Showing posts with label 9 - (2019) - (மலையாளம்) சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் ). Show all posts
Showing posts with label 9 - (2019) - (மலையாளம்) சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் ). Show all posts

Tuesday, October 20, 2020

9 - NINE - (2019) - (மலையாளம்) சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் )

 


9 மலையாளம்)   சினிமா விமர்சனம்  ( சைக்கலாஜிக்கல்  த்ரில்லர் )

 

இந்தப்பட  ப்ரமோஷன்லயும் சரி , விளம்பரங்கள் , ட்ரெய்லர்லயும்  சரி , ஒரு சயின்ஸ்  ஃபிக்சன்  த்ரில்லர்  மாதிரிதான்  ப்ரமோட் பண்ணாங்க . விமர்சனங்களை  மேலோட்டமா  படிச்ட்டு  எனக்குப்பிடிக்காததால்  இதை  தியேட்டர்ல  பார்க்காம  விட்டுட்டேன். பிறகு ஒரு நண்பரின் மூலமாதான்  இது சயின்ஸ்  ஃபிக்சன்  போர்வைல  வந்த  சைக்கோ  த்ரில்லர்னு  தெரிய  வந்தது

 

படத்தோட  விமர்சனத்துக்குள்ளே  போகும்  முன் இதை  எப்படி  ப்ரமோட் பண்ணாங்க, அல்லது  விமர்சனங்கள்ல  கதையோட  ஒன்லைனை  எப்படி  சொன்னாங்கன்னு பார்த்துடுவோம்

 

ஹீரோ  ஒரு வான இயல் ஆராய்ச்சியாளர். வானத்துல  ஒரு எரிநட்சத்திரம் கிராஸ்  ஆகுது . அதன் பக்க  விளைவுகளா   பூமியில் 9 நாட்களுக்கு  எந்தவித  எல்க்ட்ரிசிட்டியும்  இயங்காது , அலை பேசி  சிக்னல் கிடைக்காது, கரண்ட்  இருக்காது . எலக்ட்ரானிக்  சாதனங்கள்  இயங்காது , அவ்ளோ ஏன்  வாட்ச்  கூட ஓடாது .

 

கொரோனா  லாக்டவுன்   சமயத்துல  நம்மாளுங்க  வெளில  எங்கேயும் போகாம  வீட்டுக்குள்ளேயே  டைம் பாஸ்  பண்ண  முடிஞ்சதுன்னா  அதுக்கு  முக்கியமான  காரணங்கள்  2.   ஒண்ணு  டி வி  பார்க்கலாம், இன்னொண்ணு  நெட்  யூஸ்  பண்ணி  லேப்டாப்ல  ஓ டி டி ல படம் பார்க்கலாம். ஆனா   இப்போ  நிலைமை  என்னான்னா  டிவி , நெட் , செல் ஃபோன்  எதுவும்  9 நாட்களுக்கு  இல்லை என்பதால்  எப்படி தான்  டைம் பாஸ்  பண்ணுவாங்கனு  தெரில

 

 இப்படிப்பட்ட  சூழல்ல  ஹீரோவோட  ஹையர்  ஆஃபீசர்  கூப்பிட்டு  ஹிமாச்சல்  பிரதேசம்  போ.,  அங்கே  என் பங்களா  இருக்கு அங்கே  9 நாட்கள்  தங்கி  ஆராய்ச்சி பண்ணி  ரிசல்ட் டை  கொண்டு வா...  அதன்படி  ஹீரோ  அங்கே  பயணப்படறார். அந்த  9 நாட்களை  எப்படி  கடந்தார்  என்பதே  கதை

 

 இதுதான்  நான் படிச்ச  விஷயம்.  இதைப்படிச்சதும் எனக்கு பெருசா  ஆர்வம் இல்லை , ஏன்னா  பிருத்விராஜ் படம்னா  நடிப்பு , திரைக்கதை  ல வெரைட்டி இருக்கும், இதுல  என்னத்த  சொல்லிடப்போறாங்க , சின்னப்பசங்க  மாயாஜாலக்கதை  மாதிரி  இல்லைன்னா ஹாரிபாட்டர்  கதை  மாதிரி  இருக்கும்ப்னு   அசால்ல்டா  விட்டுட்டேன்

 

ஆக்சுவலா  கதையே  வேற.. மேலே  சொன்னதெல்;லாம்  ஓப்பனிங்க்ல  கரெக்ட்டீட்டெய்லா  பார்ப்போம்

 

 ஹீரோவுக்கு  ஒரு பையன், ஹீரோவோட  மனைவி  இல்லை , இறந்துட்டாங்க. அம்மா இல்லாததால  அப்பாவின் கண்காணிப்பில் மகன்  வளர்றான். என்னதான்  தங்கம்  தங்கமா  பார்த்துக்கிட்டாலும்  ஒரு அம்மாவின் அரவணைப்பில்  வளரும் பையனுக்கும்  அப்பாவின்  கண்காணிப்பில்  வளர்பவப்னுக்கும்  வித்தியாசம்  உண்டு

 

 ஆஃபீஸ்  டென்சன் ,  மேலிட பிர்சர்னு 1008  பிரச்சனைகள்  ஆண்களுக்கு  இருக்கும்,  தன்னோட முழுமையான அன்பை  குழந்தையிடம்  காட்ட  முடியாது , டைமும்  இருக்காது

 

இது  போக  இன்னொரு பிரச்சனையும்  இருக்கு , மனைவி  வீட்டு  சொந்தங்கள்  அந்த  மகனை  கரிச்சுக்கொட்டறாங்க . இவன்  பொறந்த   வேளையே  சரி இல்லை , அம்மாவை முழுங்கிட்டான், ராசி  இல்லாதவன், ஒரு நாள்  இல்லாட்டி ஒரு நாள்  பாருங்க , இவனால  உங்களுக்கும் ஆபத்து  வரப்போகுதுனு  ஹீரோவை எச்சரிக்கறாங்க

 

அம்மா  இல்லாததால்  மனோ ரீதியா  பாதிக்கப்பட்ட  மகன் , சயிண்ட்டிஸ்ட்டா  இருப்பதால்  ஏராளமான  ஒர்க் பிரஷர்  உள்ள  அப்பா இவங்க  2  பேர்   வாழ்க்கைலயும்  நடக்கும்  திடுக்கிடும்  சம்பவங்கள்  தான்  அந்த  9 நாட்கள் திரைக்கதை

 

ஹீரோவா  பிருத்விராஜ். தமிழ் ல  கமல்  படம்னா  ( நாயகனுக்குப்பின்)   கண்ணை  மூடிக்கிட்டு  படம்  பார்க்க  தியேட்டருக்குப்போய்டலாம்,  ஏதாவ்து  ஒரு புதுமை  அவர்  படத்தில்  இருக்கும், கதை, டெக்னிக் அம்சங்கள்  ஏதோ ஒண்ணு  மாறுபட்டதா  இருக்கும் , அந்த  மாதிரி  மலையாளத்துல  பிருத்விராஜ்  ஹீரோன்னா  அந்தப்படத்தை  ரிசல்ட்டே  கேட்காம  தைரியமா  பார்க்கலாம், ஏன்னா  அவர்  திரைக்கதை  கேட்டு  வித்தியாசமா இருந்தா  மட்டும்  தான்  ஓக்கே  சொல்வாராம்

 


இந்தப்படத்தில்  மாறுபட்ட  நடிப்பை  தந்திருக்கார். இவருக்கு  இணையா  அந்தப்பையனும்  நல்லா  நடிச்சிருக்கான், இவர்  கூட   வரும் ஆராய்ச்சிக்குழுவில்  உள்ள  ஒரு பெண்  நாயகன்  கண் எதிரே  உயரமான  ஒரு இடத்தில்  இருந்து  கீழே  விழுவதும் , இன்னும் சில  அமானுஷயமான விஷயங்களும்   நிகழுது . அதெல்லாம்  ஏலியன்சின் வேலையா?  அமானுஷ்ய  சக்தியின் வேலையா?  இறந்த  மனைவியின்  ஆவி  வேலையா?  என்பதை  ஹாட்  ஸ்டார்ல கண்டு மகிழுங்கள் , யூ  ட்யூப்லயும்  இருக்கு

 

படத்தின்  திரைக்கதை  ஹிமாச்சல்  பிரதேசத்தில்  நடப்பதால்  வசனங்கள்  பெரும்பாலும்  ஹிந்தியில்  வரும். அதுக்கான  சப்டைட்டில்  மலையாளத்தில்  வரும். அதனால்  யூ ட்யூப்ல பார்த்து  புரிஞ்சுக்கனும்னா இரண்டில்  ஏதோ  ஒரு மொழி  தெரிஞ்சிருக்கனும். ஹாட்  ஸ்டார்ல  சப் டைட்டில்  உண்டுனு  நினைக்கிறேன்

 

இந்தப்படத்தில்   முக்கியமான  அம்சங்கள்  பின்னணி  இசையும், ஒளிப்பதிவும்,  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டும்

‘’ படம்  பூரா  இரவு  சீக்வன்சில்  காட்ட்ப்படுவதால்  லைட்டிங்  எல்லாமே தீப்பந்தம் வழியாதான், ஏன்னா  கரண்ட்  கிடையாதே? பிரமாதமான  ஒளிப்பதிவு .  மிரட்டலான  பின்னணி  இசை  எல்லாம்  அருமை

 

பிரகாஷ்  ராஜ்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  ஓப்பன்  பண்ணும்  கேரக்டர்

 

நாயகியாக  வரும் மம்தா  பொதுவா  கிளாமரான  முகம்  என்றாலும் இந்தக்கதைக்கு  அவரைக்கண்டாலே  பயம்  தான் ,  கீழே  விழுந்து விபத்தில்  சீரியஸ்  ஆகும்  ஆராய்ச்சி  யாளர்  பெண்  இன்னும்  சில  சீன்கள்  கொடுத்திருக்கலாம். மனைவியா  வருபவர் அதிக  வாய்ப்பில்லை 

 

சி.பி ஃபைனல்  கமெண்ட் – இந்தப்படம்  யாருக்கெல்லாம்  பிடிக்கும்?  குடைக்குள்  மழை ,  மயக்க்ம் என்ன?, காளிதாஸ்  இந்த  3  படங்களில்  ஏதோ ஒரு படத்தையாவது  ஆல்ரெடி  ரசிச்சவரா  இருந்தா  பிடிக்கும், புரியும் ,  ரேட்டிங்  3 / 5