Showing posts with label .ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label .ஆனந்த விகடன். Show all posts

Saturday, February 16, 2013

என்னைப் பத்தி வெளியே வராத பயங்கரமான கிசுகிசு ஒண்ணு - அஞ்சலி பேட்டி

மொபைல், இமெயில், ஃபேஸ்புக்... எங்கேயும் எப்போதும் நாட் ரீச்சபிளிலேயே இருந்தார் அஞ்சலி. காத்திருந்து காத்திருந்து 'சேட்டை’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பிடித்தேன். 'சிங்கம்-2’ படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு சூர்யாவுடன் ஆடியிருக்கிறார்.



''ஹலோ, 'சிங்கம்-2’ல நான் ஆடிஇருக்கிறது அயிட்டம் சாங் கிடையாது. நான் சூர்யா சாரோட இன்ட்ரோ சாங்ல ஆடியிருக்கேன். ஹீரோகூட பப்ளியா ஒரு பொண்ணு ஆடினா நல்லா இருக்குமேனு தேடி இருக்காங்க. பை லக்... எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. பாட்டு நல்லா வந்திருக்கு. நிறையக் கதைகள் கேட்டுட்டு இருக்கேன். சீக்கிரமே விஜய், அஜித், சூர்யா கூட நடிப்பேன்.''



''சினிமால நல்ல கிராஃப் இருக்கு உங்களுக்கு. ஆனா, டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்களிலேயே தொடர்ந்து நடிக்கிறீங்களே?''



'' 'சேட்டை’யில் ஹன்சிகா, 'எம்.ஜி.ஆர்’ல வரூ, தெலுங்கு 'சீதம்மா’வில் சமந்தா, 'பலுபு’வில் ஸ்ருதி... இவங்களோட சேர்ந்து நடிச்சது தானா அமைஞ்சது. யார் என்கூட நடிச்சாலும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லா ஹீரோயினும் என்கூட நெருக்கமாகிடுவாங்க. ஏன்னா, நான் ரொம்ப ஃப்ரெண்ட்லி!''  


''ஆர்யா, விஷால் யார் பயங்கரமான ப்ளேபாய்?''  



''ஆர்யா, விஷால்... ரெண்டு பேருமே ரொம்ப ஜாலியாப் பழகுவாங்க. ஆர்யா செட்ல இருந்தா, நமக்கு எந்தக் கவலையும் வேண்டாம்.  எல்லா வேலையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பார். நிறைய ஹெல்ப் பண்ணுவார். அதைவிட நிறையப் பேசிட்டே இருப்பார். விஷால் அமைதியா இருப்பார். ஆனா, பயங்கரமா சேட்டை பண்ணுவார். ரெண்டு பேருக்குமே எனர்ஜி லெவல் ஜாஸ்தி. என்ன, ஆர்யா சேட்டை பண்ணா, வெளியே தெரிஞ்சிடும். விஷால் சேட்டை பண்ணா, யாருக்கும் தெரியாது. விஷால் அவ்ளோ அமைதி... ஆனா, பயங்கர நாட்டி!''


''இப்போ லீடிங்கில் இருக்கிற பல ஹீரோயின்கள், 'அஞ்சலி நடிப்புக்கு நான் ரசிகை’னு சொல்லியிருக்காங்க. அஞ்சலி யாருக்கு ரசிகை?''


''என் ஆல்டைம் ஃபேவரைட் ஸ்ரீதேவி மேடம்தான். ஆனா, நான் இம்ப்ரெஸ் ஆனது, நடிப்பு கத்துக்கிட்டது எல்லாம் ஜோதிகா மேடம் நடிப்பைப் பார்த்துதான்.''


''சினிமாவில் ஹீரோயினாக இருப்பது வரமா... சாபமா?''

''நூடுல்ஸ், சுடிதார், வீடு, வீக் எண்ட் சினிமான்னு பிடிச்ச விஷயங்களோடு இருந்த பொண்ணு நான். 'கற்றது தமிழ்’ படத்துக்குப் பிறகு என் உலகமே மாறிடுச்சு. இங்கேயும் சில சிரமங்கள் இருக்குதான். ஆனா, ஹீரோயினா இருக்கிற ஒவ்வொரு நாளும் எனக்குப் பிடிச்சிருக்கு. 'கற்றது தமிழ்’ ஆனந்தி, 'அங்காடித் தெரு’ கனி, 'எங்கேயும் எப்போதும்’ மணிமேகலை கேரக்டர்கள் எல்லாம் எனக்கு ஒவ்வொரு வாழ்க்கை. இதெல்லாம் எனக்குக் கொடுத்தது சினிமாதான். என்ன சொல்றது... நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்.''


''எப்பவும் ஏதாவது ஒரு கிசுகிசு உங்களை விரட்டிக்கிட்டே இருக்கே?''  

சத்தமாகச் சிரிக்கிறார்... ''உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இதுவரை என்னைப் பத்தி வெளியே வராத பயங்கரமான கிசுகிசு ஒண்ணு இருக்கு... அது எனக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம். அதோட கம்பேர் பண்றப்ப, இதெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க!''


 நன்றி -ஆனந்த விகடன்,

Thursday, April 28, 2011

ஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி

http://www.hope.ac.uk/thebighope/images/content/abdul%20kalam.jpg 
விகடன் மேடை - அப்துல்கலாம்

 'நண்பர்களே! உங்கள் கேள்விகளை எல்லாம் படித்துப் பார்க்கும்போது, எனக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. அதாவது, நம் நாட்டின் இளைய சமுதாயத்துக்கு, 'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை மிகவும் முக்கி யம். அது நல்ல புத்தகங்களில் இருந்தும், நல்ல பெரியோர்களிடம் இருந்தும், நல்ல ஆசிரியர்களிடம் இருந்தும், தெய்வீகப் பெற்றோர்களிடம் இருந்தும்தான் கிடைக்கும்.

'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை உங்களுக்குள் உதயமானால், மக்களுக்கு 'நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வளரும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வந்தால், இந்தியாவால் முடியும். அப்படிப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டால், வளமான இந்தியாவை... ஓர் அமைதியான இந்தியாவை நம்மால் உறுதியாக அமைக்க முடியும். 60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்!''

 - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
எஸ்.சங்கரன், காரைக்குடி.

1.''உங்கள் ரோல் மாடல் யார்?''

''என் 10-வது வயதில், பறவையின் பறக்கும் விதம்பற்றிக் கற்பித்து, வாழ்க்கையில் பறக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த என் ஆசிரியர் சிவசுப்பிரமணி ஐயர்தான் என் ரோல் மாடல்!''

கே.மாலதி, நாச்சியார்புரம்.

2. ''நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஏதாவது சொல்லுங்கள்?''

''நான் 11-வது குடியரசுத் தலைவராக இருந்தபோது, தினமும் குறைந்தது, 100 மாணவர்களிடமாவது உரையாடுவது வழக்கம். அப்போது ஒருநாள், 9-ம் வகுப்பு மாணவன் என்னுடைய கேள்விக்குப் பதில் அளித்தான். பார்வையற்ற அந்த மாணவனின் பெயர் ஸ்ரீகாந்த்.

அவன் சொன்னான், 'நான் ஒருநாள் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆவேன்’ என்று. என்ன ஒரு லட்சியம், தன்னம்பிக்கை அந்த மாணவனுக்கு!

அந்த மாணவன் அதன் பின் படித்து 10-ம் வகுப்பில் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். 12-ம் வகுப்பில் 96 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். அவனது லட்சியம், அமெரிக்காவின் பாஸ்டன் மாநகரில் உள்ள  MIT-ல் கல்வி கற்பதாகும்.

முதன்முறையாக  MIT அவனுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க அனுமதி அளித்தது. அவனைப் படிக்கவைக்க, 'லீட் இந்தியா 2020’ என்ற இயக்கம், GE கம்பெனி உதவியோடு அமெரிக்கா அனுப்பியது. இதில் என்ன சுவராஸ்யம் என்றால், GE கம்பெனி மேலாளர் அவனுக்கு, 'நீ படித்து முடித்ததும் உனக்கு வேலை தரத் தயாராக இருக்கிறோம்!’ என்று இ-மெயில் அனுப்பினார்.

அதற்கு ஸ்ரீகாந்த், 'உங்கள் உதவிக்கு நன்றி. ஒருவேளை, நான் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆகாவிட்டால், உங்கள் அழைப்பை ஏற்கிறேன்’ என்று பதில் அனுப்பினான். என்ன ஒரு தன்னம்பிக்கை. இதுபோல, கொண்ட லட்சியத்தில் மாறாத உறுதி இளைய சமுதாயத்துக்குத் தேவை!''

இள.செம்முகிலன், விருத்தாச்சலம்.

3.''நீங்கள் தமிழ் சினிமாக்கள் பார்ப்பது உண்டா? உண்டு என்றால், சமீபத்தில் பார்த்த படம் என்ன?''

''கடந்த 50 வருடங்களாக சினிமா பார்க்கவில்லை. அதனால் நான் இழந்தது என்று ஏதும் இல்லை!''

ப.நலங்கிள்ளி, திருப்பத்தூர்.

4.''பால்ய கால சந்தோஷத் தருணங்களை நினைவுகூருங்களேன்?''

''நான் மேல்நிலைக் கல்வி படிக்கும்போது, தமிழ் பாடத்தில் 100-க்கு 95 மதிப்பெண்கள் பெற்றேன். என் தமிழ் ஆசிரியர் எனது விடைத் தாளை வகுப்பு முழுவதும் காண்பித்து, அனைவரும் இப்படி மார்க் எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!''

பொன்.சிங்கமுத்து, கும்பகோணம்.

5.''கவிஞர் நீங்கள். காதலித்தது இல்லை என்று சொன்னால், நம்ப மாட்டேன். உங்கள் முதல் காதலி யார்?''

''அறிவுத் தாகம்!''
ஆ.சங்கர், திருப்பூர்.

'5. B. 'உங்களின் கல்லூரிக் காலத்தில், உங்களோடு படித்தவர் எழுத்தாளர் சுஜாதா, அவருடனான உங்களின் நினைவுகளை எங்களிடம் பகிர்ந்துகொள்ளலாமே?''

''நானும் சுஜாதாவும் எப்போதும் முதல் பெஞ்சில் அமர்ந்து இருப்போம். ஆசிரியர் கேள்வி கேட்டு முடிப்பதற்கு முந்தியே நாங்கள் முந்திக்கொண்டு, எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பதால், எங்களுக்கு முந்திரிக்கொட்டை என்று பெயர். சுஜாதா என் இனிய நண்பர்!''

ப.சிவராமன், பழநி.

'6. 'விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர் - உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்த பொறுப்பு எது?''

''ஆசிரியர்!''

ஜெ.ஜெர்லின் அபிஷகா, கன்னியாகுமரி.

7. ''இந்தியாவில் வல்லரசு என்ற வார்த்தையை நீங்கள்தான் பிரபலம் ஆக்கினீர்கள். ஆனால், காலம் காலமாக வல்லாதிக்க எண்ணம்தானே பெரிய நாடுகளை எல்லாம் சிதறடித்து வந்திருக்கிறது?''

''நான் சொல்வது 2020-ல் இந்தியா பொருளாதார மேம்பாடு அடைந்த, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, ஏற்றத்தாழ்வு இல்லாத சமதர்ம சமுதாயம்கொண்ட வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்டுவோம் என்றுதான். தவிர, வல்லரசு என்ற கோட்பாடு உலகத்திலேயே இப்போது இல்லை!''
 http://robinindia2020.com/abdulkalam.jpg
எஸ்.பெனாசிர், புதுக்கோட்டை.

8.''2020-ல் நிச்சயம் உங்களின் கனவு நிறைவேறும் என்று இப்போதும் நம்புகிறீர்களா?''

''60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்.

எனது கனவு, 125 கோடி மக்களின் முகத் தில் மகிழ்ச்சி கலந்த புன்னகையைப் பார்ப் பதுதான். அது இந்தியாவின் எழுச்சிகொண்ட இளைய சமுதாயத்தால் கண்டிப்பாக நிறை வேறும் என்று நம்புகிறேன்!''

சே.செல்லத்துரை, மேட்டுப்பாளையம்.

9.''கல்பாக்கம் அணு உலை கடுமையான பூகம்பத்தைத் தாங்க முடியாத இடத்தில் இருக்கிறது என்கிறார்களே... உண்மையா?''

''இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அவற்றை மீண்டும் கண் காணித்து, சுனாமியுடன் பூகம்பமும் சேர்ந்து வந்தால், அதைத் தாங்கிச் செயல்படக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதைத் தீவிரமாக மறு பரிசீலனை செய்து, மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது!'' 

Friday, April 15, 2011

செல்வராகவனுக்கு நான் செட்டப்பா? ரீமா சென் தில் பேட்டி - காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ7ls61HFeC-dnv-F_guSsvQk2IlkuOpeCjyBrQr7pLO6n8WvtJxmcz_6EBhCaJxMXapbBHomYEuxuEc6KKq-XHbRUo7OIqArMa27HyLeZd_DP895st9QnB05CO6Jx2wWFzBBpEAvhFryT/s1600/r2.jpg 

1.' 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு என்ன ஆளையே காணோம்?''
 
''தமிழில் என் நடிப்பு பார்த்து நானே ஆச்சர்யப்பட்டது, திருப்தி அடைஞ்சது 'ஆயிரத்தில் ஒருவன்’ படம்தான். (ஆர் பார்த்திபனை மயக்கற சீன்ல யார்?இந்த ஃபிகரு?ன்னு கேட்க வெச்சுட்டீங்க...)

ஆனால், அதற்குப் பிறகு சொல்லும்படி வாய்ப்பு எதுவும் அமையலை. நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா இருக்கணும்னு தேடித் தேடி நடிச்சதால்தான், 'செல்லமே’, 'வல்லவன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு அழகான கேரியர் அமைஞ்சது.

வல்லவன்ல நான் ஏமாற்றப்பட்டேன்னு இதே வாய் தானே அன்னைக்கு சொல்லுச்சு?

ஆனா, இதைத் தாண்டி, தமிழில் சரியான கதைகள் இப்போ இல்லை. இந்தியில் பிஸி ஆகிட்டேன்!''  ( ஹி ஹி பார்த்தோம்.. கில்மா படங்கள் தானே..?)


2.''தமிழ்ல உங்களுக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிறீங்களா?''

''ம்ம்ம்... 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகும் தமிழில் நல்ல வாய்ப்பு வரலைன்னு நினைக்கும்போது, வருத்தமா இருக்கு. இந்தியில் என் ரசனைக்கு ஏத்தபடி கதைகள் அமையுது. ( ஹா ஹா உங்க ரசனை ஏன் இவ்வளவு சீப்பா போயிடுச்சு?)


அதுக்காக, 'தமிழில் நடிக்க மாட்டேன் - ரீமா அதிரடி’ன்னு ஏதாவது எழுதிடாதீங்க. எனக்குப் பிடிச்ச மாதிரி கதைகள் அமைஞ்சா, நிச்சயம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பேன்!''

(வேணாம் மேடம்.. உங்களுக்கு நோ எண்ட்ரிதான்..வாரத்துக்கு 4 ஃபிகருங்க ஃபிரஸ் ஃபேஸா வந்துட்டு இருக்கும் போது தமிழன் செகண்ட்ஸை அதாவது ரீ எண்ட்ரியை விரும்ப மாட்டான்.)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifFYfgnC1z3fkT8Zzug4S2rw2ZekddE-wUZQSrLEyWA3xNihdKS1FbIuOG7ONZDEVWKmK46k9Nhf3h5Vp0oI4VJ-jcLJU09MTOifrDZlXT3Y7fxU9qm2zCkNWt5Q2lmk3MdMmzsMk-jx8/s1600/reema-sen-hot-hq-pics(7).jpg
3. ''உங்கள் நண்பர் செல்வராகவனின் இரண்டாவது திருமணம்பற்றி?''

''ஹலோ, அவர் எனக்கு பெர்சனல் நண்பர் கிடையாது. நான் நடிச்ச படத்தோட இயக்குநர்... அவ்வளவுதான். 'நிச்சயதார்த்தம்’னு கூப்பிட்டப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். செல்வாவுக்கு இந்த மாறுதல் அவசியம். அவ்வளவுதான் இங்கே நான் சொல்வேன்!''

(வேற எங்கே வந்தா ஃபுல் டீட்டெயில்ஸூம் சொல்வீங்க?)


4. ''அப்போ உங்க திருமணம்பத்தி சொல்லுங்க... மும்பை தொழிலதிபருடன் உங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சுன்னு நியூஸ் வந்துச்சே..?''

''கடவுளே... எனக்கே தெரியாம எப்படி என் கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்றாங்கன்னு தெரியலையே.

எங்களுக்கே தெரியாம நீங்க அதை எல்லாம் ஃபிக்ஸ் பண்றப்போ உங்களுக்கே தெரியாம அதை கண்டு பிடிக்கறது எங்களுக்கு கஷ்டமா என்ன?

ஊருக்கே சொல்லி சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிற விஷயம் கல்யாணம். அப்படி எனக்குக் கல்யாணம் நடந்தா, அதை நானே ஊர் முழுக்கச்சொல்லு வேன்.

எப்படி? வம்சம் படத்துல வர்ற மாதிரி... “ ஏய்.. மாமோய்... ரீமாவுக்கு இன்னைக்கு கைமா.. எல்லாரும் வந்துடுங்கோ..ஓஓஓஓ,ன்னா......

 http://2.bp.blogspot.com/_yFCQLldPqmk/TMz6hpkKasI/AAAAAAAAJgE/lUyOHbIHQmQ/s1600/Reema+Sen+in+Saree+(6).jpg

(நடந்தாத்தானே.. அப்போ பார்ப்போம்.. அதுக்குள்ள என்ன அவசரம்? மார்க்கெட் இருக்கும் வரை கல்யாணம் கூடாது என்பதுதானே நடிகைகளின் பாலிஸி?)

அது வரை உண்மை சொல்லலைன் னாலும்... பொய்யான தகவல்களை யாரும் பரப்பாம இருங்கப்பா... ப்ளீஸ்!''

(ச்சே ச்சே.. நாங்க அப்படி எல்லாம் பரப்ப மாட்டோம்.. இப்போக்கூட பாருங்க.. டைட்டில்ல கேள்விக்குறில தான் தொக்கி நிக்குது  டவுட்ல.. ஆச்சரியக்குறி போடலை.. ஹி ஹி )