Showing posts with label 4.7.2012. Show all posts
Showing posts with label 4.7.2012. Show all posts

Monday, July 23, 2012

இளநீர் 25 ரூபா, வரத்தேங்காய் 10 ரூபா .. ஏன்? ஒரு ஜாலி விளக்கம் ( ஜோக்ஸ் )

1. டாக்டர்,சாப்பிட்டோமா இல்லையான்னு தெரியாம 3 வது தடவை சாப்பிட்டுட்டேன், இது என்ன வியாதி? 


மேரேஜ் பந்தில ஓசிலகண்ட்டீநியூஸ் ஈட்டோ மேனியா


--------------------------------


2. உங்க பையனுக்கு மனசுக்குள்ள வள்ளுவர்னு நினைப்பு



 ஏன்?


நல்ல ஃபிகர் எனப்படுவது யாதெனின் எப்போதும் சிடு சிடு என்று இராத சாந்தமான முகமே! # ஃபிகராலஜி,ஃபேஸாலஜி அப்டிங்கறானே


-------------------------


3. டீச்சர் - ஜனாதிபதி - சிறு குறிப்பு வரைக 


. தல ரசிகன் - அஜித் நடிச்ச ஜனா படத்தோட தயாரிப்பாளர் தான் ஜனா + அதிபதி = ஜனாதிபதி



-------------------------------


4. ஆஆஆர்த்தி ராஆவ் - யுவர் ஆனர், என்னை 25 நாடுகளுக்கு கூட்டிட்டு போய்  75 டைம் ரேப் பண்ணிட்டார் .


 லேடி ஜட்ஜ் - ஹூம், என்கிட்டே கூட பாஸ்போர்ட், விசா எல்லாம் இருக்கு


---------------


5. ஆண் பாம்பு சட்டை உரிக்கும்போது பெண் பாம்பு ஏன் ஜாக்கெட் உரிப்பதில்லை? # ஒரு பெண்ணியவாதியின் கேவலமான கேள்வி , ஹி ஹி 



------------------------------





6. டீச்சர் - திருநீறு எங்கே இருந்து நமக்கு கிடைக்கிறது? 



டார்ச்சர் ஆஃப் த டீச்சர் - திருநீறுமலைல இருந்து?


-----------------


7. மேனேஜர் சார், என் அக்கவுண்ட்ல பணம் இருக்கு, ஆனா எடுக்க முடியல .


. சாரி சார், இது சிறைநிரப்பும் போராட்டம் மாதிரி, உள்ளே வரலாம், ஆனா வெளீல போக முடியாது


------------------------


8. அத்தான், அன்பா  நாலு வார்த்தை பேசுனா போதும்.!



 சாரி, எனக்கு வார்த்தை பேசி பழக்கம் இல்லை



-------------------------


9.என்னது? இளநீர் ரூ 25? வரத்தேங்காயே ரூ 10 தான்?


 சார், இளசுக்குத்தான் எப்பவும் மவுசு,த்ரிஷா சம்பளம் 35 லட்சம் தான்,சமந்தா 1 கோடி



--------------------------------


10. உங்க மனைவிக்கு கோபமே வராதா? ஆச்சரியமா இருக்கே?


 கோபம் அவளை விட்டுப்போனாத்தானே மறுபடி வர.. அவ கிட்டேயே நிரந்தரமா குடி இருக்கு போல.. 



--------------------------


யார் பக்கம் அதிக கேமிரா திரும்புதோ அங்கதான் சரக்கு இருக்குன்னு அர்த்தம்...!!!!


11. இனிமே நீங்க உப்பு , உரைப்பு, புளிப்பு, எல்லாம் குறைச்சுக்கனும்


 டாக்டர், மேரேஜ் ஆன நாள்ல இருந்தே எல்லாத்தையும் குறைச்சுட்டேன்



-------------------------


12. குற்ற வாளியை நீ ஏன் விரும்ப மாட்டேங்கறே?


 வாங்கறதே  வாங்கறோம், நல்ல வாளியா பார்த்து வாங்கிட்டா போச்சு ( வாளி = பக்கெட்)


----------------------------


13. சமையல் குறிப்புகள் கொண்ட ரெசிபியை பார்த்து தலைவர் ஏன் பதர்றாரு?

ரெ”சிபி ஐ” பார்க்கறப்போ அவருக்கு சி பி ஐ ஞாபகம் வந்துடுதாம் 



------------------------------


14. ஷீட்டிங்க் நடக்கறப்போ  ஒவ்வொரு சீன் எடுத்து முடிஞ்சதும் டைரக்டர் குடு குடுன்னு ஓடிப்போய் ஹீரோயினை தொட்டுட்டு வர்றாரே? ஏன்?

 ஃபினிஷிங்க் டச்சாம்


------------------------------


15. மாப்பிள்ளை, உங்க வருமானம் எவ்ளவ்?


 அது சரியா  தெரியலை, ஆனா என்னை மாதிரி சரக்கு அடிக்கும் ஆள்ங்களால கவர்மெண்ட்க்கு வருமானம் ரூ 14,000 கோடி


--------------------------





16. அனகோண்டா - அலுமினியக்குண்டா  என்ன வித்தியாசம்?


தண்ணிக்கு உள்ளே இருந்தா அது அனகோண்டா - உள்ளே தண்ணி இருந்தா அலுமினியக்குண்டா  # SMS


-------------------------------


17. வாழ்க்கைல எதிர்பாராத விதமா நாம தப்பு பண்ண நேர்ந்தா நாம என்ன செய்யனும்?

அதை யார் மேல தூக்கி பழி போடறதுனு யோசிக்கனும்.. 


------------------------


18. பாலை விட சரக்குதான் சத்துன்னு எப்படி சொல்றே?


டெயிலி ஒரு டம்ளர் பால் சாப்பிட்டாலும் நம்மால சுவரை நகர்த்த முடியாது, ஆனா ஒரே ஒரு குவாட்டர் அடிச்சா நம்ம கண் முன்னால சுவர் தானா நகர்ந்துடும்.. 


-------------------------------


19. மூன்று காலங்களையும் உதாரணத்துடன் விளக்குக 


நான் உங்க பெண்ணை பார்த்தேன் - இறந்த காலம், நாங்க 2 பேரும் லவ்வறோம் - நிகழ்காலம் , ஊரை விட்டு ஓடிப்போகப்போறோம் - எதிர்காலம் # 3 காலம்



--------------------------

20. சேகுவாரோவின் புரட்சிப்போராட்டம் பற்றி தலைவர் கிட்டே கேட்டது தப்பா போச்சு


 ஏன்?

 பிரபுவோட புரட்சிப்போராட்டம் தான் தெரியும்னு சொல்லி மானத்தை வாங்கிட்டாரு


-------------------------------