Showing posts with label - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label - சினிமா விமர்சனம். Show all posts

Friday, October 02, 2015

புலி (2015) சினிமா விமர்சனம்

விஜய் நடிப்பில் 58-வது படம், விஜய் - சிம்புதேவன் கூட்டணியில் முதல் படம், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி என நல்ல ஸ்டார் காஸ்டிங் உள்ள படம், நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு, தேவிஸ்ரீ பிரசாத் இசை, முத்துராஜின் கலை இயக்கம், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு என்ற சிறந்த டெக்னீஷியன்கள் பணியாற்றிய படம் என்ற இந்த காரணங்களே 'புலி' மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.




'பாசத்துக்கு முன்னாடிதான் நான் பனி. பகைக்கு முன்னாடி நான் புலி' என்று விஜய் பேசும் பன்ச் டயலாக் ட்ரெய்லரிலேயே ஹிட்டடித்தது. படம் ரசிகர்கள் மனதில் ஹிட்டடித்ததா?

'புலி' கதை: அடிமைகளில் ஒருவராக வளரும் விஜய் தன் காதல் மனைவியைக் காப்பாற்ற ஆளும் அரச வம்சத்தை எதிர்க்கிறார். இடையில் தன் வரலாறை அறிந்துகொள்கிறார். அதற்குப் பிறகு என்ன செய்கிறார்? காதல் மனைவியை மீட்டாரா? அவருக்கு யார் யார் உதவினார்கள்? எப்படி பகையை வெல்கிறார்? என்பது மீதிக் கதை.

மருதீரன் கதாபாத்திரத்துக்கு விஜய் நச்சென்று பொருந்துகிறார். முதல் பாடலிலேயே டான்ஸில் பின்னி எடுப்பது, பன்ச் பேசுவது, காதல் செய்வது, துரோகத்தைக் கண்டு பொருமுவது, பகையைக் கண்டு எகிறுவது, இழப்பில் வருந்துவது என எல்லா பக்கமும் ஸ்கோர் செய்கிறார். வழக்கமாக விஜய்க்கு என்று ஒரு நகைச்சுவைத் தன்மை இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லை.

'இப்படிக் கூட காதலை சொல்வியா நீ?' என்று கேட்கும் ஸ்ருதி ஹாசன் படம் முழுக்க ஆடை குறைப்பில் தாராளம் காட்டியிருக்கிறார்.

ஹன்சிகா மோத்வானி அழகாக இருக்கிறார். நன்றாக டான்ஸ் ஆடுகிறார். மற்ற படி படத்தில் வந்து போகிறார்.

சுதீப் என்ட்ரி ஆகும்போது காட்டும் கம்பீரம், படம் முழுக்க இல்லை. கொஞ்சம் கொஞ்சம் முறைப்பதும், துரோக முகம் காட்டுவதுமாக கடந்து செல்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஸ்ரீதேவி மறுவருகை புரிந்திருக்கிறார். வரவேற்க நாம் தயாராக இருந்தாலும், வருகையின் விதம் அவ்வளவு பிரகாசமாக இல்லை. கண்களை உருட்டும், உடல் மொழியால் மிரட்டும் ஸ்ரீதேவி கூடுதல் மேக்கப்பில் மட்டும் ஸ்ரீதேவி கொஞ்சம் பயமுறுத்துகிறார்.

தம்பி ராமையா, சத்யன் ஆகியோர் காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், காமெடி மிஸ்ஸிங்.

பிரபு, நரேன், நந்திதா, வித்யூ லேகா, ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, சங்கிலி முருகன், விஜயகுமார் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

முத்துராஜின் கலை இயக்கமும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்துக்கு கூடுதல் பலம். நட்டி நட்ராஜ் படத்துக்கான ஒட்டு மொத்த பிளஸ்ஸையும் கேமராவில் அள்ளி வந்திருக்கிறார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் புலி புலி பாடலும், ஏன்டி ஏன்டி மெலடி பாடலும், ஜிங்கிலியா பாடலும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் எந்த குறையும் வைக்கவில்லை.

ஸ்ரீகர் பிரசாத் மன்னவனே பாடலை கத்தரி போட்டிருக்கலாம். ஹைப் இருக்க வேண்டிய இடத்தில் தடையாக இருக்கிறது. லீனியர் எடிட்டிங் தேமே என்று மெதுமெதுவாய் கடக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளிவிட்டது.

ஒரு ஃபேன்டஸி அட்வென்ச்சர் திரைப்படத்தில் காதல், ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட், சின்னச் சின்ன டீட்டெய்லிங், குழந்தைகள் விரும்பும் சில விஷயங்கள் என எல்லாவற்றையும் பதிவு செய்ய இயக்குநர் சிம்புதேவன் முயற்சித்திருக்கிறார். ஆனால், அது வெறும் முயற்சியாக மட்டுமே போய்விட்டதால் பலன் கிட்டவில்லை.

வழக்கமான, பழக்கமான அடிப்படைக் கதையை வைத்துக்கொண்டு, திரைக்கதையில் எதுவும் செய்யாமல் டெக்னீஷியன்கள் உழைப்பை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?

எம்.ஜி.ஆர் படத்தின் சட்ட வட்ட செவ்வக கட்டமைப்புகளுக்கு உட்பட்ட கதைதான். அதில் எந்த த்ரில்லும், தில்லும் இல்லாமல் உருவாக்கப்பட்ட காமாசோமா என்று நகரும் திரைக்கதை எந்த உற்சாகத்தையும் கொடுக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக, ஃபேன்டஸி அன்வென்ச்சர் படம் என்று 'புலி'யைக் குறிப்பிடுவதற்கு தகுந்த எந்தப் பாய்ச்சலும் இல்லாதது எந்தத் தரப்பு ரசிகருக்கும் ஒவ்வாதது.

படம் பார்த்து முடிந்ததும், ஒரு ரசிகரிடம் பேசினேன். எப்படி இருக்கு என்றேன். அமைதியாய் சிரித்தார்.

பிடிச்சிருக்கா பாஸ்?

"விஜய் ரசிகன் நான். என்ன சொல்லமுடியும்?" என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.

அட்ராக்ட் பண்ண வேண்டிய புலி, அட்டேன்ஷனில் கூட நிற்க வைக்காமல் சர்வ சாதாரணமாய் போகிறது!

- நன்றி  The-Hindu

Saturday, March 22, 2014

கேரள நாட்டிளம் பெண்களுடனே - சினிமா விமர்சனம்

கேரள நாட்டிளம் பெண்களுடனே

தினமலர் விமர்சனம்

"பூ, "களவாணி படங்களின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது திரைப்படம் தான் ""கேரள நாட்டிளம் பெண்களுடனே!

எஸ்.எஸ்.குமரன், இவரது இயக்கத்தில் முதலாவதாக வெளிவந்த ""தேனீர் விடுதி திரைப்படத்தை கருத்தில் கொள்ளாமல், இத்திரைப்படத்தை காண சென்றோமென்றால், "கேரள நாட்டிளம் பெண்களுடனேயும் குளிர்ச்சியான கேரளாவிலும், சில மணித்துளிகள் வாழ்ந்து திரும்பிய குதூகலத்தை உணரலாம்!



கதைப்படி, கேரளாவில் சில வருடங்கள் வாழ்ந்த ஞான சம்பந்தத்திற்கு, திருமணம் செய்து கொண்டால் கேரளத்து இளம் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசை, நிராசை ஆகிறது. அதனால் தன் மகன் அபி சரவணனை, சின்ன வயது முதல் நீ ஒரு கேரள பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று உசுப்பேற்றி கேரள கலாச்சாரம், உணவு முறைகளை ஊட்டி ஊட்டி வளர்க்கிறார்.


இதற்கு அபி சரவணனின் அம்மா ரேணுகா கடும் எதிர்ப்பு தெரிவித்து, தன் சொந்தத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை தேடிப்பிடிக்கிறார். போலீஸ் என்றதும் அலறும் அபி சரவணன், நைசாக எஸ்கேப் ஆகி, பெங்களூர் வேலைக்கு செல்வதாக சொல்லி அப்பாவின் ஐடியாபடி கேரளா சென்று, காதலிக்க நண்பர் காளி உதவியுடன் பெண் தேடுகிறார்.


மீடியாவில் வேலை பார்க்கும் காயத்ரி சிக்குகிறார். இருவரும் உருகி உருகி காதலிக்கின்றனர். இன்னொரு பக்கம் ஒரு இஸ்லாமிய பெண்ணும் அபி சரவணனை ஒரு தலையாக காதலிக்கிறார். இந்நிலையில் காயத்ரியின் அப்பா, அபியுடனானா-காயத்ரியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மற்றுமொருபக்கம் பெண் போலீசும் அபியை அடைய துடிக்கிறார்.


 அபி, யாருக்கு கிடைத்தார்.?! ஞானசம்பந்தம் சபதம் நிறைவேறியதா..?! காயத்ரி மெய்யாலுமே கேரள நாட்டிளம் பெண் தானா...?! என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு அழகிய கேரள பின்னணியில் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது ""கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தின் மீதிக்கதை!



அபி சரவணன், அறிமுகம் என்பதையும் தாண்டி நம்பிக்கைக்குரியவராக தெரிகிறார். காயத்ரி, பெண் போஸ் மீன்கொடி, இஸ்லாமிய பெண் மூவரில் காயத்ரிக்கே நடிக்க நிறைய "ஸ்கோப் இருக்கிறது. அதை அவரும் சிறப்பாக செய்திருக்கிறார்.

ஞானசம்பந்தம், ரேணுகா இருவரின் ஜோடி பொருத்தம் "சூப்பர்ப், ஓரே வீட்டுக்குள் அவர்களது கலாச்சார வேறுபாடு தான் செம காமெடி. நாயகரின் நண்பராக வரும் காமெடி காளியும் கவருகிறார்.




எஸ்.எஸ்.குமரனின் எழுத்து, இசை, இயக்கம் எல்லாவற்றுக்கு மகுடம் சேர்த்திருக்கிறது, வைரமுத்துவின் வரிகளும், யுவாவின் ஒளிப்பதிவும்!

மொத்தத்தில் ஒருசில குறைகள் இருந்தாலும், ""கேரள நாட்டிளம் பெண்களுடனே - நம்மூர் ஆண்களுக்கு கலர்புல் கதகளி!


thanx - dinamalar


a



diski - குக்கூ - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2014/03/blog-post_8524.html

Saturday, August 10, 2013

CHENNAI EXPRESS - சினிமா விமர்சனம்

 

தாத்தாவின் ஆஸ்தியை  எப்படி பேரன் உதயநிதி ஸ்டாலின் சினிமா  எடுக்கறேன்கற பேர்ல கரைச்சுட்டிருக்காரோ  அப்படி   ஹீரோ தன் தாத்தாவின்  அஸ்தியை கரைக்க ரயில்ல  ராமேஸ்வரம்  போறார்.ரயிலில் வந்த மயிலை  சந்திக்கறார்.மயிலுக்கு  என்ன பிரச்சனைன்னா இயக்குநர் சேரன்  பொண்ணு மாதிரி  அது  யாரையும்  லவ்வலை, ஆனா வீட்ல  பார்த்து வெச்ச மாப்ளை பிடிக்கலை, அதுனால   வீட்டை விட்டு ஓடி வர திட்டம் போட்டிருக்கு .


ஹீரோவை யார்னே தெரியலைன்னாலும்  அவர் தான் தன் காதலர்னு  சும்மா அடிச்சு விட்ருது. ஆல்ரெடி பார்த்து வெச்ச மாப்ளையை  அடிச்சு  வீழ்த்துனாத்தான்   பொண்ணு  ஹீரோவுக்கு .!  ஹீரோ  ஹீரோயினைக்கூட்டிட்டு   எஸ் ஆகறார். வழிப்பயணத்துல  ஹீரோயின் கூட  சினேகா  ஆகிடுது , அடச்சே , சினேகம் ஆகிடுது. லவ் வந்துடுது . ( நாமும் எத்தனையோ பயணம்  கடந்து வந்துட்டோம்  ஒரு லவ்வும் வந்து தொலைய மாட்டேங்குது ;-))


அவங்க  2 பேர் லவ் என்ன ஆச்சு? என்பதே  கதை 


 ரொம்ப சாதாரணமான , நமக்கு மிகவும் பரிச்சயமான இந்தக்கதையை   ரொம்ப சுவராஸ்யமான திரைக்கதை  , சம்பவங்கள் மூலம்  விறு விறுப்பாக்கொண்டு போறாங்க 




ஹீரோ ஷாருக்கான்  நம்ம ஊர் மவுன ராகம் கார்த்திக் மாதிரி, என்ன ஒரு இளமைத்துள்ளல் , நடிப்பு , பாடி லேங்குவேஜ் , எல்லாம் அபாரம் . இந்த வயசுலயும்  பாஜிகர்  படத்துல பார்த்த அதே சுறுசுறுப்பு ,இளமை . வெல்டன் . 

இவர் பேசும்   தமிழ் , ஆங்கில , ஹிந்தி வசனங்கள்  செம காமெடி கலாட்டா , கிரேசி மோகன் பாணியில் அமைந்த   வார்த்தை ஜால காமெடி  பெரிய பிளஸ்.



ஹீரோயின் தீபிகா அந்த புதருக்குப்பின்னால போகக்கூடாது, படுக்கக்கூடாது சாரி  தீபிகா படுகோனே . தேக்கு மரம் மாதிரி வழுவழு என்ற  வாளிப்பான  உடம்புடன் , பாக்கு மரம் மாதிரி ஓங்கி வளர்ந்த உடம்புக்காரி  ( நீ இதுக்கு முன்னால பாக்கு மரத்தையோ , தேக்கு மரத்தையோ நேர்லபார்த்திருக்கியா? சும்மா அள்ளி விடாதடா? ) இவர்  முதுகில்  எதுவும் அணிவதில்லை  என்ற வைராக்கியத்துடன்  ஆளான நாள் முதலா  சத்தியம் செஞ்சு  கொடுத்தவர் மாதிரி ஓப்பனாகவருகிறார்.




 இவர் லோ ஹிப் சேலை மிகமிக அபாயகரமான  ஷேர் மார்க்கெட் , பண ரூபாய் மதிப்பு போல  கீஈஈஈழே இறங்கி வரும்  வாகு அய்யய்யோ !.தொப்புளுக்கு கீழே  2 இஞ்ச் சேலையை இறக்கி கட்டும்மான்னு டைரக்டர் சொன்னா  6 இஞ்ச் இறக்கி கட்டும் இறக்க  சுபாவம் உள்ள   கிளாமர் ராணி . இவர் போட்டு வரும்  வளையம் உள்ள மூக்குத்தி இவர் முக அழகுக்கு பொருந்தவில்லை என யாராவது அவரிடம் போய் சொன்னால் தேவலை ( அல்லது ஃபோன் நெம்பர் கொடுத்தா நான் மெசேஜ்ல சொல்லிக்கறேன் ) 


அடிக்கடி இவர் லோ கட் ஜாக்கெட்டில் துள்ளிக்குதிப்பது  முயல் கதையை நினைவுபடுத்துது . ஹீரோவை விட  அரை அடி  உயரம் என்பதால்  ஹீரோவுடனானக்ளோசப் காட்சிகளில் எல்லாம்  குனிஞ்சு  நடிக்க வேண்டிய  கட்டாயம் , நமக்கு தாயம் 



ஹீரோயின் அப்பாவாக சத்யராஜ் . கம்பீரமான தோற்றம் , ஆனால் அதிக வாய்ப்பு இல்லை.  கிராமத்து தாதா  தோற்றம் கனகச்சிதம். மேஜர் சுந்தர்ராஜனுக்கு அண்ணன் . ஒரே வசனத்தை தமிழில் , ஆங்கிலத்தில் , ஹிந்தியில் என  3 டைம் சொல்றார். ஒரு பானைசோற்றுக்கு ஒரு சோறுபதம் இதோ -  டேக் ஹெர் , இவளை எடுத்துக்கோ , தேரி மேரி 


படம் முழுக்க தமிழ்  வசனங்கள்  வந்து போகுது , மும்பைல சப் டைட்டில் போட்டுத்தான்  படத்தை ஓட்டனும்  போல





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  




1. ஓப்பனிங்க் சீனில்  ஹீரோயினுக்கு ஓடும்  ரயிலில் இருந்து கை கொடுத்து  ஏத்தி விடும்(ரயில்ல தான்) ஹீரோ  வில்லன்கள்  என தெரியாம   4 பேரையும்  அதே போல்ம்  கை கொடுத்து  ரயிலில் ஏற்றுவது  செம காமெடி சீன் , தியேட்டரில் செம அப்ளாஸ் 


2. அந்த    ரயில்  ஒரு பாலத்தில்  நிற்கும்போது   ஹெலிகாப்டர்ஷாட்டில்  இரு புறமும் ஓடும் ஆற்றை காட்டுவ்து அபார,மான லொக்கேஷன்  செலக்‌ஷன் ,ஒளிப்பதிவு  பிரமாதம்  ( மகாராஸ்ட்ராவில் உள்ள  டூர் ஸ்பாட்டான  லோனாவாலாவாம் - நாமெல்லாம் பேங்க்ல லோன் வாங்கிட்டுதான் அங்கே போக முடியும் )  ஹாலிவுட் படத்துக்கு இணையான காட்சி அது 



3. திருமணமான மாப்பிள்ளைகள் மணப்பெண்ணை  தூக்கிக்கொண்டு   300 படிக்கற்கள்  உள்ள   மலைக்கோயிலில்  தூக்கிச்செல்ல வேண்டும்  என்ற நிபந்தனைப்படி  ஹீரோ ஹீரோயினை  தூக்கிச்செல்லும் செண்ட்டிமெண்ட் சீன்  ( இந்த  சீனில் நான் அனிரூத்  ஆண்ட்ரியாவை  தூக்கிச்செல்வது போல் கற்பனை பண்ணிப்பார்த்துக்கிட்டேன் ) 


4.   கூட  இருக்கும் வில்லனின் அடியாட்களுக்கு தமிழ்மட்டுமே தெரியும் என்பதால்   ஹீரோ - ஹீரோயின் இருவரும் பாட்டு மூலமாகவே  சங்கேதமாக தகவல் பரிமாறிக்கொள்வது   சுவராஸ்யம் . ஹிந்தியில்   சூப்பர் ஹிட் பாட்டுக்களை   அதே மெட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்பாடுவது  பாலிவுட்டில்  அமோக வரவேற்பு பெறும் 


5.  ப்ரியாமணியுடனான  குத்தாட்டம் கலக்கல் டான்ஸ் ,  அந்த மெட்டு , டான்ஸ்  கொரியோகிராபி  கிழி கிழி  ( நன்றி  - கலா சலா  சல சலா ).க்ளைமாக்ஸில்   வரும்  லுங்கி டான்ஸ்  செம ஆட்டம் .


யு  நெக் ஹிஹி


 இயக்குநரிடம்  சில  கேள்விகள்:



1. கில்லி படத்தில் விஜய்  த்ரிஷாவின் கழுத்தில்  அரிவாளை வெச்சு மிரட்டி வில்லன்களிடம்   இருந்து  தப்பிப்பதும்  , பிரகாஷ் ராஜை  ஜீப்புடன் ஓட விட்டு சேத்தில் தள்ளி  விடுவதும் மிக புகழ் பெற்ற காட்சி , அதை அச்சு அசல் அப்படியே காப்பி அடிச்சது ஏன்? இத்தனைக்கும் இது ஆல்ரெடி  தெலுங்கில் வந்தசீன் தான் . ஒரே சீனை  எத்தனை பேர்தான்   சுடுவீங்க ? ( ஒக்கடு தெலுங்கு ஒரிஜினல் )
2. முத்து படத்தில்   லவ் லெட்டர்  கை மாறி ஆளாளுக்கு தப்பா ஆளைஅர்த்தம் பண்ணிக்கிட்டு நைட்  தோட்டம்  வந்து  அலை மோதும்  காமெடி அப்படியே   சுட்டிருக்கீங்க  .. முடியல(   மீட்   @ ஸ்டோர் ரூம்) 



3. ஹீரோயினுக்கு  ஃபேஸ் எக்ஸ்பிரசன்ஸ் சுத்தமா வர்லை . அதனாலதானோ என்னவோ  கேமரா எப்பவும் அவர் முகத்தைத்தவிர   மத்த  எல்லா இடங்கள்லயும்  சுத்திட்டே இருக்கு  


4. ஷாருக்கான் படத்துல   ரஜினி வரனும்னு கட்டாயமா? என்ன?  ரஜினி இந்தப்படத்துல நடிக்கறார், ஒரு கெஸ்ட்  ரோல்ல வர்றார்னு ஆசை காட்டி  சும்மா ஒரேஒருபாட்டுக்கு   அவர்  ஃபோட்டோவ மட்டும் மாட்டி ஹீரோ ஷாரூக் ஆடுவது   ஆர்க்கெஸ்ட்ரா  ட்ரூப் மாதிரி இருக்கு , படு செயற்கை  , இதெல்லாம்   அறிமுக   ஹீரோ படத்துக்கு  ஓக்கே , ஷாரூக் மாதிரி  சூப்பர் ஸ்டார்கள் இன்னொரு சூப்பர்ஸ்டாரை   அண்டிப்பிழைக்கனுமா?


5.   இளையதளபதி விஜய்& புரட்சித்தளபதி   விஷால் 2 பேரும்   சம்ப்ந்தம் இல்லாம ஏதாவது பஞ்ச்  டயலாக் அப்பப்ப பேசுவாங்க , அந்த மாதிரி இதுல ஹீரோ எதுக்காக  ஒரு டயலாக்கை அடிக்கடி  ரிப்பீட்டிங்க்? - டோண்ட் அண்டரெஸ்டிமேட் த  பவர்  ஆஃப் எ  காமன் மேன்  = பொது ஜனத்தின்சக்தியை   குறைச்சுஎடை போடவேணாம் 




6. அலெக்ஸ் பாண்டியன் அட்டர் ஃபிளாப் ஆக முக்கியக்காரணமே   ஹீரோ   80 கிமீ வேகத்தில்  ஜீப்ல போய்க்கிட்டே எதிரே 120 கிமீ வேகத்தில் வரும்  ஜீப்  டயரை அரிவாளால் வெட்டி தள்ளும் சீன் தான் .. கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத   அந்தசீனைஏன் காப்பி அடிக்கனும் ? 



7.  கிங்க்காங்கின் மொக்கை காமெடி  சீன்,இலங்கைக்கு டீசல்   கடத்தும்  சீன்  தேவை  இல்லாதது 


8.  படத்தின் முன்  பாதி   செம ஸ்பீடா போகுது , பின் பாதி   டெட் ஸ்லோ . இழு இழு என இழுத்திருக்கவேண்டாம் , எடிட்டிங்க்ல இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்


9 . தனுஷ் இன் உத்தம புத்திரனில் இருந்து சில காட்சிகளை  உருவியது எதுக்கு ?  என் லிங்கு சாமியின்  ரன் பட க்ளை மாக்ஸ் காட்சியைசுட்டது ஏன்? 



10 . ஹீரோவின் பெயர் ராகுல் என வைத்தது  யாருக்கு  குல்லா போட?




மனம் கவர்ந்த வசனங்கள்



1.  ஹீரோயின்  -அந்த ஃபோன்  அவருது
வில்லன்கள் -அடடா ,முதல்லியே  சொல்லி  இருந்தா  அவரையும்  தூக்கிப்போட்டிருப்போமே? 


2.  ஹீரோயின்  -எங்கப்பா  ஒரு  பெரிய   தலை 

 ஓஹோ , டீச்சரா? ஐ மீன்  வாத்தியாரா?


 ஹய்யோ , அவர் ஒரு டான்  ( தாதா) 



3. சத்யராஜ்  - என்னம்மா   கண்ணு... தமிழ்  தெரியாதா? 



4. ஐ ஆம்  இன்ஸ்பெக்டர் 


விச் பார்ட்?


ஹோல் பாடிக்கும்

 யோவ் , எந்த  ஏரியாவுக்குன்னு கேட்டேன்




5. உயிரோட வந்த நீ உயிரோட இங்கே இருந்து  போக மாட்டே  


 

6. ஆல் ஈஸ்   வெல்

 என்னது,? ஆயில் ஈஸ் வெல்லா? 



 7  , என்னங்க ? வண்டி  ரிப்பேரா? ஏன் கார்ல புகை வருது?

 ம், கார் தம் அடிக்குது 



8.  கேரளா  லாரி  டிரைவர் -எந்தா ஜோலி? 


 ஐ ஆம் நாட் ஏஞ்சனா ஜூலி 



9.  நான்  ரொம்ப நல்லவன் , ஒரு மகளோட மாப்பிள்ளைக்கு  இதைவிட முக்கியமான  தகுதி என்ன வேணும் ?


 



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  41



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

ரேட்டிங் =   3.25  / 5


சி பி கமெண்ட்    - ஷாரூக்  ரசிகர்கள் , தீபிகா (குப்புற) படுகோனே ரசிகர்கள்  பார்க்கலாம் . ஜாலி டைம்பாஸ், பெண்களும் பார்க்கலாம் . ஈரோடு வி எஸ் பில படம் பார்த்தேன் 




டிஸ்கி- தலைவா- விமர்சனம் -http://www.adrasaka.com/2013/08/blog-post_5337.html 

















 ஒயிட் அண்ட்  பிளாக் கில்  கலர்



Thursday, July 26, 2012

THE DARK KNIGHT -நோலனின் ஆக்‌ஷன் கலக்கல் - சினிமா விமர்சனம்

http://www.thetechnicolourhour.com/storage/the_dark_knight_7.jpeg?__SQUARESPACE_CACHEVERSION=1342629197946ஓப்பனிங்க்லயே வில்லனின் அதிரடி ஆக்‌ஷன்.. பேங்க்கை பிரமாதமா கொள்ளை அடிக்கறாரு.. ஆ ராசா எல்லாம் தோத்துப்போகனும். இவரோட கேரக்டர் புரட்சித்தலைவி மாதிரி, காரியம் ஆகிற வரை நட்பு, கூட்டணி , காரியம் முடிஞ்சதும் கழட்டி விட்டுடனும்.. அம்மா கட்சிக்கூட்டணில இருந்து கழட்டி விடுவாங்க.. இந்த வில்லன் உலகத்தை விட்டே கூட்டாளிங்களை அனுப்பிடுவார்.. பேங்க் கொள்ளை நடக்கறவரை கூட்டாளிங்க கூடவே இருக்கறவர் கொள்ளை நடந்ததும் எல்லாரையும் போட்டுத்தள்ளிட்டு பணத்தோட எஸ் ஆகறார்.. 


இவர் ஏன் ஜோக்கர் மாதிரி, ருத்ரா படத்துல பபூன் கே பாக்யராஜ் மாதிரி, அபூர்வ சகோதரர்கள்  குள்ள அப்பு மாதிரி மேக்கப் போட்டிருக்காரு? அதுக்கு ஒரு குட்டி ஃபிளாஸ் பேக்.  போர் அடிக்காது,.,. காரணம் அது ஒரு குட்டியோட ஃபிளாஸ்பேக்.



வில்லன் ஒரு ஃபிகரை லவ் பண்றாரு.. அதும் தான்.. எவனோ ஒரு பொறம்போக்கு வில்லன் காதலி மேல ஆசிட் ஊத்தினதால ஃபிகர் முகம் அகோரம் ஆகிடுது.. வில்லன் ஏழை.. பிளாஸ்டிக் சர்ஜரி பண்ண பணம் இல்லை.. காதலி முகம் இப்படி இருக்கே? நாம மட்டும் அழகா இருந்தா எப்படி?ன்னு தன் வாயை கிழிச்சு விட்டுக்கறாரு.. சொல்லாமலே படத்துல லிவிங்க்ஸ்டன் நாக்கை கட் பண்ணிக்கற மாதிரி.


இதனால அந்த காதலி வில்லன் மேல இரக்கப்படும்னு பார்த்தா அது நயன் தாராவை விட பெரிய கே டி போல.. தானா வந்து கூப்பிட்டா தி முக.. வெளீல போன்னு துரத்துனாலும் அதிமுக என கூட்டணிக்காக தன் கொள்கைகளை, மானம், மரியாதை ரோஷத்தை எல்லாம் கவனிக்காத டாக்டர் ராம் தாஸ் அய்யா மாதிரி வேற ஒருத்தன் கூட காதல் கூட்டணி போட்டுடுது.. அதனால வில்லனுக்கு செம கோபம்.. தளபதி படத்துல ரஜினி சொல்றாரே? வெறும் பணம்.. அந்த பணத்துக்காகத்தானே  அவ உதறினா? பணம் சம்பாதிக்கனும்கற வெறில இருக்கறவன் தான் வில்லன்.. 



http://cdn.breitbart.com/mediaserver/Breitbart/Big-Hollywood/2012/07/20/dark-knight-review/the-dark-knight-rises-thumb-550x395-47864.jpg


இப்போ ஹீரோவை பார்ப்போம்.. பேட்மேன்.. நகரத்துல இருக்கற ரவுடிங்க, கேடிங்க, திருட்டுப்பசங்க, மொள்ளமாரிகளை ஒழிக்கறதுதான் இவர் லட்சியம்.. போலீஸ் இவருக்கு உதவி செய்யுது,.. சரி நம்மாலதான் முடியல.. அவருக்கு உதவி செஞ்சா  அந்த புண்ணியம், பேரு நமக்கும் கொஞ்சம் கிடைக்கட்டும்னு தான்.. அதனால நகர மேயர் பேட்மேனுக்கு நிறைய ஹெல்ப் பண்றார்.. 


மாஃபியா கேங்க் உடைய மீட்டிங்க் நடக்குது.. அங்கே வில்லன் அழையா விருந்தாளியா போறாரு..  உங்க எல்லா பிரச்சனைக்கும் பேட்மேன் தான் காரணம்.. நான் அவனை போட்டுத்தள்ளிடறேன்.. அப்டினு அதுக்கு ஒரு ரேட் பேசறான்.. 

 பேங்க்ல இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட 16 மில்லியன் டாலரையும் 5 வெவ்வேற பேங்க்ல போட்டு வெச்சிருக்காங்க,.,. அந்த 5 பேங்க்கையும் சீஸ் பண்ண மேயர் உத்தரவு போடறார்.. 


வில்லனுக்கு செம கோபம்.. பேட்மேனை சரண்டர் ஆக சொல்லுங்க.. இல்லைன்னா வி ஐ பி களை கொலை பண்ணுவேன்னு மிரட்டறான்.ஹீரோவுக்கும், வில்லனுக்கும் நடந்த மோதல்ல யார் ஜெயிக்கறாங்க என்பதை ஒரு நிமிடம் கூட போர் அடிக்காம பர பர ஆக்‌ஷன் ஜால வித்தை காட்டி இருக்காரு,.. 

 இந்த படத்தை தமிழ்ல எடுத்தா வில்லன் கேரக்டர்க்கு ரெண்டே சாய்ஸ் தான் 1. கமல் 2 சத்யராஜ்

படத்துல ஓவர் டாமினேஷன் வில்லனுக்குத்தான்.. பல காட்சிகளில் அப்ளாஸ் அள்ளறார் . இவர் தான் ஹீரோ மாதிரி.. எந்த இடத்துலயும் இவரை ஹீரோவால ஓவர்டேக் பண்ணவே முடியல.. திரைக்கதை அமைப்பு அப்படி..ஆனா முக பாவனைகள் சரியா தெரியல. மேக்கப் அப்படி.. 



பேட்மேனா வர்ற ஹீரோவும், மேயரா வர்ற செகண்ட் ஹீரோவும் கனகச்சித நடிப்பு. ஹீரோயின் சராசரி ஃபிகர் தான்.. நோலன் பொதுவா ஹீரோயின் செலக்சன்ல அதிக ஆர்வம் காட்டுவதில்லை போல. 


http://www.toplessrobot.com/dark-knight-7.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. கொலை, கொள்ளைன்னு நாம இருந்தாலும் அதுலயும் நேர்மை, நியாயம் எல்லாம் வேணும்.


2.  விக்கறது டிரக்ஸ். அதுல மேனுஃபேக்சரிங்க் டேட், எக்ஸ்பயரி டேட் எல்லாம் போட்டா விக்க முடியும்?என் கிட்டேயே கம்ப்ளைண்ட் பண்றீயா?



3. ஃபேக் ஐ டி ஆஃப் பேட் மேன் - (FAKE ID OF THE BAT MAN ) உங்களுக்கும், எங்களுக்கும் என்ன வித்தியாசம்? எல்லாரும் நியாயத்துக்காக போராடுறோம்?


ம்.. பாலுக்கும், கள்ளுக்கும் உள்ள வித்தியாசம் தான்


4. ஒவ்வொரு தப்பும் ஒவ்வொரு அனுபவம் தரும்


 அப்போ உங்க உடம்பு பூரா அனுபவமா?



5. கூட இருக்கற என்னாலயே உங்களை புரிஞ்சுக்க முடியலையே?


புரிஞ்சுக்காம இருக்கறதுதான் நல்லது



6. சின்ன மீனை வெளீயே விடுவோம், திமிங்கிலம் மாட்டாமயா போயிடும்?


7. ஃபேஷன் முக்கியம் இல்லை, ஃபங்க்‌ஷன் தான் முக்கியம்


8. செத்தா ஹீரோவாத்தான் சாகனும்.. ரொம்ப நாள் வாழ்ந்தா வில்லனாதான் நம்மை நாமே பார்க்க வேண்டி வரும்


9. வில்லன் - BAT MAN  - இந்த சிட்டியை உஜாலாவுக்கு மாற்ற நினைக்கும் BAD MAN


10 . இந்த உலகத்துல எதுவுமே ஃப்ரீயா கிடைக்காது



 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-CqMGOkd2_z40acDFddpxowALKSPZ-9idIAM7tHopgT5HCjpJWv-qA-CnTM-fJKAr11U-Cd_nT6ESH9lty9Ne9Z20iyt9naB380hIDxoEnFpDwea_KOjiDK_R8CHHcraK3_y83m7kxwGl/s400/Batman+The+Dark+Knight+movie+costumes+-+Clown+masks.JPG



11. என்னை அரெஸ்ட் பண்ணா என் ஃபிரண்ட்ஸ் உன்னை சும்மா விடமாட்டாங்க.. 


அதுக்கு அவசியமே இல்லை, உன் எல்லா ஃபிரண்ட்ஸ்சும்  உன் கூட ஜெயில்ல களி சாப்பிட வர்றாங்க. 


12.  பெரிய தலைவர்கள்னா போலீஸ் அரெஸ்ட் பண்ணுனதும் நெஞ்சு வலின்னு சொல்லிக்கிட்டு எஸ் ஆகிடலாம்.. இந்த இடைல இருக்கற ஆள்ங்களுக்குத்தான் கஷ்டம்.. பெயில் எல்லாம் கிடைக்காது


13. உங்களுக்கு தெரிஞ்சு அவளுக்கு எக்ஸ் பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்களா?

 என்னைகேட்டா எப்படி? அவளையே கேளுங்க.


14.  மனுஷனா பிறந்தா சாவு நிச்சயம்.. இப்போ நான் செத்துட்டா நீ யார் கூட வாழ்வே?

 வேற ஏதாவது பேசலாம்.  ஐ வாண்ட் டூ ஸ்கிப்


15.  அடப்பாவிகளா? கதவைத்தட்டிட்டு வர மாட்டீங்க? நல்ல வேளை , ஏதும் பார்க்கலை.. 


16. நீங்க என் அப்பா மாதிரியே இருக்கீங்க... ஆனா எனக்கு எங்கப்பாவை பிடிக்காது.


17. சில பேருக்கு எதுவுமே பெருசா தெரியாது.. பணம், புகழ், பேரு, மரியாதை.. இப்படி. எதையும் சட்டை பண்ணிக்க மாட்டாங்க..ஆனா சிலருக்கு இந்த உலகம் தீப்புடிச்சு எரியனும்.. நான் 2 வது கேட்டகிரி ( விருதகிரியை விட மோசமான ஆள் போல )


`18.  சில விஷயங்கள் சிலருக்கு தெரியாம இருக்கறதே நல்லது


19. உனக்குன்னு சில ரூல்ஸ் இருக்கு.. ஆனா இந்த ஜோக்கருக்கு ரூல்ஸே இல்லை.. 


20.  உன் முகமூடியை கழட்டு, அவளே தேடி வருவா.. 



http://thebatmanuniverse.net/image/Merchandise/News/07-Hot%20Toys/TDKR%20Batman/Announcement.jpg



21. தலை விழுந்தா உன் தலை தப்பும், பூ விழுந்தா சங்குதாண்டி.. 


22. மனுஷனோட உயிரை எடுக்க  நமக்கு உரிமை இல்லை.. 

 ம், ஆனா இவன் மனுஷனே கிடையாது


23. இந்த வண்டி புல்லட் புரீஃப் தானே?

 ஆமா. ஆனா ராக்கெட் லான்ச்சர்க்கு எல்லாம் தாங்காது

 அடடா..  நான் வேற வீட்ல சொல்லாம வந்துட்டேனே?


24. பேட்மேன் தான் உங்களை காப்பாத்துனாரா டாடி?

 சொல்லப்போனா இந்த தடவை நான்தான் பேட்மேனை காப்பாத்துனேன்


25. தகுதியானவன் கூடத்தான் விளையாடனும்.. நான் உன் ரேஞ்சுக்கு திங்க் பண்றேன், நீ என் ரேஞ்சுக்கு திங்க் பண்ணு


26. இந்த ஜனங்க அட்டை மாதிரி, தேவைப்படும்வரை நம்ம கூடவே இருந்து நம்ம ரத்தத்தை உறிஞ்சிக்குவாங்க



27. இந்த உலகத்துல வாழனும்னு நினைச்சா  எந்த ரூல்ஸும்  வெச்சுக்கக்கூடாது

28. சாகறதுக்கு முன்னால தான் ஒவ்வொரு மனுஷனும் தன் உண்மையான சொரூபத்தை காட்டுவான்


29. காரைத்துரத்தும் நாய் மாதிரிதான் நான்./. துரத்தும் வரை துரத்துவேன், ஆளை பிடிச்சுட்டா அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியாது எனக்கு  


30. எல்லாமே போட்டு வெச்ச பிளான் பிரகாரம் செஞ்சா பயம் போயிடும்




http://www.gadgetreview.com/wp-content/uploads/2011/10/Maggie-Gyllenhaal-Dark-Knight.jpeg

31. மனுஷன் புத்தி குரங்கு புத்தி, அடிக்கடி மாறிட்டே இருக்கும்



32. இந்த உலகம் மோசமானது, நம்மால நல்லவனா வாழ முடியாது, வாழ விட மாட்டாங்க.. 


33. சில நேரங்கள்ல உண்மை வெளில வராம இருக்கறதே நல்லது,உண்மையை விட கற்பனைக்கு பவர் ஜாஸ்தி..  மக்களோட நம்பிக்கைக்கு பலன் கிடைச்சே ஆகனும்


34. அவர் ஏன் ஓடறார்?

 அப்போதானே நாம அவரை துரத்திட்டு போக முடியும் ?



http://0.static.buzzine.com/sites/default/files/imagecache/780x441/MaggieGyllenhaal_071608_784.jpg



இயக்குநர் பாராட்டு  பெறும் இடங்கள்


1. டெட் பாடியில் செல் ஃபோன் இருப்பதும் அந்த ஃபோனுக்கு கால் பண்ண வில்லன் ஜெயில் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி ஃபோன் பண்ணுவதும், பாம் பிளாஸ்ட்டிங்கும்


2. சிறைக்கைதிகள் ஒரு போட்ல , பொது மக்கள் ஒரு போட்ல  2 போட்டையும் வெடிக்க வைக்கும் ரிமோட் பரஸ்பரம் ஆப்போசிட் கேங்க்ல.. யார் முதல்ல அமுக்கறாங்களோ அவங்க உயிர் பிழைக்கலாம்.. இந்த KNOT செம.. திரையில் ஆடியண்ஸிடம் டெம்ப்போ ஏற்றும் நல்ல உத்தி



3. பேட்மேனாக சரண்டர் ஆகும் போலீஸ் ஆஃபீசர் பொலீஸின் திட்டத்தை தன் காதலியிடம் சொல்லாமல் மறைத்து பின் பதறும் காதலியை சமாதானபப்டுத்தும் சீன்.. 


4. படம்முழுக்க விரவி நிற்கும் பிரமாண்டம்.. காட்சி அமைப்புகள், பிரமிக்க வைக்கும்  நுணுக்கமான திரைக்கதை அமைப்பு.. ஒளிப்பதிவு, பின்னணி இசை.. வில்லனுக்கு அளிக்கப்பட்ட அபரித முக்கியத்துவம்


5. க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்.. 





http://www.empireonline.com/images/features/recast-movie-characters/rachel-dawes.jpg
இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்..



1.  தான் தான் பேட் மேன்னு நாடகம் ஆடி போலீஸ் ஆஃபீசர் சரண்டர் ஆகறார்.. அவரை யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்களா? என்ன புரூஃப்னு கேட்க மாட்டாங்களா? அட்லீஸ்ட் பேட் மேன் டிரஸ் போட்டுட்டு பறந்து காட்டுன்னு சொல்ல மாட்டாங்களா? நிருபர்ங்க அத்தனை பேர் கூடி நின்னும் எந்த கேள்வியும்  கேட்கப்படலையே?



2. ஓப்பனிங்க் ஷாட்ல கொள்ளை அடிக்கபட்ட பேங்க்லயே எல்லா கூட்டாளிகளையும் ஏன் போட்டுத்தள்ளனும்? பாதுகாப்பா வண்டி வில்லன் இடத்துக்கு வந்த பின் போட்டிருக்கலாமே? வில்லன் இன்னொரு வண்டில வழில வந்து வழி மறிச்சு  கொள்ளை அடிகப்பட்ட வேனை ஆக்சிடெண்ட் மாதிரி செட் பண்ணி இருக்கலாமே?


3. ஒரு சீன்ல பேட் மேன் கண்ணாடி ஜன்னலை உடைச்சுட்டு உள்ளே குதிக்கறார். அப்போ ஒருத்தன் கைல கன்னோட வேடிக்கை பார்த்துட்டு இருக்கான்.. அப்பவே சுட்டு இருக்கலாம்..  பேட்மேன் ரூமுக்குள்ள எண்ட்டர் ஆகி திரும்பும் வரை வேடிக்கை பார்த்துட்டு அவர் சுதாரிச்சு எழுந்த பின் சுட முயற்சிப்பது அபத்தம். நம்ம ஊர்ல 40 அடியாளுங்க டோக்கன் சிஸ்டம் மாதிரி ஒவ்வொரு ஆளா ஹீரோவைமுறை வெச்சு அடிக்கற மாதிரிதான் இதுவும்


4. வில்லனோட கை ரேகை துப்பாக்கிக்குண்டோட ஒரு பகுதில போலீஸ்க்கு கிடைக்குது.. கிளவுஸ் போட்டிருந்தும் எப்படி ரேகை மாட்டுச்சு? 


5. வில்லன் தன் சுய சரிதையை எதுக்கு ஒரு ஆள் பாக்கி விடாம சொல்லிட்டே இருக்காரு? 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXirrNT_hCUNF1cfTxfrsjm8280qis12_tuMQNQxnhZ7JSzpwR1msUkJhbutG1jklOD5WXJ0ATSHQ0oUdI0WDFhG4g_HURDzM67Ld-SPadJNvpXTTkecQMNmQpobeYOvHD-B41ak_Olrg/s400/christopher+nolan.jpg




சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன், அதிரடி பிரியர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பார்க்க்லாம்,., செம ஸ்பீடு படம்..  சன் டி வில சண்டே அன்னைக்கு பார்த்தேன், இதன்  அடுத்த பாக விமர்சனம் படிக்க http://www.adrasaka.com/2012/07/tthe-dark-knight-rises.html


ட்ரெய்லர் -

 தொழில் நுட்பகலைஞர்கள்
Directed by Christopher Nolan
Produced by Christopher Nolan
Emma Thomas

Charles Roven
Screenplay by Jonathan Nolan
Christopher Nolan
Story by Christopher Nolan
David S. Goyer
Based on Characters by
Bob Kane
Starring Christian Bale
Michael Caine

Heath Ledger

Gary Oldman

Aaron Eckhart

Maggie Gyllenhaal

Morgan Freeman
Music by Hans Zimmer
James Newton Howard
Cinematography Wally Pfister
Editing by Lee Smith
Studio Legendary Pictures
Syncopy Films

DC Comics
Distributed by Warner Bros. Pictures
Release date(s)
  • July 14, 2008 (New York City)
  • July 18, 2008 (United States)
Running time 152 minutes[1]
Country United States
United Kingdom[2]
Language English
Budget $185 million[3]
Box office $1,001,921,825[3]