Showing posts with label AFWAAH(2023) - ஹிந்தி - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label AFWAAH(2023) - ஹிந்தி - சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, July 19, 2023

AFWAAH(2023) - ஹிந்தி - சினிமா விமர்சனம் ( பொலிட்டிக்கல் மிஸ்ட்ரி த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்


AFWAAH  என்ற  சொல்லுக்கு  ரூமர் ( புரளி) என்று  அர்த்தம் , சமூக  வலைத்தளங்களான  ஃபேஸ் புக் , ட்விட்டர், யூ  ட்யூப் , இன்ஸ்டாகிராம்  ஆகிய  தளங்களில்  வைரல்  ஆகும்  விஷயங்களை  நம்பாதீர்கள் , கண்ணால்  காண்பது பொய் , தீர  விசாரிப்பதே  மெய்  என்ற  வரி தான்  கதைக்கரு . இது  2023  மே 5  அன்று  திரை  அரங்குகளில்  வெளியாகி  வெற்றி  பெற்ற படம், நெட்  ஃபிளிக்ஸ்  ஓடிடி  தளத்தில்  ஜூன் 30  2023  முதல்  காணக்கிடைக்கிறது


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகியின்  அப்பா  பெரிய  அரசியல்  தலைவர் . நாயகிக்கு திருமணம்  நிச்சயம்  ஆகிவிட்டது . இவரும்  அரசியல்வாதிதான்.இன்னும்  15  நாட்களில்  திருமணம்  நிகழ  இருக்கிறது என்னும்  சூழலில் நாயகியின்  வருங்கால  மாப்பிள்ளை  கலந்து கொள்ளும்  அரசியல் மீட்டிங்  நடக்கும்  இடத்தில் சிறிய  கலவரம்  நடக்கிறது . வருங்கால  மாப்பிள்ளைக்கு  தலையில் சின்னக்காயம்  ஏற்படுகிறது . சுமூகமாகப்பேசித்தீர்க்க   வேண்டிய  பிரச்சனை  அது . ஆனால்  வருங்கால  மாப்பிள்ளை தான் வில்லன்


அவன்  சூழ்நிலையை  தனக்கு  சாதகமாகப்பயன்படுத்த பெரிய  கலவரத்தை  தன்  அடியாட்கள்  மூலம்  அரங்கேற்றுகிறான். வில்லனின்  அடியாட்கள்  பலரைக்கொன்று  குவிக்கும்  காட்சி  சோசியல்  மீடியாக்களில்  வைரல்  ஆகி  எல்லொருக்கும்  தெரிந்து  விடுகிறது . நாயகி  வில்லனிடம்  வாக்குவாதம்   செய்கிறாள், பயன்  இல்லை ., அரசியல்  ஆதாயத்திற்காக  எது  வேண்டுமானாலும்  செய்வேன்  என்கிறான்  வில்லன்.


 இதனால்  ,மனம்   உடைந்த  நாயகி  தன்  அப்பாவிடம்  ஃபோனில்  தகவல் சொல்லி  விட்டு  வீட்டை  விட்டு  ஊரை  விட்டு  வெளியேறுகிறாள். திருமணத்தில் நாயகிக்கு  இஷ்டம்  இல்லை 


 நாயகன்  ஒரு  சாமான்யன் . நாயகி  வீட்டை  விட்டு  ஓடியதற்கும்  நாயகனுக்கும்  சம்பந்தம்  இல்லை . நாயகியை  வில்லனின்  ஆட்கள்  துரத்தும்போது  நாயகன்  எதேச்சையாக  நாயகிக்கு  உதவுகிறான். நாயகன் , நாயகி  இருவரும் இணைந்து  நிற்கும்  காட்சியை  வீடியோ  எடுத்து சோசியல்  மீடியாக்களில்  வைரல்  ஆக்கி  பொய்யான  தோற்றத்தை  வில்லன்  உருவாக்குகிறான்


 நாயகி  இந்து . நாயகன்  முஸ்லீம் , மணம்  ஆகி  மனைவி  உண்டு , ஆனால்  ஒரு  முஸ்லீம்  பையன்   தலைவரின்  இந்துப்பெண்ணை கடத்திக்கொண்டு  செல்கிறான் . இது  லவ்  ஜிகாத் . இதை  தடுக்க  வேண்டும்  என  வில்லன் தூண்டி  விடுகிறான்


போலீஸ்  ஆட்கள் , வில்லனின்  அடியாட்கள்    அனைவரும்  நாயகன் , நாயகி  இருவ்ரையும்  துரத்துகிறார்கள் . இந்த  சேசிங்கில்  அவர்கள்  தப்பித்தார்களா? மாட்டிக்கொண்டார்களா ? என்பதுதான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  நவாசுதீன்  சித்திக்  சாதாரண  நபராக  வருகிறார். ஓப்பனிங்  சீனில்  அவர்  எப்படி  ஃபாரீனில்  புகழ்  பெற்றார்  என்ற  அறிமுகக்காட்சி  அமர்க்களம் . அதற்குப்பின்  அவர்  பெரிய  அளவில்  சாக்சம்  ஏதும்  செய்யாமல்  இயல்பான  நபராக  கதையின்  நாயகனாக  மட்டும்  உலா  வருகிறார் 


 நாயகி  ஆக  பூமி பட்னேகர் .. வில்லனின்  மேல்  அவர்  காட்டும்  ஆவேசம்  அருமை . முழுக்கதையும் இவரைச்சுற்றியே  பயணிப்பதால்  நாயகனை  விட  நாயகிக்கே  அதிக  காட்சிகள் 


 மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாத  ஆனால்  சுவராஸ்யமான  போலீஸ்  ஆஃபீசர் - லேடி  போலீஸ்  கான்ஸ்டபிள்  கிளைக்கதை  அருமை .  ஆரம்பத்தில்  ஹையர்  ஆஃபீசர்  காண்ஸ்டபிளை  மிரட்டிக்கொண்டே  இருப்பதும், க்ளைமாக்ஸ்  டைமில்  அவருக்கு  எதிரான  ஒரு  சாட்சி  கிடைத்ததும் லேடி  கான்ஸ்டபிள்  ஹையர்  ஆஃபீசரை  மிரட்டுவதும்  கைதட்டல்  பெறும்  காட்சி 


மாரிக்கோ  விடால்  தான்  ஒளிப்பதிவு .  ஏரியல்  வியூ  ஷாட்களில்  முத்திரை  பதிக்கிறார்அட்டானு  முகர்ஜி  தான் எடிட்டிங்  . 2  மணி  நேர,மே  ஓடும் அளவு  கச்சிதமான  ட்ரிம்மிங்  கரேல்  ஆண்ட்டனின்  இசையில்  பாடல்  ஓக்கே  ரகம், பின்னணி  இசை  விறுவிறுப்பு  திரைக்கதை இயக்கம்  சுதீர்  மிஸ்ரா


  ரசித்த  வசனங்கள் 


1  மக்களோட  ரத்தத்தில்  வன்முறை  ஊறி  இருக்கு , அவங்களும்  இதை  விரும்பறாங்க 


2 எந்த சூழ்நிலை  வந்தாலும்  அதை  தனக்கு  சாதகமா  ஆக்கிக்கறவன் தான்  அரசியல்வாதி 


3   உனது கவனமெல்லாம்   பயணத்தில்தான்  இருக்கனும், டெஸ்டினேஷனில்  அல்ல 


4  ஏற்கனவே  ஒரு  கிட்னியை  வித்தவன்  நான்,  எனக்கு  என்ன்  பயம் ? சரியான  விலை  கிடைச்சா என்  ரெண்டாவது  கிட்னியையே  விப்பேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  கொலை  பண்ண  பிளானோட  கிளம்பறவன்செல்  ஃபோனை  சைலன்ட்  மோடில்  வைக்க  மாட்டானா? கால்  வரும்போது  ரிங்க்  டோன்  காட்டிக்கொடுக்கும்னு  தெரியாதா? 


2  நாயகன்  வேறு  ஒரு  நண்பரின்  ஃபோனிலிருந்து  தன்  மனைவிக்கு  கால்  பண்றார், புது  நெம்பர்  என்பதால்  மனைவி  அதை  கட்  பண்றார். நான்  தான்  பேசறேன் , ஃபோன்  அட்டெண்ட்  பண்ணு  என  மெசேஜ்  அனுப்பி  இருக்கலாமே? 


3   ஒருபோலீஸ்  ஆஃபிசர் ஒரு ஆளைக்கொலை  பண்ணப்போறார். ஆள்  முகத்தைப்பார்த்து  இவன் தானா?னு  கன்ஃபர்ம்  பண்ணிட்டு  கொல்ல  மாட்டாரா?  ஆளே  இல்லாத  பண்ணைல  ஒரே  ஒரு  ஆள்  இருக்கான்,  அவனை  முகத்தைக்கூட பார்க்காம  கொன்னுடறாரு , ஆள்  மாறாட்டம் 


4  க்ளைமாக்ஸ் ல  பல  வாகனங்கள்  நாயகன்  , நாயகி  பயணிக்கும்  லாரியை  சேஸ்  பண்ணிட்டு  வர்றாங்க . அவங்க  என்னடான்னா  லாரியை   ஒரு  இடத்துலநிறுத்தி  தன்னிலை  விளக்க  வீடியோ  எடுத்து  ட்விட்டர்ல  அப்டேட்  பண்ணிட்டு  இருக்காங்க . லாரி ல  ட்ராவல்  பண்ணிட்டே  அதை  செய்யலாமே? அவார்டு  ஃபிலிமா  எடுக்கறாங்க? ஷேக்  ஆகாம  இருக்கனும், தெளிவா  இருக்கனும்னு  அவசியம்  இல்லையே?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -    நவாசுதீன்  சித்திக்  ரசிகர்களுக்கு  ஏமாற்றமாக  இருக்கும். திரைக்கதை, இயக்குநருக்குத்தான்  வாய்ப்பு . ஒர்த்  டூ வாட்ச்  . ரேட்டிங்  2.5 / 5 




Afwaah
Afwaah film poster.jpg
Theatrical release poster
Directed bySudhir Mishra
Written bySudhir Mishra
Nisarg Mehta
Shiva Bajpai
Produced byAnubhav Sinha
Starring
CinematographyMauricio Vidal
Edited byAtanu Mukherjee
Music byKarel Antonin
Distributed byAA Films (India)
Reliance Entertainment (International)[1]