Showing posts with label 2000. Show all posts
Showing posts with label 2000. Show all posts

Wednesday, November 21, 2012

2000 வது பதிவு - திருப்பூர் - ஆஸ்திரேலியா மினி ட்வீட்டப்

நால்வர் அணி

கோவை சதீஷ் , கானா ப்ரபா, சி.பி , ராஜ நாயகம் சார் 

கானா ப்ரபாவை பிளாகரா, ட்விட்டரா கொஞ்ச நாளா தான் பழக்கம். ஆனாலும்  நீண்ட நாள் நண்பர் போல் அவர் மேல் ஈர்ப்பு வர 3 காரணங்கள் . முதல் காரணம் அவர் ஒரு ஈழத்தமிழர். அவரை நேரில் சந்திச்சா அங்கே உண்மை நிலவரம் என்ன போன்ற நாம் அறியாத வரலாற்று உண்மைகள் அறியலாம்.  2 வது காரணம் யாருடனும் அவர் சண்டை போட்டு பார்த்ததே இல்லை, எல்லோருடனும் இணக்கமாக இருக்கும் கலகலப்பு பிரியர் . மூணாவது காரணம் முக்கியம் , இதுல கொஞ்சம் சுய  நலம். அதாவது என் சினிமா விமர்சனத்தில் பலர் கிண்டல் பண்ணுவது - இயக்குநருக்கு சில கேள்விகள்.அது பொதுவா அவங்க படிக்க எழுதுவது அல்ல, மக்கள் ரசிக்க எழுதுவது. ஆனால் பலரும் அது தேவையற்றது என சொல்லி வந்த வேலையில் இவர் தான் முதன் முதலாக அதை ரசித்து முன்னிலைப்படுத்தினார்.


ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இவர் ஒரு ரேடியோ ஜாக்கியா பணி ஆற்றி வருகிறார், நம்ம கோமாளி கோபி செல்வா கூட ரேடியோ ஜாக்கி ஆக வேண்டும் என்ற லட்சியம் உடையவர் தான்.இவரது கடுமையான உழைப்பு பற்றி நான் எப்போ அறிந்தேன் எனில் மவுன ராகம் படத்தின் பி ஜி எம் பற்றி அக்கு வேறு ஆணி வேறாய் இவர் அலசியது.அதுவரை இளையராஜாவின் இசை ரசிகனாக இருந்தவன் அப்பதிவு படித்த பின் நுணுக்கமாய் பலவற்றை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.பின்னணி இசை பற்றிய பல அரிய தகவல்கள் , கலெக்‌ஷன்கள் கிடைக்கப்பெற்றேன்.


அப்பேற்பட்டவர் சிட்னியில் இருந்து தனது தாயகமான யாழ்ப்பாணம் வர்றதா சொன்னதும் சந்திக்க உறுதி பூண்டேன்.அவர் தமிழகம் வந்து கோவை , கொச்சின் வர்றதாகவும் வழியில் ஈரோடும் வருவதாக அவரது 12 அத்தை பெண்கள் மேலும் சத்தியம் செய்திருந்தார்.ஆனா பாருங்க இடையில் என்ன ந்டந்ததோ  திடீர் என டாக்டர் ராம்தாஸ் போல் பல்டி அடிச்சுட்டார். ஈரோடு புரோகிராம் கேன்சல். கோவை , அல்லது திருப்பூரில் உனக்கு இஷ்டம்னா வந்து என்னை பார் அப்டின்னுட்டார்.


 ஒரு பிரபல பதிவர்னா ஒரு இது இருக்கனும் இல்லையா? அதனால அதை எல்லாம் நான் சகிச்சுக்கிட்டேன் .ஈரோடு டூ கோவை 100 கிமீ ஈரோடு டூ திருப்பூர்  42 கிமீ என்பதால் திருப்பூரில் சந்திக்க முடிவாச்சு . சென்னிமலையில் இருந்து காலை 6 மணிக்கு பஸ் ஏறி ஈங்கூர் போனேன். கோவை பாசஞ்சர் ஈரோட்டில் 7 மணிக்கு அது ஈங்கூர் வர 7.30 ஆகும். டிக்கெட் எடுத்து வெயிட்டிங்க்.. ஈங்கூர் டூ திருப்பூர்  32 கிமீ அதுக்கு ரயில் டிக்கெட் ஜஸ்ட் அஞ்சு ரூபாதான் , அதே எக்ஸ்பிரஸ்னா 28 ரூபா , ரிசர்வ்ல வந்தா 46 ரூபா .


ஹோம் மினிஸ்டர் கால் .பம்மும் பிரபா

ஹோம் மினிஸ்டரிடம் பம்மும் கானா 


காலை 8.40 க்கு திருப்பூர் போய் சேர்ந்தேன். ஆகாய மனிதன் என பிளாக்கிலும், ஒன்லி 1 என ட்விட்டரிலும் அக்கவுண்ட் வெச்சிருக்கும் அண்ணன் யுவராஜ் ரெடியாக ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தார். எனக்கு ரொம்ப சந்தோஷம். பொதுவா நமக்காக ஒருவர் காத்திருக்கிறார் என்பதே மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் தானே?


சரவண பவன் ஹோட்டல்ல டிஃபன் சாப்பிட்டோம் .அண்ணன் 2 இட்லிதான் சாப்பிட்டார் ( ஹன்சிகா இட்லி ) நான் வழக்கமா 3 ரோஸ்ட் ,  ஒரு பொங்கல் சாப்பிடும் ஆளாக இருந்தாலும் கண்ணு பட்டுடக்கூடாது என்பதால் ஒரே ஒரு ரவா ரோஸ்ட்டும் , ஒரு பொங்கலும் மட்டும் சாப்ப்பிட்டுட்டு  டைம் பார்த்தா காலை 9 மணி . அண்ணன் கானாப்ரபா 10 மணிக்கு வருவதாக சொல்லி இருந்தார் .



 ஒரு மணி நேரம் வெட்டி அரட்டை அடித்தோம் .என் மொபைல் சார்ஜ் அங்கே ஹோட்டல்லயே போட்டுக்கிட்டோம் . சார்ஜ் போட்டுக்குடுத்த ரிசப்ஷனிஸ்ட் கோமதிக்கு கோடானு கோடி நன்றி ;-))

எம் ஜி ஆர் மாதிரி அட்டகாசமாய் காரில் வந்து இறங்கினார்  அண்ணன் கானாப்ரபா . ஹிந்திப்பட ஹீரோ மாதிரி முகம். ஐ டெக்ஸ் மையின் கலரில் கன்னங்கரேல் என்ற முடி . 38 வயசாகியும்  ஒரு நரை முடி கூட இல்லை என்பது பொறாமை தருவதாகவும், ஏமாற்ற மாகவும் இருந்தது,. ஏன்னா எனக்கு 5 வருஷம் முன்னாடியே அதாவது 25 வயசுலயே நரை முடி வந்துடுச்சு  ( டேய் நாயே அது இள நரை இல்லை, கிழ நரை )



ராஜநாயகம் சார் தன் திரைத்துறை அனுபவங்களை நவரசத்துடன் விளக்குகிறார்

ராஜ நாயகம் சார்   கோவை சதீஷ் , கானா ப்ரபா,  ஆகாய மனிதன் யுவராஜ்

காரை விட்டு இரங்கும்போதே அவருக்கு ரசிகையிடம் இருந்து ஃபோன் . ( ஏன்னா அண்ணன் வெட்கச்சிரிப்போட பம்மிக்கிட்டே பேசினாரு )கூட அவருடன் வந்தது கோவை சதீஷ் ட்விட்டர்ல சே சதீஷ் . ட்விட்டர்ல பல சீரியஸ் கருத்துக்கள் எல்லாம் போடுவாரு . ஆனா ஆள் நேரில் செம ஜாலி டைப்பாக இருந்தார்.


 அருகாமையில் உள்ள பார்க்குக்கு போனோம் .மூவரும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம் . இலங்கைப்பிரச்சனை  , எம் ஜிஆர் ஆதரவு  , ஜெயின் கமிஷன் என விவாதம் வளர்ந்தது .


 கானாப்ரபாவை பேசவே விடாமல் கோவை சதீஷ் அடிக்கடி இடை மறித்து தன் விவாதத்தை சூடாக முன் வைத்தார் .


 அடுத்து வந்தவர்  சினிமாத்துறையில் உதவி  இயக்குநராகப்பணி ஆற்றிய ராஜநாயகம் சார். வாட் எ மேன்? மிமிக்ரி , மோனோ ஏக்டிங்க்  என ஆள் நவரச நடிப்பையும் , நாகேஷின் பாடி லேங்குவேஜையும் சந்திர பாபுவின் வேகத்தையும் ஒருங்கே பெற்றிருந்தார். கொங்கு மண்டலத்தில் இருந்ப்பவர்கள் அவசியம் அவரை சந்திச்சுடுங்க.. அரிதான மனிதர் , சுவராஸ்யமான பொக்கிஷ தகவல்கள் அவரிடம் கொட்டிக்கிடக்கு.



கே பாக்யராஜ் அவர்களிடம் அவர் ராசுக்குட்டி படத்தில் பணி ஆற்றிய சம்பவங்களை அவர் நினைவு கூர்ந்தார் . திரை உலகின் கறுப்புப்பக்கங்கள் , நீலப்பக்கங்கள் , பச்சைப்பக்கங்கள் அனைத்தும் பகிர்ந்தார் . 


 நீங்க ஏன் சினி ஃபீல்டுல சைன் பண்ணாம இங்கே வந்துட்டீங்க?


 ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் கதை தான். என்னை மாதிரி ஆட்களுக்கு சி நி ஃபீல்டு ஒத்து வர்லை


 பாக்யராஜ் சார்  உங்களுக்கு சம்பள விஷயத்துல நல்லா கவனிச்சுக்கிட்டரா?


 அதுல எல்லாம் குறை வைக்கலை..

 இல்லை, எதுக்கு கேட்கறேன்னா பாக்யா வார இதழ்ல் படைப்பாளிகளூக்கு சன்மானம் தர்றதில்லை, விசாரிச்சதுல வேட்டியை மடிச்சுக்கட்டு பட தோல்வியின் காரணமா ஏராளமாம்ன நட்டத்தை அவர் சந்திச்சார்னும் அதனால தான் சன்மானம் தர முடியலைன்னு சொன்னாங்க. அவர் வெற்றிகொடி நாட்டிய தருணங்களில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டாரா?


 அதுல ஒண்ணும் பிரச்சனை இல்லை. கூட இருந்தவங்க பலருக்கும் என்னை பிடிக்கலை,. பல காலம் ஆபீஸ் பாயாக இருந்து படிப்படியாக உதவி இயக்குநர் ரேஞ்சுக்கு வந்தவங்களால டக்னு மேலே  வந்த என்னை பிடிக்காம போயிடுச்சு


கானாப்ரபாவிடம் தனது 365 காதல் கடிதங்கள் நகல் அளிக்கும் ராஜநாயகம் சார்
சத்திய மூர்த்தி சார் ,பரிசல் , ராஜ நாயகம் சார்   , ஆகாய மனிதன் யுவராஜ்,கானாப்ரபா,   கோவை சதீஷ்

அவர் கூட ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.


 அடுத்து பரிசலுக்கு ஃபோனை போட்டு வர்லியா?னு கேட்டோம். 12 மணிக்கு கிளம்பி வர்றதா சொன்னார் . யூ ட்யூப்பில் சினிமா விமர்சனம் செய்யும் அவினாசி இட்ஸ் பிரசாந்த்க்கும் தகவல் சொல்லியாச்சு .



தனியா அனுப்பினா எங்கே போவாரோ என்றோ அல்லது தற்செயலாகவோ பரிசல் தன் இரு மகள்களின் கண்காணிப்பில் வந்தார் .  பைக்கில் வந்திருந்தார்.


 அவர் வந்ததும் விவாதம் சூடு பிடித்தது . ராஜன் பிரச்சனை குறித்து விரிவாக விளக்கினார். கானாப்ரபா ராஜனுடன் ஃபோனில் நலம் விசாரித்தார்.


பின்  பரிசல் ( இவர் பல வருடங்களுக்கு முன்  உல்லாச ஊஞ்சல் , உங்கள் ஜுனியர் மாத இதழ்களில் கே பி கிருஷ்ணகுமார் , உத்தம பாளையம் , திருப்பூர் என்ற பெயரில் கவிதை எழுதி வரும்போதே  பழக்கம் ) ஆஃபீஸ் வேலையாக தன் கம்பெனிக்கு தொழிலாளர்களை கமிஷன் பேஸில் அழைத்து வர ஒரிசா சென்ற அனுபவத்தை பகிர்ந்தார்.

அது 'கே.பி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணாபுரம் இல்லீன்னா உடுமலைப்பேட்டை இல்லீன்னா திருப்பூர் -ன்னு வரும்.   - பரிசல் பதில் ;-))


  ரத்த தானம் ,  உடல் தானம் , சில கேர்ள் ஃபிரண்ட்ஸ்களுக்கு முத்த தானம் என எல்லா தானமும் செய்த அவர் இணைய உலகில் முதன்  முதலாக லேப்டாப் தானம் செய்த சுவராஸ்யமான சம்பவத்தை திரைக்கதையுடன் விளக்கினார். அவர் கதை சொன்ன முறை சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்றே உணர்வைத்தந்தது .



சத்திய மூர்த்தி என்னும் ட்விட்டர் நண்பர் வந்தார். அவர் அறிமுகம் அப்போதுதான் . என்ன ஆச்சரியம் என்றால் அவர் ஆகாய மனிதன் யுவராஹின் அப்பாவின் நண்பர். அங்கே தான் அறிமுகத்தில் தெரிந்தது. முகவரி படத்தில் பால குமாரன் எழுதிய வசனத்தை ரகுவரன் சொன்னது நினைவு வந்தது  - இந்த உலகம் ரொம்ப சின்னது ,இங்கே நல்லவங்க சந்திச்சே ஆகனும் “


 அப்புறம் 1 மணி வரை பேசிக்கிட்டு இருந்தோம் . ஹோம் மினிஸ்டரிடம் இருந்து ஃபோன் வரும்போது மட்டும்  கானாப்ரபா பம்மிக்கொண்டே தனியே போய் பேசி வந்தார் .

 ஆனானப்பட்ட பரிசலே தன் மனைவியிடம் இருந்து ஃபோன் வந்த போது பம்மியது செம காமெடியாக இருந்தது, வீட்டுக்கு வீடு  வாசப்படி .


 பின் பரிசல் விடை பெற்றார்.  ராஜ நாயகம் சார் கிளம்பினார். அனைவருக்கும் கானாப்ரபா 18 வகை இனிப்புகள் கொண்ட கோவையில் வாங்கிய ஸ்வீட் பாக்சை  பரிசாக அளித்தார். எல்லா ஸ்வீட்டும் இருந்துது, ஆனா அல்வா மட்டும் இல்லை , கேட்டதுக்கு “ என்னய்யா விபரம் தெரியாத ஆளா இருக்கே..  அல்வான்னாலே அது பொண்ணுங்களுக்கு தர்றதுக்குத்தானே? என்றார்.


எங்கப்பா சின்ன வயசுல சினிமாப்ரியராக இருந்தார், நாலணாவுக்கு விற்கும் சினிமாப்பாட்டுப்புத்தகங்களை வாங்கி சேகரித்து வைத்திருந்தார். அபூர்வமான கலெக்சன். 100 புக்ஸ் கொண்ட பைண்டிங்க் புக்ஸாக 10 புக்ஸ் மொத்தம் 1000 பாட்டுப்புத்தகங்கள் இருந்தன. அவை 1960 - 1970 இல் வந்த படங்கள்.


 பேசிக்கலாக கானாப்ரபா பாடல் , இசை ரசிகர் என்பதால் அவருக்கு பாட்டுப்புத்தகங்கள் பரிசாக அளிக்க நினைத்தேன். ஆனால் மனசில் ஒரு தயக்கம். பழைய பாட்டுபுக் என அவர் ஏதாவது நினைப்பாரா? என . அப்படி ஏதும் நினைக்கவில்லை. மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். எனக்கு மிக்க மகிழ்ச்சி , எங்கப்பாவின் அபூர்வ கலெக்‌ஷன்  சிட்னியில் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை .


பின் லஞ்ச் சாப்பிட   அவினாசி ரோட்டில் உள்ள  சரவண பவன் போனோம். சாப்பாடு காலி,. வெரைட்டி மீல்ஸ் , டிஃபன் அயிட்டம்தான் . வெஜிடபிள் ஃபிரைடு ரைஸ் , தக்காளி சாதம் , தயிர் சாதம்  ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம் .

 ட்வீட் லாங்கர் சாப்பாடு என கமெண்ட் போட்டு அதை ஃபோட்டோ எடுத்து ட்விட்டரில் கானாப்ரபா போட்டார்.


 அப்போ பிரசாந்த் வந்தார். ஆள்  ட்விட்டர் டி பி யில் அப்பாவி மாதிரி முகத்தை வெச்சிருந்தாலும் நேரில் தாதா போல் ஆஜானுபாவத்துடன் இருந்தார். அவர் உள்ளங்கை முறம் போல் இருந்தது , ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் . அவருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம் .


 பிரியும் நேரம் வந்தது . எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு நானும் யுவராஜும்  திருப்பூர் ரயில் நிலையம் வந்தோம் . அப்போ  மாலை 3. 4 மணிக்கு ரயில் . உள்ளே வந்து ஒரு மணி நேரம் கம்பெனி குடுத்தார். பின் ரயில் வந்ததும் கிளம் பியாச்சு


 அனைவருக்கும் நன்றி !!!