ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு திருடன்.ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆனதும் முதல் வேலையாக ஒரு செல் போன் திருட்டு ,பைக் திருட்டு நடத்துகிறான்.அடுத்து ஒரு வீட்டில் திருட நுழைகிறான்.அங்கே ஒரு பெரியவர் இருக்கிறார்.சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கிறார்.வீட்டில் பணம் இல்லை.பெரியவர் சொல்கிறார்.நான் ஒரு அல்சைமர் பேஷண்ட்.என் மகன் இப்படி கட்டி வைத்து விட்டுப்போய் இருக்கிறான்.வீட்டில் பணம் இல்லை.ஆனால் என் அக்கவுண்ட்டில் பணம் உண்டு.என்னை ரிலீஸ் செய்து வெளியே அழைத்துப்போனால் ஏ டி எம் மில் ரூ 25,000 எடுத்துத்தருகிறேன் என்கிறார்
நாயகனும் அவரை ரிலீஸ் செய்து அழைத்துப்போகிறான்.ஏ டி எம் மில் அவர் பணம் எடுக்கும்போது அவர் அக்கவுண்ட்டில் ரூ 25 லட்சம் இருப்பதை அறிந்து ஆனந்த அதிர்ச்சி அடைகிறான்.அதை எப்படியாவது ஆட்டையைப்போடயுவன் சங்கர் ராஜா.பி ஜி எம் அருமை.ஒளிப்பதிவு கலைச்செல்வன் சிவாஜி ,கலக்கி இருக்கிறார் .154 நிமிடஙகள் படம் ஓடுகிறது.
இயக்கம் சதீஷ சங்கர்
சபாஷ் டைரக்டர்
1. படத்தின் மெயின் கதையை யூகிக்க முடியாமல் மடை மாற்றி விட்டது போல ட்ரெய்லர் கட் ரிலீஸ் செய்த சாமார்த்தியம்
2. முதல் பாதிக்கும் ,இரண்டாவது பாதிக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி திரைக்கதை அமைத்த விதம்
3. தியேட்டரையே அல்லோலகல்லோலப்படுத்திய ரீ மிக்ஸ் சாங்க் ராமாராஜன் நடித்த புதுப்பாட்டு படத்தின் நேத்து ஒருத்தரை ஒருத்தரைப்பார்த்தோம் பாடல் நடனக்காட்சி நாஸ்டாலஜிக்கல் மொமெண்ட்
4 வடிவேலுக்கான காஸ்ட்யூம் டிசைன் அருமை.இந்த மாதிரி ஒரு கண்ணியமான தோற்றத்தில் நாம் அவரைப்பார்த்ததே. இல்லை
5. ஹோட்டலில் தான் செய்யும் திருட்டுத்தனத்தை வேவு பார்க்கும் சிறுவனை பகத் தன் கண்களாலேயே மிரட்டும் சீன்
6. பகத் வண்டியில் போகும்போது ஒரு. சந்தேகத்தில் வாட்சப் ஸ்டேட்டசை செக் செய்து உண்மை உணரும் தருணம் இயக்குனரின் ஸ்மார்ட் ஆன மூவ்
7. துணிக்கடை ஓனரின் போன் நம்பரை பகத் சாமார்த்தியமாக வாங்கும் சீன்
8. டிராபிக் போலீசிடம் தான் எம் எல் ஏ. டிரைவர் என பொய் சொல்லி. பகத் தப்பிக்கும் சீன்
9. போலி ஏ டி எம் கார்டுகளை பகத் ரெடி செய்யும் ஐடியா
10 பிரமாதமான ஒளிப்பதிவு ,கலக்கலான பின்னணி இசை,வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பு
ரசித்த வசனங்கள்
1 வயசானாலே. எல்லா இடமும் ஜெயில் தான்.அது வீடா இருந்தா என்ன? ஆசிரமமா இருந்தா என்ன ?
2' நல்லா வேஷம் போட்டா. எல்லாரையும் ஏமாத்தலாம்?
3. கடவுள்ட்ட நாம் எதையும். கேட்கக்கூடாது.நமக்கு வேணும்கறதை நாம எடுத்துக்கணும்,கடைசில கடவுள்ட்ட மன்னிப்புக்கேட்டுட்டா மேட்டர் ஓவர்
ஒஹோ,அதனாலதான் கோயிலில் அவ்ளோ கூட்டமா?
4 நல்ல வேளை,கடவுள் மாதிரி வந்து என்னைக்காப்பாத்திட்டே
உங்களுக்கு தான் கடவுள் நம்பிக்கை இல்லைன்னு சொன்னீங்க?
உன் மேல மட்டும் எனக்கு நம்பிக்கை இருக்கா என்ன?
5. மத்த விஷயங்களை , மற்ற மனிதர்களை மறப்பதை விடுங்க.ஒரு மனிதன் தன்னைத்தானே மறப்பது கொடுமையான விஷயம்
6. ஞாபகங்கள் தான் வாழ்க்கை
7. எங்க ஊருக்கு வந்து எங்க கிட்டேயே ரகளையா?
ஏன்? உன் ஊரில் உன் நெஞ்சில் இந்த கத்தியை செருகினா இறங்காதா?
8. நாம எதாவது தப்பு செய்தாக்கூட நம்ம குடும்பம் நம்மைக்காப்பாற்றும்,கை விட்டுடாது என்ற நம்பிக்கையை நம்ம குழந்தைகளுக்கு நாம தான் கொடுக்கணும்
9. பொண்ணுங்க மாந்தோப்பில் இருக்கும் மாங்காய் ,மாம்பழம் மாதிரி ரசிச்சு ருசிப்பேன்.குறிப்பா பிஞ்சு மாங்காய்னா. எனக்கு ரொம்பப்பிடிக்கும்
10 சீரியல் கில்லர்னா ஒரு பேட்டர்ன்ல தான் கொலைகள் செய்யனும்னு அவனுக்குத்தெரியல
11 வழக்கமா பாம்புதான் எலியைத்தேடிப்போகும்.ஆனா இங்கே எலியே பாம்பைத்தேடி வந்திருக்கு
12. கடந்த காலத்திலும்.நிகழ்காலத்திலும் மாறி மாறி வாழ்றவங்க தானே நாம ?
13. காரியம் நடக்கனுமேன்னு பொறுமையாப்போய்க்கிட்டு இருக்கேன்.எப்போ மாறுவேன்னுதான் தெரியலை
14. ஹாரன் அடிக்கலை
அதைத்தாங்க நானும் சொல்றேன்.ஹாரன் அடிக்காம வந்து மோதிட்டீங்க
யோவ்.அதான் சொன்னேனே ஹாரன் அடிக்கலை ( ஹாரன் வேலை செய்யல)
15. வண்டியை ரொம்ப விரட்டக்கூடாது
உங்களுக்காக உருட்டிட்டுக்கூடப்போறேன்
16. ஆகாயத்தில் பறக்கும் கொக்குக்கும் ,குளத்தில் இருக்கும் மீனுக்கும் எதோ ஒரு பந்தம் இருக்கற மாதிரி எனக்கும் ,இந்த வீட்டுக்கும் எதோ பந்தம் இருக்கு
17. யோவ்.மூச்சு விடக்கூடாது.நான் திருடன்.கால பாத்தியா. கத்தி
-::::::;;;
யோவ்,மூச்சை சொன்னேன்.மூச்சா விட சொல்லலை
18 அப்போ உன் வாழ்க்கைல வேலைக்கே போனதில்லைல?
19. நான் பண்றது திருட்டு என சொல்லிட முடியாது.நான் மக்களை உஷார்ப்படுத்தறேன்.அதுக்கான கட்டணத்தை அவங்க கிட்டே வசூல் பண்ணிக்கறேன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1. படத்தில் பிளாஸ்பேக் போர்சனில் பாதிக்கப்பட்டவரின் அனுபவங்களை,அவர்கள் பட்ட கஷ்டங்களை விஷூவலாக ஆடியன்சுக்குக்காட்டினால் தான் மனதில் பதியும்.டயலாக்காக மட்டும் சொன்னால் அந்த இம்ப்பேக்ட் கிடைக்காது
2. தான் பயன்படுத்தும் போனில் சிம் கார்டைக்கழட்டி எறிந்தால் போதும்.போலீஸ் ட்ரேஸ் பண்ண முடியாதுவென சீரியல் கில்லர் நினைக்கிறான்.போன் ஐ எம் ஈ நெம்பரை வைத்து போலீஸ் ஏன் அவனைப்பிடிக்கவில்லை?
3. நான்கு கொலைகள் நடந்தும் சி சி டி வி பற்றிப்பேச்சே வரவில்லை
4. நாயகன் ஒரு கட்டத்தில் இனி திருடுவதில்லை.திருந்தி விட்டேன் என்கிறான்.அதற்குக்காரணம் வலுவாக சொல்லவில்லை
5. நாயகனின் அம்மா வீட்டில் நடக்கும் காட்சிகள் மெயின் கதைக்கு ஸ்பீடு பிரேக்கர்
6. ராமராஜன் மாதிரி கெட்டப்பில் வரும் நபர் ஆனந்தராஜ் மாதிரி டூயட்டில் வில்லத்தனம் காட்டும் முகபாவம் ஏனோ? சிரிப்பு அவருக்கு வராதது மைனஸ்
7. பின் பாதியில் ஒரு ட்விஸ்ட் ஓப்பன் ஆனதும் மீதி மொத்தமும் யூகிக்கக்கூடிய திரைக்கதையாக மாறுவது மைனஸ்
8 கோவை சரளாவிடம். போலீஸ் ஆபீசருக்கான கம்பீரம் இல்லை
9 பகத் பாசிலின் கேரக்டர் டிசைன் ஆல்ரெடி அவர் நடித்த தொண்டி முதலும் திருக்சாக்சியும் ,வேட்டைவேட்டையன். ஆகிய படங்களில் வந்தவைதான்
10. நாயகன் ,வில்லன் இருவருக்குமான காம்போ சீன்ஸ் முதல் பாதியில் வருபவை. ஆல்ரெடி. 2018 ல் வெளியான சும்பக் ( லாட்டரி ) மராத்திப்படத்தில் இருந்து உருவப்பட்டதே.கொஞ்சம் அன்பே சிவம் சாயலும்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மாரீசன் (2025)-தமிழ்- முதல் பாதி அன்பே சிவம் டைப் மெலோ ட்ராமா,பின் பாதி யாரும் யூகிக்காத க்ரைம் திரில்லர்.இடைவேளை ட்விஸ்ட் அட்டகாசம்.க்ளைமாக்சிலும் ஒரு ட்விஸ்ட் உண்டு. 3வது ட்விஸ்ட் இதுல ஹீரோ பகத் பாசில் அல்ல,வடிவேலு.எதிர்பார்க்கும் விகடன் மார்க் 45 ,ரேட்டிங். 3/5 ,க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் 20 நிமிட பி ஜி எம் செம..
இது விமர்சனத்தின் ட்ரெய்லர் தான்.முழு விமர்சனம் விரைவில்
கேரளா. கோட்டயம். ஆனந்தில் படம் பார்த்தேன்.முதல் நாள் முதல் ஷோவே 47 பேர் தான்.தமிழகம் ,ஆந்திரா போல இங்கே தீவிர ரசிகர்கள் இல்லை.எல்லாரும் அவங்கவங்க பிழைப்பைப்பார்க்கறாங்க.நாமதான் படம் பார்கிறோம்