Showing posts with label A MAN CALLED OTTO (2023) -( அமெரிக்கன் )- சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label A MAN CALLED OTTO (2023) -( அமெரிக்கன் )- சினிமா விமர்சனம். Show all posts

Sunday, April 16, 2023

A MAN CALLED OTTO (2023) -( அமெரிக்கன் )- சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

 


50 மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு  109  மில்லியன்  டாலர்கள்  வசூலித்த  இந்தப்படம்  அன்பே  சிவம்  மாதிரி  ஒரு  ஃபீல்  குட்  மூவி. 2012ல்  எழுதப்பட்ட  நாவலான   A MAN  CALLED OVE  ஐ  தழுவி  2015ல் ஸ்வேதிஷ்  மூவியாக  ஸ்வீடனில் அதே  டைட்டிலில்  எடுக்கப்பட்டது . அதே  திரைக்கதையைத்தான்  இந்தபடமும்  எடுத்துக்கொண்டுள்ளது . எ  மேன்  கால்டு ஓட்டோ  என  டைட்டிலை  பலரும்  உச்சரித்தாலும்   அதன்  சரியான  உச்சரிப்பு  எ  மேன்  கால்டு  ஆட்டோ  என்பதுதான் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் 63  வயதானவர். மனைவியை  இழந்த  தனிமரம். மனைவி  மீது  கொண்டிருந்த  தீராத  காதலால்  அவரது  இழப்பை  ஜீரணிக்க  முடியாமல்  இந்த  வாழ்க்கையின்  மீது  பிடிப்போ  பற்றோ  இல்லாமல்  பல  முறை  தற்கொலைக்கு  முயன்று  ஒவ்வொரு  முயற்சியிலும்  தோல்வியை  சந்தித்தவர் 


அந்நியன்  பட  ஹீரோ  மாதிரி  ரூல்ஸ்  ராமானுஜம்  ஆக  இவர்  வாழ்கிறார். யாராவது  சின்ன  தப்பு  செய்தால்  கூட  இவரால்  பொறுத்துக்கொள்ள  முடியாது . காரணம்  இவரது  மனைவி  உயிர்  இழப்புக்கு  ஒரு  பஸ்  டிரைவரின்  அலட்சியமும்  அந்த  பஸ்  கம்பெனியின்  பராமரிப்பு  அலட்சியமும்  தான். அதனால்  எல்லாரும்  எல்லாவற்றிலும்  பர்ஃபெக்ட் ஆக  இருக்க  வேண்டும்  என  நினைக்கிறார்

இவர்  பணி  செய்து  வந்த  அலுவலகத்தில்  திடீர்  என் ஒரு  நாள்  விஆர் எஸ்  கொடுத்து  அனுப்பி  விடுகிறார்கள் . கட்டிய  மனைவியும்  இல்லை , செய்து  வந்த  வேலையும்  இல்லை , இதனால்  கடுப்பாகவே  இருக்கிறார்


 இப்படிப்பட்ட  முசுடு  பிடித்த  ஆசாமியின்  வீட்டுக்கு  பக்கத்து  வீட்டுக்கு  நாயகி  குடி  வருகிறார். நாயகிக்கு  திருமணம்  ஆகி  கணவன் , குழந்தைகள் அனைத்தும்  உண்டு .எக்ஸ்ட்ரா  லக்கேஜாக  இப்போது  கர்ப்பமாக  இருக்கிறார்

நாயகியின் வரவுக்குப்பின்  நாயகனின்  வாழ்க்கையில்  ஏற்படும்  மாற்றங்கள்  என்ன  என்ன? என்பதுதான்  திரைக்கதை 

நாயகனாக  டாம்  ஹேங்க்ஸ்  இரும்பு  முகம் ,பலாப்பழவெளிப்பக்க  தோல்  போல  ,முரடாக  இருப்பவர்  இன்னொரு  இன்முகம்  காட்டும்  காட்சிகளில் உணர்ந்து  நடித்திருக்கிறார்


நாய்கியாக  மரியானா ட்ராவினோ குடும்பப்பாங்கான  குழந்தை  முகம் . ஆத்திரக்காரனைக்கூட  அமைதிப்படுத்தும்  சாந்த  சொரூபி  முகம் ,  நம்ம  ஊச்  சிரிப்பழகி  சினேகாவுக்கு  நிகரான புன்னகை  அழகி. நாயகன்  எரிந்து  விழும்போதெல்லாம் சிரிப்பாலேயே  சிக்சர்  அடிக்கிறார். 


காமெடி  சீக்வன்ஸ்சிலும்  சரி  எமோஷனல்  மொமெண்ட்ஸ்லயும்  சரி  கலக்கலான  பர்டார்மென்ஸ்


நாயகன், நாயகி , நாயகனின்  ஃபிளாஸ்பேக்   சீனில்  வரும்  நாயகன், அவர்  மனைவி  என  நான்கு  முக்கியமான  கேரக்டர்கள் ஆக்ரமிக்கும்  திரைக்கதை  இது 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகனாக  நடித்திருக்கும் டாம்  ஹேங்க்ஸ் க்கு  இது  ஒரு  கம் பேக்  படம் ,   கேஸ்ட்  அவே , டெர்மினல்  படங்களுக்குப்பின்  அவருக்கு  ஒரு  பேர்  சொல்லும்  படம் 


2   நாயகன்  தற்கொலைக்கு  முயலும்போது  ஒரு  ரயில்வே  டிராக்கில்  நிற்பார். அப்போது  அருகில்  ரயில்  டிராக்கில்  ஒருவர்  உயிரைக்காப்பாற்றுவார். அந்தக்காட்சி  முடிந்ததும்  மீடியாக்கள்  அவரைப்புகழ்ந்து  தள்ளும். ஆனால்  அவர்  கண்டுக்காமல்  இருப்பார்.செண்ட்டிமெண்ட்டுக்கு செண்ட்டிமெண்ட். அதைத்தொடர்ந்து  அவர்  நிற்கும்  டிராக்கில்  ரயில்  வராமல்  அருகில்  இருக்கும் டிராக்கில்  ரயில்  போகும். காமெடிக்கு  காமெடி 


3  நாயகன்  நாயகிக்கு  கார்  ஓட்டக்கற்றுக்கொடுக்கும்  காட்சியும். அப்போது  இருவருக்கும்  இடையே  நிகழும்  கான்வர்சேஷன்களும் 


4  நாயகன்  தன்  ஃபிளாஸ்பேக்  காட்சியில்  தன்  மனைவியுடன் ஹோட்டலில்  சாப்பிடப்போகும்போது  மனைவி  ஏதோதோ  சாப்பிட  அவர்  அதிகம்  சாப்பிடாமல்  இருப்பார். ஏன்> என  காரணம்  கேட்கும்போது  நீ  சாப்பிடற  அளவுதான்  கைல  காசு  இருக்கு  எனும்   சீன்  டச்சிங் 


5  மிகவும்  ட்ரையான  காட்சிகள்  வரும்போது  இடையிடையே பாலைவனச்சோலையாய்  ஃபிளாஸ்பேக்  லவ் போர்சன்  பிளேஸ்  செய்திருந்த  விதம்   அட்டகாசம்   


6   நாயகன்  கார்  ஷெட்டில்  வந்த  பூனையைத்துரத்த  முயலும்போது பூனை  அவர்  பேண்ட்டை  பிடித்து  விடாமல்  பின்  தொடரும்  காட்சி


  ரசித்த  வசனங்கள் 


1    டின்னர்  சாப்பிட  ரெஸ்டாரண்ட்  வரச்சொல்லிட்டு  நீங்க  ஏன்  வீட்ல  ஆல்ரெடி  சாப்பிட்டுட்டு  வந்திருக்கீங்க ?


 ஏன்னா  அப்போதான்  நீ  ஆர்டர்  பண்ணுனதை  எல்லாம்  வாங்கித்தர  முடியும், என் கிட்டே  காசு  கம்மியாதான்  இருக்கு 


2   நீங்க  சிரிக்கும்போது  எங்க  அப்பா  சிரிக்கற  மாதிரியே  இருக்கு 


 ஓஹோ, ஆனா  நான்  சிரிக்கவே  இல்லையே?


அதான்  நானும்  சொன்னேன், எங்க  அப்பாவுக்கு  புன்னகை  கிலோ  என்ன  விலைனு  கேட்பவர் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஃபீல்  குட்  மூவி , மனதை  பாதிக்கும்  நல்ல  படம்  பார்க்கும்  ஆடியன்ஸ்  தவற  விடக்கூடாத  படம் .  அமேசான்  பிரைம் ல  கிடைக்கிறது  ரேட்டிங்  3 / 5 


A Man Called Otto
A Man Called Otto poster.jpg
Theatrical release poster
Directed byMarc Forster
Screenplay byDavid Magee
Based on
Produced by
Starring
CinematographyMatthias Koenigswieser
Edited byMatt Chessé
Music byThomas Newman
Production
companies
Distributed bySony Pictures Releasing
Release date
  • December 29, 2022 (United States)
Running time
126 minutes
CountryUnited States
LanguageEnglish
Budget$50 million[1]
Box office$109.1 million[2][3]