கதைக்களம் ஹைதராபாத்ல , ஹீரோ வழக்கம் போல வெட்டாஃபீஸ்.. துபாய் போனா பாய்ல சும்மா படுத்துக்கிட்டே சம்பாதிக்கலாம்னு கனவோட மும்பை போறார்.. அங்கே ஏஜெண்ட் பணத்தை எல்லாம் சுருட்டி ஏமாத்திடறான்.. விக்ரமன் படத்துல வர்ற மாதிரி ஹீரோ தன் கேங்க்கோட பிளாட்ஃபார்ம் கடை வெச்சு பொழப்பை ஓட்டறார்..
ஹீரோயின் தன் அண்ணனைத்தேடி அங்கே வர்றார்.. அண்ணன், அண்ணி 2 பேரும் ஹீரோவுக்கு ஃபிரண்ட்.. செம க்ளோஸ்,.. ஆனா பாருங்க அந்த மேட்டர் டைரக்டரைத்தவிர யாருக்கும் தெரியாது.
படத்தோட கதை இடைவேளைக்குப்பிறகுதான் ஆரம்பிக்குதுங்கறதால ஹீரோவும், ஹீரோயினும் கேனம் மாதிரி பேசிக்கிட்டு, லவ் பண்ணிக்கிட்டு, மொக்கை ஜோக்கா சொல்லி கடுப்பேத்திட்டு திரியுதுங்க.. இந்த லட்சணத்துல டூயட் வேற ..
ஹீரோயின் ஒரு ரேடியோ ஜாக்கி, அவருக்கு ஒரு நாய் மாமன் . அதாவது அவரையே நாய் மாதிரி சுத்திட்டு இருக்கும் தாய் மாமன்.. அவன் கண்ல மண்ணைத்தூவி லவ் பண்ணும் ஹீரோ..
ஹீரோயினோட அண்ணன் வேலை செய்யறது மாறு வேஷத்தில் இருக்கும் ஒரு தாதா.. போலீஸால் என்கவுண்ட்டருக்காக தேடப்படும் ஆள்..
ஹீரோயினோட அண்ணன் அதை கண்டு பிடிக்கறாரு.. அதை வில்லன் கண்டு பிடிச்சு போட்டுத்தள்ளிடறாரு 2 பேரையும்.. உடனே வில்லனை கொன்னுட்டா படம் 8 ரீல்லயே முடிஞ்சுடுமே. அதனால ஹீரோ டைரக்டர் சொல்லிக்குடுத்த மாதிரி வில்லனோட தம்பியை போட்டுத்தள்ளறார்..
ஹீரோ - வில்லன் மோதல்ல ஹீரோதான் ஜெயிப்பார்னு உலகத்துக்கே தெரிஞ்சாலும் எப்படி எல்லாம் கேவலமா பஞ்ச் டயலாக் பேசி கொலையா கொல்லப்போறார் என்பது தான் மிச்ச சொச்ச கதை
ஹீரோ ரவி தேஜா.. ஆள் நல்ல சுறு சுறுப்பு ... முகம் தான் முற்றலா இருக்கு.. வாய்ஸ் மாடுலேஷனில் ரஜினியையும், சீண்டல்களில், குறும்புகளில் விஜயையும் ட்ரை பண்றார்.. படத்துல நயன் தாராவை ட்ரை பண்றார்.. க்ளைமாக்ஸ் பாடல் காட்சி அதகள டான்ஸ்..
ஹீரோயின் நயன் தாரா அதிகம் வேலை இல்லை.. 3 டூயட்.. 24 காட்சிகள்ல தலையை , லோ கட்டை, லோ ஹிப்பை காட்டிட்டு போறார்.. அவ்ளவ் தான்
படத்தில் 2 காமெடியன்ஸ்.. 1 . எப்பவும் போல் பிரம்மானந்தம்.. நம்ம ஊர் வடிவேல் மாதிரி .. ஆள் வந்தாலே சிரிப்புத்தான்..
இன்னொருவர் சியாஜி ஷிண்டே. பாரதியாருக்கு நேர்ந்த கொடுமை பாருங்க.. இவர் காமெடி பண்ண ட்ரை பண்றது கூட ஓக்கே, ஆனா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கேரக்டர் பண்றப்போ அந்த பதவிக்குண்டான மரியாதையை தூக்கி போட்டுட்டு ஏதோ வாட்ச் மேன் மாதிரி கூத்து அடிப்பது மகா கேவலம்..
மனம் கவர்ந்த வசனங்கள்
1. முகத்துல சுருக்கம் வராம இருக்க நான் சில ஃபேஸ் எக்சசைஸ் பண்றேன்..
ஓஹோ,அதை எல்லாம் செஞ்சா சுருக்கம் வராதா?
புதுசா வராது
அப்போ பழசு?
அது அப்படியேதான் இருக்கும்
2. புள்ளி ராஜா கோஷ்டில வந்த ஒல்லி ராஜா நீ , மறந்துடாதே
3. எனக்கு பசிக்குது, ஆனா சாப்பிட முடியல, தாகம் எடுக்குது, ஆனா எதையும் குடிக்க முடியலை..இதுதான் காதலா?
இல்லை, இது சிக்குன் குன்யா..
4. துபாய் ஃபிளைட் லேட்.. வர 2 மணி நேரம் லேட் ஆகும்னு சொன்னாங்க, நீ எப்படி வந்தே?
ஹி ஹி வேற ஃபிளைட் பிடிச்சு வந்துட்டேன்
காது குத்தாதே.. அதெப்பிடி.. நடு வானில் விமானம் மாத்த முடியும்?
5. நீ ஏம்மா இங்கே நிக்கறே..?
பைக் ரிப்பேர் மாமா
அடடா.. ஜஸ்ட் ஒரு ஃபோன் பண்ணி இருந்தா நான் பிக்கப் பண்ண வந்திருப்பேனே?
ஏன்?
வேற எவனும் உனை பிக்கப் பண்ணிடக்கூடாது பாரு.. அதான்.
6. அவ பிறந்ததே எனக்குத்தான்..
உங்க ஊர்ல குழந்தை பிறந்தா மேரேஜ் பண்ணி வெச்சுடுவாங்களா? எங்க ஊர்ல எல்லாம் லவ் பிறந்தாதான் மேரேஜ் பண்ணி வைப்பாங்க
7. மதுவுக்காக நான் சாக ரெடி.. நீ சுடுறீயா?.. இப்போ நான் உன்னை சுடறேன்.. நீ சாக ரெடியா?
8. எந்த உண்மையை சொல்றே?
அவர் சொன்ன பொய்யை..
குழப்பாதே..
அதாவது அவர் என்னை லவ் பண்றதா பொய் சொன்னதா சொன்னாரே அது பொய் இல்லை, உண்மை
தெளிவா குழப்பிட்டே..
9. சார்.. துபாய் போற ஃப்ளைட்ல உக்கார சீட் கிடைக்குமா? ஸ்டேண்டிங்க் தானா?
ஃப்ளைட்ல ஏ சி இருக்குமா?
அட்சிஸ்டென்ட் கமிஷனர் வேணா இருப்பார்.. அவரும் ஏ சி தானே?
10. என்னது? இதுதான் வீடா? என்னமோ கூடாரம் மாதிரி இருக்கு?
நீங்க எல்லாரும் இங்கே உக்காந்து பேசிட்டு இருந்தா அது ஹால், சமையல் செஞ்சா அது கிச்சன் ரூம், படுத்தா அது பெட் ரூம்,
அப்போ மழை வந்தா..?
ஹி ஹி ஸ்விம்மிங்க் பூல்.. ஏன்னா கூரை ஒழுகும்
11. நீ என்ன செய்வே..?
கீழே வைக்காம ஒரு ஃபுல் அடிப்பேன்..
கீழே வெச்சா?
அவன் எடுத்து குடிச்சுடுவான்..
12. நீங்க எங்கே வேலை செய்யறிங்க?
சாஃப்ட்வேர் கம்ப்பெனில
எந்த கம்பெனில வேலை?
ம்.HP கம்ப்பெனில
அது கேஸ் கம்ப்பெனி ஆச்சே?
ஹி ஹி .. அவங்க பேரை ஃபேமஸ்க்காக இவங்க எடுத்துக்கிட்டாங்க
13. அவ ஏன் என் கண்ல அடிக்கடி படனும்..? இதை எல்லாம் வெச்சுப்பார்க்கறப்போ , நடந்த சம்பவங்களை கூட்டிக்கழிச்சு வகுத்து, பெருக்கி பார்த்தா ...
குப்பை தான் வரும்.. காதல் வராது..
14. உங்களை திருமானி அம்பாய் ஆக்கலாம்னு பார்த்தா பீர் பாய் அம்பானி ஆகாம போக மாட்டீங்க போல.. எப்போ பாரு சரக்குத்தானா?
15. இவன் மாமூலா இருக்கும்போது எம் ஜி ஆர்.. சரக்கு அடிச்சுட்டா நம்பியார்..
16. உன் ஃபிளாஸ்பேக் ஏண்டா இவ்ளவ் கேவலமா இருக்கு? உன் லவ் ஸ்டோரில ஒரு கிஸ் இல்லை.. ஒரு கில்மா இல்லை.. செம போர்
17. மாப்பிள்ளை ராஜா லெவல்ல இருந்தவராம்
ம்க்கும். நல்லா விசாரிங்க ராஜா டிராவல் ல இருந்திருக்கப்போறார்
18. என் தண்ணியை அடிச்சுட்டு என்னையே அடிக்கறியா? சரக்கு ஓசில வாங்குனா நன்றி உணர்ச்சி வேணாமா?
19. அவன் கிட்டே என்ன இருக்கு? என் கிட்டே என்ன இல்லை?
என் கிட்டே கேட்டா? போய் அவ கிட்டே கேளுங்க..
20. நாம எந்த பொண்னையும் லவ் பண்ணதே இல்ல
நம்மை எந்த பொண்ணும் லவ் பண்ணலைனு சொல்லுங்க
21. பர்சனலாவும் சரி , புரொஃபசனலாவும் சரி நான் மெண்டல் ஆகிட்டே வர்றேன், காரணம் அவ தான்
22. டென்ஷனும் பயமும் எப்பவும் நமக்கு வரக்கூடாது, நம்ம எதிரிங்களுக்கு வரனும்
23.. இவனெல்லாம் ஒரு ஆர்ட்டிஸ்ட். நாம சொல்றதை இவன் செய்ய மாட்டான், இவன் ஆடறதை அட்ஜஸ்ட் பண்ணி நாம ஷூட் பண்ணிக்க வேண்டியதுதான்
சுவத்துல பல்லி ஊறுதே அது போல ஸ்டெப் சொல்லிக்குடுங்க, பக்கி கரெக்ட்டா செய்யும்..
24.. இன்னொரு டைம் இங்கே வந்தே கு க ஆபரேஷன் பண்ணி விட்டுடுவேன்
25. இன்ஸ்பெக்டர், இவன் மும்பைல எங்களை சீட்டிங்க் பண்ணினான்..
அங்கே தானே சீட் பண்ணினான்.. இங்கே சொன்னா எப்படி? ஏன் இங்கே வந்து கலாட்டா பண்றீங்க?
26. உங்க கையை பார்த்தா தரித்திரம் பிடிச்ச ஜாதகமா இருக்கே?
நான் கையை பார்க்காமயே சொல்வேன். இது என்ன பெரிய ஜோசியம்?
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. பிரம்மானந்தம் மும்பை ஏஜண்ட் கிட்டே ஃபோன்ல தான் பேசி இருக்கேன், ஆனா ஆளை நேர்ல பார்த்ததில்லைன்னு ஒரு ஆள்ட்ட ஏமாறும்போது சொல்றார்.. அவர் ஏன் நேர்ல பார்க்காத நபரை சந்திக்கும்போது அவருக்கு ஃபோன் பண்ணி அதே நபரா?ன்னு கேட்கலை?
2. பொதுவா இந்த மாதிரி பண பரிவர்த்தனை எல்லாம் ஆஃபீஸ்ல தான் பண்ணுவாங்க.. ஆனா சும்மா நடு ரோட்ல ஏமாறுவது நம்ப்ற மாதிரி இல்லை.. லட்சக்கணக்குல பணம் குடுத்துட்டு அதுக்கு ரசீது கூடவா கேட்கமாட்டாங்க?
3. நயன் தாரா தன் அண்ணனை தேடி மும்பை போறார். அவர் ஃபோட்டோவை ஏதோ லைப்ரரில கொடுத்து ஆள் வந்தா தகவல் கொடுங்கறார்.. அவர் ஏன் பேப்பர்ல, மீடியாக்கள்ல விளம்பரம் தர்லை?
4. வில்லன் தன் ஆஃபீஸ்ல வேலை செய்ய்ற ஆள் தான் தான் தாதா என்பதை கண்டு பிடிச்சுட்டாங்கனு தெரிஞ்சதும் அங்கேயே, ஸ்பாட்லயே போட்டுத்தள்ளாம நல்ல நேரம் ராகு காலம் பார்த்துட்டு 4 நாள் கழிச்சி தேடுவது காமெடி
5. படத்தோட திரைக்கதைல நேரா கதையை சொல்லாம எதுக்கு தேவை இல்லாம இத்தனை ஃபிளாஸ்பேக், திருப்பங்கள்? இது என்ன பெரிய சஸ்பென்ஸ் த்ரில்லரா? மாமூல் மசாலாக்குப்பைதானே?
6. நயன் தாராவின் அண்ணன் தன் உயிர் நண்பன் கிட்டே கடைசி வரை தன் தங்கை ஃபோட்டோவை காட்ட்ட்லை, அதே போல் நயன் தாராவும் இவர் தான் எங்க அண்ணன் என தன் காதலன் கிட்டே ஃபோட்டோ காட்டலை.. ஏன்?
7. ஹீரோயின் நயன் தாராவின் கூடவே வரும் தோழி நல்ல ஃபிகர் தான் ஆனா அதுக்காக ஹீரோ ஹீரோயின் கிட்டே பேசறப்போ, சிரிக்கறப்போ, லவ்வறப்போ எல்லாம் என்னமோ அவர் தான் ஹீரோயின் மாதிரி ஓவர் எக்ஸ்பிரஷன் குடுக்கறாரே? ஏன்?
8. படத்துல வெட்டியா பானுச்சந்தர் உட்பட பலர் வீனடிக்கப்பட்டிருக்காங்களே? ஏன்?
9. எல்லாரும் அஞ்சி நடுங்கும் ஜின்னா பாய் வில்லன் மாதிரியே இல்லை, காமெடி பீஸ் மாதிரி இருக்கார்..
i
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. சாயாஜி ஷிண்டே கூட வரும் காமெடி நடிகர் அடிக்கும் கவுண்ட்டர் டயலாக் ஒவ்வொன்றும் நச் ரகம்.. காமெடி கலக்கல்
2. துபாய் கூட்டிப்போவதாக சொல்லி ஏமாற்றி தானும் ஏஜென்ட்டிடம் ஏமாந்து பின் ஹீரோ அண்ட் கோவிடம் வடிவேல் போல் அடி வாங்கி பின் எடுபுடி வேலைக்கு சேருவது
3. ரேடியோ ஜாக்கியாக வரும் நயன் தாரா தன் மாமாவை லவ் வர வெயிட் பண்ணனும் என சொல்லிக்கொண்டே அவர் கண் முன் ஹீரோவை லவ் பண்ணுவதும் அவரை கலாய்ப்பதும் ஜாலி பட்டாசு
4. பாடல் காட்சிகள் பிரம்மாண்டம்.. அதுவும் அந்த கடைசி பாடலும், அதற்கு முந்திய பாடலும் ஆரவாரம்.. நடன வடிவமைப்பு செம..
5. பல வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆன இந்த தெலுங்குப்படத்தை புதுப்படம் போல் துபாய் ராணி என டைட்டில் வெச்சு நயன் தாரா படம் போல் போஸ்டர் ஒட்டிய டெக்னிக்
5. பல வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆன இந்த தெலுங்குப்படத்தை புதுப்படம் போல் துபாய் ராணி என டைட்டில் வெச்சு நயன் தாரா படம் போல் போஸ்டர் ஒட்டிய டெக்னிக்
சி.பி கமெண்ட் - படம் ஓவர் மொக்கை எல்லாம் இல்லை, விஜய் படம் மாதிரி கொஞ்சம் ஜாலியா, ஆக்ஷன் மசாலா எல்லாம் கலந்து போகுது.. டி வி ல போட்டா பார்க்கலாம்.. ஈரோடு ஸ்டாரில் படம் பார்த்தேன்
ஃபுல் படமும் பார்க்க - http://www.youtube.com/watch? v=8_nUQEMjFY0