புதுடில்லி:'வி.வி.ஐ.பி.,கள் பயணிப்பதற்கான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை, இந்தியாவிடமிருந்து பெறுவதற்கு, காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சரிகட்ட வேண்டும்' என, இடைத்தரகர் ஒருவர், ஹெலிகாப்டர் நிறுவன அதிகாரியிடம் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் போன்ற, வி.வி.ஐ.பி.,கள் பயணிக்க, அதிநவீன சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட, ஹெலிகாப்டர்கள் வாங்க, மத்திய அரசு முடிவு செய்தது.
2010ல் ஒப்பந்தம்:இத்தாலியைச் சேர்ந்த, 'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' என்ற, ஹெலிகாப்டர் நிறுவனத்திடம், 12 ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்ய, 2010ல், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.இந்த ஒப்பந்தம், 3,600 கோடி ரூபாய் மதிப்பிலானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரண்டு ஹெலிகாப் டர்கள், ஏற்கனவே நம் நாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டன. பத்து ஹெலிகாப்டர்கள் வரவிருந்த நிலையில், இதில், ஏராளமான கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது அம்பலமானது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இத்தாலி நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு, 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.விமானப் படை முன்னாள் தளபதி, தியாகி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அந்த ஒப்பந்தம் ரத்து
செய்யப்பட்டுள்ளது.
அதிகாரி கைது: இத்தாலி போலீசாரும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை கைது செய்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தை, மத்திய அரசிடமிருந்து, அந்த நிறுவனத்துக்கு பெற்றுத் தருவதற்காக, இடைத்தரகர்களாக செயல்பட்ட சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிறிஸ்டியன் மைக்கேல் என்ற இடைத்தரகர், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின், இந்தியஅலுவலகத்தில் பணியாற்றிய, பீட்டர் புல்லெட் என்பவருக்கு, ஒப்பந்த விவகாரங்கள் நடந்தபோது, முக்கியமான, 'பேக்ஸ்' ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், 'இந்தியாவிடமிருந்து, ஒப்பந்தத்தை பெறுவதற்கு, காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், இப்போதைய ஜனாதிபதியும், அப்போதைய, மத்திய அமைச்சருமான பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள், வீரப்ப மொய்லி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், மேற்கு வங்க கவர்னர், எம்.கே.நாராயணன், வினய் சிங் என்பவர் உள்ளிட்டோரை அணுகலாம்' என, தெரிவித்துள்ளார்.
'டிவி'க்களில் வெளியானது:
ஆனால், இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு, கமிஷன் கொடுக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள், அதில் இடம்பெறவில்லை. இந்த, பேக்ஸின் நகலை, இத்தாலி போலீசார் கைப்பற்றி, அங்குள்ள கோர்ட்டில், கடந்த மாதம் தாக்கல் செய்துள்ளனர்.இதையடுத்தே, இந்த தகவல், வெளிஉலகிற்கு தெரிய வந்துள்ளது. இதன் நகலை, இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் இந்திய அதிகாரிகளிடம், இத்தாலி போலீசார் சமீபத்தில் கொடுத்துள்ளனர்.இந்த விவகாரம் நேற்று, நம் நாட்டின், ஆங்கில செய்தி,'டிவி'க்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நம் அரசியல் தலைவர்களை சிறுமைப்படுத்தும் விதத்தில், இத்தாலி தரகர் எழுதிய குறிப்பு, அரசியல் வட்டாரத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'பார்லி.,யில் இருக்கு கச்சேரி':
இந்த விவகாரம் குறித்து, பா.ஜ., மூத்த தலைவர், யஷ்வந்த் சின்கா கூறியதாவது:நாட்டையே உலுக்கிய, 'போபர்ஸ்' பீரங்கி பேர ஊழல் போல், ஹெலிகாப்டர் ஊழலும் நடந்துள்ளது. ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இந்தியாவில் உள்ளவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி தரகர் தெரிவித்த தகவலில், இந்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பிரச்னையை பார்லிமென்டில் எழுப்புவோம். இது குறித்த முழு உண்மைகளை அறியாமல் விட மாட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\
\\
THNX - DINAMALAR
மக்கள் கருத்து
இது எல்லாம் எவ்வுளவு தூரம் நம்பக தன்மை வாய்ந்த குற்றசாட்டுகள் என்பது தெரியவில்லை, யார் வேண்டுமானாலும் சோனியா காந்தி மற்றும் பிரதமரின் பெயரை யூகத்தின் அடிப்படையில் அவர்களிடம் சென்றால் வேலை முடியும் என்று சொல்லலாம் ஆனால் அவர்கள் லஞ்சம் வாங்கினார்களா என்பது தான் முக்கியம், அவர்கள் லஞ்சம் வாங்கவில்லை என்றால் இதை பிரச்சனை ஆக்குவது தவறு ஆனால் இன்றை அரசியலில் ஒருவர் மீது மீது ஒருவர் வாரி இறைக்கும் சேற்றில் இம்மாதிரியான விஷங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொள்ள பார்ப்பார்களே ஒழிய உண்மை இருக்கிறதா என்று பார்க்க மாட்டார்கள். இதற்க்கு காங்கிரஸ் கட்சியும் சரி பிஜேபியும் சரி விதி விளக்கு அல்ல. காங்கிரஸ் கட்சி மோடிக்கு எதிராக குஜராத் கலவரத்தை வைத்து பொறுப்பிலாமல் பிரச்சாரம் செய்கிறார்கள் அதேபோல் பிஜேபி இம்மாதிரி செய்கிறார்கள். இது அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பக தன்மையை குறைத்துவிடும் என்பது யாருக்கும் புரியவில்லை
Share this comment
rajen.tnl - tirunelveli,இந்தியா
சோனியாவின் சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சோனியாவின் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலராக இருக்கக் கூடும் என்றும் சில இணையதளங்களை மேற்கோள் காட்டி அது பதிவு செய்திருக்கிறது...உலகின் 4 வது பணக்காரர் சோனியா ,,அவர் என்ன தொழில் பண்ணுகிறார் ..இந்தியாவை அழித்தால் தான் பணக்காரர் ஆக முடியும் .......
Share this comment
PR Makudeswaran - madras,இந்தியா
Share this comment
ஊழல் நடந்துள்ளது நிரூபணமாகியுள்ளது என்றெல்லாம் பேசி என்ன பயன்? யாருக்காவது இக்குற்றத்திற்காக punishment கிடைக்குமா? எல்லாமே வீண்.நம் நாட்டின் பெயர் மென்மேலும் கெட்டு , இந்தியர் என்றாலே ஊழல் பெருச்சாளிகள் என்ற பெயர் சொல்லுமளவுக்குப் போய்விட்டதே.எப்படி,எப்போது எவ்வாறு நற்பெயர் எடுக்கப் போகிறோம்? Software மற்றும் பல தொழில் நுட்பங்களில் முன்னேறினாலும் ஊழல் என்ற சொல் இந்தியருக்குப் பெரும் அவமானம். இதன் பெருமையெல்லாம் கான்'கிராஸ் கட்சியையே சாரும்....
Share this comment
Kulasekar Erk - sunnyvale,யூ.எஸ்.ஏ
போபர்ஸ் ஊழல் புகழ் கட்சியின் தலைமை தீர்மானிக்க வேண்டியதை இத்தாலி இடைத்தரகர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்பதை நோக்கித்தான் கேவலம் இந்த பிசாத்து 3500 கோடி ஹெலிகாப்டர் ஊழலும் நகரும் போல் உள்ளது. ஆனால் இந்தியாவில் ஊழல் செய்து கோடானகோடி சம்பாதித்த இத்தாலி புகழ் குடும்பமும் 2G அலைக்கற்றை விஞ்ஞானமுறைப்படி ஊழல் புகழ் குடும்பங்களும் எப்போதாவது நமது சட்டத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா? என்ன, நம்மால் முடிந்தது ஒதுங்கிப்போக வேண்டியத்தான் வாக்காளர்கள் சிந்தித்துச் செயல்படும் நேரம் நெருங்குகிறது
Share this comment
N.Purush Bharatwaj - cuddalore,இந்தியா
Share this comment
Share this comment
Share this comment
Share this comment
Share this comment
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
பாருங்கடா.....வெளிநாட்டுக்காரனுக்கு கூட நல்லா தெரிஞ்சிருக்கு யார் யாருக்கு மொய் அழுதா காரியம் நடக்கும்ன்னு. ஊழல் தலைவர்களின் லிஸ்ட்டையே கொடுத்திருக்கான். இந்த நாட்டை பிடித்திருக்கும் காங்கிரஸ் பேயை சீக்கிரம் விரட்ட வேண்டும். நேரு குடும்பத்தில் நுழைந்த அனகோண்டா இன்று நாட்டையே விழுங்குகிறது. நாட்டை பற்றி இந்த அனகொண்டாவுக்கு கவலை இல்லை. அதை பற்றி கவலை பட வேண்டியது ஒவ்வொரு இந்தியனும் தான். இந்த நாடு இருந்தால் என்ன சுடுகாடாய் மாறினால் என்ன அவர்களுக்கு. அவர்களே என்னதான் முயன்றாலும் இந்தியாவை நேசிக்க முடியாது. அது ரத்தத்தில் ஊறி இருக்க வேண்டும். அப்படி நேசித்திருந்தால் இந்திய கலாச்சாரத்துக்கும், இந்து மதத்துக்கும் மாறியிருப்பார்கள். பிள்ளைகள் கிராஸ் கலச்சரை தேடாமல் ஒரு சாத்சாத் இந்தியரை திருமணம் செய்திருப்பார்கள். ராகுல் ஸ்பெயின், கொலம்பியா என்று சுற்ற மாட்டார். மக்கள் தெளிவு பெரும் வரை இவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
Share this comment
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
சோனியா காந்தி ஊழல் செய்வதில் திலகம் போன்றவர். மிகவும் கெட்டிகாரர். தான் செய்த ஊழலை மறைக்க, கனிமொழி மற்றும் ராஜாவின் மீது அபாண்டத்தை சுமத்தியவர். இப்போது மாட்டிகொண்டார். பல நாள் திருடி, ஒரு நாள் அகபடுவாள் என்பதை போன்று அகப்பட்டு விட்டார். இவருக்கு ச்விச்ஸ் வங்கியில் கணக்கு இருந்தும், அதை பற்றி சொன்ன , அத்வானியையே மன்னிப்பு கேட்க வைத்தவர். இப்பேற்பட்ட, ஊழல் திலகி சோனியா, ராஜாவின் மீது குற்றம் சொன்னது, மிக பெரிய தவறு.
Share this comment
Share this comment
Share this comment
அப்போ கனி மொழி, ராஜா இருவரும் விரல் வெச்சா கூட கடிக்கதேரியாத பாப்பான்னு சொல்லுறீங்களா நீங்க சப்போர்ட் பண்ணற dmk கட்சிக்காரங்க ஊழலைப்பத்தி ஒண்ணுமே தெரியாதவங்க அவங்க கட்சி நிதியெல்லாம் மெம்பர்கள் கொடுத்ததுன்னு சொல்றீங்க. dmk தான் ஊழலை தொடங்கியவர்கள் அதுக்கப்பறம் தொடங்கிய காங்கிரஸ் அவங்களை தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள்...
Share this comment