1.அரசியல் வானில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகுதுன்னு யாராலும் சொல்ல முடியாது.
ஏன் முடியாது? நீரா ராடியாவுக்கு ஒரு ஃபோன் போட்டு, கேளுங்க.. ஃபுல் டீட்டெயிலும் தெரிஞ்சுடும்.
-----------------------------------
2. என்னது? திருடுனது ஒரு லேடியா? துரத்திப்பிடிச்சீங்களா?
எஸ் ஸார், பிடிச்சேன், மெத் மெத்னு இருந்தது... மயக்கத்துல இருந்தப்ப நழுவி ஓடிட்டா...
----------------------------
3.எதுக்காக பைக்ல 120 கிமீ வேகத்துல போனே..?
என்னைத்துரத்திட்டு வந்த பைக்கோட ஓனர் 140 கி மீ வேகத்துல வந்தாரு.. அதான்.
---------------------------------
4.நேத்து ஒரு ஃபுல் வாங்கி நானும், என் ஆளும் ஆளுக்கு ஒரு ஆஃப் அடிச்சோம்.
ஓஹோ... நீ பாதி , நான் பாதி கான்செப்டா?
-------------------------------------
5. மோஹனா.. காலைல எந்திரிச்சதும் ஒரு குட்மார்னிங்க் மெசேஜ் அனுப்ப இவ்வளவு நேரமா? நீ எல்லாம் ஒரு லவ்வரா?
அது சரி.. நீங்க பாட்டுக்கு ஈசியா சொல்லீட்டீங்க.. நான் 184 பேருக்கும் அனுப்ப வேண்டாமா?நீங்க 185 வது லவ்வர். குரூப் மெசேஜ் செட்டிங்க்ஸ் வேற கிடையாது. தனித் தனியாதான் அனுப்பனும்.
(வாழ்க உத்தம பத்தினி)
------------------------------------
6. பழையன கழிதலும் ,புதியன புகுதலும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே...
அதுக்காக நீ வருஷா வருஷம் லவ்வரை மாத்தறது சரி இல்லை.
--------------------------------------
7.டாக்டர்.. நர்ஸ் நமீதாவை நான் லவ் பண்றேன்..
யோவ்.. கஷ்டப்பட்டு கேரளா போய் நல்ல ஃபிகரா கூட்டிட்டு வந்து அப்பாயிண்ட் பண்றது நான்... ஈசியா செட் பண்ணி கூட்டிட்டு போய் என்னை டிஸ்ஸப்பாயிண்ட் பண்றது நீயா..?
---------------------
8.பணத்துக்காகவும்,பதவிக்காகவும் அலையற ஆள் நான் கிடையாதுன்னு தலைவர் சொல்றாரே...
ஆமா.. அவர் அலையறதே மகளிர் அணித்தலைவி சொப்பன சுந்தரிக்காகத்தானே...
--------------------------------
9. எந்தக்கட்சியை சேர்ந்தவரா இருந்தாலும் தியாகிகளுக்கு பரிசு உறுதின்னு தலைவர் சொல்றாரே...?
அதாவது ... தான் இருக்கறது எந்தக்கட்சியா இருந்தாலும் அதை உதறிட்டு வந்து தலைவர் கட்சில சேர்ற தியாகிகளுக்குன்னு அர்த்தம்.
--------------------------------------------------
10.நம்ம தலைவர் பெண்களுக்கு நிறைய உதவிகள் பண்ணி இருக்காராமே..?
ஆமா, அவரோட சின்ன வீட்டுக்குபெங்களூர்ல ஒரு பங்களா,அவரோட ஆசை நாயகிக்கு ஆக்ரால ஒரு இடம்னு வாங்கிப்போட்டிருக்காரே..
----------------------------------
டிஸ்கி - 1 உலக பதிவுலக வரலாற்றிலேயே முதன் முறையாக நமீதாவை பாவாடை தாவணியில் ஸ்டில் வைத்தது அட்ரா சக்க என்றுதான் நினைக்கிறேன். இதற்காக டீசண்ட் மேன் ஃபிரம் டீசண்ட் ஃபேமிலி விருதை எனக்கு யாராவது தருவதாக இருந்தால் அதை எந்த பிகுவும் இல்லாமல் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்.
டிஸ்கி 2 - முதல் ஸ்டில் அவரோட “சின்ன” வயசுல எடுத்தது... 2வது ஸ்டில் அவரோட பெரிய வயசுல எடுத்தது... ஹி ஹி ஹி