ஹீரோ ஒரு பெரிய கார்ப்பரைட் கம்ப்பெனில ஒர்க் பண்றாரு.. அந்த கம்ப்பெனில ஒரு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க.. அதாவது யாராவது காணாமபோனா அடுத்த 15 நிமிஷத்துல அவங்களைக்கண்டு பிடிக்கற மாதிரி ஒரு சாஃப்ட்வேர்.. ஒவ்வொருவர் உடம்புலயும் அந்த கருவியை பொருத்திட்டா போதும்..நாட்ல நடக்கும் பல குற்றங்கள், கடத்தல்கள் குறைஞ்சுடும்.. போலீஸ்க்கு பெரிய தலைவலி போயிடும்.. இந்த பிராஜக்ட் மட்டும் சக்சஸ் ஆகிட்டா உலகமே அவங்களைகொண்டாடும்..ஒன்றரை லட்சம் பில்லியன் டாலர் அவங்களுக்கு கிடைக்கும்
வில்லன் ஒரு புரோக்கர்.. இவன் வேலை என்னான்னா கம்மியா சம்பளம் வாங்கற திறமையான ஆட்களை நயமா பேசி, பிரெயின்வாஷ் பண்ணி அவங்களை போட்டி கம்ப்பெனில சேர்த்து விட்டு அதுக்கான கமிஷனை வாங்கற ஆளு.. கிட்டத்தட்ட புரோக்கர் மாதிரி..
ஈரோடு,திருப்பூர் நகரங்களில் இது மாதிரி பரவலா பார்க்க முடியும்.. அதாவது கார்மெண்ட்ஸ் தொழில் தான் இங்கே கொடி கட்டி பறக்குது,, டெய்லர்கள், கட்டிங்க் மாஸ்டர்கள்,லைன் சூப்பர்வைஸர்ஸ் தேவை அதிகமாகிட்டே இருக்கு.. இவங்க என்ன பண்ணுவாங்கன்னா கேரளா, திருநெல்வேலி ஏரியாக்களில் போய் ஆளுக்கு ரூ5000 டூ ரூ 10,000 குடுத்து கூட்டிட்டு வந்துடுவாங்க.. வாரா வாராம் சனிக்கிழமை சம்பளம்.. கம்ப்பெனியை விட்டு நிக்கனும்னா அந்த அட்வான்ஸ் பணத்தை திருப்பிக்கொடுக்கனும்..இதுக்குன்னே புரோக்கர்ஸும் இருக்காங்க..
அதே மாதிரி இங்கே ஐ டி கம்ப்பெனில பெரிய அளவுல நடக்குது. அவ்ளவ் தான் வித்தியாசம்..
ஹீரோவோட மனைவிக்கு ஹீரோ மேல ரொம்ப நாளா ஆதங்கம்.. கம்மி சம்பளம் வாங்கறார்னு.அடிக்கடி அவங்களுக்குள்ள வாக்குவாதம் வரும் , வளரும்.. . தொடரும்.. உறவுகள் மட்டும் தொடர்கதை அல்ல, அவங்களுக்கிடையேயான பிணக்குகளும் ஒரு தொடர்கதை தான்..
வில்லன் என்ன பண்றான்? ஹீரோவுக்கு மெண்ட்டல் டார்ச்சர் கொடுக்கறான்
அவன் சொல்ற கம்ப்பெனிக்கு வந்து சேர்ந்தே ஆகனும்.. உங்களூகுத்தான் லாபம்.. டபுள் மடங்கு சம்பளம்.. இந்த சான்ஸ் மறுபடி கிடைக்காதுன்னு.. அதுவும் இல்லாம ஹீரோ ஒர்க் பண்ற கம்ப்பெனி பாஸ்க்கு ஒரு மெயில் வேற அனுப்பி ஹீரோவை மாட்டி விடறான்.. அதாவது உங்க ஆள் எங்க கம்பேனிக்கு வரப்போறார்னு.. இதனால ஹீரோ ஒர்க் பண்ற கம்பெனி ஓனர்க்கும், ஹீரோவுக்கும் மனத்தாங்கல்கள்,வாக்குவாதங்கள் நடக்குது..
ஹீரோ, ஹீரோயின் வெக்கேஷனுக்காக ஒரு இடத்துக்கு போறாங்க.. ஹீரோவோட ஓனர் என்னா நினைக்கறார்னா புது கம்ப்பெனில சேர பிளான் போடத்தான் அங்கே போய் இருக்கான்னு.. வில்லன் ஹீரோ போற பக்கம் எல்லாம் தொடர்ந்து டார்ச்சர் தர்றான்.. ஹீரோ இல்லாதப்ப அவன் மனைவி கிட்டே வந்து டார்ச்சர் பண்றான்..
மனைவி வில்லனின் டார்ச்சர் பற்றி ஹீரோ கிட்டே சொல்லி அவன் சொல்ற மாதிரி அந்த கம்ப்பெனில தான் சேர்ந்துடுங்களேன்னு கேட்கறா.. ஹீரோ மனைவி கிட்டே அவன் உன்னை தொட்டனா?ன்னு விவகாரமா ஒரு கேள்வி கேட்கறான்
தம்பதிகளுக்குள் தேவை இல்லாத சண்டை, ஹீரோ இந்த மெண்ட்டல் டார்ச்சர்ல இருந்து எப்படித்தப்பிக்கிறான்? அப்டிங்கறதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொலி இருக்காங்க..
2004 ல ரிலீஸ் ஆன இந்தப்படம் அங்கே சரியா ஓடலை..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. எடுத்துக்கொண்ட கதை என்னவோ அந்த நேர்கோட்டில் இருந்து கொஞ்சமும் மாறாமல் சீராக திரைக்கதை அமைத்த உத்தி.. கமலின் மகா நதி படம் போல் நீட்டான திரைக்கதை பெரிய பிளஸ்..
2. படம் லேசா போர் அடிக்கற மாதிரி இடம் வர்ற டைம்ல வில்லன் ஹீரோ இல்லாத டைம்ல ஹீரோயின் கிட்டே தகராறு பண்ணுவதும் அதை தொடர்ந்து ஆடியன்சிடம் ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதும்.. ( நான் படம் பார்த்தப்போ வில்லன் ஹீரோயினை ரேப்பிடடுவான்னு நினைச்சேன். ஆனா அது நடக்கலை ;-))
3. ஹீரோ, ஹீரோயின், வில்லன் 3 பேர் நடிப்பும் கன கச்சிதம்.. ஒளிப்பதிவு, இசை எல்லாம் தேவையான அளவுக்கு எளிமையா இருந்தது..
மனம் கவர்ந்த வசனங்கள்( உத்தேசமான மொழி பெயர்ப்பு)
1. என் ஃபோன் நெம்பர் எப்படி உன் கைக்கு வந்தது?
நல்லா ஒர்க் பண்றவங்க பயோடேட்டாவை அப்டேட்டா வெச்சிருக்கறதுதான் என் ஒர்க்கே!
2. இவன் பயங்கரக்கஞ்சனா இருக்கான்.. உன்னை லவ் பண்றான். நீயாவது அவனை நல்லா செலவு பண்ண வை.
3. பொதுவா கம்பேனி தனது போட்டிக்கம்ப்பெனி ஆளுங்களை கைக்குள்ளே போட்டுக்குவாங்க.. அப்பறமா கம்பெனி ஃபைல்ஸை அவங்க மூலமா கையகப்படுத்திக்குவாங்க .. இதான் அவங்க ட்ரிக்ஸ்
4. ஹாய் மேடம். இப்போ உங்க கணவர் எப்படி இருக்காரு?
நல்லா இருக்காரு.. ஏன்னா நான் இருக்கேனே?
5. ஓ. ரொம்ப தாங்க்ஸ்ங்க.. என் காரை ரிப்பேர் பண்ணிக்குடுத்ததுக்கு......
இதென்னங்க பெரிய விஷயம்.. நாளைக்கே என் கார் ரிப்பேர் ஆனா நான் உங்களுக்கு ஃபோன் பண்றேன்.. நீங்க வந்து சரி பண்ணிக்குடுங்க.. தானிக்கு தீனி
6. மிஸ்.. இதுவரை நான் குடிச்ச டீ-ல இதுதான் பெஸ்ட் டீ
7. மிஸ்டர்... நீங்க மீடியாவுல இருக்கீங்களா?
இல்லை மீடியேட்டரா இருக்கேன்.. உடைச்சு சொன்னா புரோக்கரா இருக்கேன்..
8. ஹலோ.. இங்கே என்ன பண்றீங்க?
ஒரு ஹார்ஸ் ரைடர் என்ன பண்ணுவார்? ரைடிங்க் த ஹார்ஸ்...
குதிரை மாதிரி ஒரு பொண்ணு பக்கத்துல இருக்கு.. அதை ஓட்டாம.....
9. நமக்கு பிடிக்கலைங்கறதுக்காக புது ஆள் கிட்டே விரோதம் காட்டக்கூடாது,. ஒரு காஃபி குடிச்சுட்டு போய்ட்டே இருக்கனும்..
10. டியர்.. ஆல்ரெடி நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்..
பின்னே நான் சோகமா இருக்கறதாவா சொன்னேன்? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்கன்னு தான் கேட்டேன். அதுக்கு ஒரு பதில் நேர்மையா வருதா?
11,. உங்களூக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஒரு நல்ல ஜாப் ஆப்புர்சுனிட்டிக்காக ( வேலை வாய்ப்பு) ஒரு ஆள் தன் மனைவியையே கொலை பண்ணிட்டார்..
அந்த ஒரு ஆள் நீங்க தானே?
12. உனக்கு ரெண்டே ஆப்ஷன் தான் இருக்கு
1. நீ எங்க கம்பெனில சேரனும்
2. உன்னை யாராவது கொலை பண்றதை நீ ஏத்துக்கனும்..
எது வசதி?
13. கொஞ்சம் பணத்தை அள்ளி வீசுனா இந்த உலகத்துல எல்லாரும் ஃபிரண்ட் தான்
14. ஃபிளைட்ல மேலே போன்னு சொல்றேன்.. செத்துத்தான் மேலே போவேன்னு அடம் பிடிச்சா எப்படி?
15. உன் கிட்டே இப்போ 3 ஆப்ஷன்ஸ் தான் இருக்கு
1. அக்ரிமெண்ட்ல சைன் பண்ணுனபடி நீ எங்க கம்ப்பெனில சேரனும்.
2. என்னை சுடனும்
3. நான் உன்னை சுடனும்
16. பேசிட்டு இருக்கும்போது ஏன் சூட் பண்றே? பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்..
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஹீரோ மேல எந்த தப்பும் இல்லை.. வில்லன் இந்த மாதிரி டார்ச்சர் பண்றான்னு ஏன் போலீஸ்ல புகாரே தர்லை?
2. ஹார்ஸ் ரைடிங்க்ல ஹீரோ மயக்கம் போட்டு விழறார் . வில்லன் ஏன் அப்படியே அவரை அங்கே விட்டுட்டு போகனும்.. மறுபடி ஹீரோவுக்கு உணர்வு வந்து ஏன் விட்டுட்டுப்போனேன்னு கேட்கறப்ப ஏன் தடுமாறனும்? அவருக்கு தெரியாதா? விழிப்பு வந்ததும் சமாளிக்க வேண்டி இருக்கும்.. ஏதாவது பதில் ரெடி பண்ணீ வெச்சுக்கனும்னு?
3. ஹீரோ தன் மனைவி கிட்டே “ அவன் தான் இப்போ ஃபோன்ல காண்டாக்ட் பண்ணான்” அப்படின்னு சொல்றப்போ அவ நம்பலை.. ஏன் அவன் தன் மொபைல் ஃபோன்ல ரிசீவ்டு கால் காட்டலை..?
4. இவ்ளவ் பிரச்சனை நடக்கறப்போ மனைவியை வீட்ல தனியா விட்டுட்டுப்போனா வில்லன் அங்கே வருவான்னு ஹீரோவுக்கு தெரியாதா?
5. நல்ல அண்டர்ஸ்டேண்டிங்க்ல இருக்கற தம்பதிகளா ஹீரோ ஹீரோயினை காட்டிட்டு திடீர்னு ஒரு சீன்ல “ அவன் உன்னை டச் பண்ணனா?” அப்டினு ஒரு தேவை இல்லாத கேள்வியை கேட்பது எதுக்கு?
படத்துல ஏகப்பட்ட வசனங்கள்.. ஆனாலும் ரசிக்கலாம்.. இணையத்தில் டவுன்லோடு பண்ணி பார்த்தேன் லிங்க் -http://www.alluc.org/movies/
A
டிஸ்கி - படத்தோட டைட்டிலுக்கு இன்னா மீனிங்க்னா
|