Showing posts with label A.R.Rahman. Show all posts
Showing posts with label A.R.Rahman. Show all posts

Monday, July 01, 2013

அம்பிகாபதி - சினிமா விமர்சனம்

 

ஹீரோவுக்கு 6 வயசா இருக்கும்போதே 5 வயசான ஹீரோயினை லவ் பண்றாரு. யாரும் பயப்பட வேணாம். அது பப்பி லவ் தான். 5 நிமிஷம் தான் காட்டறாங்க . இப்போ ஹீரோ 10 வது படிக்கறாரு. ஹீரோயின் 9 வது படிக்கறா. லவ்வை சொல்றாரு. பளார்னு அறை வாங்கறாரு.ஆனா அண்ணன் அசரலையே? மீண்டும் மீண்டும் லவ் சொல்லி 15 தடவை அறை வாங்கறாரு. 16 வது தடவை ஹீரோயினுக்கு லவ் வந்துடுது ( நீதி - ஒரு பொண்ணு கிட்டே 15 தடவை உதை வாங்குனா போதும் லவ்விடலாம் )


2 பேரும் லவ் பண்ணிக்கும்போது ஹீரோ தன் காதலை நிரூபிக்க 4 டைம் தன் மணிக்கட்டை அறுக்கறாரு . ஹீரோயின்  ஒரு  டைம் அறுக்கறாரு . டைரக்டர் மட்டும் படம் பூரா அறுத்துட்டே இருக்காரு .

2 பேர் லவ்வும் 2 வீட்டுக்கும் தெரிஞ்சதும் வழக்கம் போல் பொண்ணு வீட்ல பொண்ணை வேற ஊருக்கு படிக்க அனுப்பிடறாங்க . இங்கே தான் கதைல பயங்கரமான ட்விஸ்ட் . ஹீரோயின் அங்கே போய் முறைப்படி ஹீரோவைத்தானே நினைச்சு ஏங்கனும்? தூங்கனும் , அல்லது தூக்கம் வராம தலையணையை கட்டிப்பிடிக்கனும்?




 ஆனா  இது பாரதி கண்ட புதுமைப்பெண்ணுக்கு அக்கா போல . அங்கே வேற ஒரு  பையனை பிராக்கெட் போடுது . அது கூட தேவைலை . 2 இஞ்சி மரப்பான் சாப்பிட்டு ஜீரணம் பண்ணிக்கலாம். அந்த கேவலமான கதையை ஹீரோ கிட்டே  அதாவது பழைய காதலன் கிட்டே ஸ்கூட்டர்ல பின்னால உக்காந்து  அவனை கட்டிப்பிடிச்சுக்கிட்டே பெருமையா சொல்லுது . 


 படம் பார்க்கறவங்களுக்கு டவுட் . ஹீரோயின் மெண்ட்டலா? படம் பார்த்துட்டு இருக்கும் நாம எல்லாம் கேனயன்களா? 

 இப்போ படத்துல ஒரு ட்விஸ்ட் . ஹீரோயினோட லேட்டஸ்ட் லவ்வர் திடீர்னு மண்டையைப்போட்டுடறான். அதுக்கு ஹீரோ தான் காரணம்னு ஹீரோயின் நினைக்குது . அந்த லேட்டஸ்ட் லவ்வர் காலேஜ் ல சேர்மேன் . கட்சி ஆரம்பிச்சு புரட்சி எல்லாம் பண்ணும் ஐடியா. ஹீரோயின்  அவர் லட்சியத்தை நிறைவேத்த  முயற்சி பண்றாரு. ஹீரோ அவளுக்கு உதவி பண்றாரு. 

 இந்த 2 கேனங்களும் வாழ்க்கைல இணைஞ்சாங்களா? இல்லையா? என்பதை தில் இருக்கறவங்க தியேட்டர்ல போயும் , டப் வேஸ்ட் பண்ண நினைக்காதவங்க டி வி லயும் பார்த்து தெரிஞ்சுக்கலாம் .


 ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியதா சொல்லப்பட்டு செல்வராகவன் இயக்கிய 3 படத்தின் 5  ரீல் அப்படியே முன் பாதி ல சுட்டுட்டாங்க . கே பாக்யராஜின்  டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க்  கொஞ்சம் , கமலின் மூன்றாம் பிறை கொஞ்சம் .ரங்க் தே பசந்தி கொஞ்சம் , பின் பாதில புதுப்பேட்டை பாதிப்பு என படம் ஒரு காக்டெயில் மாதிரி .




ஹீரோ தனுஷ் பிரமாதமான நடிப்பு . குறை சொல்லவே முடியாது . வழக்கமா சைக்கோ ஸ்பெஷலிஸ்ட்டா வரும் அவர் இதுல சாதா ஆளா வர்றதே திருப்தி . தனுஷ் கிட்டே என்ன ஸ்பெஷல்னா அவர் தாடி மீசை எடுத்தா ஸ்கூல் ஸ்டூடண்ட் . வெச்சா காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி ஒரு தோற்றம் வந்துடறது தான் . பல இடங்களில் இவர் நடிப்பு பட்டாசு . வெல்டன் தனுஷ் 


 ஹீரோயின் சோனம் கபூர் . மாசு மருவே இல்லாத மொசைக் தரையில்  ஐஸ்க்ரீம் வழிய விட்ட மாதிரி ஒரு முகம் . ஆனா அவருக்கு எல்லாமே சின்னது . ஐ மீன் அவருக்கு கண் , காது , உதடு எல்லாம் ரொம்ப சின்னது . தமிழர்கள் குஷ்பூ , நமீதா , ஹன்சிகா , அஞ்சலி மாதிரி பிரம்மாண்டங்களை ரசிச்சுப்பழகினவங்க . அதனால பெருசா எடுபட மாட்டாங்கன்னு தோணுது. ஆனா அவர் நடிப்பு கலக்கல் .


சிரிப்பு , கோபம் , அழுகை என எல்லா காட்சிகளிலும் ஜொலிக்கிறார் ( அதாவது சோக சீனிலும்  பாப்பா  ஃபுல் மேக்கப் ) டிரஸ்சிங்க் சென்ஸ் பக்கா . பாடல் காட்சிகளில் அவர் முதுகு ஒரு  ஷங்கர் பட போஸ்டரே ஒட்டும் அளவு பிரம்மாண்டமா ஓப்பனா இருக்கு. குட் 



இன்னொரு ஹீரோவா  வரும் அபய்டியோல் ஆள் பர்சனாலிட்டிதான் . ஆனா அப்பாஸ் , ஷாம் மாதிரி மைதா மாவு கேஸ் . செல்லாது செல்லாது 


தனுஷ்-ன் தோழியாக வரும்  ஃபிகர் யாரு? நல்ல அழகு , நடிப்பு என கவனிக்க வைக்க்கிறார் ( நாம எந்த ஃபிகரை கவனிக்காம இருந்தோம் ? ) 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. படத்தின் முன் பாதி இளமைக்கலக்கல் . செம ஜாலியான திரைக்கதை . செம ஸ்பீடு . சின்ன சின்ன முக பாவனைகளில் ஹீரோ - ஹீரோயின் போட்டி போட்டுட்டு நடிச்சிருக்காங்க 


2. ஒளிப்பதிவு  ஹோலிப்பண்டிகை காட்சிகளில், காசி நகரின் அழகை அள்ளும் காட்சிகளில் அபாரம் . கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் 


 3 , இசை ஏ ஆர் ரஹ்மான். பிரம்மாண்டமான இசை .  பி ஜி எம் மில் பல இடங்களில் கவனிக்க வைக்கிறார். 2 பாட்டு ஹிட்டு . ஹிந்தி ராஞ்சனா வுக்கு மிகப்பெரிய ஓப்பனிங்க் வர ஒரே காரணம் ஏ ஆர் ஆர் தான் 


4 ஹீரோயின் , ஹிரோவின் தோழி மற்றும் பெண் கதாப்பாத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்பு , உடை உடுத்திய விதம் எல்லாம் அருமை . பிரம்மாண்டம் , கலை நயம் 


5. அப்ளாசை அள்ளும் தனுஷ் நடிப்பு 3 இடங்களில் பின்னிப்பெடல் எடுத்து விட்டார் . 1. இனி உன்னைப்பார்க்க வந்தேன் நான் ஒரு அப்பனுக்கு பொறக்கலை  என அவரிடம் பல்லைக்கடித்து பேசும் இடம்  2. பின் பாதியில் ஹீரோயினைப்பார்க்க காலேஜில் காம்பவுண்ட் ஏறிக்குதிக்கையில் மாட்டி யார் என விசாரிக்கப்படுகையில் தான் ஒரு திருடன் என சமாளிப்பதும் அதைத்தொடர்ந்து வரும் காமெடிக்காட்சிகளும் தமிழுக்கு புதுசு  3 . அருமையான வசனங்கள் படத்துக்கு பெரிய பலம்


 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. பிரமாதமான ஜாலியான எப்பிசோடாக வரும் முன் பாதி திரைக்கதைக்கும், பின் பாதி குழப்படி திரைக்கதைக்கும் சமப்ந்தமே இல்லை . ஏன் இந்த தேவை இல்லாத வேலை ? 


2. காலேஜ் சேர்மேனாக வருபவர் எப்படி தொகுதி மக்களைக்கவர்ந்து கட்சி ஆரம்பிக்கும் அளவு பெரிய ஆளாக முடியும் ? 


3. தனுஷ் எப்படி திடீர் என  கட்சியில் செல்வாக்கு பெறுகிறார்? அவர் என்ன நாஞ்சில் சம்பத்தா? பரிதி இளம் வழுதியா? 



4. ஹீரோயின் ஹீரோ கிட்டே “ நீ ஜெயிச்சுட்டா உனக்கு உன் கன்னத்துல  முத கிஸ் தர்றேன் கறா . ஆனா ஆல்ரெடி அவ 2 டைம் குடுத்திருக்கா ( நான் எண்ணிட்டே இருந்தேன் ) அது எப்படி? 



5. ஹோலிப்பண்டிகை கொண்டாட்ட காட்சியில் ஊரே முகத்தில் கலர்ப்பொடியோட இருக்கு, ஹீரோயின் மட்டும் படுக்ளினா  இருக்கே? எப்படி? கூட்டத்துக்கு நடுவே தான் நிக்குது 



6. ஹீரோ “ டூயட் பட வசனமான சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால் அப்டினு வைரமுத்து கவிதையை வாசிக்கும் சீனில் பேப்பர்ல ஹிந்தி எழுத்து. ஒண்ணா அதை கட் பண்ணி இருக்கனும், அல்லது  தமிழ்ப்பேப்பர் வெச்சு ஒரு ஷாட் எடுத்திருக்கனும் 



7. ஹீரோயினின் 2 வது காதலன் முஸ்லீம் அல்ல என்பதை ஹீரோதான் கண்டு பிடிக்கனுமா?  ஹீரோயின் பெற்றோர் ஏன் விசாரிக்கலை? இத்தனைக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுது . வீட்டுக்கு போக வர இருந்திருப்பாங்களே? 




8. ஹீரோயினின் 2 வது காதலன் இறந்ததை நேரில் பார்க்கும் ஹீரோ   ஏன் வாமிட் எடுக்கறாரு? முறைப்படி வருத்தப்பட வேண்டிய ஹீரோயினே பெருசா அலட்டிக்கலை. இவரு ஏன் ஓவரா ஃபீல் ஆகறாரு? 



9. ஹீரோயின் ஹீரோ மேல உண்மையான காதலே வைக்கலை. ஹீரோவோட காதலை யூஸ் பண்ணிக்கறாரு. அதனாலேயே ஆடியன்சால அவங்க காதல் கதைல லயிப்பு வர்லை 



10. கூட்டத்தில் நடக்கும் வெடிகுண்டு காட்சிகள் , பெரிய அரசியல் தலைவி ஹீரோயினுடன் பேச வருவது எல்லாம் படு செயற்கை 





மனம் கவர்ந்த வசனங்கள்


1. இந்த உலகத்தில் எல்லாருக்கும் எல்லாமும் சமம் கிடையாது


2. என்னைக்கு தான் லவ் பண்ற பொண்ணு இன்னொருத்தனை ல்வ் பண்ணுதோ அப்பவே அவனோட லவ் செத்துடும்


3. இதுவரை எந்த ஆணும் உணர வைக்காத புது உணர்வை எனக்கு உணர வெச்சான்.அதை அவனுக்கு உணர வைக்கனும் னு நினைக்கறேன்


4. புதுசா எது வந்தாலும் கண்ணை மூடிக்கிட்டு அது பின்னால ஓடறதுதான் நம்ம பழக்கம்


5. நான் ரத்தம் சிந்தறேன்.நீ கண்ணீர் சிந்தறே.ஆனா நமக்குள்ளே காதல் நடக்கவே இல்லை.விசித்திரமா இல்ல?


6.  பிகரை கரெக்ட் பண்ண 2 வழி 


.1.கடின உழைப்பு.விடாம அவ பின் சுத்துவது

 2 அவளை பயமுறுத்துவது


7. தொழுது கொண்டிருப்பது என்னவோ நீ தான்.ஆனால் இறைவன் வரம் கொடுத்தது என்னவோ எனக்குத்தான்



8. ஒரு பொண்ணாலயும் ஒரு ராக்கெட்டாலயும் தான் நம்மை எந்த உயரத்துக்கும் கூட்டிட்டுபோக முடியும்



9.ஏய்.. உன் பேரையாவது சொல்லிட்டுப்போ .


 நாளைக்கு எப்படியும் என் கிட்டே அறை வாங்க வருவே தானே? அப்போ சொல்றேன் 

10  அது லவ்வே இல்லைடா, நான் அப்போ டென் த் படிச்சுட்டு இருந்தேன் 


 நான் மட்டும் லா காலேஜ்லயா படிச்சேன்? 




11. உன்னைப்பார்த்தாலே அந்தப்பொண்ணு சிரிக்குதே ..  ஏன்?


வெட்கம் , சந்தோஷம் 



12.  ஒரு பெண்ணை சராசரி கல்யாணப்பொண்ணா  தயார் பண்ற வீடாத்தான் என் அத்தை  வீடு இருந்தது 



13.  இவன் வீட்ல இல்லைன்னா  வேற எங்கேயும் தேட வேண்டாம் . நேரா ஹாஸ்பிடல் வந்துடுங்க . அங்கே தான் இருப்பான். அடிக்கடி தற்கொலை முயற்சி பண்ணிக்குவான் 


14. என் மேல தப்பு இருந்தப்பவே  எங்க அப்பா கிட்டே கூட சாரி கேட்டதில்லை. இப்போ என் மேல தப்பும் இல்லை, நீ என் அப்பாவும் இல்லை , உன் கிட்டே ஏன் நான் சாரி கேட்கனும் ? 



15. இப்போ இருப்பது 2 வகை அரசியல் தான் 

1. இருக்கும் ஆட்சியை சதி பண்ணி கவுத்துட்டு புது கட்சி ஆட்சி அமைப்பது 


2. புது அரசியல் கட்சி ஆரம்பிப்பது 



16. சவால்களை எல்லாம் தாண்டி ஜெயிப்பவனே தலைவன் 



17. நான் வாழ்க்கைல கத்துக்கிட்ட பாடம் - பொண்ணுங்களை நம்பி எப்பவும் எந்தக்காரியத்திலும் இறங்கக்கூடாது


18. கரைல நின்னுக்கிட்டே முத்தை எடுக்க முடியாது 


19. இங்கே இருக்கும் சாமியார்கள் எல்லாரும் பாவிகள் . ஏதாவது தப்பைப்பண்ணிட்டு வந்து இங்கே ( காசியில் ) ஒளிஞ்சிக்கறாங்க 



20. நாம செஞ்ச பாவத்தை கங்கையாலயோ , கண்ணீராலயோ கழுவிட முடியாது



21.  தம்பி, நீ யாரு? இங்கே என்ன பண்ணிட்டு இருக்கே? 


 நான் ஒரு திருடன் , திருட வந்திருக்கேன் 


22.  இந்த தேசத்துல தலைவருக்கு பஞ்சம் ,ம் என்னை மாதிரி மாக்கான் சொல்றதையே ஜனங்க கேட்கறாங்கன்னா...  





 படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட்ஸ்

அம்பிகாபதி - முன் பாதி காதல் கலாட்டா,பின் பாதி அய்யய்யோ நான் கிளம்பட்டா?

 ஒரு படத்தை உல்டா அடிச்சா ரீ மேக். பல படங்கள் ல இருந்து உருவி கதம்பமாக்குனா ஓன்மேக் # சினிமா விதி

40% 3 , 30% டார்லிங் டார்லிங் டார்லிங். 30 % புதுப்பேட்டை = அம்பிகாபதி ( ரங்க் தே பசந்தி , மூன்றாம் பிறை ஆங்காங்கே )

ராஞ்ச்சனா ஹிந்தியில் ஹிட் ஆனதில் ஆச்சரியமே இல்லை.ஆனால் தமிழில் அம்பிகாபதி ஹிட் ஆக வாய்ப்பே இல்லை # அவதானிப்பு

ஏ ஆர் ஆர் துள்ளாட்ட இசை பி ஜி எம் பின்றாரு





-ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் =40,

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 3 / 5


சி பி கமெண்ட் - படம் பார்த்தே ஆகனும்னு அடம் பிடிப்பவங்க இடை வேளை வரை பார்த்துட்டு ஓடியாந்துடுங்க . ஏ ஆர் ஆர்ன் தீவிர ரசிகர்கள் மட்டும் முழுசா பாருங்க  . முன் பாதி ரதி , பின் பாதி பேதி . ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன். 1300 பேர் அமரும் தியேட்டரில் 278 பேர் இருந்தாங்க



a




 




Monday, November 19, 2012

Jab Tak Hai Jaan - சினிமா விமர்சனம்



http://zns.india.com/upload/2012/10/17/jt382.jpg

காதல் மன்னன் படத்துல வர்ற மாதிரி ஹீரோயினுக்கு ஆல்ரெடி நிச்சயம் ஆகி இருக்கு.கோடீஸ்வரியான ஹீரோயின்  டைட்டானிக் ஹீரோயின் மாதிரி .பணக்காரனை விரும்பாமல் தெருப்பாடகனா பார்ட் டைம்லயும், ஹோட்டல் சர்வரா பிரைம் டைம்லயும் ஒர்க் பண்ற ஏழை ஹீரோவை லவ் பண்றார்.



ஹீரோயின் பயங்கரமான கட்டுப்பட்டி. அதாவது மேரேஜ்க்கு அப்பா ஓக்கே சொன்னாத்தான் அப்டினு கண்டிஷனா இருக்கார்.ஆனா பாருங்க மேட்டர்க்கு மட்டும் அவர் அனுமதி தேவை இல்லையாம். மேரேஜ்க்கு முன்னாடியே மேட்டர் ஃபினிஷ். ( இந்த மாதிரி ஆளைத்தான் எல்லாரும் தேடிட்டு இருக்காங்க )மேரேஜ்னு வரும்போது பல்டி அடிக்கறார்.


 ஹீரோவுக்கு தலைல அடி பட்டுடுது. பழசை எல்லாம் சவுகர்யமா மறந்துடறார் . ( அப்போதானே அவர் நல்லவர்னு காட்ட முடியும்? ) 

 இடைவேளை வரை ஆட்டம் பாட்டம் கில்மா கொண்டாட்டம்னு காதல் மன்னன் டைப்ல படம் போகுது.

 அதுக்குப்பின் ஹீரோ திடீர்னு மிலிட்ரி வீரர் ஆகிடறார். அதாவது பாம் செயல் இழக்க வைக்கும் செயல் வீரர். அஜித் நடிச்ச உன்னைக்கொடு என்னைத்தருவேன் மாதிரி மிலிட்ரி பேக்டிராப். அங்கே அனுஷ்கா ஷர்மானு இன்னொரு ஃபிகர்.



http://www.hindustantimes.com/Images/Popup/2012/11/srk.jpg


 பாப்பாவோட கொள்கை பயங்கரம் .அதாவது உலகத்துல உள்ள எல்லா நாட்டு ஆண்களோடும் ஒரே ஒருக்கா கில்மா பண்ணிடனும்னு நினைக்கும் வெரைட்டிடேஸ்ட் பார்க்க ஆசைப்படும் கேர்ள். ஆனா ஷாரூக்கை பார்த்ததும் தெய்வீகக்காதல் கொள்ளறார்.

 இப்போ ஷாரூக்குக்கு மறுபடி ஒரு விபத்து. இந்த படத்துல பிரபுதேவா இயக்குநரா இருந்தா முதல் ஹீரோயினை கழட்டி விட்டுட்டு 2 வது ஹீரோயின் கூட ஹீரோ ஜோடி சேரும்படி எடுத்திருப்பார். ஆனா இது யாஷ் சோப்ரா படம். அதனால டீசண்ட்டா முதல் ஜோடி கூட சேர்த்து வெச்சுடறார். சுபம்


ஷாரூக்கான்க்கு செம லக். ஆள் இந்த வயசுலயும் யங்க்கா இருக்கறார். 2 ஹீரோயின் கூட டூயட் பாடறார். கில்மா பண்றார். சுறு சுறுப்பான நடிப்பு .அவரோட டிரஸ்ஸிங்க் சென்ஸ் பக்கா.. ஹேர் ஸ்டைல் அழகு.. தோரணையா காதலிக்கறார்.

 முதல் ஹீரோயின் கேத்ரீனா கைஃப். ஆஹா ! வெண்ணிலா ஐஸ் க்ரீம் ரோஸ் கலர்ல இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் அவரது மாசு மருவற்ற முகம். மொழு மொழுனு ஒரு பரு , மச்சம் கிடையாது . அந்த வெண்ணிலா ஐஸ் க்ரீம்ல 2 செர்ரிப்பழம் இருந்தா எப்படி இருக்கும்? அதான் அவர் உதடு. அவர் நடிக்கவே வேணாம், சும்மா சிரிச்சா போதும் ஹி ஹி . லோ ஹட் , லோ ஹிப்பில் தான் எல்லா காட்சியிலும் வருகிறார், எனவே ஆண்கள் 2 கர்ச்சீஃப் எடுத்துச்செல்லவும்


 2வது ஹீரோயின் அனுஷ்கா ஷர்மா. அனுஷ்கா ஒரு தேவதை என்றால் இவர் ஒரு மினி தேவதை. அதுக்காக சின்னப்பொண்ணு, சின்ன மனசுன்னு சொல்லிட முடியாது. ஓப்பனிங்க் சீன்ல ஸ்விம்மிங்க் டிரஸ்ல வரும்போதே பக்கத்து சீட் ஆள் இதுக்கே 70 ரூபா சரியாப்போச்சு , இனி பார்ப்பதெல்லாம் இலவசம்கறான். கேத்ரீனா சேலையில் வந்த சோலைன்னா இவர் மாடர்ன் டிரஸ் போட்ட மாடப்புறா.



யாஷ் சோப்ராவுக்கு இது கடைசிப்படம் ( படம் ஷூட்டிங்க் டைம்ல இறந்துட்டார் )


 ஏ ஆர் ரஹ்மான் இசை. எல்லாப்பாட்டும் நல்லா இருக்கு. 2 பாட்டு செம ஹிட். ஒளிப்பதிவு பக்கா. ஃபாரீன் லொக்கேஷன்ஸ் கொள்ளை அழகு.




http://media2.intoday.in/indiatoday/images/stories//2012september/jab-tak-hai-jaan-still_660_092012040324.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஹாஸ்பிடலில் கேத்ரீனா கைஃப் வெள்ளை நைட்டி ( அல்லது ஸ்கர்ட் ஏதோ 1 அதா முக்கியம்? )  போட்டுக்கிட்டு ஷாரூக்குடன் சல்லாபம் செம கிளுகிளுப்பு . படம் பூரா இளமை ததும்ப , செழுமை குலுங்க நடித்திருக்கார். கேமரா கோணம் பட்டாசு


2. ஏ ஆர் ரஹ்மானின் இசை , ஒளிப்பதிவு இரண்டும் மாபெரும் பிளஸ். படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைப்பதில், பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷனை அள்ளுவதில் இசை ரொம்ப முக்கிய பங்கு  வகிச்சிருக்கு


3. முதல் பாதி ஒரு ஹீரோயின் , 2 வது பாதி இன்னொரு ஹீரோயின் என புத்திசாலித்தனமான திரைகக்தையால் தொய்வு இல்லாமல் இளமையுடன் ,  படம் போகுது.



http://images.memsaab.com/files/imagecache/node-gallery-display-750/files/2012/117015/shahrukh-and-katrina-hot-song-still-jab-tak-hai-jaan-movie.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. மிலிட்ரில  சேர வயது வரம்பு இந்தியா ஃபுல்லா 17 தான். உங்களுக்கு மட்டும் 25  எப்படி? ஹீரோ ஷாருக்கான் 25 வயசுல எப்படி மிலிட்ரில சேர்ந்தார்? அதுவும் டைரக்டா பாம் செக்‌ஷன்ல?


2. மிலிட்ரி கேம்ப்ல ஹீரோ ஒரு பர்லாங்க் தூரம் தள்ளி நிக்கும் ஹீரோயின் கிட்டே பாம் இருக்குன்னு எச்சரிக்கை பண்றார். அந்த தத்திக்கு காது கேட்கலை. உடனே ஹீரோ டக்னு  செல் ஃபோனை எடுத்து வார்ன் பண்ணாம ஸ்லோ மோஷன்ல ஓடி வந்து தள்ளி விட்டு மேலே படுத்துக்கறார். ஐ மீன் விழறார். ஒய் திஸ் கில்மா வெறி?  கிட்டே வந்து நகருன்னு சொன்னா போதாதா?


3. என்னதான் சூப்பர் ஸ்டார் ஹீரோன்னாலும் லவ் ஃபெயிலியர் என்பதால் மிலிட்ரில சோக தாடிக்கெல்லாம்  அனுமதி உண்டா? இடைவேளைக்குப்பின் மிலிட்ரி போர்ஷன் பூரா ஹீரோ தாடியோடவே அலையறார்.


4. தன் லவ் மேட்டரை அப்பா கிட்டே சொல்லாம பம்மும் ஹீரோயின் , எல்லாம் அப்பா சொற்படிதான் என தெளிவாக இருக்கும் ஹீரோயின் கில்மாவுக்கு மட்டும் ரெடியா இருப்பது எப்படி?


5. ஆரத்தி தட்டுல மஞ்சள் , குங்குமம் , எலுமிச்சை தான் வைப்பாங்க.. பூ எல்லாமுமா வைப்பாங்க?


6. ஸ்கை ஃபால் படத்துல வர்ற மாதிரி ஹீரோயின் ஹீரோவுக்கு ஷேவிங்க் பண்ணி விடறாரு.இப்போதானே அந்தபப்டம் வந்துச்சு? அதை நீக்கி இருக்கலாம்.




http://fullodia.com/sites-pic/860/1343834243-katrina-kaif-hot-wallpaper5.jpg

7. ஓப்பனிங்க் ஷாட்ல அனுஷ்கா சர்மா அவ்ளவ் நீளமான எரில நீந்தி வந்தும் உடம்புல ஈரமே இல்லாம இருக்காரு. எப்படி? டர்க்கி டவல் ஏது?


8. கேத்ரீனா கைஃப் ஃபிளாஸ் பேக் சீன்ல ஃபாரீன் கேர்ள் மாதிரி  ஹேர் ஸ்டைல் , டிரஸ்சிங்க் எல்லாம் , 10 வருஷம் கழிச்சு காட்டும்போது இந்தியன் கேர்ள் மாதிரி ஆகிடறாரு எப்படி?


9. அனுஷ்கா சர்மாவை ஹீரோ ஏரில இருந்து காப்பாத்தற மாதிரி சீன், அப்புறம் அவர் ஒரு நீச்சல் சாம்ப்பியன்னு குழப்பம். எதுக்கு?


10.   பி பி சி என்பது பெரிய நிறுவனம். ஷாருக் பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கனும்னா அவங்க கம்ப்பெனி ஆளூங்களை அனுப்புமா? ஆல்ரெடி மிலிட்ரில இருக்கறவங்களை அந்த பொறுப்பில் நியமிக்குமா?


11. அனுஷ்கா சர்மாவை சந்தித்தால் கோமாவில் இருக்கும் ஷாருக்கின் நினைவுகள் திரும்ப வாய்ப்பு உண்டுன்னு டாக்டர்கள் ஒரு சீன்ல சொல்றாங்க. டவுட் 1 . கோமாவில் இருக்கும் நபரை சர்மா சந்தித்தால் எப்படி நினைவு திரும்பும்? அவர்தான் கோமாவில் இருக்காரே? டவுட் 2 - ஆனா அனுஷ்கா சர்மாவை சந்திக்காமலேயே  ஷாருக்கிற்கு விபத்தின் நினைவு வந்துடுதே?




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEfHDtd90pm_sZuj041u7VEEgsNhlXh3hZ3ElmBaVgBksJIPBwZQFnjjRHGWruoXHfuIyIu6KXc2ATQQe68aQmS8VjikgxHswdHklFDmEqPFIWtsHywuXKf_UkoFOaepdlX9_s40yqIu0/s1600/Anushka+Sharma+Hot+Still+(3).jpg

12. லண்டன் போலீஸ் ஒரு சீன்ல ஷாரூக்கை பாம் செக் பண்ண அவரை அலோ பண்ணுது. அப்போ அவர் யூனிஃபார்மில் இல்லை. ஐ டி கார்டு கூட கேட்காம  எப்படி அனுமதிக்குது? லண்டன் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல பாம் ஸ்குவாடு யாருமே இல்லையா?


13. அனுஷ்கா சர்மா தன் காதலை ஏன் விட்டுக்கொடுக்கிறார்? என்பதற்கு சரியான விளக்கம் இல்லை



சி.பி கமென்ட் - இந்தப்படம் லவ்வர்ஸ் , யூத்ங்க , ஜாலி கைஸ் எல்லாரும் பார்க்கலாம். போர் அடிக்காம படம் போகுது.  பாக்ஸ் ஆஃபீசில் 4 நாள் வசூலே 64 கோடி. யாஷ் சோப்ராவின் கடைசி படம் என்பதாலும் இது ஒரு முக்கியமான படம். பார்க்கலாம், பெண்களும் பார்க்கலாம். ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் படம் பார்த்தேன்




http://iphonewallpapers-hd.com/thumbs/hot_bollywood_celebrity_katrina_kaif_8-t2.jpg