Showing posts with label .JEYALALITHA. Show all posts
Showing posts with label .JEYALALITHA. Show all posts

Wednesday, November 07, 2012

முரசு சின்னத்தை முடக்கும் முயற்சியில் ஜெ வின் மாஸ்டர் பிளான்

திகைப்பில் தே.மு.தி..

மூழ்குகிறதா கேப்டன் ஷிப்!

ப்ரியன்

‘கல்கி’ 7.10.12 இதழ்பாலிடிக்ஸ் பஜார்பகுதியில்கேப்டனுக்கு பை...பை...’ என்ற செய்தி வெளியிட்டிருந்தோம். அதில்ஒன்பது தே.மு.தி.. எம்.எல்..க்கள் ...தி.மு..வில் சேருவது குறித்து ஊசலாட்டத்தில் இருப்பதாகவும், ஆனால் அவர்களை ராஜினாமா செய்துவிட்டு வருமாறு ஜெயலலிதா சொல்வதாகவும்குறிப்பிட்டிருந்தோம்.  


அதைத் தொடர்ந்து ஒரு தே.மு.தி.. எம்.எல்.. நம்முடன் தொடர்பு கொண்டார். மீடியா ஜெயலலிதா கட்டளைப்படி தே.மு.தி..வைப் பிளக்கும் வகையில் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் அந்தச் செய்தியில் உண்மையில்லை," என்றார். சரியாக அடுத்த பதினைந்து நாட்களுக்குள் நான்கு தே.மு.தி.. எம்.எல். .க்கள்தொகுதி நலன்என்பதை முன்னிறுத்தி ஜெயலலிதாவைச் சந்திக்க, தமிழக அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டது. விஜயகாந்த் தரப்பு பதறிப் போனது.


சட்டசபையில் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நேரடி மோதல் ஏற்பட்டது. ‘உன்னாலே நான் ஜெயித்தேனா; என்னால நீ ஜெயித்தாயா?’ என்ற பிரச்னைதான். அதற்கு சில நாட்கள் முன் பிருந்தே தே.மு.தி.. எம்.எல். .க்கள் ஒரு விரக்தியாகத்தான் இருந்தார்கள்


 முதல் காரணம் .தி.மு..- தே.மு.தி.. நெருக்கம் அடிபட்டவுடன், தொகுதியில் அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் அன்னியர்களாகிவிட்டனர். அரசின் எல்லா மட்டங்களிலும் போலீஸ் ஸ்டேஷன் உட்பட, தே.மு.தி.. எம்.எல்..க்களை ஒரு பொருட்டாக யாரும் மதிக்கவில்லை. அதே சமயம் கட்சிக்குள்ளும் புகைந்து கொண்டிருந்தது. சென்ற பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகளின் பதவிகள் பிடுங்கப்பட்டு, கட்சி தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கட்சித் தேர்தலில் மாவட்ட அளவில் சுதந்திரமாக நடத்துவதற்கு மாறாக மேலிடத்திலிருந்து ஆட்கள் திணிக்கப்பட்டனர். ‘இன்னாரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்என்று ஆணை வந்தது. கேப்டனின் மச்சினர் சுதீஷ் வழிகாட்டுதல்படி சந்திரகுமார், பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகிய மூன்று பேர் கொண்ட குழு கட்சியில் எதேச்சாதிகார நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனவே எரிச்சலில் இருந்தார்கள் எம்.எல்..க்கள்


 ஒரு பக்கம் அரசின் ஆதரவு இல்லாமல் எந்தவளர்ச்சிப் பணிகளும்செய்ய முடியாத நிலை; மற்றொரு பக்கம் கட்சியில் அரங்கேறிய சர்வாதிகாரம்," என்று புட்டு வைத்தார் ஒரு தே.மு.தி.. எம்.எல்.. தவிர அடிக்கடி எம்.எல்..க்களை ஒருமையில் திட்டுவதும், அடிக்க வருவதுமான சில நிகழ்ச்சிகள். பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற அனுபவஸ்தர்களின் யோசனைகளுக்கு செவிசாய்க்காத நிலை.

இந்த யதார்த்த நிலையை உணர்ந்து கொண்ட .தி.மு.. காய்களை நகர்த்தத் தொடங்கியது. ஜாதிச் சங்கத் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், ஏன் அமைச்சரவையிலேயே மிகவும் சீனியர் அமைச்சர் உட்பட எங்கள் எம்.எல்..க்களுக்கு வலை வீசத் தொடங்கினார்கள்


 அவர்களின் நோக்கம் இரண்டு. ஒன்று: எம்.எல்..க்களை இழந்து விஜயகாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பறிப்பது. அடுத்த வருடம் நடக்க இருக்கும் ராஜ்ய சபை உறுப்பினர் தேர்தலில் தே.மு.தி.. தரப்பிலிருந்து யாரையும் தேர்ந்தெடுக்க முடியாத நிலையை உருவாக்குவது. இப்போது நான்கு எம்.எல்..க்கள்தான் வெளிப்படையாக வந்திருக்கிறார்கள். இன்னமும் அரை டஜன் எம்.எல்..க்கள் பாதை மாறி பயணம் செய்ய இருக்கிறோம்," என்கிறார் ஊசலாட்டத்தில் இருக்கும் ஒரு எம்.எல்.. எங்களை தார்மிக ரீதியாக கேள்வி கேட்க முடியாத நிலையில்தான் விஜயகாந்த் இருக்கிறார்," என்றார் அவர். தே.மு.தி.. விலிருந்து எம்.எல்..க்களை இழுப்பது தேவையற்ற வேலை என்ற கருத்தும் .தி. மு..வில் இருக்கிறது. விஜயகாந்துக்கு அனுதாபம் வரும்," என்கிறார் ஒரு ஆளும் கட்சி பிரமுகர்.



இப்போது வெளிப்படையாக வந்த சில எம்.எல்..க்களுக்கு வேறு காரணங்களும் இருக்கின்றன. உதாரணமாக திட்டக்குடி எம்.எல்..தமிழரசன் மீது பல கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. மதுரைத் தொகுதி சுந்தர்ராஜன் விஜயகாந்துக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். தவிர, தே.மு.தி..வின் பொருளாளர். பல சொத்துக்கள் இவர் பெயரில் வாங்கப்பட்டதாம். ஆனால் சமீப காலங்களில் இவர் ஊசலாடுவதால் இவர் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் மாற்றி எழுதப்பட்டதாகவும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்தச் சூழலில்தான் தொடர்ந்து கட்சியில் நீடிக்க முடியாது என்று காய்களை நகர்த்தினாராம் அவர்.

வீட்டைக் காலி செய்யும்போது உரிமையானவர்களுக்குச் சொந்தமானதை விட்டுச் செல்ல வேண்டும்," என்று தே.மு.தி.. எம்.எல்.. சந்திரகுமார் கட்சி மாறப்போகும் எம்.எல்..க்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது ராஜினாமா செய்துவிட்டுப் போக வேண்டுமாம். ஆனால் அதற்குப் பதிலடியாக சுந்தர்ராஜன், .தி.மு.. தயவில் வென்றதால் நாம் அனைவருமே ராஜினாமா செய்வோம்" என்று சொல்லியிருக்கிறார்.


 கூட்டணி அமைத்துப் போட்டியிடும்போது குறிப்பிட்ட கட்சியால்தான் வென்றோம் என்று சொல்வது சரியல்ல; 2006 முதல் இன்றுவரை பார்த்தால் தே.மு.தி..வுக்கென்று எட்டு முதல் பன்னிரண்டு சதவிகிதம் வோட்டுக்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே பல .தி.மு.. எம்.எல்..க்களும் வெற்றிபெற தே.மு.தி.. செல்வாக்கும் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.


தே.மு.தி..வின் ஆதரவு தளத்தை மூன்று விதமாகப் பிரிக்கலாம். நடிகர் விஜயகாந்தின் ரசிகனாக இருந்தவர்கள், இரண்டு கழகங்களுமே வேண்டாம் என்று ஆதரித்தவர்கள்; ஜெயலலிதா தலைமையை ஏற்காத எம்.ஜி.ஆர். தொண்டர்கள். ‘கடவுளிடமும் மக்களிடமும் தான் கூட்டணிஎன்று சொல்லி வந்தவர், .தி.மு. .வுடன் கூட்டணி அமைத்தவுடன், ‘கழகங்கள் வேண்டாம்என்ற நிலைப்பாட்டில் விஜயகாந்த்தை ஆதரித்தவர்கள் வெறுத்துப் போனார்கள். அடுத்து விஜயகாந்திடம் கொஞ்சமாக இருக்கும் எம்.ஜி.ஆர். வோட்டு வங்கியைப் பிடுங்கும் விதமாகத் தான் அவரை தி.மு..வை நோக்கித் தள்ளுகிறார் ஜெயலலிதா.



 தனியாக நின்று பல தோல்விகளைச் சந்தித்த நிலையில் அரசியலில்மிதக்கவேண்டுமென்றால் பதவிகள் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டுதான் .தி.மு..வுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். அவர் தனியாக நின்று வோட்டைப் பிரிப்பது நல்லது என்றே இரு கழகங்களும் எண்ணி வந்தன. ஒரு கழகத்தோடு கூட்டணி அமைத்த நிலையில் மற்றொரு கழகத்தோடும் கூட்டணி அமைப்பதில் விஜயகாந்துக்கு இனி எந்தத் தயக்கமும் இருக்காது. தனியாக நின்று வோட்டுக்களைப் பிரித்தாலும் சரி, தி.மு..வோடு கூட்டணி அமைத்தாலும் சரி, தமக்கு ஆதாயம் என்றே ஜெயலலிதா இப்போது கருதுவதாகத் தெரிகிறது.



இந்தச் சூழலில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமதுவீட்டைசரி செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கிறார் விஜயகாந்த். முதலில் அவர் விட வேண்டியது முன்கோபம். தமது வேட்பாளரையே அடிப்பது, எம்.எல்..க்களை, தொண்டர்களைத் திட்டுவது, தேர்தல் பிரசாரத்தில் மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது என்று விஜயகாந்த்தமக்கெனஒரு பாணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இது நடுநிலை மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.


விஜயகாந்தை குமுறவும், கொந்தளிக்க வைப்பதும் மிகச் சுலபம். கட்சித் தொடங்கி இது எட்டாவது வருடம். முதல் நான்கைந்து வருடங்களில் தொண்டர்களோடு நன்கு பழகி வந்தார். கிராமத்தில் இருந்த சில தொண்டர்களைக் கூட பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கம் இருந்தது. இதற்குக் காரணம் மறைந்த பொதுச் செயலாளர் ராமு வசந்தன். கேப்டனின் ரசிகர்களையும் கேப்டனையும் ஒருங்கே இணைத்து கட்சிக் கட்டமைப்பை நன்கு வைத்துக் கொண்டிருக்க உதவியாக இருந்தார்.



 ஆனால் அவர் மறைந்த பிறகு குடும்பம் முன்னணிக்கு வந்தது. அதனால் பல பிரச்னைகள். அண்ணியார் (பிரேமலதா) பிரசாரம் கட்சிக்கு உதவியாக இருக்கிறது என்றாலும் மச்சினரைப் போல அவரும் ஒரு அதிகார மையமாக உருவானார். நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது கேப்டனின் கப்பலில் ஓட்டை விழுந்திருப்பது தெரிகிறது.


 கொள்கை அடிப்படையில் விஜயகாந்தைத் தலைவராக ஏற்றுக் கொண்டு தொடரும் சூழல் இல்லை. அவரது பெரும்பான்மை ஆதரவு தளமான ரசிகர்களின் எண்ணிக்கையும் இனி வளரப் போவதில்லை. காரணம் திரையுலகம் அவர் கையை விட்டுப் போய்விட்டது. இந்த நிலையில் தே.மு.தி.. கப்பலில் விழுந்த ஓட்டை இன்னமும் பெரிதாகும் வாய்ப்பே அதிகம்," என்றார் ஊசலாட்டத்தில் உள்ள மற்றொரு எம்.எல்..




தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களின்போது வெளியே சென்று அவர்கள் சிலைகளுக்கு மரியாதை செய்யாமல், கட்சி அலுவலகத்திலேயே படத்துக்கு மாலை போட்டு, தன்னை சுருக்கிக் கொண்டார்.


அரசியல் ரீதியாகப் பார்த்தால் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு மட்டும் தமது நெருக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.., தே.மு.தி.., காங்கிரஸ், சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள் என்ற அணி உருவாக நல்ல வாய்ப்பு இருப்பதாகவே இப்போதைய சூழலில் கருதப்படுகிறது



 இந்த வலுவான கூட்டணியை எதிர்க்க தன்னுடன், .தி.மு.., பா..., சி.பி.. ஆகியோரைச் சேர்த்துக் கொள்வார் ஜெயலலிதா. பலமான கூட்டணி காரணமாக விஜயகாந்த் நாடாளுமன்றத்தில் ஒரு சில இடங்களைப் பிடித்தாலும் நீண்டகால நோக்கில் பார்க்கும்போது தமது செயல்பாடுகளையும், யுக்திகளையும் புத்திசாலித்தனமாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தில் அவர் இருக்கிறார் என்பதே யதார்த்தநிலை.  



அந்தச் சூழலில் எதிர்காலத்தில் தி.மு..வை ஓரங்கட்டிவிட்டு, உண்மையான எதிர்க்கட்சியாக வர விஜயகாந்துக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நன்றாகத் திட்டமிட்டு, அனைவரையும் அரவணைத்துக் கொண்டு அவர் செயல்படுவாரேயானால், இப்போது அவருக்கு இருக்கும் உச்சபட்சமான ஆதரவு தளம் பன்னிரண்டு சதவிகிதத்துக்கும் மேலே உயரவும் கூட வாய்ப்பு உண்டு.

நன்றி - கல்கி  


சி.பி - புரட்சித்தலைவியின் பிளான் என்னன்னா கேப்டன் கட்சில இருக்கும் 10 எம் எல் ஏக்களை இழுத்து நாங்க தான் உண்மையான தேமுதிக அப்டினு கோர்ட்ல கேஸ் போட வைப்பது. விசாரணை முடியும் வரை சின்னம் முடக்கப்படும்