இயக்குனர் சுசீந்திரனின் முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு (2009) மெகா ஹிட் .நான் மகான் அல்ல (2010 )கமர்ஷியல் மசாலா .அழகர்சாமியின் குதிரை (2011) விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப்பெற்றாலும் , தேசி ய
விருதைப்பெற்றாலும் கமர்ஷியலாகப்போகவில்லை . சீயான் விக்ரம் நடித்திருந்தும் ராஜபாட்டை (2011) அட் டர் பிளாப் ,ஆதலால் காதல் செய்வீர் (2013) ஹிட் . பாண்டிய நாடு (2013) செம்ம ஹிட் ஜீவா (2014), பாயும் புலி (2015) ஓகே ரகம் . மாவீரன் கிட்டு (2016) குட் நெஞ்சில் துணிவிருந்தால் (2017) . ஜீனியஸ் (2018) ,கென்னடி கிளப் (2019) , சாம்பியன் (2019) ஈஸ்வரன் (2024) , வீர பாண்டிய புரேம் (2024) ஆறும் சுமார் ரகங்கள் . குற்றம் குற்றமே (2022) அருமையான க்ரைம் திரில்லர் . இப்போ வந்திருக்கும் 2K லவ் ஸ்டோரி எப்படி இருக்கு என பார்ப்போம்
விக்ரமன் இயக்கத்தில் வெளி வந்து மெகா ஹிட் ஆன புது வசந்தம் (1990) , ஏ வி எம் மின் பிரியமான தோழி (2003) ஆகிய இரு படங்களும் ஆன் , பெண் நட்பை பெருமைப்படுத்தும் படங்கள் . அதே பாணியில் தான் இதன் திரைக்கதையும் அமைந்திருக்கிறது
சுசிணேசன் இயக்கிய பைவ் ஸ்டார் படம் ஒரு லவ் ஸ்டோரியாக இருந்தாலும் அதில் வரும் 5 நண்பர்கள் ( இரு பெண்கள் +3 ஆண்கள் ) கடைசி வரை நண்பர்களாகவே இருப்பார்கள் . சிம்பு வின் வல்லவன் ல கூட சிம்பு + சந்தியா கடைசி வரை நண்பர்களாகவே இருப்பார்கள்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் , நாயகி இருவரும் சின்ன வயதில் இருந்தே க்ளாஸ் மேட் ஸ் , பேமிலி பிரண்ட்ஸ் . இருவருக்கு இடையில் நட் பு மட்டுமே என்பதில் அவர்கள் இருவரும் தெளிவாக இருக்கிறார்கள் .ஆனால் அவர்களது சில நண்பர்களும் உறவினர்களும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறார்கள் .
நாயகனை வேறு ஒரு பெண் லவ் பண்ண அதற்கு நாயகி ஓகே சொல்கிறாள் . ஆனால் அவர்கள் இருவரும் நெருங்கிப்பழகும்போது நாயகிக்கு பொஸசிவ்னெஸ் வந்து விடுகிறது . தன நண்பனைப்பங்கு போட ஒருத்தி வந்து விடடாள் என்ற நட்பின் அடிப்படையிலான பொஸசிவ்னெஸ் தான் .காதல் எல்லாம் இல்லை . முதல் பாதிக்கதை முழுக்க காதல், காமெடி என நகர்கிறது
நாயகனின் காதலி ஒரு விபத்தில் இறந்து விடுகிறாள் . இதற்குப்பின் நாயகன் , நாயகி இருவர் குடும்பத்தி லும் ஒரு முடிவு எடுக்கிறார்கள் . நாயகனுக்குப்பெண்பார்க்கும் இடத்தில் அந்தப்பெண்ணின் அண்ணனை நாயகி திருமணம் செய்து கொள்ள வேண்டும் . பெண் கொடுத்துப்பெண் எடுப்பது . இப்படிச்செய்தால் அனைவரும் ஒன்றாக சந்தோஷமாக வாழலாம் . அவர்கள் நினைத்தபடி ஒரு சம்பந்தம் அமைகிறது
ஆனால் அந்தக்கல்யாணத்தை நிறுத்த இரு வில்லன்கள் முளைக்கிறார்கள் .காமெடி கலாட்டாக்களுக்கு மத்தியில் இருவரும் என்ன செய்தார்கள் ? என்பது மீகி திரைக்கதை
நாயகன் ஆக புதுமுகம் ஜெகவீர் நடித்திருக்கிறார் . முக சாயலில் யுவன் சங்கர் ராஜா போல் இருக்கிறார் , தோற்றம் , உடல் மொழி ஓகே ரகம் , ஆனால் நடிப்பு ? இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்
நாயகி ஆக , நாயகனின் தோழி ஆக மீனாடசி கோவிந்த ராஜன் நடித்திருக்கிறார் .இவர் ஜெனிலியா டிசோசா சாயலில் இருக்கிறார் . நடிப்பு ஓகே ரகம்
முதல் பாதியில் நாயகனின் காதலி ஆக வருபவர் பெயர் தெரியவில்லை .ஆனால் அழகாக , போஷாக்காக , கொழுக் மொழுக் என இருக்கிறார் . அநியாயமாக அவரை சாகடித்து விட்டார்கள்
பால சரவணன் நாயகனின் நண்பன் ஆக வருபவர் பெரிய அளவில் காமெடி எல்லாம் செய்யவில்லை , ஆனால் பேசிக்கொண்டே இருக்கிறார்
பின் பாதியில் திருமணத்தை நிறுத்த முனையும் காமெடி வில்லன் ஆக சிங்கம் புலி கலகலப்பாகக்கலக்கி இருக்கிறார் . பொதுவாக வில்லன் எனில் கோபம் வரணும், ஆனால் நமக்கு சிரிப்பு வருகிறது
ஜெயப்பிரகாஷ் , விநோதினி , நிவேதிதா ராஜப்பன் என அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்
டி இமானின் இசையில் நான்கு பாடல்கள் .2 ஹிட் ஆகி விடும் .பின்னணி இசை சுமார் ரகம் தான் தியாகுவின் எடிட்டிங்கில் 127 நிமிடங்கள்படம் ஓடுகிறது .கடைசி 40 நிமிடங்கள் இழுவை .வி எஸ் ஆனந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் நாயகனின் தோழி , காதலி , மனைவி என மூவரையம் க்ளோஷப்பில் அழகாகக்காட்டி இருக்கிறார்
கதை , திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் சுசீந்திரன் .அவரது பழைய திறமைகள் பெரிதாக வெளிப் படவில்லை .அஸிஸ் டெண்ட் டைரக்டர்ஸ் அறியாக அமையவில்லை போல
சபாஷ் டைரக்டர்
1 மூன்று நாயகிகளை அழகாக கண்ணியமாகக்காட்டிய விதம்
2 சிங்கம் புலியின் காமெடி போர்சன் ( இந்தக்காமெடி டிராக்கை எழுதிக்கொடுத்தது யார் என தெரியவில்லை )
3 போர் அடிக்காமல் படம் நகர்ந்த விதம்
ரசித்த வசனங்கள்
1 12 வருசமா சினி பீல்டில் இருக்கீங்க , ஒரு கதை கூடவா ரெடி பண்ணலை ?
5 கதை ரெடி பண்ணினேன் , ஆனா பிரிஞ்சா இருக்குன்னாங்க
ஐயோ ராமா , அது பிரிஞ்ச் இல்லை கிரிஞ்ச்
2 என்னது > அவனை லவ் பண்றியா? மட் டமான டேஸ் ட் டா இருக்கே ?
3 பார்ட்டி பண்ண 5000 ரூபாய் கொண்டு வந்திருக்கேன்
கடைசில வீட்டுக்குப்போறப்ப மிச்ச காசுல பார்சல் வாங்கிட்டுப்போலாம்னுநினைச்சிருப்பியே?
ஆமா, எப்படித்தெரியும் >?
நீ கொண்டு வந்திருப்பதே மிச்சக்காசு தான்
4 எமோஷனல் சிச்சுவேஷன்ல லீகலாப்பார்க்கிறவன் மனுசனே இல்லை
5 நாம எவ்ளோ லவ்வைக்காண்பிக்கறோமோ அதே அளவு லவ்வை அவனும் காண்பிக்கணும்னு தான் எல்லாப்பொண்ணுங்களும் நினைப்பாங்க
6 கலப்புத்திருமணத்துக்குன்னு ஒரு மேட்ரிமோனியல் கிடையாது
7 பொண்ணு பிடிச்சிருக்கா?இல்லையா?
இன்னும் பொண்ணையே கண்ல காட் டலை யே?
8 லவ்வே பண்ணி இருந்தாலும் வீட்டில் மாப்பிள் ளை பார்த்தா அவங்க சொல்படி கேட்பவ தான் இந்த ஜெனரேஷன் பொண்ணுங்க
9 நம்மைக்கத்தியால குத்துனவனைக்கூட விட்டுடலாம், ஆனா லவ் பண்ணி ஏமாத்திட்டுப்போனவளை
விடவே கூடாது
10 லவ் பண்ற பொண்ணு நம்மை வேண்டாம்னு விட்டுட்டு விலகிப் போனாலும் அவ வாழ்க்கை நல்லா அமையட்டும்னு வாழ்த்துபவன் தான் உண்மையான காதலன், மனுஷன்
11 ஒரு பொண்ணு எந்தப்பழியையும் தாங்கிக்குவா , ஆனா தப்பே பண்ணாம தப்புப்பண்ணினதா பொய்ப்பழி சுமத்தினா தாங்கிக்கவே மாட் டா
12 இந்த ஆம்பளைங்க மேரேஜ்க்கு முன்னாடி வரை ஒரு முகமூடி போட்டிருப்பாங்க
13 வைப்பையா? அப்படின்னா?
நீங்க ஒய்பையே மறக்கற ஆளு
14 அடுத்தவங்க என்ன சொல்வாங்கன்னு யோசிச்சுக்கிட் டே இருந்தா நமக்கான வாழ்க்கையை நாம வாழவே முடியாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பிரியமான தோழி மாதிரி கதை போய்க்கிட்டு இருக்கு , மாத்துங்க என யாரோ சொல்லி இருக்க வேண்டும் டக்னு காதலியை சாகடிச்சுட்டு திரைக்கதையை டைவர்சன் எடுத்தது சரி , ஆனா அதை அழுத்தமாகக்காட்டலை
2 ஓப்பனிங் சீன்ல நாயகனின் காதலி ஐடியா கே க்கும்போது நாயகன் தரும் ஐடியா கற்பனை வற ட் சி
3 பின் பாதி டி வி சீரியல் பார்ப்பது போல நாடகத்தன்மையுடன் அமைந்தது
4 சிட்டிக்குள் அவன் பைக் நல்லா ஓட் ட மாடடான், காரில் போக சொல்லி இருக்கணும் என ஒருட யலாக் வருது . பைக்கே ஒழுங்கா ஓட் டாதவன் கார் எப்படி ஓட்டுவான் ?
4 நாயகியின் மென்சஸ் ஆகும் தேதி அம்மாவுக்குத்தெரியாது , ஆனா நன்பனுக்குத்தெரியும் என அம்மாவிடம் நாயகி பேசும் டயலாக் முகம் சுளிக்க வைக்கிறது நட் பின் பெருமையை சொல்ல இதுதான் வசனமா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - படம் கல கலப்பாகப் போகுது . பிரியமான தோழி பார்க்காதவர்கள் பார்க்கலாம், ரேட்டிங் 2.25 . 5 . விகடன் யூக மார்க் -40
2K Love Story | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Suseenthiran |
Written by | Suseenthiran |
Produced by | Vignesh Subramanian G. Dhananjayan (presenter) |
Starring | |
Cinematography | V. S. Anandha Krishna |
Edited by | Thiyagu |
Music by | D. Imman |
Production company | City Light Pictures |
Distributed by | Creative Entertainers & Distributors |
Release date |
|
Running time | 127 minutes[1] |
Country | India |
Language | Tamil |