Showing posts with label AA KARAALI RATRI ( KANNADAM) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர் ). Show all posts
Showing posts with label AA KARAALI RATRI ( KANNADAM) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர் ). Show all posts

Saturday, July 04, 2020

AA KARAALI RATRI ( KANNADAM) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர் )

Aa Karaala Ratri (2018) - IMDb

திருடர்களில்  பல வகை உண்டு . விஜய்  மல்லய்யா  மாதிரி  லோன் வாங்கும்போதே  இதை ஆட்டையைப்போடப்போறோம்னு  திட்டம் போட்டு திருடறது  ஒரு வகை .  உழைக்க வக்கில்லாம அரசியலுக்கு  வந்து  ஊரான்  ஊட்டு  சொத்தைக்கொள்ளை  அடிக்கறது  ஒரு வகை ( எல்லா அரசியல்வாதிகளும் அல்ல, 98%   பேர் மட்டும் தான் திருடனுங்க) ஆடம்பர  வசதி  வாய்ப்புக்காக  தொழில் ரீதியாவே  திருடனா  இருப்பது .


 மேலே  சொன்ன  இந்த  3 வகையும்  சட்டத்தின் பிடியில்  அதிகம்  மாட்டிக்க மாட்டாங்க , ஏன்னா சாமார்த்தியமா , விஞ்ஞானப்பூர்வமா  திருடி  தப்பிச்சிடுவாங்க . ஆனா  மிடில்  கிளாஸ்  ஃபேமிலி  முன் பின்  திருடி  அனுபவம்  இல்லாம   புதுசா  திருடும்போது   மாட்டிக்குவாங்க . அப்படிப்பட்ட  ஒரு மிடில்  கிளாஸ்  ஃபேமிலி ல நடந்த  ஒரு சம்பவம்  தான் இந்த  படம் 



 இயற்கை எழில்  சூழ்ந்த  ஒரு கிராமம் . சுத்து வட்டாரம் 4 கிமீ  ரேடியஸ்ல   ஜன நடமாட்டமே  இல்லாத   இடத்துல  ஒரு வீடு , மிடில்  கிளாஸ்  ஃபேமிலி  , அம்மா, அப்பா , வயசுக்கு வந்த  மகள் . இவங்க  வீட்ல  பசு , ஆடு எல்லாம்  இருக்கு , கொஞ்சம்  நிலம்  இருக்கு , விவசாயக்குடும்பம்,  கொஞ்சம்  கடன்  இருக்கு 


 அந்த  ஊருக்கு  ஒரு ஆள்  கைல    2  சூட்கேசோட   வர்றாரு , ஒரே ஒரு நைட்  மட்டும்  இங்கே  தங்கிக்கறேன், காலைல  கிராமத்துல  போய்  தங்கிக்கறேன்கறாரு. அப்போ  ஆடியன்ஸ்  எண்ணம்  இவரு  இந்த  குடும்பத்தை  என்ன பண்ணப்போறாரோ?னு பதை பதைப்பா  இருக்கும்போது  திரைக்கதை  யு  டர்ன்  அடிச்சு திரும்புது. 


 அந்த  சூட்கேஸ்களில்  நகை , பணம்  இருப்பதைத்தெரிந்து  கொண்டு   அவனைப்போட்டுத்தள்ளிட்டு அதை சொந்தம்  கொண்டாடிடலாம்னு  நினைக்கறாங்க . அவங்க எண்ணம்  நிறைவேறுச்சா? இல்லையா? என்பதே  மீதி திரைகக்தை


 மொத்தமே ஒண்ணே  முக்கால் மணி நேரம்  தான்  பட,ம். அதுல  முதல்  20 நிமிசம்   தேவை  இல்லாத  காட்சிகள் ., இண்ட்ரோ சீன்கள் . கதை  21  வது   நிமிசத்துல தான்  ஆரம்பிக்குது . 45   வது  நிமிசத்துல  தான்  பரபரப்பு  ஸ்டார்ட்  ஆகுது.  யூ  ட்யூப்லயே   கிடைக்குது .  கன்னடம்  தெரியாதவங்க  ஹிந்தி  டப்பிங் லயும் பார்க்கலாம்,  மொழியே புரியலைன்னாலும் காட்சிகளாலேயே  புரியக்கூடிய  எளிமையான   காட்சி அமைப்புகள் தான் . ஒரு தேவை இல்லாத  நாயகி சோலோ சாங்க் இருக்கு , சகிச்சுக்கனும் , மோசம்  இல்லை 


 இசை  ஒளிப்பதிவு , எடிட்டிங்   எல்லாம்  தரம்



சபாஷ்  டைரக்டர் 


1  யாராலும்   யூகிக்க முடியாத அபாரமான  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 


2   பணம்  கிடைக்குது என்றதும்   சராசரி மனிதனின்  மனம்  பேராசைப்படும்  விதம் பற்றிய  காட்சி அமைப்புகள்



லாஜிக்  ,மிஸ்டேக்ஸ்


1  புது  ஊருக்கு  வரும்  ஹீரோ கைல  உள்ள  2 சூட்கேஸ்லயும்  நகை , பணம்  வெச்ட்டு  தைரியமா  ஆத்துல  குளிப்பது  எப்படி? கரைல  அசால்ட்டா  வெச்ட்டு  இவரு  பாட்டுக்கு   தண்ணிக்குள்ளே 10 நிமிசம்  யோகா  பண்ணிட்டு இருக்காரு , அப்டியாவது  நீச்சல்  அடிக்கற  மாதிரி  காட்டி இருந்தாக்கூட  ஒரு பார்வை   கரை  மீது  இருக்கும்


2   முன் பின் தெரியாத  ஆள்  திடீர்னு  வந்து    டீத்தூள்  வாங்க  காசு தர்றேன், போய் வாங்கிட்டு  வாங்கன்னா  யாராவது  வீட்ல  மனைவி , மகள்  இவங்களை  தனியா  விட்டுட்டுப்போவாங்களா? அக்கம்  பக்கம்  யாரும் இல்லா இடம்  வேற  


3   ஒரு  பொண்ணு ஒரு ஆளை  தன் வயப்படுத்தனும்னு நினைச்சா அதை  சாதிக்க  1008  வழி இருக்கு, பொதுவா  பொண்ணு  அதை  பூடகமாதான்   வெளிப்படுத்துவா , இப்டி பட்ட வர்த்தனமா  வெளிப்படுத்த  மாட்டா . அதுவும்  கிராமத்துப்பொண்ணு    வேற  


4  விருந்தாளியைக்கொலை  செய்ய  முடிவெடுத்த நாயகி  நைட்  அவன்  தூங்கும்போது   போட்டுத்தள்ளுவதுதானே  ஈசியானதாக இருக்கும்?


5  கிராமங்களில் இருக்கும் நாய்  பொதுவா   அரளி விதை  மாதிரி  விஷம்  கலந்த  உணவை  மோப்பம் பிடிச்சிடும், சாப்பிடாது 

6    வீட்டுக்கு வரும்  போலீஸ்  என்கொயரிக்கு முன் புது  பூட்ஸ்  வாசலில்  இருப்பதைப்பார்க்கலையே ஏன்/?

நச்  டயலாக்ஸ்


1     கஷ்டப்பட்டு   உழைச்ச பணத்தை  இப்படி யாரும்  அநாவசியமா  செலவு பண்ண மாட்டாங்க , இது  திருட்டுப்பணமாதான்  இருக்கும் 


2   ஒரு உயிர்  வாழ  இன்னொரு உயிர் சாகனும் , இது  இயற்கையின் நியதி




சி.பி    ஃபைனல்  கமெண்ட்  -  த்ரில்லர்  விரும்புகள்  அவசியம் பார்க்க  வேண்டிய  படம்  , டோண்ட்  மிஸ் இட் , யூ ட்யூப்லயே கிடைக்குது . ரேட்டிங்   3.25  / 5