20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கபப்ட்டு 66 கோடி ரூபாய் வசூல் செய்த மாபெரும் வெற்றிப்படம் இது . 69 வது ஃபிலிம் ஃபேர் விருது விழா நிகழ்வில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் உட்பட 12 பிரிவுகளில் நாமினேட் ஆன படம் . ஐ பி எஸ் ஆஃபீசர் ஆன மனோஜ் குமார் சர்மா பற்றிய உண்மை வரலாற்று நிகழ்வு ஆக நான் ஃபிக்சம் நாவல் ஆக 2019ல் அனுராக் பதக் எழுதியதைத்தழுவி எடுக்கப்பட்ட படம் இது திரைக்கதை எழுதி இயக்கியவர் விது வினோத் சோப்ரா
சினிமா உலகில் டைட்டில் வைப்பதில் கூட செண்ட்டிமெண்ட் பார்ப்பார்கள். திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் படங்களான ஒரு கை ஓசை , சுவர் இல்லாத சித்திரங்கள் , விஜய்காந்த் நடித்த ஊமை விழிகள் , ரஜினி நடித்த புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆவதற்கு முன் டைட்டில் நெகடிவாக இருக்கே? என்ற தயக்கம் பலருக்கும் இருந்தது , ஆனால் அந்த செண்ட்டிமெண்ட்சை எல்லாம் உடைத்து படங்கள் வெற்றி பெற்றன. அதே போல் தான் இதுவும் டைட்டிலில் ஃபெயில் என இருந்தாலும் மெகா வெற்றி பெற்ற படம்
த்மிழில் ரிலீஸ் ஆன வசூல் ராஜா எம்பி பிஎஸ் -ன் ஒரிஜினல் வெர்சன் ஆன முன்னாபாய் எம் பி பிஎஸ் , நண்பன் படத்தின் ஒரிஜினல் வெர்சன் ஆன த்ரீ இடியட்ஸ் ஆகிய படங்களை தயாரித்து திரைக்கதை எழுதிய விது வினோத் சோப்ராவின் படைப்பு இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாய\கனின் அப்பா ஒரு அரசு ஊழியர். நேர்மையான குணம் உடைய அவர் ஆஃபீசில் வஞ்சிக்கப்படுகிறார், ஊழலுக்கு துணை போக மறுத்ததால் பொய்யான குற்றச்சாட்டை வைத்து அவரை சஸ்பெண்ட் செய்கிறார்கள் . அவர் கோர்ட்டில் கேஸ் போட்டு நியாயத்துக்காகப்போராடிக்கொண்டிருக்கிறார்
நாயகன் இருக்கும் ஊர் கொள்ளையர்களுக்குப்புகழ் பெற்ற சம்பல் பள்ளத்தாக்குப்பகுதி. அங்கே ஸ்கூலி ல் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்களே தேர்வில் காப்பி அடிக்க உதவி செய்கிறார்கள் . நாயகன் ஸ்கூல் எக்சாம் எழுதிக்கொண்டிருக்கும்போது செக்கிங் ஆஃபிசர்ஸ் வரும்போது நாயகன் உள்ளிட்ட மாணவர்கள் காப்பி அடிப்பதைபார்த்து ரிப்போர்ட் அடித்து அனைவரையும் ஃபெயில் ஆக்கி விடுகிறார்
ஒரு அதிகாரி நாயகனுக்கு அறிவுரையும் கூறுகிறார். காப்பி அடிகக்கூடாது . நேர்மையாக படித்து பாஸ் செய்ய வேண்டும் என்கிறார். அவரைப்போலவே நேர்மையான அதிகாரி ஆக ஆகவேண்டும் என் உறுதி எடுத்த நாயகன் தன் பொருளாதார சிக்கல்களுக்கு நடுவில் போராடி எப்படி வெற்றி பெற்றான் என்பது தான் மீதி திரைக்கதை
ஒன் லைன் ஆகக்கேட்கும்போது டாக்குமெண்ட்ரி ஸ்டைலில் இருந்தாலும் திரைக்கதை ,மேஜிக்கா ல் சுவராஸ்யமான படம் ஆக்கி இருக்கிறார்கள் . இதில் ந்ட்பு , காதல் எல்லாம் உண்டு
நாயகன் ஆக விக்ராந்த் மான்சோ பிரமாதமாக நடித்திருக்கிறார். பல இடங்களில் பல வேலை பார்த்துக்கொண்டே படிக்கும் இடம் ஆகட்டும் , இண்ட்டர்வ்யூ அட்டெண்ட் பண்ணும் காட்சி ஆகட்டும், காதலியிடம் உருகும்போது ஆகட்டும் நடிப்பின் பல பரி,மாணங்களை வெளிப்படுத்தூகிறார்
நாயகி ஆக மேதா சங்கர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் . நாயகனை உத்வேகபப்டுத்தும் காட்சிகளில் மிளிர்கிறது அவர் நடிப்பு
நாயகனின் அம்மாவாக வரும் கீதா அகர்வால் , நண்பன் ஆக வரும் ஆனந்த் ஜோஷி , மற்றவர்களின் வெற்றிக்கு உதவுபவராக வரும் அன்ஷூமான் ஆகியோர் நடிப்பும் அருமை
சாந்தனு மோயித்ராதான் இசை . பாடல்கள் , பின்னணி இசை இரண்டும் சிறப்பு . ரண்டராஜன் ராமபத்ரன் ஒளிப்பதிவில் கலக்கி இருக்கிறார். நாயகிக்கான க்ளோசப் ஷாட்கள் கொள்ளை அழகு . 146 நிமிடங்கள் படம் ஓடும்படி எடிட் செய்து இருக்கிறார்கள்
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் விது வினோத் சோப்ரா
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் இண்ட்டர்வ்யூ ஆட்ட்டெண்ட் பண்ணும் காட்சி படத்தின் ஹை லைட் சீன். பிரமாதமாக அமைந்திருக்கிறது
2 ப்டம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நாயகன் எப்ப்டியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் விதத்தில் திரைக்கதை அமைத்த விதம் அட்டகாசம்
3 படத்தில் வரும் பெரும்பாலான கேரக்டர்கள் டிசைன் செய்த விதம், அவர்கள் நடிப்பு கச்சிதம்
4 டெரரிசம் டூரிசம் சொல் குழப்பத்தால் நாயகன் தேர்வில் தோல்வி அடையும் காட்சி நன்றாக இருந்தது
ரசித்த வசனங்கள்
1 நியாயமானவங்க பதவில இருந்தா நேர்மைக்கு மதிப்பு இருக்கும்
2 குறுக்கு வழில வர்ற பணத்தை செலவு பண்றதுல தனி சந்தோஷம் இருக்கு
3 என்னோட விருப்பத்தை அப்பா கிட்டே சொல்ல தைரியம் வர்லை
அம்மா கிட்டே சொல்லி இருக்கலாமே?
அம்மா இருந்திருந்தா சொல்லி இருப்பேன், இல்லையே?
4 அம்மா செத்தது கூடத்தெரியாம நான் போராடிட்டு இருந்திருக்கேன்
5 வெளில இருக்கும் இருட்டுக்குப்பயப்படாதவன் உள்ளே இருக்கும் இருட்டு பழகிடும்
6 ரொம்பப்பெரிய பொய்யை நீ ஈசியா சொல்றே , பேசாம நீ டிவி ரிப்போர்ட்டரா சேர்ந்துடு
7 இந்த உலகத்தில் இருக்கும் எல்லாப்பொண்ணுங்களும் ஒரே மாதிரி தான் . ரெண்டு நிமிசத்தில் நம்மை விட்டுட்டுப்போய்டுவாங்க
8 நான் ஐ லவ் யூ சொன்னா இந்த உலகத்தையே திருப்பிப்போடுவேன்னு அன்னைக்கு சொன்னியே போ உலகத்தைத்திருப்பிப்போடு
9 இது உன்னோட போராட்டம் இல்லை , நம்மோட போராட்டம் , நம்மள்ல ஒருத்தன் ஜெயிச்சுட்டா நாம எல்லாரும் ஜெயிச்ச மாதிரி
10 எட்டு நிமிசம் 20 செகண்ட்ஸ்ல உன்னை சாப்பிடச்சொன்னாங்க, ஏன்னா அப்போதான் டைம் மெயிண்ட்டெய்ன் பண்ண முடியுமாம்
11 என் வாழ்க்கைல முதல் முறையா ஒரு போலீஸ்காரன் தான் வாங்குன லஞ்சத்தை திருப்பித்தர்றான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் நாயகியைத்தேடி அவள் வீட்டுக்குப்போகும்போது நாயகி ஃபோனில் பேசும்போது நாயகனை நோஸ்கட் கொடுத்து அனுப்பி வ்டுகிறா ள். அந்தக்காட்சியில் நாயகியின் குரல் மட்டுமே ஒலிக்கிறத் . நாயகியை விஷூவலாகக்காட்டி இருக்க வேண்டும்
2 நாயகி நாயகனை முதலில் அவமானப்படுத்தி அனுப்பி விட்டு பின் ஒரு நாளில் அதற்கு சாரி கேட்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை . திடீர் என என் வீட்டுக்கு வந்ததால் அப்படி செய்து விட்டேன் என சொல்வதும் நம்பும்படி இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அனைத்து மாணவர்களும், பெற்றோர்களும் தவற விடாமல் பார்க்க வேண்டிய சிறந்த படம் . நாவல்கள் , சிறுகதைகள் படிப்பதை விட வெற்றி பெற்றவர்களின் சுய சரிதை நூல்களை நாம் அதிகம் படிக்க வேண்டும், ஆனால் லைப்ர்ரியில் அவை புத்தம்புதிய புத்தகங்களாக கேட்பார் இன்றி ரேக்கில் கிடக்கின்றன. ரேட்டிங் 3. 5 / 5
12th Fail | |
---|---|
Directed by | Vidhu Vinod Chopra |
Written by | Vidhu Vinod Chopra Jaskunwar Kohli |
Based on | 12th Fail by Anurag Pathak |
Produced by | Vidhu Vinod Chopra Yogesh Ishwar |
Starring | |
Narrated by | Anant V Joshi |
Cinematography | Randarajan Ramabadran |
Edited by | Jaskunwar Kohli Vidhu Vinod Chopra |
Music by | Shantanu Moitra |
Production company | |
Distributed by | Zee Studios |
Release date |
|
Running time | 146 minutes[1] |
Country | India |
Language | Hindi |
Budget | ₹20 crore[2] |
Box office | est. ₹69.64 crore[3] |