போன்ற பின்னூட்டங்கள் வரவேற்கப்படுது ஹி ஹி .)

இப்போ காலம் போன காலத்துல ஹீரோயின் சின்ன வயசுல அவளுக்கு நடந்த ஒரு பாலியல் பலாத்கார ஃபிளாஸ்பேக்கை சொல்றா... வில்லன் அதை கேட்டுக்கறான்... இப்போ ஹீரோயின் வீடு வந்து சேர்ந்துடறா... 

பழையபடி பத்தினி ஆகிடறா.... இப்போ சுபம்... ஹி ஹி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU7SQLFzi4jvOPPpbXZ_zkzLtPmazlDxSXrM8JOazPBofT8sDyzIs20FPNCRA3NzgqhN6x4bXOf5aYHVpG0hyOWC1WRIuxywyS-A6FSHZU3gbSKyBlfGDvGiQuwo0xWwWVjD4ilW3zVqg/s400/star-joan_severance-nue.jpg
.
படம் முடிஞ்சிடுச்சுன்னு ரசிகர்களுக்கு உணர்த்தறதுக்காக  THE END  கார்டு போட்ட பின்பும் எவனும் கிளம்ப மாட்டேங்கறான்.. என்னமோ அத்தை பொண்ணோட திரட்டிக்கு வந்த முறைமாமன் கணக்கா அங்கேயே உக்காந்திருக்கான்.. 
தியேட்டர்காரன் வந்து கிளம்பப்பா படம் முடிஞ்சுதுன்னு சொன்ன பிறகு வேண்டா வெறுப்பா கிளம்பறாங்க.. இதுல எத்தனை பேரு ரிப்பீட் ஆடியன்சா அடுத்த ஷோவே வரப்போறாங்களோ.. 

இந்தப்படம் ஈரோடு அபிராமி தியேட்டர்ல  4 வாரம் ஹவுஸ் ஃபுல்லா தியேட்டர் பூரா ஜொள்ளா ஓடுச்சு.. நான் 3 தடவை பார்த்தேன்  என்பதை வெட்கத்தை விட்டு சொல்றேன்.. ( தக்காளி.. பார்க்கறது சீன் படம் இதுல வெட்கம் என்ன வேண்டி கிடக்கு..?)



http://pulsarwallpapers.com/data/media/554/Lake_Bell_001_2837_Wallpaper.jpg
 படத்துல மொத்தம் 6 சீன் இருக்கு. 1. ஹீரோ ஹீரோயின் 2. வில்லன் வில்லி 3 வில்லன் ஹீரோயின் 4 வில்லி ஹீரோயின் 5 வில்லன் + வில்லி + ஹீரோயின்
6.க்ளைமாக்ஸ்ல வில்லன் ஹீரோயின்.

பாருங்கள் பயன் பெறுங்கள். ஹி ஹி.

படத்தோட உண்மையான டைட்டில் THW LAKE CONSEQUENCE. ஆனா போஸ்டர்ல A MAN AND TWO WOMEN  அப்படின்னு போட்டிருக்கறதுக்கு காரணம் ஒரு கிளாமருக்கு..


http://dodjer.com/uploads/posts/2010-10/1288311725_Lake_Consequence_1993_1.jpg
டிஸ்கி -1  இந்தப்படத்துல ஹீரோ, வில்லன்,ஹீரோயின், வில்லி யாரோட நடிப்பு நல்லாருந்ததுன்னு சொல்லவே இல்லை? என யாரும் கேட்காதீங்க.. யார் நடிப்பை பார்த்தா..? ஹி ஹி,படத்தின் ட்ரெய்லர்

டிஸ்கி 2 - வழக்கமா சிறந்த வசனங்கள்னு ஒரு இடம் ஒதுக்குவேன் அதுவும் இந்த போஸ்ட்க்கு இல்லை.. ஏன்னா வசனத்துகு வேலையே இல்லாத படம்.. ஹி ஹி  டிஸ்கி 3 - இளைஞர்களை கெடுக்கறதா யாரும் என்னை சொல்ல முடியாது.. ஏன்னா அதுக்கு அட்வான்ஸ் பாவ மன்னிப்புபப்ரிகாரமா இன்று 2 நல்ல பதிவு போட்டூட்டேன்.. ஹி ஹி .. Lake_Consequence___Un_uomo_e_due_donne_Joan_Severance_Rafael_Eisenman-010.jpg

Monday, April 04, 2011

கே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி - சினிமா விமர்சனம்

http://www.123musiq.com/Tamil-Images/Appavi.jpg


எலக்‌ஷன் டைமில் இந்த மாதிரி படங்கள் ஒரு பரபரப்புக்காக ரிலீஸ் ஆவது எப்பவும் நடப்பதுதான்.. ஆனால் ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் மீறி இந்த மாதிரி ஆட்சி பற்றிய நேரடி விமர்சன படங்கள் அதுவும் ஒரு லோ பட்ஜெட் படம் வந்தது துணிச்சல் தான்...

படத்தோட கதை என்ன?ரமணா, சிட்டிசன்,சாமுராய் 3 படங்களின் உல்டா தான்.. ஊழல் அரசியல்வாதிகளை வரிசையாக போட்டுத்தள்ளும் கல்லூரி மாணவர் அவர்களை சாகடிக்கும் முன் அவர்களது  ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களது செல் ஃபோனிலேயே வீடியோ பதிவு செய்து அனைவருக்கும் அனுப்புகிறார்...இது தொடர் கதை ஆக அரசியல் வாதிகள் திருந்தினார்களா? என்பதே க்ளைமாக்ஸ்...

ஹீரோ புதுமுகம் ஆள் தோற்றம், நடிப்பு எல்லாம் ஓக்கே என்றாலும் இந்த படத்துக்கு உண்டான கெத்து பத்தாது.. ஒரு சரத் குமாரோ, விஜய்காந்தோ, இயக்குநர் சீமானோ ஏற்றிருக்க வேண்டிய கனமான ரோலை இந்த மாதிரி ரொமாண்டிக் லுக் உள்ள ஹீரோ ஏற்பது படத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கும்.

ஹீரோயின் சுநாஹி... ( பேரே சரி இல்லையே..?)ஆள் நல்லா கொழு கொழுன்னுதான் இருக்கார்... ஆனா .....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyaddvsty7jSGC-1SvU8veA2QQWuIaFZTFaMUZIwsgk2YIG4ku5l7qUkbH32N-ey93w8aRSdvG6SAoNsDW9R44CzpRfBJvQoNto2nwLTLy7Qdbmxdk7ZEMi9kYKmQdsUNIGiYMNo1fXo6Q/s1600/Suhani-appavi-movie-stills-pics-photo-gallery-05.jpg

டூயட் சீன் -ல் தனது துப்பட்டாவை தொட்ட பெட்டா பள்ளத்தாக்கில் தூக்கி எறிந்து விட்டு ஸ்லோ மோஷனில் அவர் ஓடி வரும் போது... ஹி ஹி # வாழ்க ஸ்லோமோஷன் சீன்ஸ்..

பஞ்சாபி பர்பி பொம்மை மாதிரி இருக்கும் ஹீரோயின் ஆல்ரெடி கலராக இருந்தும் எதற்கு ஓவர் மேக்கப்? டால் அடிக்குதப்பா சாமி... 

படத்தில் பட்டாசைக்கிளப்பும் அரசியல் கார சார வசனங்கள்

1. தட்டுல இட்லியைப்போட்டுட்டு தலைல இடியைப்போட்டானாம் ஒருத்தன்...
எப்படி தலைவரே.. அது?

ரெண்டு பேருக்கு முன்னால வில்லனா இருந்தாலும் , 200 பேருக்கு முன்னால ராமனா இருக்கனும்,

2. போலீஸ்காரங்க எப்படி சார் நேர்மையா இருக்க முடியும்..?அப்படி இருந்தாதான் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறாங்களே..?

எல்லா ஆஃபீசர்களும் நேர்மையா இருந்துட்டா ட்ரான்ஸ்ஃபர் ஆகி வர்ற ஆஃபீசரும் நேர்மையா தான் இருப்பாங்க.. அப்போ அரசியல் வாதிங்க தோத்துப்போய்டுவாங்க....ட்ரான்ஸ்ஃபர்ங்கற பேச்சே இருக்காது...( #செம ஐடியா ஆனா எல்லாரும் அப்படி நல்லவங்க ஆவாங்களா?)

3.  அல்லக்கை - அய்யா.. நீங்க சொன்னது ரொம்ப சரி.. 

தலைவர் - நான் ஒண்ணுமே சொல்லலைடா.. கொட்டாவி தானே விட்டேன்..?

4.  தலைவரே.. எனக்கு ஆளுநர் போஸ்ட் வேணும்....

யோவ்.. உனக்கெதுக்கு கவர்னர் ஆகற ஆசை..?

ஓஹோ.. ஆளுநர்னா கவர்னர்னு அர்த்தமா?





http://www.southdreamz.com/wp-content/uploads/2010/06/appavi-aug8-2009.jpg

5.   ஏய்.. என்னை எதுக்கு கொல்றே..?

மக்களை ஏமாத்துனதுக்கு..

நான் இன்னும் எம் எல் ஏ வா ஆகவே இல்லையே..?

6.  நாயரே.. நிர்வாணமா ஒரு டீ போடுங்க... 

அப்படின்னா?

ஆடை இல்லாம ஒரு டீ போடுங்க    ( அம்பை தேவா எழுதுன 1998 சூப்பர் நாவல் ஜோக்)

7.  நான் அநாதை ஆனதுக்கு காரணமே முறுக்கு தான்..

அது எப்படி?

எங்கம்மா பலகாரம் சுட்டப்ப எங்கப்பா முறுக்கு பிரமாதம்னு பாராட்டுனார்.. உடனே எங்கம்மா பூரிக்கட்டையால ஒரே போடு.. ஆள் அவுட்....

ஏன்?

எங்கம்மா சுட்டது ஜிலேபி.. முறுக்குன்னா கோபம் வராதா? ( கிரேசி மோகன் நாடக காமெடி வசனம்)

8.  இந்த அரசியல்வாதிங்க குடுக்கறது வாக்குறுதி.. ஆனா போடறது வாய்க்கரிசி...

9.  டேய்.. நாட்ல 1000 பேரை அழிச்சுட்டு நீ மட்டும் நல்லா வாழனும்னு ஆசைப்படறே.. ஆனா உன் ஒரு ஆளை அழிச்சுட்டு அந்த 1000 பேரை வாழ வைக்கனும்னு நான் ஆசைப்பட்றேன்.. 


10.. அந்த காலத்துல வில்லன் தான் கொலை செய்வான்.. இப்பவெல்லாம் ஹீரோவே கொலை பண்றதுதான் ஃபேஷன்... 


http://assets.findchennai.com/images/entertainment/gallery/812/Appavi-Movie-Press-Meet-40.jpg
11.  நாங்க எல்லாம் ராஜா பரம்பரை,,... 

எது? புள்ளி ராஜா பரம்பரைதானே..?  (வி சாரதி டேச்சு ஜோக் -ஆனந்த விகடன்)

12. முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிங்க கிடையாது.. ஆனா பிடிபடற எல்லாரும் முஸ்லீம்களா இருக்காங்க.. அது ஏன்?

13.  தேர்தல்னா என்ன தெரியுமா? இத்தனை நாளா எந்த கெட்டவனுக்கு ஓட்டு போட்டமோ அவனுக்கு ஓட்டு போடாம வேற ஒரு கெட்டவனுக்கு ஓட்டு போடறதுதான்.

14.  நான் படிச்சுட்டு விவசாயம் பார்க்கபோறேன்... 

சும்மா கதை விடாதே..  

நிஜமாத்தான்.. யாரோ விவசாயம் பண்ணுவாங்க.. அதை வேடிக்கை பார்ப்பேன்.. 

15.  நான் தாய்மையை மதிக்கறேன்.. அதனால படிப்பை முடிச்சுட்டு கல்யாணம் பண்ணி சீக்கிரம் தாய் ஆகப்போறேன்...

சார்.. நான் ஸ்டெல்லா தாய் ஆக ஹெல்ப் பண்ணப்போறேன்.. ( எஸ் வி சேகரின் ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடக டயலாக்)

16.  பெத்த அம்மாவுக்கு ஒரு கஷ்டம்னா செத்த பொணம் கூட துடிக்கும்.. 

17.  அடுத்த எலக்‌ஷன் பற்றித்தான் எல்லா அரசியல் வாதிகளும் யோசிக்கறாங்க.. அடுத்த தலைமுறை பற்றி யாரும் யோசிக்கறதில்லை..

18.  தண்ணி ஊற்றி கழுவறப்ப போகாத கறையை ஆசிட் ஊற்றி கழுவற மாதிரி நம்ம நாட்டையும் ஆசிட் வாஸ் பண்ணி க்ளீன் பண்ணனும்..
http://www.cinemaexpress.com/Images/article/2010/1/18/15appavi.jpg
பாடல்கள் படத்தின் வேகத்துக்கு தடை.. பாறையில் பூக்கின்ற பூக்கள் பாட்டு கவி நயம் மிக்கது என்றாலும் அந்நியன் பட குமாரி.. மனம்.. பாட்டின் அதே லொக்கேஷன், அதே மெட்டு என உல்டா அடித்திருப்பது மைனஸ்... 

ஒரு சீனில் ஹீரோ 2 அடி தூரத்தில் நின்று கொண்டிருக்கும் காரின் பெட்ரோல்டேங்க் மீது ரிவால்வரால் சுடுகிறான்.. அப்படி சுட்டால் 20 அடி தூரம் வரை யார் நின்றாலும் ஆளை காலி பண்ணி விடுமே.?

ஹீரோ வில்லனை தேசிய கீதம் தெரியுமா? எனகேட்க தெரியாது என சொன்னதும் அவனை போட்டுத்தள்ளூகிறான்... அதற்குப்பிறகு ஆளாளுக்கு தேசிய கீதத்தை மனப்பாடம் செய்வது நல்ல கற்பனை... 

கே பாக்யராஜ் புரட்சி விதை  விதைக்கும் பேராசிரியராக வருகிறார்.. ஆளுங்கட்சி ஆதரவாளரான அவர் இந்த மாதிரி கேரக்டரில் நடித்தது ஆச்சரியம் தான்.. யார் கண்டது,. இந்நேரம் அவருக்கு டோஸ் கூட விழுந்திருக்கலாம்... 

இசை ஜோஸ்வா ஸ்ரீதர்.. படம் பூரா இசை ஒரே இரைச்சல்.. அவ்வப்போது அமைதியும் வேணும்னு யாராவது சொன்னால் தேவலை.... 






http://www.kodambakkamtoday.com/wp-content/uploads/2010/06/Appavi_movie_still_kodambakkamtoday_com.jpg



இந்தப்படம் எல்லா சென்ட்டர்களிலும் 7 நாட்கள் ஓடலாம்..    

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

ஈரோடு அன்னபூரணி தியேட்டரில் படம் பார்த்தேன்..

Friday, March 11, 2011

பிரகாஷ்ராஜ்-ன் அன்வர் - கோவை குண்டு வெடிப்பு பின் புலக்கதை - சினிமா விமர்சனம்


http://www.filmics.com/tamil/images/stories/news/March/3-3-11/Prithviraj-anvar.png
 நல்ல சினிமாவில் நடிக்க வேண்டும், நல்ல சினிமா தர வேண்டும் என்ற பிரகாஷ்ராஜின் கொள்கையால் அவரது இமேஜ் திரை உலகில் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு சாட்சியாக பிரித்விராஜ் ஹீரோவாக நடித்த இந்த மலையாள டப்பிங்க் படத்துக்கு பிரகாஷ்ராஜின் பிம்பத்தை  போஸ்டரில் போட்ட சாமார்த்தியத்துகு ஒரு சபாஷ்..

கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் என்ன நடந்தது?யார் அதன் பின் புலமாக இருந்தார்கள்?முஸ்லீம்கள் அந்த நிகழ்ச்சியால் எந்த அளவு பாதிப்பு அடைந்தார்கள் என்பதை விளக்கும் கதை.

தீவிரவாதிகள் ட்ரூப்பில் பிரித்விராஜ் சேரும்போதே இது கேப்டனின் நரசிம்மா படத்தில் வருவது போல போலீஸின் டெக்னிக் என  தெள்ளத்தெளிவாய் தெரிகிறது ..ஆனால் பிரித்விராஜின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் வரும்போது இயக்குநரின் சாமார்த்தியம் வெளிப்படுகிறது.

படத்தோட ஓப்பனிங்க்லயே ஜெயில் கைதிகள் வேட்டி சட்டையோட உலாவுவதைப்பார்த்தால் லாஜிக் கன்னா பின்னா என அடி வாங்கப்போகுதுன்னு பார்த்தா கேரளாவில் அப்படித்தானாம்.

ஒளிப்பதிவு அம்சமாக இயற்கை அழகுகளை அள்ளிக்கொள்கிறது...அதுவும் அபூர்வமாய் வரும் பாடல் காட்சிகள் 3-ல் ஒளிப்பதிவு ரெகை கட்டிப்பறக்குது.. போற போக்கைப்பார்த்தா இந்த டைரக்டர் ஆக்‌ஷன் படத்தை விட காதல் சப்ஜெக்ட்ல படம் எடுத்தா கலக்குவாருன்னு தோணுது...



http://www.tutyonline.net/gallery/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/b/prithivra10.jpg
கிழக்கில் பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திடுவாயோ பாடல் வரிகளை கேட்கும்போது இந்த மாதிரி ஆக்‌ஷன் சப்ஜெக்ட்ல கூட மனுஷன் மெனக்கெட்டு பாடல் வரிகளை செலக்ட் பண்ணி இருக்காரே..ன்னு தோணுச்சு..வெல்டன் டைரக்டர் கம் பாடல் ஆசிரியர் .அந்த பாடலுக்கான ஹீரோயினுக்கான ஆடை வடிவமைப்பு மகா கண்ணியம்.செம...

அதே போல் கண்ணின் இமை போலே பாடலுக்கு நடன தாரகைகள் ( நன்றி - சாண்டில்யன்) அணிந்திருக்கும் கவுரவமான உடைகள் புதிதாய் படம் எடுக்க வரும் இயக்குநர்களுக்கு நல்ல ஒரு முன் உதாரணம்..சமீப கால படங்களில் இவ்வளவு  டீசண்ட்டாக க்ரூப் டான்சர்ஸை ஃபுல்லா கவர் பண்ணி அழகு படுத்தியவர்  யாரும் இல்லை...( நற நற... )


பிரகாஷ்ராஜ் பல இடங்களில் சர்வ சாதாரணமாய்ப்பேசும் ஆங்கில வசனங்களில் வசனகர்த்தா மிளிர்கிறார்.. துல்லியமான ஆங்கில அறிவும், நாட்டு நடப்பை தாக்கும் வசனங்களும் வெல்டன் சொல்ல வைக்கிறது.

http://www.ulakacinema.com/wp-content/uploads/2011/03/anwar01.jpg
வசனகர்த்தா வெங்கடேஷ் கலக்கிய இடங்கள்

1.  உங்களை ஏன் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க தெரியுமா?

ம்.. தெரியும்.. ஏன்னா நான் ஒரு முஸ்லீம்..

மத்த முஸ்லீம்களை ஏன் அரெஸ்ட் பண்ணலைன்னு தெரியுமா?

ஓ... அதுக்காக வருத்தப்படுகிறீர்களா?


2.  அப்போ.. உங்களுக்கும் பாம் பிளாஸ்ட்க்கும் தொடர்பு இலைன்னு சொல்றீங்களா..?

நீங்க என்ன சொல்லப்போறீங்களோ அது தானே நாளைக்கு பேப்பர்ல வரப்போவுது...? நான் சொல்றதையா போடப்போறாங்க..?

3. ஜெயிலர் - அங்கே என்னடா பேச்சு..?

புது கைதி வந்திருக்கான் இல்ல// விசாரிக்கறோம்..

ஆமா, அடையாளம் தெரிஞ்சு எம் எல் ஏ சீ ட் குடுக்கப்போறியா..?

4.  அன்வர், அப்துல்லா இப்படி பேர் வெச்சது தப்பு.. அதான் போலீஸ்ல அரெஸ்ட் பண்றாங்க..

அதுக்காக இந்த வயசுல போய் பேரை மாத்த முடியுமா?

5,  சரி சரி.. சிகரெட்டை அணை... ஜெயிலர் வர்றான்...

ஏன்.. அவர் ரொம்ப கண்டிப்போ...?

ம்ஹூம்.. சிகரெட்டை பிச்சை கேட்பான்...

6.  போலீஸ்காரங்க எல்லோரும் கெட்டவங்கன்னு சொல்றியா..?

முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிகள்னு சொல்றியா..?

7.  அங்கே என்னடா மீட்டிங்?

ஜெயில்ல பாம் வைக்கறதைப்பத்தி  டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்..

அப்படியாவது  இந்த ஜெயில் வாழ்க்கைக்கு முடிவு காலம் வரட்டும்...

8.  இது கோர்ட் வாசல்.. விசில் அடிக்கறே..?

உள்ளே ஜட்ஜ் சுத்தியல்ல அடிக்கிறாரு...அதை கேட்க மாட்டீங்க..?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEit8qnQCdrhYeFbaekQVQg6koONINqJdmE1SXg0FpZyskK6hWS2ibkf72qoRhYQGyBe-wBMIKhQLJsy3rwJnmqtrQWxACK-MB1BzhuKf5UZ92ITbRoKILmP9H94l2vwh6iFC0jIjd3ovNsq/s1600/Anvar+Movie+photos+_27_.jpg
9.  உங்களை நான் ஜெயில்ல பார்க்கவே இல்லையே...

வரனும்.. ரொம்ப நாளா நண்பன் கூப்பிட்டுட்டே இருக்கான்.....

10. மேலே போனவன் கீழே வந்தே ஆகனும்.. இது இயற்கையின் விதி ( LAW OF NATURE)

11..ஆஷா.. விசாரணைக்கு ஒத்துழைக்கனும்.. உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா..?

அதை உங்க கிட்டே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...

12. மரண பயத்தை வெல்லும்போதுதான் ஒரு சாதாரண மனிதன் முஸ்லீம் ஆகறான்.

13.  இவ்வளவு கஷ்டப்பட்டும் 3 பேர் தான் செத்தாங்களா?

எத்தனை பேர் செத்தாங்கங்கறது முக்கியம் இல்ல..உயிரோட இருக்கறவங்க மனசுல பயத்தை விளைவிக்கனும்..

14.  என் பையனுக்கு  திமிர் ஜாஸ்தி.. ஆனா வயசானா அது சரியாகிடும்...

15. பசியோட இருக்கறவங்களுக்கும், அநாதைகளுக்கும் உதவி செய்யனும் நாம எல்லாரும்...

16.  ஒரு நிமிஷம்... ஒரே நிமிஷம்.. நான் அநாதை ஆகிட்டேன்...

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_095934000000.jpg
இயக்குநருக்கு சில வார்த்தைகள்

1. பிரகாஷ்ராஜ் சுடப்படும் சீன் குருதிப்புனல் க்ளைமாக்ஸை நினைவு படுத்துவதை தவிர்த்திருக்கலாம்...

2. மதி நுட்பம் வாய்ந்த ஆங்கில வசனங்களை கரெக்ட்டான இடங்களில் போட்டது சந்தோஷம் .. ஆனால் திரையில் அதைத்தமிழ்ப்படுத்தி இருக்கலாம்.

3. மிக நீளமான அந்த ஆக்‌ஷன் காட்சியில் ஹீரோ ஜீன்ஸ் பேண்ட் போட்டபடி காலை தூக்கவே சிரமப்பட்டு உதைக்கிறார்.. அது எப்படு பவர் ஃபுல் ஷாட்டாகும்? ஜாக்கி சான் படங்களில் ஃபைட் சீன்களில் அவர் அணியும் பேக்கீஸ் ரக பேண்ட்களை கவனிக்கவும்..

4. வெறும் 3 சீன்களே வந்தாலும் ஹீரோவின் தங்கையாக வரும் ஃபிகர் செம செலக்‌ஷன்.. கீப் இட் அப்...
5.. இடைவேளைக்குப்பிறகு வரும் 28 நிமிட ஃபிளாஷ்பேக் காட்சியில் வெறும் 6 நிமிட இடை வெளியில் 2 பாடல்கள் வருவதை தவிர்த்திருக்கலாம்..

http://thatstamil.oneindia.in/img/2010/04/21-mamthamoh200.jpg

அது போக காயத்ரி ரகுராம் அவர்களின் நடன இயக்கம்  ரொம்பவே அழகு...ஹீரோயின்  18  நிமிடங்களே வந்தாலும் (மம்தா) மனதில் நிற்கிறார்.. ( நல்ல வேளை உட்காரலை)

இந்தப்படம் மலையாள டப்பிங்க் படம் என்பதால் ஆனந்த விகடன் -ல் விமர்சனம் போட மாட்டாங்க..குமுதம் புக் எலக்‌ஷன் ஸ்பெஷல்ல மும்முரமா இருக்கறதால அதுலயும் போட மாட்டாங்க.... ( அப்போ நான் தான் இளிச்சவாயனா..?)

படம் எத்தனை நாள் ஓடும்.. ஆவரேஜ்ஜா 20 நாட்கள்

Thursday, March 10, 2011

இலக்கணப்பிழை - ரசனையான அஜால் குஜால் படம் - விமர்சனம் 18 கூ(ட்)டல்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQIivRz0LYIlD3rZHXwKOQ50W_MjX8R1UctVW1SXlpkSLHjToLikhcKM1-GA1CRoOPRbI45DU2BgAkmaC_yqHaLPj16ZVh1_m52OlXOOaHMjzp6bcUeNNA4GrDKFi-mBceBtdYets9cwI/s400/Ilakkana-Pizhai-movie-posters.jpg
ஈரோடு ஸ்ரீனிவாசா தியேட்டர்ல இந்தப்பட போஸ்டரைப்பார்த்ததும் இன்னைக்கு ஆஃபீஸ்க்கு மட்டம் போட்டுடலாம்னு தீர்மானிச்சுட்டேன்,.காரணம் போஸ்டர்ல பார்த்த 4 ஃபிகர்ங்களும் ஃபிரஸ் ஃபேஸா, ( அண்ட் ஆல்சோ ஃபிரஸ் பீஸ்)தெரிஞ்சாங்க..

ரிசப்ஷனிஸ்ட் ஜெயந்தி கிட்டே இன்னைக்கு அவுட் கோயிங்க் ரெஜிஸ்டர்ல பவானின்னு போட்டுக்கம்மா என்றேன். ( டி. ஏ  ( to  CLAIM TRAVELLING ALLOWANCE)). பார்ட்டி கமுக்கலான சிரிப்போடு எந்தா சாரே.. சினிமாவோ. என்றது.. ( வயசு 19 3/4 , ஊர் கேரளா- பாலக்காடு - அகலி # இன்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த் )

மேனேஜர்ட்ட பர்மிஷன் வாங்க அவர் ரூமுக்கு போனேன்..

சார்.. காலைல 11 டூ 12.30  ஒன்றரை மணி நேரம்  பர்மிஷன் வேணும் சார்..

வழக்கமா நீங்க வெள்ளீக்கிழமை தானே கோயிலுக்கு போகனும்னு பர்மிஷன் கேப்பீங்க..?

ஹி ஹி .. சொந்தக்காரங்க ஊர்ல இருந்து வர்றாங்க சார்... அவங்களை பிக்கப் பண்ண ரயில்வே ஸ்டேஷன் வரை போகனும்.. 

சரி சரி  போங்க..ஆனா சொன்ன டைம்க்கு கரெக்ட்டா சீட்ல இருக்கனும்..

ஓகே சார் ஒண்ணும் பிரச்சனை இல்ல .( சின்ன படமாத்தான் இருக்கும் )


http://www.tamilulakam.com/news/upload/cinema/Tu_7996.jpg
11 மணிக்கு தியேட்டருக்கு போனா படம் ஏற்கனவே போட்டாச்சு..அடடா.. கில்மா படங்கள் போட்ட அந்த நாள் முதல் இந்த நாள் வரை லேட்டா தியேட்டர்ல எண்ட்ரி ஆகற எல்லா வெண்ணைங்களும் கேட்கற கேடு கெட்ட கேள்வியை நானும் பக்கத்து சீட் ஆள் கிட்டே கேட்டேன்.. 
சார்.. படம் போட்டாச்சா... எப்போ போட்டாங்க.. ஏதாவது சீன் வந்ததா..?

இப்பத்தான் சார் எழுத்து போட்டு முடிச்சாங்க...

அப்பாடா,,. எழுத்தை மட்டும் தானே போட்டாங்க.. 

படத்தோட கதை என்னன்னா....

ஹீரோ வேலைக்குப்போயிடறான்,ஹீரோவோட நண்பன் அவன் வீட்டுக்கு பக்கத்துலயே குடி இருக்கான்.. (அநியாயத்துக்கு ரொம்ப பக்கம்)ஹீரோயின் பகல்ல சும்மா படுத்திருக்கும்போது ( டிரஸ் போட்டிருக்காங்க) ஹீரோவோட நண்பன் (ஆட்டோ டிரைவர்)அவனோட காதலிக்கு ஃபோன் போட்டு காதல் ரசம் சொட்ட சொட பேசறான்.அதைக்கேட்டு ஹீரோயினுக்கு மூடு வந்துடுது..( தியேட்டர்ல இருந்த 1256 பேருக்கும் தான்.. ஹி ஹி )

ஆட்டோ டிரைவரா வர்ற ஹீரோவோட ஃபிரண்ட் சகிக்கலை.. அதுவா நமக்கு முக்கியம்..?ஹீரோயின் பரவால்லை.. மோசம் இல்லை.. ஆனா அவரோடது ஓவர் ஆக்டிங்க்.. எப்போ பாரு கண்ணை சொருக்கிக்கறதும், நாக்கை கடிக்கறதும், செம அலம்பல்...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHGFS6CEgNyLOzCIjf20AvKy7FIDmzYF-11YrkKHk4gRYI-RpcFa7yldvjIQDfaC0iFo0VSStHAWyX32J2fqSL1BJ9EjQHhd6R9dR2D7NPDpPKAw9Hv22ohYhksk82TOYK2T7vmNCx8BFH/s320/Ilakkana-Pizhai1.jpg
ஆட்டோ டிரைவரின் காதலியாக வரும் பிளஸ் டூ ஃபிகர் இளமையான முகம்.காதலியின் தோழியாக வருபவரும் அழகுதான்.( வயசு 18)

சொக்குபொடி போட்ட கில்மா வசனங்கள்

1.  இங்கே பார்டி.. இனிமே உன் லவ்வர் வர்றப்ப நான் உன் கூட வர மாட்டேண்டி..

ஏண்டி..?

எங்கே அவனை நான் லவ் பண்ணீடுவனோன்னு பயமா இருக்குடி..

2. என்னங்க.. என்னையும் கூட கூடிட்டு போங்க...

போடி.. நான் என்ன மாமியார் வீட்டுக்கா போறேன்.. போறது ஆஃபீஸ்க்கு..

( நான் வேணா வரட்டா.... # ஆடியன்சில் இருந்து ஒரு குரல்)

3.இங்கே பாருடி.. மேரேஜூக்குப்பிறகு நீ சேலை தான் கட்டனும்...

ஏங்க?நான் சேலைல தான் அழகா தெரியறேனா?

அப்படி இல்லை.. சேலைல தான் எதெது எவ்வளவு பர்சண்ட் தெரியனுமோ அதது அவ்வளவு பர்சண்ட் தெரியும்...

4.. டியர்.. நீ பிராணயாமம் பண்ணுவியாமே.. பண்ணு பார்க்கலாம்...

இப்படி மூச்சை நல்லா இழுத்து ....

ஆஹா பிரமாதம்.. ஏம்மா நீ வேடிக்கை பார்த்துட்டு நிக்கறே... நீயும் அவ ஃபிரண்டுதானே.. நீயும் பண்ணேன்...


ச்சீ .. நீ ங்க எதுக்கு கேட்கறீங்கன்னு தெரிஞ்சு போச்சு...நான் மாட்டேன்பா...

5.   டியர்.. எதுக்கு ஆட்டோல ஹாரனை எடுத்துட்டீங்க....

ஹி ஹி ஒழுங்கா வேலைல கான்செண்ட்ரேட் பண்ண முடியல..மைண்ட் டிஸ்டர்ப்பா இருக்கு....

6.. ஏண்டா.. எனக்கு இன்னைக்கு த்ரீ டேஸ்னு எப்படி கண்டு பிடிச்சே...?

எனக்கு தெரியும்டி.. வழக்கமா நீ செகப்பு பொட்டு வெச்சிட்டு வருவே.. இப்ப மெரூன் கலர் பொட்டு வெச்சுட்டு வந்திருக்கியே.(  ..#விளங்கிடும் நாடு)



http://www.cinesnacks.net/tamil-movies/movies/Ilakkana-Pizhai/ilakkana-pizhai-images-019.jpg
ரைட்டு.. முதல் முதலா ஆட்டோ காரருக்கும்,ஹீரோயினுக்கும் எப்படி டச்சிங்க் டச்சிங்க் ஆகுது..?

தண்ணி குடுங்கன்னு  அவன் கேட்கறப்ப அந்த உத்தம பத்தினி மல்லிகைப்பூ வெச்சிருந்த சொம்புல இருந்து எடுத்து தருது.. அதை வாசம் பார்த்துட்டு அவரு ஹ்ம்முனு மூச்சை இழுத்து விட்டு ஒரு மார்க்கமா பார்க்கறாரு. அப்புறம் என்ன 2 பேருக்கும் பத்திக்கிச்சு...

.
படம் போட்டு 9 ரீல் வரைக்கும் சந்தேகம் வராத ஹீரோவுக்கு 10வது ரீல்ல சந்தேகம் வந்துடுது..(படத்துல டர்னிங்க் பாயிண்ட் வேணாமா?)மனைவியை அவளோட அம்மா வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்துடறாரு..( அட போங்கப்பா)
இப்போ ஆட்டோகாரர் காதலியை கணக்கு பண்ண ப்ளேன் போடறாரு...அதுக்குப்பிறகு நடந்தது என்ன?ஹீரோயின் கதி என்ன? காதலியின் தோழி கூட சீன் இருந்ததா?



http://tamil.galatta.com/entertainment/photogallery/tamil/movies/Ilakkanappizhai/Aa-Ilakkana-Pizhai-16.jpg
விடை  வெண் திரையில்...

( அது வேற ஒண்ணுமில்லை.. 1970 களில் வந்த பழைய படங்களின் பாட்டு புக் கிடைச்சது படிச்சிட்டு இருந்தேன்.. அதுல இப்படித்தான் கதைச்சுருக்கத்துக்குப்பின்னாடி போட்டிருந்தாங்க..)

இந்த படத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி...
1.கல்யானமானவங்க மனைவியை விட்டு பிரியவே கூடாது..  (.ஆஃபீஸ்க்கும் கூட்டிட்டு போயிடனும்..?)

2. என்னதான் நெருக்கமான ஃபிரண்டா இருந்தாலும் அவனை வீட்டுக்குள்ள விடக்கூடாது.. (விட்டா அவன் நெருக்கமாகிடுவான்)

3. தப்பு பண்ணற லேடீஸ் 17 முறை தப்பு பண்ணீட்டு 18 வது தடவையா தப்பு பண்றப்பத்தான்  இப்படி பண்ணுனா அது துரோகம்னு நினைப்பாங்க..

4. காதலியோட கடலை போடறப்ப காதலியின் தோழியையும் பக்கத்துலயே வெச்சுக்கனும்..

5.சொந்தமா ஒரு கார் அல்லது ஆட்டோ இருந்தா ஃபிகர்ங்க செட் ஆகும்.. (பைக் இருந்தா காதலி மட்டும்.. ஹி ஹி )


http://cinema.livestaradd.com/wp-content/uploads/2010/11/swathi-4.jpg
படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னே ஒரு சினிமா பத்திரிக்கைல வந்த செய்தி...
சாமானியன் முதல் சாமியார்கள் வரை சபலப்பட்டு தங்களின் எல்லைகளை மீறும்போது ஏற்படும் இலக்கணப்பிழையால், அவர்களின் வாழ்க்கை எப்படி புரட்டிப் போடப்படுகிறது? என்பதை கருவாக வைத்து ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, "இலக்கணப்பிழை" என்றே பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஆட்டோ ஓட்டும் ஒரு இளைஞனுக்கு, நண்பன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்படுகிறது. இதனால் நட்பு முறிகிறது. அந்த துரோகம் அவனுடைய வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது? என்பதை கதை சித்தரிக்கிறது. கதாநாயகன்-கதாநாயகிகளாக புதுமுகங்கள் ஆறுமுகம், சத்யா, சுவாதிஸ்ரீ, ரிஹானா ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். கதை-திரைக்கதை-வசனம் எழுதி ஜோ இயக்குகிறார். ரமேஷ் கே.பாபு ஒளிப்பதிவு செய்கிறார். அருணகிரி இசையமைக்கிறார். யுவா என்டர்டெய்ண்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு வால்பாறை காட்டு பகுதிகளில் 30 நாட்கள் நடந்தது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.


http://www.sivajitv.com/newsphotos/Swathi2.jpg
12. 45 க்கு படம் முடிஞ்சுது..சில பேரோட பிளாக்ல இன்று காலை 11.30 டூ 12.30 கமெண்ட் போட்டியே எப்படி? படம் பார்த்தது பொய்யா? கமெண்ட் போட்டது பொய்யா? என கேட்பவர்களுக்கு.... ரெண்டும் உண்மைதான்.. லேப்டாப்போட போனேன்.. ஹி ஹி

பாத்திரங்கள் அறிமுகம்..( பெரிய நாடக ட்ரூப் நடத்தறாரு..)

1. முதல் ஸ்டில்லுல இருக்கற ஃபிகர் தான் ஹீரோயின்,அந்த தாடிவாலா தான் ஆட்டோகாரன்.

2.ரெண்டாவது ஸ்டில்லுல இருப்பது ஹீரோயினும் ஹீரோவும் (அந்த அப்பாவி புருஷன்)

3. 4 . மூணாவது ,நாலாவது ஸ்டில்ல்ல இருக்கும் ஃபிகர்தான் ஆட்டோக்காரனோட பிளஸ் டூ லவ்வர்.

5. ஆறாவது ,ஏழாவது ஸ்டில்லுல இருக்கறது  கண்கள் இரண்டால் புகழ் ஸ்வாதி (கூடுதல் கிளாமருக்கு..இவங்க அந்த படத்துல இல்ல)

ஃபைனல் டச்  - படத்துல சீன் இருக்கா? இல்லையா? 

நீங்க எதிர்பார்க்கற சீன் இல்ல.. ஆனா பாக்கலாம்..ஹி ஹி .ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது மாதிரி.....