Showing posts with label . Show all posts
Showing posts with label . Show all posts

Thursday, December 12, 2013

ரஜினி ரகசியங்கள் 12


மார்லன் பிராண்டோ மறைந்தபோது, துயரம் தாங்காமல் ஒரு வாரத்துக்கு அழுத ரசிகர் அவர். இத்தனைக்கும் பிராண்டோ நடித்த ஒரு படத்தைக்கூட அவர் பார்த்தது இல்லை. பின் எப்படி இவ்வளவு நேசம் என்று கேட்டபோது, பிராண்டோவின் பேட்டி ஒன்றைப் பார்த்து அவருக்கு ரசிகரானதாகச் சொன்னார் அவர்.


‘‘உங்கள் கதாபாத்திரத்துக்கான உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று நிருபர் கேட்டபோது, “அமெரிக்கச் செவ்விந்தியர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள்” என்று மணிக் கணக்கில் பதில் அளித்து நிருபரை பிராண்டோ வெறுப்பேற்றிய பேட்டி அது.


ஒரு சினிமா நாயகனை மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவை இல்லை. பிராண்டோ சொன்னதுதான்.‘‘நல்லவனோ, கெட்டவனோ… மக்களுக்குக் கொண்டாடுவதற்குக் கட்டாயம் ஒரு நாயகன் தேவை. அவனைப் பற்றிப் பேசுவதும் கொண்டாடுவதும் அவர்களுக்கு முக்கியம்.’’


ஆனால், ஒரு நாயகன் கொண்டாடப்படும் பின்னணி முக்கியமானது. அது சமூகத்தின் மனநிலையையும் சேர்த்து நாம் பார்க்க உதவுகிறது.


எம்.ஜி.ஆர். - ரஜினி


சுதந்திரத்துக்குப் பின் தேனாறும் பாலாறும் ஓடும் என்று உருவாக்கப்பட்ட மாயைகள் உடைந்து, பணக்காரர்களும் பண்ணையார்களும் கொட்டம் அடித்தபோது, திரைப்படங்களில் அவர்களைத் தட்டிக்கேட்ட நாயகர்கள் உச்சத்துக்குப் போனார்கள். திரையில் அறநெறிகளுடன் ‘வாழ்ந்து காட்டிய’ நாயகர்கள் மக்கள் தலைவர்க ளாகப் பார்க்கப்பட்டார்கள். எம்.ஜி.ஆர். அப்படித்தான் ஜெயித்தார்.


ரஜினி விஷயத்தில் நடந்ததோ தலைகீழ். இந்தியா கலாச்சாரப் பாய்ச்சலுக்குள்ளான காலகட்டம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மீறல் கனவுகளை, ஆழ்மன ஆசைகளைத் திரையில் அநாயசமாக நடத்திக்காட்டினார் ரஜினி. திரையில் அவர் சாமானியராக இருந்தார். சாமானியர்களின் முரட்டுத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் பிரதிபலித்தார். சாமானியராக இருந்துகொண்டே சாமானியர்களால் கற்பனைசெய்யக்கூட முடியாத அற்புதங்களை நிகழ்த்தினார். முக்கியமாக, சொந்த விஷயத்தில் தவறுகளோடும் ஒருவன் அடுத்தவர்களுக்கு நல்லவனாகவும் நாயகனாகவும் இருக்க முடியும் என்று காட்டினார். அவருடைய ஆரம்ப கால, பாசாங்கற்ற நடவடிக்கைகள் அவருடைய பிம்பத்துக்கு மேலும் வலுசேர்த்தன.


ரஜினி கோலோச்சத் தொடங்கிய 1980-கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிசுகிசு. ரஜினிக்குப் பெண் மோகம் அதிகம் என்று பத்திரிகைகள் எழுதியபோது, ரஜினி ஒரு பேட்டியில் சொன்னார். ‘‘ஆமாம், உண்மைதான். இதைச் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நான் யாரையும் தேடிப் போகலை. வற்புறுத்தலை. கஷ்டப்படுத்தலை. யாருக்கும் நான் பிராமிஸ் பண்ணலை... யாரையும் ஏமாத்தவும் இல்லை.’’


உதை விழும்


ரஜினியின் திருமணம் இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடியது. ரஜினி, லதா இருவரின் குடும்பங்களையும் சேர்ந்த சிலர் மட்டும் பங்கேற்ற நிகழ்ச்சி அது. திருப்பதி கோயிலில் நடந்தது. அதிகாலையில் திருமணத்தை முடித்தவர், காலை 10 மணிக்கு எல்லாம் படப்பிடிப்புக்குப் போய்விட்டார்.


திருமணத்துக்கு முன் பத்திரிகையாளர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார் ரஜினி. முன்கூட்டியே, அவரும் லதாவும் மாலையோடு இருக்கும் படம் ஒன்றை அவர்களிடம் கொடுத்து, ‘‘குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் அழைச்சு இருக்கேன்னு சொல்லி, திருப்பதி கோயில்ல கல்யாணத்துக்கு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கியிருக்கேன். என்னோட கல்யாணம் நடந்து முடிஞ்சதும் நீங்க இந்த போட்டோவைப் பயன்படுத்திக்கங்க. தயவுசெஞ்சு திருப்பதிக்கு யாரும் வந்துடாதீங்க’’ என்றார். அப்போது, ‘‘வந்தா?’’ என்றார் ஒரு நிருபர். ‘‘உதைப்பேன்’’ என்று சொன்னார் ரஜினி.


அருகில் இருந்த இன்னொரு நிருபர் ‘‘இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீங்க... அதை நாங்க பப்ளிஷ் செஞ்சுட்டா, பின்னால அசிங்கமா போயிடும்’’ என்று சொன்னபோது, ரஜினி சொன்னார். ‘‘உங்களோட ஓப்பன் அப்ரோச் எனக்குப் பிடிச்சிருக்கு. ஐ யாம் வெரி ஸாரி. ஆனா, இப்போ ஸாரி சொல்லிட்டேன்னு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க. அங்கே கேமராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கறதைத் தவிர எனக்கு வேற வழி இல்லை.’

மலராத முட்கள்


நம்மில் பலரையும்போல, ‘முள்ளும் மலரும்’ ரஜினிதான் ரஜினிக்கும் பிடித்தமானவர். இயக்குநர் மகேந்திரன் இன்றைக்கும் அவரை இயக்கியவர்களிலேயே அவர் பெரிதும் மதிப்பவர். ஆனால், ஒருகட்டத்தில், ஒரு மாபெரும் பொழுதுபோக்குக் கலைஞனாக அவர் உருவெடுத்தபோது, தன்னுடைய படங்கள் முழுக்கப் பொழுதுபோக்குக்கானவை என்ற முடிவை அவர் எடுத்தார். தன்னுடைய படங்கள்குறித்துப் போலியான மதிப்பீடுகள் ரஜினியிடம் இல்லை.


‘‘ஆயிரக் கணக்கானவங்க வாழ்க்கை இதுல இருக்கு. என்னை நம்பிப் பணம் போடுறவங்களுக்கு, எனக்குப் பணம் கொடுக்குறவங்களுக்கு, திரும்ப நான் பணம் சம்பாதிச்சுக் கொடுக்கணும். அவங்க நடிக்கவைக்கிறாங்க… நான் நடிக்கிறேன். அவ்ளோதான். இதிலே எந்தக் குழப்பமும் இல்லை’’ என்றார்.


மாபெரும் சுதந்திரம்


ஒரு பேட்டியில் மோகன்லாலிடம் கேட்டார்கள்: ‘‘ரஜினிகாந்தைப் போல வழுக்கைத் தலையோடும் நரைத்த முடியோடும் உங்களால் வெளியே வர முடியுமா?’’


மோகன்லால் சொன்னார்: ‘‘ரஜினி எப்படி வேண்டுமானாலும் வரலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மக்கள் அவரை அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள். அவருடைய தனித்துவமே அதுதான்.’’


உண்மைதான். சமூக வாழ்க்கை சார்ந்து எவ்வளவோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும், திரையில் ரஜினியைப் பார்த்ததும் நாம் பரவசமாகிறோம். ஒவ்வொரு படத்திலும் ரஜினி நிகழ்த்தும் அற்புதங்கள் மேலும்மேலும் அதிகரிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அவருக்கு எவ்வளவு வயதானாலும், திரையில் இன்னும் இன்னும் இளமையாகப் பார்க்கவும் பறந்து பறந்து அடிப்பதையும் நாம் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், ரஜினி என்றால், எதுவும் செய்யலாம் என்ற மாபெரும் சுதந்திரத்தை நாம் அவரிடம் கொடுத்திருக்கிறோம்.


ஏனென்றால், ரஜினியிடம் நாம் பார்ப்பது நமக்குள் இருக்கும் ரஜினியை!





தொடர்புக்கு: [email protected]


இசை விழாக்களும் குளிரும் மார்கழிப்பூக்களும் ஆசிர்வதிக்கும் டிசம்பரில் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் மற்றொரு விஷயம் ரஜினிகாந்தின் பிறந்தநாள். டிசம்பர் 12ம் தேதி பிறந்தநாள் காணும் ரஜினி என்கிற சிவாஜிராவ் குறித்து 12 தகவல்கள்:


#ரஜினி ஒரு நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டி, சட்டையில் வருகிறார் என்றால் அன்று சென்டிமெண்டாக அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அர்த்தம். சமீபத்தில் நடந்த இசையமைப்பாளர் அனிருத் சகோதரியின் திருமண நிகழ்ச்சிக்கு அவர் பட்டு வேட்டிச் சட்டையுடன் வந்து கலந்துகொண்டார். வேட்டி சட்டையைப் போலவே ரஜினி விரும்பும் மற்றொரு உடை கருப்பு சட்டை, கருப்பு பேண்ட்.


#ஊழலை எதிர்த்து அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் சென்னையிலும் அதுபோல ஒரு உண்ணாவிரதத்தை ஒருங்கிணைத்து நடத்த தீவிரமாக இருந்திருக்கிறார் ரஜினி. ஆனால் நண்பர்களின் ஆலோசனையால் அதை கைவிட்டார். இருப்பினும் அண்ணா ஹசாரேவை நேரில் சந்தித்து ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வந்தார். அதுபோல சென்னையில் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் உங்களது ஆதரவு வேண்டும் என்று அப்போது கேட்டு வந்திருக்கிறார்.



#‘16 வயதினிலே’ படப்பிடிப்பில் பலமுறை பாரதிராஜாவிடம் திட்டு வாங்கியிருக்கிறார் ரஜினி. அந்த நேரத்தில் அவருக்கு ஒரே ஆறுதல், ஒல்லிப் பையனாக வசனக் குறிப்பேட்டை கையில் வைத்துக்கொண்டு நிற்கும் பாரதிராஜாவின் உதவியாளர் பாக்யராஜ்தான். ‘எல்லாம் நல்லதுக்குத்தான்’ என்று சொல்லி, அவரை உற்சாகப்படுத்துவாராம் பாக்யராஜ்.


#செல்போன் பயன்படுத்துவதில் ரஜினி ஆர்வம் செலுத்துவதில்லை. எப்போது, யார் தொடர்புகொள்ள நினைத்தாலும், அவரது உதவியாளர், ஓட்டுநர்களான ஆறுமுகம், சுப்பையா, கணபதி இந்த மூன்று நபர்களின் வழியாகத்தான் பேச முடியும். ரஜினிக்கு தகவல் போய் சேர்ந்ததும், அவர் விரும்பினால், தன்னை அழைத்த நபரிடம் ரஜினியே போனில் பேசுவார்.


#எந்த ஊருக்கு, வெளிநாட்டுக்கு சென்று திரும்பினாலும் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏதாவது ஒரு பரிசுப்பொருள் வாங்கி வருவதை இப்போதும் கடைபிடித்து வருகிறார்.


#இரவோ, பகலோ மனதில் பட்டால் காரை எடுத்துக்கொண்டு நண்பர்கள் வீட்டுக்குமுன் சென்று நின்றுவிடுகிற பழக்கம் அவருக்கு இப்போதும் உண்டு. அப்படி சந்திக்கும் நண்பர்களை அழைத்துக்கொண்டு சாலைப் பயணமாக, நீண்ட தூரம் காரில் பறப்பார். அவர்களிடம் நாட்டுநடப்புகள், புதிய படங்களின் போக்குகள், இளம் நடிகர்கள், அரசியல் ஆகியவை குறித்து ஆழமாக பரிமாற்றம் செய்துகொள்கிறார்.



#ராகவேந்திரா திருமண மண்டபத்தின் திறப்புவிழா அன்று, 1980களில் இளையராஜாவின் ‘ஹவ் டு நேம் இட்’ நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அன்று நடந்த அந்த நிகழ்ச்சியின் ஞாபகம் வரும்போதெல்லாம் ரஜினி, ராஜாவிடம் சொல்லி சிலிர்ப்பாராம்.


#ரஜினிக்கு கடிதம் கொடுக்க விரும்புகிறவர்கள், ராகவேந்திரா மண்படத்துக்கு வந்து கொடுத்துப்போகலாம். அப்படி வந்து குவியும் கடிதங்களை அக்கறையோடு படித்து வருகிறார் ரஜினி. உதவியாளர்கள் அதில் சிலதை தேவையில்லாதது என்று பிரித்து தனியே ஒதுக்க முயற்சித்தால், ‘அப்படிச் செய்யாதீர்கள்’ என்று அன்புடன் கண்டிக்கவும் செய்வாராம்.


#நீச்சல் என்றால் ரஜினிக்கு உயிர். சென்னை, கடற்கரைச்சாலை பண்ணை வீட்டு நீச்சல் குளத்தில் மணிக்கணக்கில் நீச்சல் அடிப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்.


#சமீப நாட்களாக அவருக்கு பிடித்த விஷயம் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் பழைய தமிழ்ப்படங்களை பார்ப்பது. குறிப்பாக அவர் பரபரப்பான ஷூட்டிங்கில் இருந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்களை எல்லாம் இப்போது ரசித்து ரசித்து பார்த்து வருகிறார்.


#படப்பிடிப்பு தளத்தில் கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் ஒன்று படிப்பார், இன்னொன்று தூங்குவார்.


#ராகவேந்திரா திருமண மண்டபத்தின் மொட்டைமாடி கீற்று கொட்டகையில் தரையில் அமர்ந்து, வாழை இலை போட்டு சாப்பிடுவதை பெரிதும் விரும்புவார்.



ரஜினிகாந்த், லதாவுடன் கிரேஸி மோகன்
ரஜினிகாந்த், லதாவுடன் கிரேஸி மோகன்
ரஜினியின் படங்களில் அவரது ஸ்டைலுக்கு நிகராக ரசிகர்களை கவரும் மற்றொரு விஷயம் பஞ்ச் டயலாக்குகள். அப்படி அவரது ரசிகர்களைக் கவர்ந்த பஞ்ச் டயலாக்குகளில் ‘அருணாச்சலம்’ படத்தில் வரும், “ஆண்டவன் சொல்றான். அருணாச்சலம் முடிக்கிறான்” என்ற பஞ்ச் டயலாக்கும் ஒன்று. இந்த பஞ்ச் டயலாக் உருவான விதத்தை ரஜினியின் நண்பரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:



ரஜினியின் ‘ராகவேந்திரா’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்தபோது நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு இருந்த வேலைப்பளுவால் அந்தப் படத்திற்கு வசனம் எழுத முடியவில்லை. அதற்காக மிகவும் வருத்தப்பட்டேன். 12 வருடங்களுக்கு பிறகு குறிஞ்சி மலர் பூப்பதைப்போல அவர் நடிப்பில் வெளியான ‘அருணாச்சலம்’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு அமைந்தது.



படத்தில் ஒரு பஞ்ச் டயலாக் வேண்டும் என்று ரஜினி என்னிடம் கேட்டார். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வாராவாரம் திருவல்லிக்கேணி ராகவேந்திரா கோயிலுக்கு சென்று வருபவன் நான். அப்படி ஒரு வியாழக்கிழமை அதிகாலை கோயிலுக்குப் போனபோது, ‘ராகவேந்திரா சொல்கிறார், அருணாச்சலம் முடிக்கிறார்’ என்ற வசனம் தோன்றியது. கவிதாலயா தயாரிப்பில் வெளிவந்த ராகவேந்திராவில் விட்டதை அருணாச்சலம் படத்தில் பிடித்தோம் என்ற எண்ணத்தில் உள்ளுக்குள் தோன்றியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.


 அதை அப்படியே ஆனாவுக்கு அனா போட்டு ‘ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்’ என்ற பஞ்ச் டயலாக்கை எழுதி சூப்பர் ஸ்டாரிடம் நீட்டினேன். பார்த்துவிட்டு சந்தோஷமாகப் பாராட்டினார். அவர் மிகச்சிறந்த மனிதர். பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!



thanx - the hindu