Showing posts with label ஹைக்கூ. Show all posts
Showing posts with label ஹைக்கூ. Show all posts

Wednesday, November 23, 2011

கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் தியாகி யார்? ஏன்? ஒரு பொழப்பத்த ஆராய்ச்சி

1.காதலிக்கும்போது உண்மையாய் இரு, காதலித்த பின் உயிராய் இரு

------------------------------

2. உன் காதல் உண்மையானதாக இருந்தால் தினமும் நீ செத்துக்கொண்டு இருப்பாய்!

------------------------

3. நாராய் இருக்கும் ஆணை பூவாய் வந்து பெண் மணக்க செய்வதால் அது திரு மணம் என அழைக்கப்படுகிறதோ? # சமாளிஃபிகேஷன்

-------------------------------

4. உன்னைப்பார்த்ததும் என் கண்கள் பிரகாசிப்பது அனிச்சைச்செயல்,உன் கன்னத்தில் ஒத்தடம் தர என் உதடுகள் துடிப்பது இச்சைச்செயல்

-----------------------------


5. பெண்களுடன் பழகவே பல ஆண்கள் விரும்புவார்கள், ஆனால்  பெண்களுடன் பழகும் மற்ற ஆண்களை அவர்களுக்குப்பிடிப்பதில்லை # ஜெண்ட்ஸாலஜி

------------------------------------


6. சில பெண்களின் தேகங்கள் துரோகங்களால் நிரம்பி இருக்கிறது, பல ஆண்களின் இதயங்கள் தியாகங்களால் நிரம்பி இருக்கிறது

----------------------

7. ஏண்டி?டி வி ல வர்ற எல்லா சமையல் நிகழ்ச்சிகளையும் பார்க்கறே,ஆனாலும் உன் சமையல் டேஸ்ட் வர்லையே?

ம்க்கும், நீங்க கூடத்தான் BF பார்க்கறீங்க! நான் ஏதாவது கமெண்ட் பண்ணுனேனா?


------------------------

8. பிச்சை எடுப்பவர் - அய்யா சாமி, சாப்பிட்டு நாலு நாள் ஆச்சுங்க..

லொள்ளர் - அடப்பாவமே? பசியே எடுக்கலையா? டாக்டரைப்போய் பாருய்யா!

---------------------------

9. பெண்களுக்கு  ஏன் வழுக்கை விழுவதில்லை என ஆண்கள் சிந்திப்பதில்லை, ஆனால் ஆண்களுக்கு ஏன் பிரசவவலி வரக்கூடாது? என பெண்கள் சிந்திக்கிறார்கள்

------------------------------

10.மரணத்தைப்பற்றிய கவலை நமக்கெதற்கு? நாம் இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நாம் இருக்கப்போவதில்லை

-----------------------


11. விஜய் பட சூட்டிங்கில் இலியானா கால் முறிந்தது!! # விஜய் மொக்கை போடுவாரு, ஆனாலும் அவர் நல்லவர் ஆச்சே?

----------------------------

12. சில பிரிவுகளை சந்திக்கும்போதுதான் நாம் பல உறவுகளின் பெருமை பற்றி சிந்திக்கிறோம்.

-----------------------

13. மீட்டத்தெரியாதவர்களுக்கு வீணை ஜடப்பொருள் தான், நேசிக்கத்தெரியாதவர்களுக்கு பெண்களின் இதயம் திடப்பொருள் தான்

------------------------

14. சீதை வேடம் கிடைத்தால் நடிப்பார்! நயன் பற்றி பிரபுதேவா அறிக்கை!!  # ஆனா மேரேஜ் மட்டும் ஏன் ஒரு ராமனை பண்ணாம கிருஷ்ணரை பண்றாரு?

-----------------------

15. தொழிலதிபரை திருமணம் செய்ய ஆசை : வித்யாபாலன்!  # சினி ஃபீல்டில் இருக்கும் எழில் அதிபர்கள் பெரும்பாலும் தொழில் அதிபர்களையே செலக்ட்டிங்க்?Y?

--------------------------------



16. டோலிவுட்டில் அமலா பாலுக்கு வரவேற்பு! # சாண்டில்வுட் தேகம் இருந்துவிட்டால் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் எல்லா வூட்லயும் கோலோச்சலாம்

------------------------------

17.பெண்களுடைய கீச்சுக்கள் (ட்வீட்ஸ்)பெரும்பாலும் ஆண்களையே குறை சொல்லி வந்தாலும் ஆண்கள் கீச்சுக்கள் பெண்களை புகழ்ந்தே வருகின்றன # நீதி - ஆண் நல்லவன்

-----------------------

18. ஆடை என்பது தைக்கப்பட்டு யாராலும் அணியாமல் இருப்பது, உடை என்பது அணியப்பட்டது

----------------------------

19. அடி என்பது மிதமான கோபத்தில் கொடுப்பது, உதை என்பது கோபத்தின் உச்சத்தில் விளாசுவது

-------------------------------

20. கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் தியாகி யார்? 

விடை - நயன்தாரா 

காரணங்கள் 1. சிம்புவின் காதலை தியாகம் 2. மதம் ,நடிப்பு தியாகம்

-----------------------------

21. பிறக்கப்போகும் குழந்தை சிவப்பாக ,அழகாக இருக்கட்டுமே என்ற உயர்ந்த நோக்கில்தான் ஆண் கலர் ஃபிகரை விரும்புகிறான்,பெண்ணுக்கு அந்த அக்கறை இல்லை

--------------------

22. கறுப்புத்தோலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.ஆரோக்யமான துணை வேண்டும் என்ற நோக்கில் பெண்கள் கறுப்பு ஆண்களை விரும்புகிறார்கள்

-----------------------------

23. ஆண்கள் கறுப்பு நிறத்தை விரும்புவதில்லை என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பெண்களின் கூந்தல் கறுப்பாக இருப்பதை அவன் விரும்பவில்லையா?

------------------------

24. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்ற ஃபார்முலா மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களிடம் மட்டும் ஒர்க் அவுட் ஆவதில்லை

----------------

25.உற்சாகம் கரை புரண்டு ஓடும்போதும், அதீத சோகம் மனதில் அப்பிக்கொள்ளும்போதும் ஒரு படைப்பாளனின் படைப்புகள் உத்வேகம் பெறுகின்றன

-----------------------------------

Saturday, January 22, 2011

3 லைன்ல எழுதிட்டா அது ஹைக்கூவா?

http://www.howtogetridofstuff.com/wp-content/uploads/how-to-get-rid-of-chapped-lips.jpg 
1. உச்சரிக்கும்போது

உதடுகள் கூட ஒன்று சேர்வதில்லை

காதல்



http://vadakaraivelan.files.wordpress.com/2008/09/currencyjpg.jpg
2. தொட்டுப்பார்க்க மட்டுமே சொந்தம்

பேங்க் காஷியர்

எண்ணும்  பணம்.



http://upload.wikimedia.org/wiktionary/ta/thumb/3/36/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF.jpg/210px-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF.jpg
3. கல்லறையே கருவறை

சமாதியில் 

முளைத்த செடி.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga8PUz5EgMVlQH-NRxWB94fDkcAJn58NwMe8D2OVK82H0H9yOdNkU1KIpgaiIs7PqlyawxwXgwzNcgT-mB_C85-7fj1wDjtssBi7S6ugHAbNnvGBQehiuPn4jNMO_axUgDVb01wFc11UA/s400/roma.jpg
4.மச்சினியை ரசிக்கையில்

மனைவியின் முகம் ஞாபகம்.

இடமாறு தோற்றப்பிழை.


5.நிழலை விட நீ மோசம்...

இரவில் கூட என் 

பின்னாலேயே வந்து விடுகிறாயே..உன் நினைவுகள்.





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUfHC5tmHLj1GVh-yffNF7zFwIP_dCr4KtwapSW5mLMLwjKFsKG99zJjQXN77Mi98n8NvAD9EhGqsQeQdiAn-zIA5zOaygFTXdbepT3LD326Sm8DYQj_FlKuhKbuQFyqYnQvRbOV7mRo0o/s800/anjali_or_anupama092.jpg
6.   கூட வரும் மனைவி மட்டும் கண்ணகியாகவும்

எதிர்ப்படும் மற்றவர் மனைவிகள் மாதவிகளாகவும்

இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது ஆணகள் மனது.

டிஸ்கி 1- ஹைய்யா .. நானும் ஹைக்கூ எழுதிட்டேன்.. இதுதான் முதல்ல வெச்ச டைட்டில் .ஆனா இதைப்படிச்சுட்டு நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு யோசிச்சுப்பார்த்து அந்த கமெண்ட்டையே டைட்டில் ஆக்கீட்டேன்.ஹி ஹி எங்களை எல்லாம் யாரும் இறக்க முடியாது.. நாங்களே இறக்கிக்குவோம்ல..


டிஸ்கி 2 - மேலே உள்ள படங்களில் இருப்பது என் மச்சினியும் அல்ல மனைவியும் அல்ல.. ஆனா அப்படி இருக்க அவங்களுக்கு சம்மதம்னா நமக்கும் சம்மதமே.. ஹி ஹி ....இப்படிக்கு கிடைச்ச ஃபிகரை வளைச்சுப்போட துடிப்போர் சங்கம்.கவர்மெண்ட் அப்ரூவ்டு ( ரொம்ப முக்கியம்)

Tuesday, September 07, 2010

சினிமா டைட்டிலில் கவிதைப்போட்டி


Fifty Seven (by ..priya..)
சில வருடங்களுக்கு முன் தமிழன் எக்ஸ்பிரஸ் மாதமிருமுறை இதழில்
சில சினிமா டைட்டில்கள் கொடுத்து அதற்கு ஏற்றார்போல் கவிதை கேட்டிருந்தார்கள்.
சினிமாவில் சிச்சுவேசன் சாங் கேட்பது போல்தான் இதுவும்.தானாக உருவாகும் கவிதைகளை விட இது போல் நிர்ப்பந்தங்களில் உருவாகும் கவிதைகளில் வீரியம் குறைவாக இருக்கும்.சினி ஃபீல்டில் அதிக முறை திருத்தம் செய்து,அதிக வரிகளில் எடிட் செய்து உருவான பாடல் ரோஜா படத்தில் வைரமுத்து எழுதிய சின்ன சின்ன ஆசை.இதில் வைரமுத்து 240 ஆசைகளை எழுதிக்குடுக்க,மணிரத்னம் அதில் 40 ஆசைகளை தேர்வு செய்தார்.எந்த கரெக்‌ஷனும் இல்லாமல் உருவான பாடல் கண்ணதாசனின் சட்டி சுட்டதடா பாடல்.

முதலில் பரிசு பெற்ற கவிதை.

நேருக்கு நேர்




இனி என்னை மறந்து விடுங்கள் 

என்று தோழியிடம் சொல்லி விட்டாய்.

நமக்குள் இனி ஒன்றுமில்லை என 

கடிதம் எழுதினாய்.

என் வாழ்வில் இனி குறுக்கிடக்கூடாது 

என ஆள் அனுப்பினாய்.

சரி,எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன்.

இவை எல்லாவற்றையும் உன்னால் 

நேருக்கு நேர் நின்று 

என் கண்களைப்பார்த்து சொல்ல முடியுமா? 

 இனி பிரசுரத்துக்கு தேர்வானவை.


காதல்

உச்சரிக்கும்போது உதடுகள் கூட


ஒன்று சேர்வதில்லை


காதல்.




நாணயம் இல்லாத நாணயம் 


தொட்டுப்பார்க்க மட்டுமெ சொந்தம் 

பேங்க் கேஷியர் எண்ணும் பணம்.



 ஏட்டிக்குப்போட்டி


கதை எழுதும்போது கிடைக்கவில்லை

காதலிக்கும்போது மட்டும் 

உருவாகி விட்டது கரு.

கவிதைகளை வெளீயிடுவதில் முன்பிருந்ததை விட இப்போது குமுதமும்,விகடனும் அதிக அக்கறை செலுத்துகின்றன.குமுதத்தில் குழந்தைகள் செய்யும் குறும்புகள்,மழலை சம்பந்தப்பட்ட கவிதைகள் எழுதினால் 20 நாட்களில் போட்டு விடுவார்கள்.விகடனில் காதல் கவிதைகளும்,மனித மன விகாரங்கள்  பற்றிய அலசல்கள்,வித்யாசமான கருக்கள் இருந்தால் பிரசுரம் ஆகி விடும்.குமுதம் ரூ 50 பரிசும், விகடன் ரூ 250 பரிசும் தருகின்றன.