Showing posts with label ADVERTISEMENT. Show all posts
Showing posts with label ADVERTISEMENT. Show all posts

Sunday, January 09, 2011

பெண்மையை கேவலப்படுத்தும் BSNL-ன் அத்து மீறிய விளம்பரம்

 http://telecomtalk.info/wp-content/uploads/2009/04/bsnl-postpaid-plans-1024x703.jpg
சமீபத்துல ஒரு மொக்கைப்படத்துக்குப் போயிருந்தேன்,(நாம என்னைக்கு
நல்ல படத்துக்கு போயிருக்கோம்?)அது என்னமோ தெரியல ,என்ன மாயமோ
புரியல,நான் போற படம் எல்லாம் மொக்கையாவே ஆகிடுது.(நன்றி - குணா
வசனகர்த்தா பாலகுமாரன்)

படம் போடறதுக்கு முன்னால சில விளம்பரங்களை போட்டாங்க..
அதுல BSNL-ன் 3G  சேவை பற்றிய விளம்பரமும் வந்துச்சு.ஆ ராசோவோட
ஸ்பெக்ட்ரம் ஊழல் கூட எனக்கு இவ்வளவு பெரிய ஷாக் குடுக்கல,(வழக்கமா
அரசியல்வாதிங்க பண்றதுதானே - வாழ்க தமிழனின் சகிப்புத்தன்மை)

ஆண்கள் உபயோகப்படுத்தும் ஷேவிங்க் கிரீம் விளம்பரத்தில்,அடுத்தவனோட புது பொண்டாட்டிய கரெக்ட் பண்ண ஐடியா குடுக்கும் மெண்ட்டோ ஃபிரஸ் விளம்பரத்தில் என பெண்களை போகப்பொருளாய்,பகடைக்காயாய் சித்தரிக்கும் விளம்பரங்கள் அதிகரித்து வரும் சூழலில் BSNL-ன் 3G  சேவை பற்றிய விளம்பரமும் நெம்பர் ஒன் மோசமான விளம்பரம் என பெயர் பெற்றுள்ளது.

ஒரு பஸ்சில் ஒரு நவ நாகரீக மங்கை மிடியுடை அணிந்து அமர்ந்துள்ளார்.(மாடர்ன் கேர்ள் சுடிதாரோ ஜீன்சோ போட மாட்டாரா?)அருகில் அமர்ந்து உள்ள இளைஞனிடம் வழிகிறாள்.அந்த இளைஞன் ஃபிகர் நமக்கு சிக்னல் குடுத்துடுச்சு,என அடுத்த கட்ட  நடவடிக்கையில் இறஙகுகிறான். இப்போதான் கதை(!?)ல ஒரு பெரிய ட்விஸ்ட். ஸ்டேண்டிங்கில் நிற்கும் இன்னொரு இளைஞன் கையில்  BSNL-ன் 3G  சேவை உள்ள ஒரு ஃபோனை வைத்துக்கொண்டு அவனது கேர்ள் ஃபிரண்டிடம் படம் காண்பிக்கிறான்.உடனே  சிட்டிங்கில் இருக்கும் சிட்டு (சி-னாவுக்கு சி-னா,நமக்கு எதுகை மோனை நல்லா வருதே கவிஞன் ஆகிடலாமோ? #டவுட்) உடனே பச்சோந்தி ஆகி அருகில் இருக்கும் இளைஞன் மீது எரிந்து விழுகிறாள்.

ஏய், மிஸ்டர், கையையும் காலையும் வெச்சிட்டு சும்மா இருக்க மாட்டீங்க?
எந்திரிங்க ,எந்திரிங்க  முதல்ல என அவனை துரத்தி விடுகிறாள்.(இவருக்கான
டப்பிங்க் வாய்ஸ் மகா மட்டம்),பிறகு ஸ்டேண்டிங்கில் இருக்கும் இளைஞனிடம்
மிஸ்டர்,நீங்க இங்கே வந்து உட்கார முடியுமா? என கேட்கிறாள்.உடனே ஷாக் சர்ப்பரைஸ் ஆகும் அவன், அவனது கேர்ள் ஃபிரண்டை அம்போ என விட்டு விட்டு( ராம்தாசை கழட்டி விட்ட கலைஞர் மாதிரி)அவள் அருகே போய் அமர்ந்து கொள்கிறான்.

க்ளைமாக்சில் அந்தப்பெண் அவளது காலைத்தூக்கி அவனது காலில் போட்டு
அவனது தோளில் சாய்ந்து கொள்கிறாள்,(ஏதோ 10 வருடம் காதலித்த காதலனுடன் இருப்பது போல).விளம்பர வாசகம் வருகிறது. BSNL-ன் 3G  சேவை பெற்றிடுங்க, கொண்டாடுங்க என.

கலாச்சார சீர்கேட்டின் உச்சம் அல்லவா இது?முன்னே பின்னே அறிமுகம் இல்லாத  இளைஞனுடன் ஒரு பெண் இப்படி நடப்பதாக காட்டுவது பெண் இனத்தையே கேவலப்படுத்துவது போல் உள்ளது.நான் இடைவேளையில் தியேட்டர் ஆப்பரேட்டரிடம் ,இந்த விளம்பரம் எத்தனை நாளா வருது? என்றேன்?அது ஒரு மாசமா வருதே என்றார் சர்வ சாதாரணமாக. சும்மா சின்ன விஷயத்துக்கு எல்லாம் பொங்கி எழும் பெண்னிய அமைப்புகள்,மாதர் சங்கங்கள் எல்லாம் என்ன செய்கின்றன?

பொறுப்புள்ள இடத்தில் ,நாடு முழுதும் பரவி இருக்கின்ற, அரசு மேற்பார்வையில் இயங்கும் ஒரு நிறுவனம் இப்படி நடக்கலாமா? அந்த விளம்பரம் தடை செய்யப்பட வேண்டும். வருத்தம் தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்த மேட்டரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஹிந்து நாளிதழுக்கும்,தமிழில்
குமுதம் இதழுக்கும் அனுப்பி இருக்கிறேன்.அதிகமான மக்களை போய்ச்சேர..

பார்ப்போம்.