Tuesday, March 18, 2025

பெருசு (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( அடல்ட் காமெடி டிராமா ) 18 +

                         


2023ம்  ஆண்டு வெளியான டெண்ட்டிகோ  என்ற  சிங்களப்படத்தின்  தமிழ்  ரீமேக்  தான் இது . அதே  இயக்குனர் தான் இதையும்  இயக்கி  இருக்கிறார் . ஒரிஜினல்  வெர்சன்  செம  காமெடி  என  சிலர்  சொன்னார்கள் , நான் இன்னும்  அதைப்பார்க்கவில்லை 



ஸ்பாய்லர்  அலெர்ட்

  நாயகன்  60 +வயசு ஆன  பெருசு . ஊர் மக்கள் அனைவரும் அவரை பெருசு என்றே  அழைக்கிறார்கள் . அவருக்கு  சட்டப்படி ஒரு சம்சாரம், செட்டப் படி இன்னொரு சமாச்சாரம் . அவர்  தன் முதல் மனைவி , 2 மகன்கள் , 2 மருமகள்கள்  ஆகியோருடன் கூட்டுக்குடித்தனமாக வாழ்ந்து வருகிறார் . இப்படி இருக்கும்போது  ஒரு நாள்  வீட்டில் டி வி பார்த்துக்கொண்டிருக்கும்போது திடீர் என மாரடைப்பால் நாயகன் இறந்து விடுகிறார் .


அப்பா  இறந்தது ஒரு புறம் துக்கம்  என்றாலும்  அவர் எந்த நிலையில் பிணமாக கிடக்கிறார் என்பதில் இரு மகன்களுக்கும் ஒரு தர்மசங்கடம் . . அந்த  விஷயத்தை  ஊராருக்குத்தெரியாமல் மறைக்க வேண்டும் . அதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் தான் மொத்தத்திரைக்கதையும் 


  நாயகனின் முதல் மகனாக சுனில்   காமெடி  கலந்த   நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் . நுணுக்கமான சில முக உணர்வுகளை கச்சிதமாக  காட்டுகிறார் . அப்பாவிடம் கடைசி காலத்தில் சரியாகப்பேசவில்லை என்ற குற்ற உணர்வைக்காட்டுவதும்  அருமை 


 நாயகனின் இரண்டாவது  மகனாக, குடிகாரனாக வைபவ்   முதல்  பாதியில் சுமார்  ரக நடிப்பையும், இரண்டாம்  பாதியில்  கச்சிதமான நடிப்பையும் வழங்கி உள்ளார் 

  நாயகனின் முதல்   மருமகளாக   சாந்தினி   கச்சிதம் ,   நாயகனின்  இரண்டாவது மருமகளாக நிஹாரிகா  அனாயசமாக  நடித்துள்ளார் . 

  நாயகனின் முதல்   மனைவியாக   தனலட்சுமி  அற்புதமாக நடித்துள்ளார் .  , அதுவும்  க்ளைமாக்ஸ்  காட்சியில்  சக்களத்தி  வந்தவுடன்  அவர் காட்டும்  ஆவேசம்  ஆசம் 


 பால  சரவணன் , முனீஷ் காந்த் , ரெடின்  கிங்க்ஸ்லீ   ஆகிய  மூவரும் தங்களால் முடிந்தவரை  படத்தை தூக்கி  நிறுத்த  உதவி   இருக்கிறார்கள் . சக்களத்தி ஆக வரும் சுபத்ரா  ஆஹா  நடிப்பு . பக்கத்து  வீட்டு  ஆண்ட்டியாக   உளவு  பார்க்கும் ரமாவின்  நடிப்பு  அருமை 


 இவர்கள்  போக வி டி வி கணேஷ் . லொள்ளு  சபா  சுவாமி நாதன்  ஆகியோர் பங்களிப்பும்  ஓக்கே  ரகம் 


ஒளிப்பதிவு  சத்ய திலகம் ஓக்கே  ரகம் . இசை  அருள்  ராஜ் . பாடல்கள்   சுமார்  ரகம் ., பின்னணி  இசை   சராசரி   தரம் எடிட்டிங்க்  சூர்ய  குமர குரு . 135  நிமிடங்கள்  டைம்  டியூரேஷன் . முதல்  பாதியில்  காமெடியாகப்போனாலும் பின் பாதியில்   திரைக்கதை  போதாமையால் தடுமாறுகிறது . பாலாஜி ஜெயராமனின்  வசனங்கள்  வார்த்தை  விளையாட்டு   ஜாலங்கள் 


 திரைக்கதை  அமைத்து  இயக்கி இருப்பவர்  இளங்கோ  ராம் 


சபாஷ்  டைரக்டர்


1  ஒரு   அடல்ட்  காமெடி   டிராமா   கதையில்  முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளோ ,  நெளிய வைக்கும் வசனங்களோ  இல்லாமல்  முடிந்தவரை  நாகரீகமா திரைக்கதை ,   காட்சிகளை  வடிவமைத்த  விதம் 


2  கிரேசி  மோகன்  டைப்  வார்த்தை  ஜாலங்கள் . வார்த்தை  விளையாட்டுக்காமெடிகள்  ஒர்க் அவுட் ஆன விதம் 


3   நடித்தவர்கள்  அனைவருமே  முடிந்தவரை  காமெடியை புல் ஆஃப் பண்ணிக்கொண்டு போன விதம் 


4   நாயகனின்  முதல்  மகன்  நடிப்பு    அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1   செவிட்டு  மிஷின் எங்கே? 


 வீட்டுலயே வெச்சுட்டு வந்துட்டேன்


 காதையும்  வீட்டுலயே வெச்சுட்டு வந்து இருக்கலாமில்ல ? 


2   என் புருசன்  செத்துட்டாரு  நீ  என்னடான்னா? வெட்டிக்கவா? கட்டிக்கவா? என பெசிட்டு இருக்கே ?


3   ஊர்ல தலை நிமிர்ந்து   வாழ்ந்த  மனுசன் அவரு \\\


 தலை மட்டும் நிமிர்ந்து இருந்தா பிரச்சனை இல்லை 


4    செத்தா   உன்  அப்பான் மாதிரி  சாகனும் . மாஸ்  சாவு 


5   சித்தி  , அப்பா இறந்ததும்  அம்மாவுக்கு  வர வேண்டிய கவலை எல்லாம் உனக்கு ஏன் வருது ?  


 அது  வந்து.. நானும்  அம்மா மாதிரி  முறை  தானே? அதான் 


6  ஸ்கூலில் எட்டாவது  படிக்கும்போது சயின்ஸ்  டீச்சருக்கே லவ்  லெட்டர்  கொடுத்தவன் இப்போ ஸ்கூல் ஹெச்  எம் , இது எவ்ளோ பெரிய கேவலம் ? 


7    MALE ( மேல் ) டாக்டர்  யாரும் இல்லையா? 


 இவருக்கும்  மேலயா? 


8   டாக்டர் .. மேலே  போய்ட்டார்


 நான்  தான்  கீழே இருக்கேனே? 


9   அது  வந்து   டாக்டர், அப்பாவோட பாயிண்ட்.. 


 உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட்டே  கொடுத்திருக்கக்கூடாது 


10  இழவு  வீட்டில் கூட வலது காலை எடுத்து வெச்சு உள்ளே வா  என  சொல்லும்  உன்  மனசு இருக்கே? 


11    மை  கிரஷ்... 


 கிரேஷ்? 


12   நீ தான்  குடிக்கவே  இல்லையே? எதனால உளறிட்டு இருக்கே? 


 இப்போ குடிக்கறேன் . அதுக்கு அட்வான்சா உளறுனேன் . ஓக்கே வா? 


13   உன்  அப்பாவை  அவ  ஏன் டார்லிங்க்னு கூப்பிடறா? 


  அப்போ அவளை  நான் ஆண்ட்டினு  கூப்பிட  முடியாதா? 


14   ஓ! வனிதாமணி ?


 எஸ்  நான் வனிதாமணி  தான் , ஆனா  என் இனிஷியல்  ஓ இல்லை 


15    படிச்சாதான்  டாக்டர்  ஆக முடியுமா? எம் ஜி ஆர் எல்லாம்  வாத்தியார்  ஆகலையா? 


16   இவ  என்  பால்ய  காதலி \\

 ஓ பாலியல்  காதலியா? 


17    அப்பா  ,  மேலே  போய்ட்டாரு\


எதுக்கு  போனாரு ? நான் இங்கே  கீழே தானே  இருக்கேன் 


18  அப்பா  ,  மேல  போய்ட்டாரு\


 ஏப்ரல்க்கு  அப்புறம்  வருமே  அந்த மே ல யா? 




லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனுக்குப்   என்ன  ஆனது ?  என்பதை  ஒருவரிடம் ஒருவர் விஅக்கும்போது  அவர் காட்டும் ரீ ஆக்சன் நல்ல காமெடி   ஆனால்  அதுவே  தொடர்ந்து   7  வெவ்வேறு  கேரக்டர்கள்  கேட்பது  , அதே  ரீ ஆக்சன்  போர் 


2   பிணத்தை  வைத்து  தடுமாறும்  முதல்  பாதி  திரைக்கதை  காமெடி  ஓக்கே  , ஆனால்  பின் பாதியில்  கதையை  நகர்த்த  தடுமாறி  இருக்கிறார்கள் 


3  இந்தக்கதை  ஒரு 45  நிமிடங்களில்  ஷார்ப்பாக  முடிக்க  வேண்டிய  கதைதான்  . ஆனால்    இரண்டு  மணி  நேரத்துக்கு  மேல் இழுக்கும் அளவுக்கு  சரக்கு இல்லை 


4  காமேடிக்காக  நாயகனுக்கு நிகழ்ந்த  சம்பவம் சொல்லப்பட்டாலும்  அறிவியல் ரீதியாக் அப்படி நடக்க வாய்ப்பில்லை 


5     நாயகனுக்கு  ஒரு  சின்ன  வீடு இருந்தது  , ரெகுலராக  விசிட்   அடிப்பது  ஒரு  கிராமத்தில்  யாருக்கும்  தெரியாமல்  நடப்பது  சாத்தியமா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+   கிளாமர்  காட்சிகள்  இல்லை ,  விரசமான  வசனங்கள் இல்லை , ஆனால்  கதைக்கருவுக்காக  ஏ  சர்ட்டிஃபிகெட் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - -   அனைவரும்  ரசிக்கும்  வகையில்  முதல்  பாதி  அடல்ட்  காமெடி ,  சுமாரான  பின்  பாதி .  விகடன்  மார்க் 41  . ரேட்டிங்  2.5 / 5 

Sunday, March 16, 2025

COURT STATE VS A NOBODY (2025) - தெலுங்கு- சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா) @நெட்பிளிக்ஸ்



                        COURT  STATE VS A NOBODY (2025) - தெலுங்கு- சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா) @நெட்பிளிக்ஸ்


14/3/2025 அன்று திரை அரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன இந்தப்படம் விரைவில் நெட்பிளிக்சில் வர இருக்கிறது.விதி,.நேர்கொண்ட பார்வை டைப் படம் இது.போக்சோ சட்டத்தைத்தவறாக எப்படிப்பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கதைக்கரு.முதல் பாதி ஜனரஞ்சகமான  காதல் கதையாகவும் ,பின் பாதி லீகல் டிராமாவாகவும் எடுக்கப்பட்ட இப்படம் நல்ல திரைக்கதையால் கவனம் பெறுகிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி 17 வயது ஆன மைனர் பெண்.வசதியான வீட்டுப்பெண்.நாயகன் 19 வயதான பையன்.சலவைத்தொழிலாளியின் மகன்.இருவரும் காதலிக்கிறார்கள்.நாயகியின் அப்பா தான் வில்லன்.தன் மகளை கடத்தி மிரட்டியதாக போக்சோ சட்டத்தில் புகார் பதிவு செய்கிறார்.ஒரு கட்டத்தில் தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய்ப்புகார் தருகிறார்.


கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது.வில்லன். நாயகன். தரப்பு வக்கீலை விலைக்கு வாங்கி விடுகிறான்.இதனால். நாயகன் பக்கம் கேஸ் நிற்கவில்லை.இன்னும் 3 நாட்களில். தீர்ப்பு என ஜட்ஜ் சொல்லி விடுகிறார்.இந்தக்கேசை. ஒரு புது வக்கீல் தன் முதல் கேசாக எடுத்து வாதாடுகிறான்.வில்லன் உருவாக்கி வைத்த பொய் சாட்சிகளை அந்த வக்கீல் எப்படி முறியடித்து நாயகனுக்கு நீதி வாங்கிக்கொடுத்தான் என்பது மீதி திரைக்கதை


வக்கீல் ஆக பிரியதர்சினி புலிகொண்டா பிரமாதமாக நடித்திருக்கிறார்.ஜூனியர் வக்கீல் ஆகவே எத்தனை நாட்கள் இருப்பது என்ற அவரின் ஏக்கமும்,முதல் கேசில் வாதிடும் லாவகமும் செம.


நாயகன் ஆக அப்பாவி முகத்துடன். ஹர்ஸ் ரோசன் வருகிறார்.நாயகி ஆக ஸ்ரீ தேவி குடும்பப்பாங்காந  முகத்துடன் கண்ணிய உடைகளுடன் வருகிறார்.


இப்போது வரும் நாயகிகளை அரை குறை உடையுடன் பார்த்துப்பார்த்து கண்ணியமான தோற்றத்தில் நாயகியைப்பார்க்கவே ஆறுதலாக இருக்கிறது.


வில்லனாக சிவாஜி என்ற தெலுங்கு நடிகர் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.வில்லநின்  மனைவி ஆக ரோகினி ரகுவரன் பாந்தமான நடிப்பு.


இவர்கள். போக சாய் குமார், ஹர்சவர்தன்,சுபலேகா சுதாகர் ஆகியோர் கச்சிதமாக நடித்துள்ளனர்


விஜய் புல்கனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.பின்னணி இசை ஓக்கே ரகம்.தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவு கனகச்சிதம்.கார்த்திகா சீனிவாசின் எடிட்டிங்கில் படம் 149 நிமிடங்கள் ஓடுகிறது.


முதல் பாதி கமர்சியலாகவும் ,பின் பாதி விறுவிறுப்பான கோர்ட் ரூம் டிராமாவாகவும் இருக்கிறது.


கார்த்துகேயன் சீனிவாஸ்,வம்சிதர் சிரிகிரி இருவருடன் இணைந்து திரைக்கதை  எழுதி. தனியாக படத்தை இயக்கி இருக்கிறார்  ராம் ஜெகதீசன்


சபாஷ்  டைரக்டர்


1 வில்லனின் கேரக்டர் டிசைன் ,நடிப்பு இரண்டும் கலக்கல்.வில்லனின் கேரக்டர் ஸ்கெட்ச் பலமாக அமைந்தாலே உறுதியான வெற்றி உண்டு


2. ஜூனியர் வக்கீலாக வந்து தனி கேஸ் நடத்தத்துடியாய் துடிக்கும் காட்சிகள் ஜீவன் உள்ளவை


3. பொய் சாட்சி சொன்ன 3 பேரை தனித்தனியாகக்குறுக்கு விசாரணை செய்து மடக்கும் காட்சி அபாரம்


4  நாயகியைக்கோர்ட்டுக்கே வர விடாமல். தடுக்க வில்லன் போடும் திட்டங்களை வக்கீல் முறியடுப்பது செம



  ரசித்த  வசனங்கள் 


1. கோர்ட்டுக்கு உள்ளே வரும்போது செப்பலைக்கழட்டி விட்டு வரத்தேவை இல்லை.ஆனா அன்பு ,கருணை ,பரிதாபம் இரக்கம். இவற்றை எல்லாம் விட்டுட்டு வரனும்


2. வேலைக்குப்போவது ,ஆபீசுக்குப்போவது இரண்டும் வேற வேற


3. ஹேப்பி நியூ இயர்


காலண்டர் மாறலாம்.ஆனா கேரக்டர் மாறாது


4.  ஒரு மகளை வளர்த்தி பெரியவ ஆக்குவது சாதாரண விஷயம் இல்லை


5.  சாரி


எதுக்கு?


நான் நினைச்ச அளவு நீ முட்டாள் இல்லை


6. திட்டறதுக்குத்தானே கூப்பிடுவே?


ஏன்?திட்டலைனு ஏக்கமா இருக்கா?


7

அவன் அடிக்கடி போன்ல யார் கிட்டே பேசறான்?


எனக்குத்தெரியாது


ரெண்டு பேரும் ஒரே செட்டாதானே சுத்தறீங்க?


அவன் யார் கூட பேசறான்னு அவனுக்கே தெரியாது

8. இண்ட்டலிஜெண்ட்டான. ஆட்களால் விரைவாக முடிவெடுக்க முடியாது


9 உன் கிட்டே இருந்து பதிலை எதிர்பார்க்கலை.இது எப்படி சாத்தியம்?நு கேள்வி கேட்பே என நினைத்தேன்.வக்கீல்களுக்கு. கேள்வி  ரொம்ப முக்கியம்


10. நீங்க தான் என் வெற்றிக்குக்காரணம்


யாரும் யாருக்கும் வெற்றியைத்தர முடியாது


11 போக்சோ சட்டத்தில் திருத்தம் தேவை.40 வயசு ஆள் 6 வயசு சிறுமியை ரேப் செஞ்சா போக்சோ சரி.ஆனா 17 வயசுபெண்ணை 19 வயசுப்பையன் லவ் பண்ணினா அதுக்கும் போக்சோவா?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1.நாயகன் மீது அபாண்டமாக பழி சுமத்தும்போது கோர்ட்டில் அவர் ஏன் அமைதியாக இருக்கிறார்? ஜட்ஜும் நீ என்னபா சொல்றே? என கேட்கவே இல்லை


2. பூட்டிய அறையில் 16 நிமிடங்கள் நாயகனும் ,நாயகியும் என்ன செய்தார்கள்? என்பது முக்கிய ட்விஸ்ட்.அதை ஓப்பன் செய்த விதம் செமக்காமெடி.ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை


3. ரேப் செய்யப்பட்டதாகப்பொய்ப்புகார் வந்தால்  மெடிக்கல் செக்கப்பில் சுலபமாகக்கேசை உடைக்கலாமே?


4. வீட்டில் கணவனைக்கண்டு அஞ்சி நடுஙகும் மனைவி கோர்ட்டில். அனைவர் முன்பும் பளார் அறை தருவது சினிமாத்தனம்


5 போலீஸ் ஸ்டேசன் வாசலில் பசியுடன் ஒரு முழுநாள் பட்டினியுடன் இருக்கும் நாயகனின் அம்மாவுக்கு மாலையில் குடிக்க பழச்சாறு தராமல்  பெப்சி,கொக்கோகோலா தர்றாஙக.கஷ்டம்



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பிரமாதமான திரைக்கதை ,நிறைவான நடிப்பு.அனைவரும் பார்க்கலாம்.ரேட்டிங். 3/5

Friday, March 14, 2025

எமகாதகி (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லர்)


லோ பட்ஜெட்டில்  பெண்களுக்குப்பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட  தரமான  படம் இது .7/3/2025 முதல்  திரை  அரங்குகளில்   காணக்கிடைக்கிறது . ஓடி டி  யில் வர இன்னும்  20 நாட்கள்  ஆகும் . ஒரு இழவு  வீட்டில்  நடக்கும் கதை என்பதால் பெண்களாலும் , பெண்களைப்போல பொறுமைசாலிகளும் மட்டும் தான் இதை ரசிக்க முடியும்.சூப்பர்  நேச்சுரல் ஹாரர்  த்ரில்லர்  என   இயக்குனர்   அறிவித்தாலும்  இது ஒரு மெலோ  டிராமா தான் . பயமுறுத்தும்   திகில்  காட் சிகள்  . எதுவும்  இல்லை . க்ரைம்  டிராமா   என சொல்லலாம் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்

ஒரு கிராமத்தில்  ஊர்த்தலைவரின் மகள் ஆக நாயகி இருக்கிறாள் . அவளுக்கு ஒரு தறுதலை அண்ணன் இருக்கிறான் கோயில்  சாமியின் கிரீடத்தை  திருடி  விட்டு  பின் மீண்டும்  அதை கோயிலிலே  வைக்க   இருக்கிறான் . நாயகிக்கு   ஒரு காதலன்   உண்டு . இன்னொரு  ஒரு தலை  (யாக நாயகியைக்காதலிக்கும் ) தறுதலை  இருக்கிறான் . நாயகியை அடிக்கடி தொந்தரவ செய்கிறான் . இப்படி   இருக்கும் சூழலில்  நாயகி  மர்மமான   முறையில்   தூக்கில்  தொங்கி  இறந்து   விடுகிறாள் . 


 போலீசுக்கு சொன்னால்  பிரச்சனை என  குடும்பம்  மறைத்து   விடுகிறது . ஆனால்  பிணத்தை  எடுக்க முடியவில்லை . ஓவர் வெயிட் ஆக   இருக்கிறது . நிறைவேறாத ஆசை   இருந்தால்  இந்த  மாதிரி  பிணத்தை  வெளியே  எடுக்க முடியாது என  ஒரு நம்பிக்கை   உண்டு 


 இதற்குப்பின் என்ன ஆனது ? நாயகியின்  மரணத்துக்கு   யார் காரணம் ? என்பதே  மீதி  திரைக்கதை


நாயகி ஆக   ரூபா  கொடுவையுர்    பிரமாதமாக  நடித்திருக்கிறார் .மகளிர்  மட்டும் நாகேஷ் , மதகஜ ராஜா  மனோபாலா  வரிசையில்  இவரும்  பிணமாக   நடித்து  ரசிகர்களிடம் அப்ளாஷ் பெறுகிறார் . நாயகியின் அம்மா  ஆக  கீதா  கைலாசம் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி  இருக்கிறார்  . நாயகியின் காதலன் ஆக  நரேந்திர பிரசாத்  நடித்திருக்கிறார். நாயகி  பிரமாதமாக  ஸ்கோர்   செய்யும்போது  இவர் கொஞ்ச்ம   தடுமாறுகிறார் 


சுஜித்   சாரங்கின் அட் டகாசமான  ஒளிப்பதிவு  படத்துக்குப்பெரும்   பலம் .நாயகி   உயிரோடு வரும் காட் சிகள்  ஒரு   கலர்   டோன் , பிணமாக வரும் காட் சிகள்  ஒரு   கலர்   டோன்  என   பிரமாதமாகப்பிரித்து  ஒர்க்  செய்திருக்கிறார் , ஜீஸின்   ஜார்ஜின் இசையில்  ஒரு ஒப்பாரிப்பாடல் உருக்குகிறது . பின்னணி  இசை  இன் னமும்  நன்றாக செய்திருக்கலாம் ,ஸ்ரீ ஜித்   சாரங்கின்  எடிட்டிங்கில்  படம் 107 நிமிடங்கள்   ஓடுகிறது . முதல் பாதி நல்ல வேகம் , பின் பாதி கொஞ்ச்ம ஸ்லோ . வசனம் எஸ் ராஜேந்திரன் . சென்ட்டிமென்ட்   ஆக  எழுதி இருக்கிறார். திரைக்கதை  எழுதி   இயக்கி இருப்பவர்  பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் 

சபாஷ்  டைரக்டர்


1   நான்  லீனியர்  கட்டில்    நாயகியின்  காதல்  கதை ,  நாயகியின்   அண்ணனின்  திருட்டுக்கதை   , நாயகியின் குடுமப  சூழல்   என குழப் பம இல்லாமல்  மாறி  மாரி கதை சொன்ன விதம் அருமை 


2   படம்   முழுக்க   நாயகியின்  பிண  முகம்  ஒரே   மாதிரி   வைத்திருக்கும்  அசாதாரணமான  நடிப்பு   அருமை . நாயகி  நிஜத்தில்  ஒரு டாக்டராம் .யோகா , பிராணாயாமம்  கற்றவராம் . அதனால்  மூச்சை  அடக்கி  நடித்திருக்கிறார் . அவருக்கு ஒரு சபாஷ் 


3   நாயகியின்  பிணம்  திடீர் என  எழுவது , முகத்தில்  மஞ்சள்  கலர்   லைட்டிங்க்  செட் செய்து  திகில்   கிளப்புவது   என கேமராமேனின் பணி அருமை 

  ரசித்த  வசனங்கள் 


1  மனசு  பலமா  இருந்தா உடம்பு  எதை  வேணா ஏத்துக்கும் 


2 வெளில  போனப்ப  யார் மேலயோ இருக்கும் கோபத்தை வீட்டுக்கு வந்து வீட்ல இருக்கறவங்க கிடட காட் றதே இந்த ஆம்பளைங்களுக்கு வேலையாப்போச்சு 


3  எல்லாத்துக்கும் தீர்வு  சாமியார்னா இங்கே யார் முட் டாள் ?


4  மனசு  தடுமாறி இருக்கும் நேரத்துல வார்த்தையால  கஷ்டப்படுத்தக்கூடாது 


5 வயசு  ஏறுனா புத்தி மாறும்னு சொல்லுவாங்க , ஆனா  உனக்கு புத்தி கெட்டுப்போய்க்கிடக்கே ?


6   எனக்கு ஏதாவது ஆனா நீ எவ்ளோ பதர்றே ?  என்னை  நல்லாப்பார்த்துக்கறே 


7  தைரியமா இருப்பது வேற அறிவா  இருப்பது வேற 


8   என் அப்பா   என்னைப்பேசிக்கொல்றாரு  காதலன்  நீ  என் கிட்டப்பேசாம  கொல்றே 


9  வாழும்  இடமும் , சேரும்  இடமும்   ஒண்ணா  இருக்கணும்   (  நம்ம   ஜாதிலயே  கல்யாணம்  பண்ணனும் ) \


10    உ ன்னைப்பார்த்துக்கிட் ட  எனக்கு  உன் மனசைப்புரிஞ்சுக்க முடியாம  போச்சே ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   காதல்  வசனக்காட் சிகளில்  நாயகியின்  கண்கள்  காதல்  பொங்குகிறது . ஆனால்   காதலன் சோத்துக்கு செத்தவன் போல இருப்பது கடுப்பு 


2  நாயகியின் வீட்டில்   ஒரு அறை  திறக்கப்படாமல்  இருப்பது , அதைத்திறந்தால் ஆபத்து  என்பது  மெயின் கதையுடன் ஒட்டவில்லை 


3   நாயகிக்கு  தெரிந்த அந்த   ரகசியத்தை   நாயகி தன அம்மாவிடம் எதனால் சொல்லவில்லை ?   என்பதற்குப்பதில் இல்லை 


4  ஐந்து   வருடங்களுக்கு   முன்பு நடந்த   ஒரு விஷயத்தை  அப்போதே  ஓப்பன் பண்ணாம நாயகி எதனால் காத்திருந்தார் ? 


5  ஜாதிய அடக்குமுறை ,  குலத்தொழில்  போன்ற   விஷயங்களை   இன்னமும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மெதுவாக   நகரும்  க்ரைம்  டிராமா   பார்த்துப்பழக்கம் உள்ளவர்கள் , பெண்கள்   பார்க்கலாம் .  விகடன் மார்க்  42 , ரேட்டிங்க்  2.75 / 5 


Yamakaathaghi
Theatrical release poster
Directed byPeppin George Jayaseelan
Written byPeppin George Jayaseelan
S. Rajendran (Dialogues)
Produced by
  • Srinivasarao Jalakam
  • Ganapathi Reddy
Starring
CinematographySujith Sarang
Edited bySreejith Sarang
Music byJecin George
Production
companies
  • Naisat Media Works
  • Arunasree Entertainments
Release date
  • 7 March 2025
CountryIndia
LanguageTamil

Thursday, March 13, 2025

GENTLE WOMAN (2025) - ஜெண்டில் விமன் (தமிழ் )சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )



1988ல்  கொலையும் செய்வாள் பத்மினி  என்ற  டைட்டிலில் க்ரைம்   நாவல் வெளி வந்தது .பரபரப்பாகப்பேசப்பட்ட்து .கொலையும் செய்வாள் பத்தினி  என்ற  பழமொழியை   சாமர்த்தியமாக  மாற்றி  டைட்டில்  ஆக்கிய சாதுர்யத்துக்காக பேசப்பட்டது . தன  கற்பைக்காப்பாற்றிக்கொள்ள கொலையும் செய்வாள் பத்தினி  என்பதுதான்  அந்தப்பழமொழியின் சாராம்சம் . ஆனால்  தனக்கு துரோகம் செய்தால்  கணவனைக்கொலையும் செய்வாள் பத்தினி  என்பதுதான்  இந்தக்கதையின் சாராம்சம் .பெண்களுக்கு மிகவும்  பிடிக்கும் விதத்தில் எடுக்கபபட்ட  இந்ப்படம்  7/3/2025  அன்று  திரை    அரங்குகளில்  வெளியாகி  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது . ஓடி டி  யில் வர இன்னும்  20 நாட்கள் ஆகும் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு எல் ஐ சி ஏஜென்ட் . தன்  புது மனைவியுடன்  ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறான் . இருவரும்  மிகவும் அந்நியோன்யமான  தாம்பத்ய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் . நாயகி  இப்போதிருக்கும் மாடர்ன் பெண்களைப்போல எல்லாம் இல்லாமல் புருஷனை  மதிக்கிறாள் .சமைக்கிறாள் . அடக்க  ஒடுக்கமான  குடும்பப்பெண்ணாக இருக்கிறாள் 



 நாயகியின்  தோழியின்  தங்கை  ஒரு நேர்முகத்தேர்வுக்காக  நாயகியின்  வீட்டுக்கு வந்து  ஓர் வாரம் தங்கி  இருக்க வேண்டிய சூழல் . அப்போதுதான்  நாயகனின் சுயரூபம் வெளிப்படுகிறது . நாயகியின்  தோழியின்  தங்கை  இடம் நாயகன் தவறாக நடக்க முயற்சித்த  போது ஆக்சிடன்ட்டல் ஆக  நாயகன்  கீழே விழுந்து  மயக்கம் ஆகிறான் . அப்போது நாயகி அங்கே வருகிறாள் . அப்போது  நாயகனின் செல் போன்  ஒலிக்கிறது . நாயகி  அதை அட் டென்ட்  செய்தபோதுதான்  ஓர் அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது 


  திருமணத்துக்கு முன்பே  நாயகனுக்கு ஓர் காதலி  உண்டு . அவள் கூட இப்போதும்  குடித்தனம் நடத்திக்கொண்டு இருக்கிறான் நாயகன் . இதை அறிந்ததும்  நாயகிக்கு பெரும் அதிர்ச்சி . புருஷனை  அருகில் இருந்த  அரிவாளால்  ஒரே போடு  ஆள் க்ளோஸ் 



இதற்குப்பின் நடந்த  சம்பவங்கள்   தான்   மீதித்திரைக்கதை 

நாயகி ஆக லிஜி மோல்  ஜோஸ்  அட்டகாசமான  நடிப்பு . கணவனுடன்   கொஞ்சுவது   என்ன? சமைக்கும் லாவகம் என்ன?அமைதியான  முகத்துடன்  வலம் வருவது என்ன?  போலீசை , சக்களத்தியை  டீல் செய்யும் லாவகம் என்ன?  அசத்தி விட்டார் 


 நாயகியின்  சக்களத்தி ஆக  லாஸ்லியா  அழகான , இளமையான  முகத்துடன்  வந்து போகிறார் . முதல் பாதியில்   நாயகி  ஸ்கோர்  செய்கிறார்  எனில்  பின் பாதியில் லாஸ்லியா  ஸ்கோர்  செய்கிறார் 


நாயகன் ஆக  ஹரிகிருஷ்ணன்  நடித்திருக்கிறார் .பசுத்தோல்  போர்த்திய  அசைவப்புலி  கேரக்டர் . அதிக வாய்ப்பு  இல்லை எனினும் வந்தவரை ஓகே ரகம் .இவர் மெட்ராஸ் (2014)  படத்தில்  நடித்தவர் 


முக்கியமான  இந்த  3   கேரக்டர்கள்   தவிர  பக்கத்து  வீட்டு ஆண்ட்டி ,போலீஸ் , அஸிஸ்டெண்ட்  கமிஷனர்  ஆகிய  ரோல்களும்  உண்டு .அனைவரும்  கச்சிதமான  நடிப்பை வழங்கி  உள்ளனர் 

96  படப்புகழ்   கோவிந்த்  வசந்தா  வின் இசையில்  இரு பாடல்கள்  ஓகே ரகம் . பின்னணி இசை கலக்கல் ரகம் இளையராஜா  சேகரின்  எடிட்டிங்கில்   படம்  110  நிமிடங்கள்   ஓடுகிறது .முதல் பாதி ரொம்ப ஸ் லோ , பின் பாதி வேகம் , காத்தவராயனின்  ஒளிப்பதிவில்  பல  காட்சிகள்   கை  தட்டல்  பெறுகின்றன , வசனம்   யுக பாரதி .. திரைக்கதை  எ ழுதி  இயக்கி  இருப்பவர் ஜோஸ்வா  சேதுராமன் 


சபாஷ் டைரக்டர்

1  குறைவான பட்ஜெட்டில்.3  முக்கியமான    கேரக்டர்கள்  .ஒரே  லொக்கே ஷனில் படம்   பிடித்தது 


2  நாயகி  யின் அற்புதமான நடிப்பு 


3   ஒளிப்பதிவு ,வசனம் , இசை  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்   அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  நீ எது சமைத்தாலும் எனக்குப்பிடிக்கும், ஏன் எனில் ஐ லவ் யூ


2  நல்லா சமைக்கறவங்களுக்கு கைப்பக்குவம் நல்லா இருக்கும்னு சொல்வாங்க,உனக்கு எல்லாமே பக்குவமா இருக்கே? 


3 பால் பாத்திரத்தைத்திறந்து வெச்சிருக்குதா எல்லாப்பூனைகளும் வந்து அடடகாசம் பண்ணத்தான்  செய்யும் ( டபுள் மீனிங் ) 


4  அவ பார்க்கத்தான் அப்புராணியா இருக்கா, வாய்ப்புக்கிடைத்தா வெச்சு  செஞ்சுடுவா  ( டபுள் மீனிங் ) 


5  ஏண்டா , நான் உனக்கு மந்த்  எண்டு பிரசரா? 


6   அவ பார்க்க  பாவமா இருப்பா , ஆனா ஆளையே  முழுங்கிடுவா 


7   நீ பண்ற  தப்புக்கெல்லாம் நான் பாவ மன்னிப்புக்கேட்கணுமா? 


8  நான்  மனுஷங்களை  உடனே  நம்பிடுவேன் 


 உ ங்களை மாதிரி பாசிட்டிவ் ஆட்களுக்கு எதுவும் தப்பா நடக்காது 


9 ஒரு ஆம்பிளையை   எனக்கு மட்டும் தான் சொந்தம்னு சொல்லிக்க எல்லாம் திருமணம் பண்ணிக்க முடியாது 


10 நேரில்  வராதுஞ்சு தெரிந்தும் ஆண்டவனை நம்புவதில்லையா? 


11  ஏமாற்றுபவர்கள்  யாரும்   தெரியாம செய்வதில்லை , வேணும்னே  தான் செய்யறாங்க 


12  ஒவ்வொரு ஆணின்  வெற்றிக்குப்பின்னால மட்டுமில்லை, அந்தரங்கத்துக்குப்பின்னாலும் ஒரு பெண் இருப்பா 



13 பெண்களுக்கு  ரகசியத்தை மூடி வைக்கத்தெரியாது 


14   டியர் , டோன்ட்  ஒர்ரி , எல்லாத்தையும்   நான் பார்த்துக்கறேன் 


 எதைப்பார்க்க  என எனக்கு மட்டும் தான் தெரியும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 அவ்ளோ பெரிய அபார்ட்மென்ட்டில் சிசிடி வி கேமரா இல்லாதது எப்படி ? 


2   மனைவியின்  தோழி  ஒரு வாரம்  தங்கி இருக்கப்போகிறாள் என்பது தெரிந்த நாயகன்  முதல் நாளே  அவ்ளோ  ரிஸ்க்  எடுத்து  கை வைபப்து எப்படி ? கொஞ்ச்ம  பழகிய  பின் தானே   ட்ரை  பண்ணுவாங்க ?


3  நாயகன் தன செல் போனில்  காதலியுடன் நிகழ்ந்த  உரையாடல்களை , அந்தரங்க  படங்களை  அழிக்காமல்  வைத்திருப்பது  எப்படி ? 


4   டெட் பாடியின்  ஸ்மெல்  வெளிவராமல் இருப்பது எப்படி ?


5  பெண்கள்  விஷயத்தில்  வீக் ஆக இருக்கும் அசிஸ் டெண்ட்  கமிஷனர்  லாஸ் லியா வீட்டுக்கு வந்த முதல் நாளே  கை  வைப்பது எதனால் ? ஒரு வாரம் பழகிய பின் கை  வைக்கலாமே? 


6  லாஸ் லியா  வுக்கு   நாயகி  நாயகனின் போனில்  இருந்து பேசுகிறாள் .அந்தத்தகவலை போ லிசில் சொல்லவே இல்லை 


7  பொதுவாக  தம்பதியில் ஒருவர் மிஸ்ஸிங்க்  எனில் போலீசின்  முதல் சந்தேகம் அவரது துணை மீது தான் விழும் .ஆனால்  பெரிய அளவில்  விசாரிக்கவே இல்லையே?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -மெதுவாக  நகரும் முதல் பாதி , விறுவிறுப்பான  பின் பாதி , பெண்களுக்குப்பிடிக்கும் க்ரைம் திரில்லர் . பல நம்ப முடியாத காட் சிகள் . விகடன்  மார்க்  - 42 . ரேட்டிங்  2.75 / 5 


Gentlewoman
Theatrical release poster
Directed byJoshua Sethuraman
Written byJoshua Sethuraman
Yugabharathi (Dialogues)
Produced by
  • Komala Hari
  • Hari Bhaskaran
  • PN Narenthra Kumar
  • Leo Logame Nethaji
Starring
CinematographySa Kathavarayan
Edited byElayaraja Sekar
Music byGovind Vasantha
Production
companies
  • Komala Hari Pictures
  • One Drop Ocean Pictures
Distributed byUthraa Productions
Release date
  • 7 March 2025
CountryIndia
LanguageTamil

Thursday, March 06, 2025

சப்தம் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர் )


தமிழ் சினிமாவில் மாறுபட்ட  இரு ஹாரர் த்ரில்லர் படங்கள்  1  யாவரும் நலம்  2 ஈரம் . இந்த  ஈரம் படத்தை இயக்கிய  அறிவழகன் வெங்கடாச்சலம்  2009ம் ஆண்டு பரபரப்பாகப்பேசப்பட்டார் . அவரது  கதை சொல்லும் உத்தி அபாரமானதாக இருந்தது . 2014ம் ஆண்டு வெளியான வல்லினம்  பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை . 2016ம் ஆண்டு வெளியான  ஆறாது சினம்  நன்றாக இருந்தாலும்  அது மெமரிஸ் என்ற மலையாளப்படத்தின்  அஃபிசியல் ரீமேக் என்பதால்  அவருக்குப் பெரிய பெயர் கிடைக்கவில்லை .2017ம் ஆண்டு வெளியான  குற்றம் 23  நல்ல  வெற்றிப்படம் . சோனி லைவில் வெளியான வெப்சீரிஸ் ஆன தமிழ் ராக்கர்ஸ் (2022) பரபரப்பாகப் பேசப்பட்டது 



28/2/2025 அன்று திரை  அரங்குகளில் வெளியான இப்படம் முதல் வாரத்தில் 3  கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆஃபீசில் ஹிட் அடித்து இருக்கிறது . பாசிட்டிவ் விமர்சனங்களும்  வந்த   வண்ணம் இருக்கின்றன 



 ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஒரு தனியார்  மருத்துவக்கல்லூரியில்  அடுத்தடுத்து  மூன்று மாணவர்கள்  தற்கொலை செய்து கொள்கிறார்கள் . இது  தற்கொலையா? கொலையா?  அல்லது போட்டி காலேஜின் சதியா?  என்பதை  ஆராய வேண்டும். அதற்கு  பேரா நார்மல்  இன்வெஸ்டிகேட்டர் ஆன நாயகனை வர வைத்து  உண்மைகளை வெளிக்கொணர வைக்க கல்லூரி நிர்வாகம் முனைகிறது 


  நாயகன்  அங்கே  வந்து  விசாரிக்கிறார். அவரது சந்தேகம் காலேஜில் லெக்சரர்  ஆகப்பணி புரியும் நாயகி மீது விழுகிறது . இருவருக்கும் நட்பு உருவாகிறது . நாயகி தான் வில்லி ஆக இருப்பாரோ என்று எல்லோரும் சந்தேகிக்கும் தருணத்தில் நாயகி  மீதே  ஒரு அமானுஷ்ய சக்தி வந்து ஆட்டிப்படைக்கிறது. இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் , ஃபிளாஸ்பேக்கில்  வரும் ஒரு கதை , வில்லியை நாயகன் எப்படி வெற்றி கொள்கிறார்? என்பது மீதித்திரைக்கதை  


 நாயகன் ஆக ஆதி  அடக்கி வாசித்து இருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பு குட் . நாயகி ஆக  லட்சுமி மேணன்  கச்சிதமான நடிப்பு . நாயகனிடம் அவர் நடந்து கொள்ளும் ஆரம்ப கட்ட அலட்டல் காட்சிகள் எரிச்சலைக்கொடுத்தாலும் போகப்போக சரி ஆகி விடுகிறது . ரெடின் கிங்க்ஸ்லி  காமெடிக்கு.. ஆனால்  காமெடி  ஒர்க் அவுட் ஆகவில்லை என்பது வேறு விஷயம் 


 ஃபிளாஸ்பேக்கில்  வரும் சிம்ரன் கேரக்டர்க்கு அதிக  வேலை இல்லா விட்டாலும்  வந்தவரை நிறைவான  நடிப்பை வழங்கி இருக்கிறார் சிம்ரன் . படையப்பா  நீலாம்பரி மாதிரி  வெடிட் ஆன  வில்லி ரோல் லைலாவுக்கு . குருவி தலையில் பீரங்கியை வைத்தது போல் ஆகி விட்டது . அவரது  வில்லி நடிப்பு கலக்கல் எல்லாம் இல்லை , சுமார் ரகம் தான் . 


எம் எஸ்  பாஸ்கர் , ராஜீவ் மேணன்  ஆகியோர் நடிப்பும்  ஓக்கே ரகம் 


எஸ்  தமனின்  இசையில்  இரு பாடல்கள்  ஹிட் லிச்ட்டில் . பின்னணி  இசை  மிரட்டுகிறது . பின் பாதியில் ஓவர் டோஸ் சத்தம் 


சாஜூ ஜோசபின் எடிட்டிங்கில்  படம் 146  நிமிடங்கள் ஓடுகிறது . முதல்  பாதி விறு விறுப்பு . பின் பாதி கொஞ்சம் ஸ்லோ 


அருண் பத்மானபனின் ஒளிப்பதிவு அருமை 


திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர் அறிவழகன் 


சபாஷ்  டைரக்டர்


1 கோமாவில் 32  வருடங்களாக  நினைவில்லாமல் இருக்கும் டயானாவை இப்போவே கொலை பண்ணிடறேன் என டாக்டர் ஃபோனில்  பேசி முடித்ததும்  அதே  டயானாவிடம் இருந்து கால் வரும் காட்சி ஆரவாரமான  கை தட்டல்களை அள்ளிய காட்சி 


2  அப்போலோ  ஹாஸ்பிடல் - அம்மா  இட்லி சாப்பிட்டார் , உப்புமா சாப்பிட்டார்   ரெஃப்ரென்ஸ்களை  வைத்து  சிம்ரன் கேரக்டர்  டிசைனை  வடிவமைத்த  விதம் அருமை


3  பார்த்தேன் ரசித்தேன் (2020) படத்தில்  சிம்ரன் லைலாவுக்கு வில்லி ஆக வருவார். 25  வருடங்கள் கழித்து  வைஸ் வெர்சாவாக லைலாவை சிம்ரனுக்கு  வில்லி ஆக்கிய தாட் பிராசஸ் அருமை 


4   சவுண்ட்  டிசைனிங்  ஒர்க் , அட்டகாசம் , ஒளிப்பதிவில்   திகிலைக்கூட்டும் டார்க்  டோனை வடிவமைத்த ஐடியா 



  ரசித்த  வசனங்கள் 


1   பேரா நார்மல்  இன்வெஸ்டிகேஷன் , பேரா நார்மல்  இன்ஸ்பெக்சன்  இரண்டும் ஒண்ணுதான் . எதையும் கண்டு பிடிக்க மாட்டீங்க 


2  கடவுள்  இல்லைனு ஒரு வரில சொல்லிடலாம், ஆனா இருக்குனு சொல்ல 1000 ப்ரூஃப் தேவைப்படும் 


3  இது தேடும் விஷயம் அல்ல , உணரும் விஷயம் 


4  என்ன ? பேய் ஃபோன் பேசிட்டு வருது ?


5   அந்த  வலி எப்படி இருக்கும்னா? 1000  வவ்வால்கள்  காதுக்குள் கத்தற மாதிரி 


6  இந்த உலகத்தில் எல்லாருமே ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த உலகத்துக்கு வந்தவர்கள் தான் , நான் உங்களைக்காப்பாற்றுவதற்காக வந்தவள்


7 கர்ப்பத்தில்  வாழும் சிசுவுக்கும் , வெளி உலகத்துக்கும் உள்ள தொடர்பே சத்தம் தான் 


8 ஒரு குழந்தையோட அழுகையை நிறுத்தும் அம்மாவோட தாலாட்டு தான் அது கேட்கும் முதல் இசை 


9 இறந்து  போனவங்களுக்கு ஒரு ஏக்கம் இருந்துச்சுன்னா அவங்களைப்பறி  கொடுத்தவங்களுக்கும் ஒரு ஏக்கம் இருக்கும் தானே ? 


10   இவரு  காதில்  எப்படிக்காயம் ? யாரு இவரை அடிச்சது ?


 இவரை யாரும் அடிக்கலை சார், இவரு அவரை அடிச்சாரு , அதனால இவருக்குக்காயம் ஆகிடுச்சு 


 குழப்பாதய்யா 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கோமாவில்  32  வருடங்கள் இருந்த  சிம்ரன் அவ்ளோ   லேட்டாக  ஏன் வில்லியைப்பழி   வாங்குகிறார் ?


2   வில்லி ஆன லைலா சி சி டி வி  கேமராவில் ஏன் சிக்கவில்லை ? 


3  முதல் பாதியை  இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர் போல காட்டி விட்டு பின் பாதியில் தடுமாறி இருக்கிறார்கள் .


4  ஃபிளாஸ்பேக்  கதை  ஆடியன்சுக்கு சரியாக கனெக்ட்  ஆகவில்லை . அது பெரிய மைனஸ் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யு/ஏ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஈரம்  அளவுக்குபிரமாதம்  இல்லை என்றாலும்  ரசிக்க வைக்கும் படம் தான் இது . விகடன்  மார்க் 42 . ரேட்டிங் 2.75/ 5 


Sabdham
Theatrical release poster
Directed byArivazhagan Venkatachalam
Written byArivazhagan Venkatachalam
Produced bySiva
S. Banupriya Siva
Starring
CinematographyArun Bathmanaban
Edited byV. J. Sabu Joseph
Music byS. Thaman
Production
companies
7G Films
AAlpha Frames
Distributed byMythri Movie Makers (Andhra Pradesh and Telangana)
Release date
  • 28 February 2025
Running time
146 minutes[1]
CountryIndia
LanguageTamil
Box office₹2.95 crore[2]

Wednesday, March 05, 2025

அகத்தியா (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹிஸ்டாரிக்கல் ஹாரர் த்ரில்லர் )

 



ஸ்பாய்லர்  அலெர்ட் 


நாயகன்   சினி  ஃபீல்டில் ஆர்ட் டைரக்டர் . தன் முதல் படத்துக்காக தன் சொந்தக்காசைப்போட்டு ஒரு பேய் பங்களாவை உருவாக்குகிறார் . ஆனால்  ஷூட்டிங்க் ஆரம்பிக்கும் தருணத்தில் படத்தின் ஹீரோ - ஹிரோயின்  ஓடி விடுவதால் படம் நின்று விடுகிறது . நாயகனுக்குப்பெருத்த  அதிர்ச்சி . அப்போது  நாயகனின் காதலி கம் தோழி  ஒரு ஐடியா  கொடுக்கிறார் . அந்த பேய் பங்களாவை ஸ்கேரி   ஹவுஸ் ஆக  மாற்றி   சர்க்கஸ் , மேஜிக்  ஷோ போல ஸ்கேரி ஷோ  நடத்தினால் காசு பார்க்கலாம் என்கிறாள் . ஃபாரீனில்  தான் இது போல  உண்டு . முதன் முறையாக  இங்கே  அதை  செயல்படுத்தி   வெற்றியும்  பெறுகிறார்கள் 


 ஆனால்  அந்த ஸ்கேரி ஹவுசில் ஒரு ஆள் மர்மமான முறையில் காணாமல் போக அங்கே நிஜமாகவே தீய சக்திகள் உலா வருவதாக வதந்தி பரவி அந்த ஸ்கேரி ஹவுஸ் ஷோ தடை செய்யப்படுகிறது .அங்கே  இருக்கும் ஒரு பழங்கால பியானோவை வாசிக்கும்போது சில அதிசயங்கள் நிகழ்கின்றன 


 1940 ல்  வாழ்ந்த  ஒரு சித்த  வைத்தியர்  பற்றிய  கதை  ஃபிளாஸ்பேக்கில்...


ஒரு ஆங்கிலேய  துரையின் தங்கை  முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டு கை கால் செயல் இழந்து இருக்கிறார் . ஒரு சித்த வைத்தியர் 48 நாட்களில் குணப்படுத்துவதாக சவால் விட்டு அதன்படியே செய்கிறார்


இதனால்  அந்த  ஆங்கிலேய லேடிக்கும் , சித்த வைத்தியருக்கும் காதல்  மலர்கிறது . ஆனால்  புற்று நோய் போன்ற  கொடிய நோய்களை  குணப்படுத்தும்  மருந்து   சித்த  வைத்தியத்தில் உண்டு என்று சொன்ன சித்த வைத்தியர் கொலை செய்யப்படுகிறார் .


 அவரைக்கொலை செய்தது யார் ? எதனால் கொலை செய்தார்கள்? . படத்தின் நாயகனுக்கும் இந்த ஃபிளாஸ்பேக் கதைக்கும் என்ன சம்பந்தம்? ,. எலும்புப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட நாயகனின் அம்மா குணம் ஆனாரா? என்பது  மீதி திரைக்தை 


  நாயகன்  ஆர்ட் டைரக்டர் ஆகவும் , ஃபிளாஸ்பேக்கில்  ஒரு ரோலிலும் என இரு வேடங்களில் ஜீவா வருகிறார் . ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பு . ஆனால்  அவரை விட அதிகம் கவனம் கவர்வது சித்த வைத்தியர் ஆக வரும் அர்ஜூன் . ஆள்   அந்தக்கால  அர்ஜூன் போலவே  இளமையாக  இருக்கிறார். அவர் நடிப்பும் அருமை 


நாயகி ஆக ,. ஜீவாவின் ஜோடியாக  ராசி கண்ணா ,. அதிக  வாய்ப்பில்லை . வந்த வரை ஒக்கே ரகம் 

இன்னொரு நாயகி ஆக அர்ஜூனின் ஜோடியாக மெடில்டா  கொழுக் மொழுக் என அழகாக இருக்கிறார்  . படம் முழுக்க  வருகிறார் 


ஜீவாவின் அம்மாவாக ரோகினி   பரிதாபமாக இருக்கிறார் . நல்ல நடிப்பு . . யோகிபாபு , ரெடின் கிங்க்ஸ்லி  இருவரும்  சும்மா வந்து  போகிறார்கள் . ராதாரவி  வில்லத்தனம் கலந்த காமெடி ரோல். சார்லிக்கு ஜீவாவின் அப்பா  ரோல் . 


 யுவன் சங்கர்   ராஜாவின் இசையில்  பாடல் சுமார் ரகம் . என் இனிய பொன் நிலாவே  ரீமிக்ஸ்  அருமை . பின்னணி  இசை  ஓக்கே ரகம் . சான் லோகேஷின் எடிட்டிங்கில் 137  நிமிடங்கள்  படம் ஓடுகிறது . தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு பிரமிக்கும்படி இருக்கிறது .


 ஆர்ட்  டைரக்சன்  கலக்கல்  ரகம் .  ஸ்கேரி ஹவுஸ் செட்டப் , அதிலேயே  ஃபிளாஸ்பேக் கதை நிகழ்வது என வெரைட்டி காட்டி இருக்கிறார்கள் 


 திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பது  ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே  என்னும் பாடலுக்காக தேசிய விருது பெற்ற  பாடல் ஆசிரியர் கம்  இயக்குனர் பா விஜய்

சபாஷ்  டைரக்டர்


1   முதல்  பாதியை திகில் , காமெடி  என ஜாலியாகக்கொண்டு போனது 


2   ஃபிளாஸ்பேக் போர்சனில் அர்ஜூன்  தோற்றமும், நடிப்பும், காதல் காட்சிகளூம் 


3  சித்த வைத்தியத்தின் பெருமைகளை சொல்லும் வசனங்கள் 


  ரசித்த  வசனங்கள் 


1  ஜெயிக்கனும்னு ஆசைப்படும் எல்லோரும் ஜெயிப்பதில்லை துணிச்சலுடன் முடிவு எடுப்பவர்கள் தான்  ஜெயிக்கிறார்கள் 


2 அதிகார வர்க்கம் மக்களை  ஏமாற்றத்தான் இலவசங்களை அறிவித்தது 


3  பயங்கரவாதியை விட பகுத்தறிவு வாதி ரொம்ப அபாயகரமானவன்


4  உன் ஆழ் மனதில் எது நடக்கும்னு நினைக்கிறாயோ அது நடந்தே   தீரும் 


5 செம்பருத்திப்பூவில் செம்பு அதிகமாக இருக்கும் 


6  கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கடவுள் கை கொடுப்பதில்லை , கஷ்டத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என நினைப்பவர்களுக்குத்தான் கடவுள் கை கொடுப்பார் 


7  சித்த மருத்துவம் சாகா மருத்துவம் மட்டுமல்ல, யாரையும் சாக விடா மருத்துவமும் கூட 


8  இங்க்லீஷ்  மெடிசனுக்கு எக்ஸ்பயரி டேட் உண்டு , இயற்கைக்கு ஏது எக்ஸ்பயரி டேட் ? 


9  பியானோ வில் நான் செவந்த் கிரேடு 


 நான்  டெந்த்


 ஃபெயிலா? 


இல்லை , நாலாவது வருசம் 


10  சார் . உள்ளே  எவ்ளோ நேரம் இருக்கலாம் ?


 10 நிமிசம் 


ஒரு அரை மணி நேரம் இருந்துக்கவா?


 எதுக்கு ?\

\

 கேர்ள் ஃபிரண்டோட வந்திருக்கேன் 


11  அம்மாவுக்கு  கீமோதெரஃபி கொடுக்கும் வரை உயிரோடு இருப்பாங்க .,  உயிரோடு இருக்கும் வரை  கீமோதெரஃபி   கொடுக்கலாம் 


12  மலைகளூம் , காடுகளும் தான் மூலிகைகளின் கருவறை 

13  பார்த்த்தா  பச்சிலை மருந்து பத்திக்கிட்டா  வெடி மருந்து 


14  டேய்  ஸ்டுப்பிட்டு  


 என்  பேரு ஸ்டுப்பிட்  இல்லீங்க ராஸ்கோலு 


15   எல்லா  மாலைகளூக்குப்பின்னாலும் ஒரு மலர் வளையம் இருக்கு 


16  போராளிக்குக்கொஞ்சம்  பொறுமையும் முக்கியம் 


17 அறிவை  யாராலும் அழிக்கவும் முடியாது , திருடவும் முடியாது 


18 ஆயிரம் அருகம்புல்  அழிஞ்சாதான் ஒரு ஆலமரம் வளரும், 1000 அறிவாளிகள் அழிந்தால் தான் ஒரு முட்டாள் பயல்  ஆட்சிக்கு வர முடியும் 


19 எந்த  வியாதிக்கும் அமெரிக்காவில் தான் மருந்து / தீர்வுன்னா ஏழைங்க சாவதா? 

20 படைப்பாளி  சாகலாம், ஆனா படைப்பு சாகக்கூடாது 


21  எந்த ஒரு தீய சக்தியையும்  அழிக்க ஆண்டவன் ஒரு ஆயுதத்தைப்படைச்சிருப்பாரு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  சித்த வைத்தியத்தின் பெருமைகளை சொல்வது சரி , ஆனால் அதற்காக ஆங்கிலேயெ மருத்துவத்தை மட்டம் தட்டுவது தவறு

2  ஒரு  வேரைக்காட்டி மதம் கொண்ட யானையை நிறுத்துவது எல்லாம் டுபாக்கூர் ரகம் 


3  சித்த வைத்திய , ஆயுர்வேத  வைத்தியக்கூடங்களில் மக்கள் அதிகம் வருவதில்லை . ஆங்கிலேய   மருத்துவமனைகளில் தான்  கூட்டம் அலை மோதுகிறது காரணம்  உடனடி தீர்வு கிடைப்பதால் , இதை  உணராமல்  வைக்கப்பட்ட காட்சிகள்  


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   கமர்ஷியல் படத்துக்குரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஜாலியாக ஒரு படம் , பார்க்கலாம், ஆனந்த விகடன் மார்க் 41 . ரேட்டிங்க் 2.5 / 5 



Aghathiyaa
Theatrical release poster
Directed byPa. Vijay
Written byPa. Vijay
Produced by
Starring
CinematographyDeepak Kumar Padhy
Edited bySan Lokesh
Music byYuvan Shankar Raja
Production
companies
  • Vels Film International
  • Wam India
Distributed byPVR Inox Pictures
Release date
  • 28 February 2025
Running time
135 minutes[1]
CountryIndia
LanguageTamil
Box office₹2.15 crore[2]

Tuesday, March 04, 2025

SUBSERVIENCE (2024) -அமெரிக்கன் மூவி - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் ஃபிக்சன் த்ரில்லர் ) @ அமேசான் ப்ரைம் 18+

             

       ஷங்கரின்  எந்திரன்  படமே   ஒரு ஆங்கிலப்படத்தின் காப்பி தான்  ( ஐ  ரோபோட் ) என சொல்கிறார்கள் . ஆனால் அனதக்கதையையே பட்டி டிங்கரின் பண்ணி பல படங்கள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கின்றன. எந்திரன் படத்தின் சிட்டி கேரக்டரை  ஒரு பெண் ரோபோ வாக ஆக்கினால் இந்தப்படத்தின் கதை ரெடி . 13/9/2024  அன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆன இப்படம் இப்போது அமேசான் ப்ரைம்   ஓ டி டி யில் காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு கன்ஸ்ட்ரக்சன்   ஃபோர்மேன்   ஆகப்பணி புரிபவர் . அழகான மனைவி ,  இரு குழந்தைகள் உண்டு . மனைவிக்கு  இதய சம்பந்தமான ஒரு பிரச்சனை  ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டிருக்கிறாள் .


 நாயகன் தன் குழந்தையுடன் ஷாப்பிங்க் போன போது அங்கே ஆர்ட்டிஃபிசியல் இண்ட்டலிஜென்ஸ் மூலம் ரோபோக்கள்  உலா வருவதைப்பார்க்கிறான் . அதில் ஒரு பெண் ரோபோவை குழந்தைக்கு மிகவும் பிடித்து விடுகிறது . தேர்க்கடையில் பொம்மை வாங்கித்தா என நாம் அடம் பிடித்ததைப்போல அந்தக்குழந்தை அப்பாவிடம் அடம் பிடித்து அதை வாங்க வைத்து விடுகிறது 



 அந்தப்பெண் ரோபோவை  நாயகன் வீட்டுக்கு அழைத்து வருகிறான் . அது எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்கிறது . குழந்தைகளைக்கவனித்தல் , வீட்டைக்  க்ளீன் செய்தல் உட்பட   ஆல் இன் ஆல்  இன்சார்ஜ் ஆகிறது 


  சில வசதிகளுக்காக அந்த ரோபோவின் செட்டிங்கில் சில மாறுதல்களை நாயகன் செய்யப்போக விபரீதங்கள்  ஸ்டார்ட் ஆகின்றன .மனிதர்களுக்கு உண்டான பொறாமை , பொசசிவ்னெஸ் , காதல் பொன்ற உனர்வுகள் அந்த பெண் ரோபோவிடம் தலை தூக்க ஆரம்பிக்கிறது 


இதனால் பல விபரீதங்கள் நடக்கின்றன . ஒரு கட்டத்தில்   அந்தப்பெண்  ரோபாவுக்கும், நாயகனுக்கும்  உரவு நிகழ்கிறது ,. அது நாயகனின் மனைவிக்குத்தெரிய வருகிறது . இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான்  மீதித்திரைக்கதை 


 நாயகன்  ஆக  இத்தாலி நடிகர் மைக்கேல் மோரோன் நடித்துள்ளார் . முக சாயலில்  365 நாட்கள் பட ஹீரோ போலவே  இருக்கிறார் . இந்திய முக சாயல் . கச்சிதமான்  நடிப்பு 


 நாயகனின்  அழகான மனைவி ஆக   மாடலின் ஜிமா   அழகாக  நடித்துள்ளார் . இவரது முக அழகு   அருமை அமெரிக்க நடிகை என்றே  சொல்ல முடியவில்லை 


 பென்  ரோபோ ஆக  மேகன்  ஃபாக்ஸ்  நடித்துள்ளார் . சவாலான கேரக்டர் . அசால்ட் ஆக நடித்துள்ளார்


மகள்  ஆக  மடில்டா ஃபில்த்   சிறப்பாக நடித்துள்ளார் 

\

ஜெட் ஃபால்மரின் இசையில்   விறுவிறுப்பாக கதை நகர்கிறது  .பின்னணி இசை பெரிய பிளஸ் . டேனியலின் ஒளிப்பதிவு  கண் முன் பிரம்மாண்டத்தை  நிறுத்துகிறது . சீன்  லாஹிப் பின் எடிட்டிங்கில்  106  நிமிடங்கள்  விறுவிறுப்பாக நகர்கிறது 


வில் ஹொன்லி ,  அப்ரைல் மெகுரி  ஆகியோர் திரைக்கதை  எழுத   இயக்கி இருப்பவர்  எஸ்  கே   டேல் 

சபாஷ்  டைரக்டர்


1  எரோட்டிக்   திரில்லர்  அல்லது   கில்மா  டிராமா  கதையை ( சயின்ஸ் ஃபிக்சன்  த்ரில்லர்  போர்வை  போர்த்தி  தந்த   விதம் 


2  நாயகியின் குடும்பப்பாங்கான அழகு , நடிப்பு 


3  வில்லியாக வரும்  ரோபோ  நடிகையின் தத்ரூபமான நடிப்பு , ஆக்சன் சீக்வன்ஸ் 



  ரசித்த  வசனங்கள் 


1   எப்பவும்  ரூல்ஸ் பிரகாரம்தான் நடக்கனும்னு அவசியம் இல்லை , தேவைப்பட்டால் ரூல்சை மீறலாம் 


2  அற்ப சுகத்துக்கு ஆசைப்பட்டு  குடும்ப வாழ்க்கையை நீ இழக்கத்துணிந்து விட்டாய் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வில்லி  நாயகனின் குழந்தையைக்கொல்ல திட்டம் போடுவது எல்லாம் ஓவரோ ஓவர் .


2  வில்லி ஆன ரோபோவை நாயகி , நாயகன் இருவரும் லெஃப்ட்  ஹேண்டில்  டீல் செய்வது எப்படி ? .


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -18+ 



சி பி-  எஸ்  ஃபைனல்  கமெண்ட்  படம் விறுவிறுப்பாகப்போனாலும் அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்ற யூகத்துக்கு இடமே இல்லாமல்  ஓப்பன் ஆக எல்லாம்  நமக்கு முன் கூட்டியே  தெரிவது  மைன்ஸ் . ரேட்டிங்   2.25 / 5


Subservience
Release poster
Directed byS.K. Dale
Written by
  • Will Honley
  • April Maguire
Produced by
  • Jeffrey Greenstein
  • Jonathan Yunger
  • Yariv Lerner
  • Les Weldon
  • Tanner Mobley
Starring
CinematographyDaniel Lindholm
Edited bySean Lahiff
Music byJed Palmer
Production
companies
Distributed byXYZ Films
Release date
  • September 13, 2024
Running time
106 minutes[1]
CountryUnited States
LanguageEnglish
Budget€4 million[2]
(USD $5 million)
Box office$264,096