டைட்டிலைப்பார்த்ததும் இது பா ரஞ்சித் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமா இருக்குமோ? என்ற பயம் வேண்டாம், ஜாதிக்கும், இந்தப்படத்துக்கும் சம்பந்தமே இல்லை . இது ஒரு த்ரில்லர் மூவி
2008ல் ஆடம் சாண்ட்லியர் நடிப்பில் வெளியான பெட் டைம் ஸ்டோரீஸ் படத்தின் கதையைப்போலவே இப்படத்தின் கதையும் அமைந்திருக்கும். நம் ஊர் ஆட்களுக்குப்புரிவது போல் சொல்ல வேண்டும் எனில் விண்ணைத்தாண்டி வருவாயா? படத்தின் திரைக்கதையின் சாயலில் இப்படத்தின் கதை இருக்கும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு சினிமா டைரக்டர். தன் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை வைத்து ஒரு கதை ரெடி செய்கிறான். அக்கதை சரியாக, முழுமையாக பூர்த்தி அடையவில்லை . அதனால் தயாரிப்பாளர் கதையை ஃபினிஷ் பண்ணி சொல்லப்பா என்றதும், நாயகன் கற்பனையாக சில சம்பவங்களை சேர்த்துக்கோர்வையாக கதை சொல்கிறான், ஆனால் அவன் கற்பனையாகச்சொன்ன சம்பவங்கள் நிஜ வாழ்வில் நடக்கின்றன. இந்தக்குழப்பங்களுக்கு விடை காண்பதுதான் மீதி திரைக்கதை
நாயகியின் அப்பா ஒரு வக்கீல். நாயகன் நாயகியை பஸ் ஸ்டாப்பில் வைத்து முதன் முதலாகப்பார்க்கிறான். நாயகன் டி வி க்காக பிராங்க் ஷோ நடத்துபவன். போலீஸ் ஆஃபீசர் கெட்டப்பில் நாயகியிடம் தகறாரு செய்யும் ஆட்களை விரட்டுகிறான். அதன் மூலம் நாயகி உடன் அறிமுகம் ஆகி நட்பாகி அது காதல் ஆகிறது. ஆனால் நாயகியின் அப்பாவுக்கு அவர்கள் காதல் பிடிக்கவில்லை
வில்லன் வசதியான பணக்காரப்பெண்ணைக்காதலித்து மணம் புரிந்தவன், ஆனால் மாமானாருக்கும், வில்லனுக்கும் ஒத்துப்போவதில்லை. ஒரு முக்கியமான ஆஃபீஸ் மீட்டிங்க்குப்போக வேண்டிய வில்லனை நாயகனின் பிராங்க் ஷோவால் தடை பட வில்லனுக்கு மாமனாரிடம் கெட்ட பேர் . அதற்குப்பழி வாங்க வில்லன் துடிக்கிறான்
இப்போது நாயகனுக்கு இரண்டு வில்லன்களை எதிர் நோக்கும் கட்டாயம் ஏற்படுகிறது. நாயகியின் அப்பா , நாயகனின் பிராங்க் ஷோவால் பாதிக்கப்பட்ட வில்லன் . இவர்கள் இருவரும் நாயகனின் வாழ்க்கையில் செய்த சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக ஆசீஃப் அலி பிரமாதமாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நமீதா பிரமோத் அழகாக நடித்திருக்கிறார்.அவரது புன்னகையான முகம் மட்டுமே மொத்தக்கதையையும் தாங்கி நிற்கிறது. இருவருக்குமான கெமிஸ்ட்ரி பிரமாதம்
நாயகன் - நாயகி இருவரின் கேரக்டர்களையும் திரையில் பிரதிபலிக்கும் காதல் ஜோடி ஆக ஆன்சன் பால் மற்றும் ஹன்னா ரெஜி கோஷி நடித்திருக்கிறார் ஹன்னா நம்ம ஊர் பிரியா ஆனந்த் சாயலில் இருக்கிறார்.ஆனால் நாயகன் - நாயகி உடன் ஒப்பிடும்போது இவர்கள் இருவரும் அதிக அளவில் ஒன்றிய நடிப்பை வழங்க முடியவில்லை
நாயகியின் அப்பாவாக ரஞ்சித் பணிக்கர் பிரமாதப்படுத்தி இருக்கிறார், நாயகனின் அம்மாவாக சபீதா ஆனந்த் நடித்திருக்கிறார்
வில்லனாக சைஜூ க்ரூப் , அவரது பணக்கார மனைவியாக ஜ்வல் மரியா நடித்திருக்கிறார். அவரது முகத்தில் நடிப்பு சரியாக வரவில்லை , வசீகரமான தோற்றமும் இல்லை .
மிதுன் அசோகனின் இசையில் பாடல் ஒன்று ஹிட் , பிஜிஎம்மில் மிரட்டி இருக்கிறார்,மனோஜின் எடிட்டிங்கில் இரண்டைரை மணி நேரம் படம் ஓடுகிறது. கடைசி 50 நிமிடங்கள் பர பர என பறக்கிறது
ஒளிப்பதிவு இருவர் - சுனோக் வேலாயுதம் , குஞ்சுண்ணி நாயகியை அழகாகக்காட்டி இருப்பதில் வெற்றி
நிஷாந்த் ஷாட்டு தான் திரைக்கதை எழுகி இயக்கி இருக்கிறார். மலையாள சினிமாவுக்கு இது ஒரு புதுமையான திரைக்கதை அமைப்பு
சபாஷ் டைரக்டர்
1 விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதைக்கருதான், ஆனால் யாரும் அப்படி சொல்லி விட முடியாதபடி திரைக்கதை அமைத்த சாமார்த்தியம். அழகிய தமிழ்மகன், நூறாவது நாள் , புலி வருது போன்ற படங்களின் ரெஃப்ரன்ஸ் ஆங்காங்கே இருக்கும். ரசிக்கும்படி அவற்றை கனெக்ட் செய்த விதம்
2 நாயகனின் ஸ்க்ரிப்ட்டில் உள்ள சம்பவங்களும், நிஜத்தில் நடக்கும் சம்பவங்களும் ஒன்று தான் பெரும்பாலும், ஆனால் அதைக்குழப்பாமல் காட்சிப்படுத்திய சாமார்த்தியம்
3 வில்லன் வரும் காட்சிகளில் எல்லாம் வரும் தீம் மியூசிக் அடிபொலி
4 முதல் பாதி ஸ்லோவாகப்போனாலும் பின் பாதி செம விறு விறுப்பு
செம ஹிட் சாங்க்ஸ்
1 கண்ணின் கருவிழியாலே என்னை இழுக்கின்றாயே
ரசித்த வசனங்கள்
1 நாம நம்ம வாழ்க்கைல எடுக்கற முக்கியமான முடிவுகள் தான் நம் வெற்றிக்கும், தோல்விக்கும் காரணமா அமையும்
2 நான் ஒரு சினிமா டைரக்டர்
ஓஹோ, எந்தப்படத்துக்கு ?
ம் ம் அது வந்து , இனிமே எடுக்கப்போற ஒரு படத்துக்கு , ஹிஹி
3 நாம தூங்கும்போது நம் ஆழ்மனசு 90% வேலை செஞ்சுட்டு இருக்கும், விழிச்சுட்டு இருக்கும்போது 10% தான் வேலை செய்யும்
4 சில விஷயங்கள் நம் வாழ்க்கைல நடக்கும்போது இது ஏற்கனவே நம் வாழ்வில் நடந்தது போல தோணும், இதுக்குத்தேஜாவு என்று பெயர் , இ எஸ் பி பவர் என்பதும் இதுதான் , தேஜாவு ஒரு ஃபிரெஞ்ச் சொல்
5 நாம செய்யற சின்ன விஷயம் மற்றவர்கள் வாழ்க்கைல ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 மாநாடு , மார்க் ஆண்ட்டனி மாதிரி டைம் லூப் படங்களில் ஒரே மாதிரியான காட்சி ரிப்பீட் மோடில் வந்து கொண்டே இருக்கும், அதே போல் இப்படத்திலும் ரிப்பீட் சீன்கள் உண்டு, சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது . காட்சிகள் ஒன்று தான், ஆனால் கேரக்டர் கள் தான் வேறு வேறு
2 நாயகன் போலீஸ் ஸ்டேஷன் போகும்போது ஏசிபி இடம் தன் வீடியோ கேமராவில் நாயகியைப்படம் பிடித்த க்ளிப்புடனிருப்பதைக்காட்டுகிறான், வேலில போற ஓணானை வேட்டில விட்ட கதையா இருக்கு
3 நாயகிக்கு விபத்து நடந்ததும் அவரை ஹாஸ்பிடல் அழைத்துச்செல்லும் நாயகன் தன் கூட இருக்கும் பெண் மூலமாக நாயகியின் அப்பாவுக்குத்தகவல் சொல்லி இருக்கலாமே? நாயகியின் ஃபோனை எடுத்து நாயகியின் அப்பாவுக்கு இவர் ஏன் ஃபோன் பண்ண வேண்டும் ? ஏற்கனவே இருவருக்கும் தகறாரு இருக்கே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மாறுபட்ட த்ரில்லர் மூவி பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம், ரேட்டிங் 2.75 / 5
A Ranjith Cinema | |
---|---|
Directed by | Nishanth Sattu |
Written by | Nishanth Sattu |
Produced by |
|
Starring | |
Cinematography |
|
Edited by | Manoj |
Music by | Midhun Asokan |
Production company | Luminous Film Factory |
Distributed by | Jupiter Pictures Release |
Release date |
|
Country | India |
Language | Malayalam |