என் கதையை திருடிட்டாங்கன்னு ஒரு பயலும் இந்தப்படம் மேல கேஸ் போட முடியாது, ஏன்னா இந்தப்படத்தில் கதையே கிடையாது/ ஷாக் ஆகாதீங்க. சின்னச்சின்ன சம்பவங்களின் தொகுப்பு தான் படம், இதில் மெயின் வில்லன் கிடையாது, டூயட் கிடையாது , பஞ்ச் டயலாக் கிடையாது.,அவ்வளவு ஏன்? போர் அடிக்கும் காட்சியே கிடையாது
எல்லா சினிமா ஹீரோக்களும் போலீஸ் கேரக்டர்ல நடிக்க ஏன் ஆசைப்படறாங்க? யூனிஃபார்ம் போட்டாலே கெத்து வந்துடும் . ஆக்சன் ஹீரோ இமேஜ் கிடைக்கும், சம்பளமும் எகிறும். அதனால தான் பிரேமம் ஹிட்டுக்குப்பின் ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்காரு
சிவாஜிக்கு ஒரு தங்கப்பதக்கம், எம் ஜி ஆர் க்கு ரகசியப்போலீஸ் 115 , ரஜினிக்கு மூன்று முகம், கமலுக்கு காக்கிசட்டை , குருதிப்புனல். விஜய்காந்துக்கு புலன் விசாரணை உட்பட பல படங்கள் ( அதிகமான போலீஸ் கேரக்டர் நடித்த ஒரே தமிழ் ஹீரோ)சத்யராஜ்க்கு வால்டர் வெற்றிவேல் , கடமை கண்ணியம் கட்டுப்பாடு, டாக்டர் ராஜசேகருக்கு இதுதாண்டா போலீஸ் , விஜயசாந்திக்கு வைஜெயந்தி ஐபிஎஸ் , விக்ரம் க்கு சாமி , தில் ,அஜித் க்கு மங்காத்தா , விஜய் க்கு போக்கிரி ( யூனிஃபார்ம் போடாமயே சமாளிச்சாரில்ல) . சூர்யாவுக்கு சிங்கம் 1 சிங்கம் 2 காக்க காக்க என நீளும் பட்டியல்கள்.
மேலே சொன்ன படங்கள் எல்லாம் மெகா ஹிட் ஆன போலீஸ் சப்ஜெக்ட் ப்டங்கள். இந்தப்படங்களின் சாயல் ஏதும் இல்லாமல் ஒரு படம் தான் இந்த ஆக்சன் ஹீரோ பிஜூ
ஒரு போலீஸ் ஆஃபீசர் போலீஸ் ஸ்டேஷன் ல என்ன செய்வார்? அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? தினமும் எந்த மாதிரி கேஸ் எல்லாம் வருது, அவர் எப்படி டீல் பண்றார் என்பதே திரைக்கதை . கொஞ்சம் அசந்தாலும் டிராமா மாதிரி இருக்கு என ஒதுக்கி விடக்கூடிய அபாயகரமான கதை , ஆனா சீன் பை சீன் ரசிச்சு பண்ணி இருக்கார் டைரக்டர்
ஹீரோவா நிவின் பாலி. பிரேமம் மெகா ஹிட்டுக்குப்பின் வரும் படம் என்பதால் ஏக எதிர்பார்ப்பு. பல சீன்களில் சாமி விக்ரம் போல் சாயல். ஹெல் மெட் போட்டு பைக்கில் வரும் சீனில் சத்யராஜ் சாயல் என பல போலீஸ் ஹீரோக்களை நினைவு படுத்தறார், சந்தேகமே இல்லாம அவருக்கு இது ஒரு ஹிட் ஃபிலிம் தான் . க்ளைமாக்ஸில் போடும் ரியலிஸ்டிக் ஃபைட், ஹீரோயினுடனான காதல் , ஸ்டேசனில் கைதிகளை டீல் செய்வது என நடிப்பில் ஸ்கோர் பண்ண ஏகப்பட்ட வாய்ப்பு. கலக்கிட்டார் மனுஷன்
ஹீரோயினா அனு எம்மானுவல். மூக்குத்தி அழகி. சிதம்பரம் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் போனா அங்கே ஒரு குளம் இருக்கும், பச்சைப்பசேல்னு அட்டகாசமான சூழல். அந்த குளத்தைப்பார்க்கறதா? அதில் வரும் மீன் களை ரசிப்பதா? குளிக்க வரும் பெண்களை ரசிப்பதா? என ஒரு குழப்பம் வரும் ,அது போல் ஃபிகர் மூக்குத்தி அழகை ரசிப்பதா? மூக்கை ரசிப்பதா? கண்ணை ரசிப்பதா?என பல குழப்பங்கள். நல்ல அழகு
திரைக்கதை , வசனம் எல்லாம் கன கச்சிதம்
எடிட்டிங்க் பக்கா , ஒளிப்பதிவு ஓக்கே ரகம் , இசை சராசரிக்கும் மேல. பின்னணி இசை குட்
மனதைக் கவர்ந்த வசனங்கள்
1 பாவப்பட்ட ஏழை மக்களுக்கு சுப்ரீம் கோர்ட், ஹை கோர்ட், பஞ்சாயத்து எல்லாம் இந்த போலீஸ் ஸ்டேஷன் தான் #ACTION HERO BIJU
1 பாவப்பட்ட ஏழை மக்களுக்கு சுப்ரீம் கோர்ட், ஹை கோர்ட், பஞ்சாயத்து எல்லாம் இந்த போலீஸ் ஸ்டேஷன் தான் #ACTION HERO BIJU
2 டேய், உன் ஃபோன் நெம்பர் கேட்டா எதுக்கு அவ ஃபோன் நெம்பரை தர்றே?
அவ நெம்பர் தான் என் மனசு பூரா இருக்குங்க #ACTION HERO BIJU
3 வாழ்க்கைல பிரச்சனை எப்பவும் சொல்லிட்டு வராது, திடீர்னுதான் வரும், எப்பவும் நாம தான் தயாரா இருக்கனும் #ACTION HERO BIJU
4 எப்போ வேணா சஸ்பென்ட் ஆர்டர் கிடைக்கலாம்கற அபாயகரமான துறைகள் ல போலீஸ் துறைக்குதான் முதலிடம் #ACTION HERO BIJU
5 டேய், நீ 2 தப்பு பண்ணி இருக்கே
1 } 46 வயசுல லவ் பண்ணது
2 இந்த கேவலமான இத்துப்போன மூஞ்சியை லவ் பண்ணது #ACTION HERO BIJU
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 சரக்கு அடிச்ட்டு மப்பில் லுங்கி அவிழ்வது கூட தெரியாமல் ரகளை செய்த சரக்கு பார்ட்டிக்கு தரும் வித்தியாசமான தண்டனை கல கல. பின் அதே நபரை பாட்டுப்பாடச்சொல்லி ரசிப்பது , அதை லேடீஸ் கான்ஸ்டபிள்கள் வெட்கச்சிரிப்புடன் ரசிக்கும் சீன் கவிதை
2 ஒரு சொர்ணாக்கா பார்ட்டியை லவ்வும் 46 வயசு ஆளை டீல் செய்யும் காட்சி அதகளம்.அந்தப்பெண்ணின் முக பாவனைகள் அருமை
3 ஹீரோயினுடனான காட்சிகள் கவிதை.டூயட் வைக்காமல் இருவரும் நடந்து செல்லும் காட்சிகளையே பயன் படுத்தி பாட்டு வைத்தது நல்ல ரசனை
4 க்ளைமேக்ஸ் ஸ்டண்ட் காட்சி அபாரம் . ஆனால் அந்த ஃபைட்டைக்கூட தவிர்த்திருக்கலாம். எதார்த்தமான போலீஸ் கதை ஆகி இருக்கும்.

இயக்குநரிடம் சில கேள்விகள்
1 போலீஸ் கான்ஸ்டபிள் தவற விட்ட வாக்கி டாக்கிக்காக ஸ்டேசன் இன்ஸ்பெக்டரை தண்டிக்க சட்டத்தில் இடம் இருக்கா?
2 வாக்கி டாக்கி திருடனை கமிஷனர் வந்து அறைவது எல்லாம் சினிமாத்தனம். கமிஷனுருக்கு ஏகப்ப்ட்ட டென்சன், கேஸ்கள் இருக்கும்
3 க்ளைமாக்சில் கையில் கன் இருந்தும் அவர் ஏன் ரிஸ்க் எடுத்து ஃபைட் போடனும்?

சி பி கமெண்ட்-ACTION HERO BIJU ( மலையாளம்)- தனி கதையாக இல்லாமல் சிறு சிறு சம்பவங்களின் தொகுப்பாக வித்தியாசமான போலீஸ் ஸ்டோரி,ஏ சென்ட்டர் ஹிட்,ரேட்டிங்- 3/5
ஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 43
குமுதம் ரேங்க் ( கணிப்பு)= நன்று
ரேட்டிங்
3/5
கேரளா திருவனந்தபுரம் - ஆட்டிங்கல் ட்ரீம்ஸ் தியேட்டரில் படம் பார்த்தேன்