Showing posts with label ஹிந்தி சினிமா. Show all posts
Showing posts with label ஹிந்தி சினிமா. Show all posts

Thursday, May 16, 2013

GO GOA GONE -சினிமா விமர்சனம்


 

ஒரு படத்தை அல்லது பல படங்களை கிண்டலடிக்கும் ஸ்பூஃப் படங்கள் சமீபத்திய இந்தியன் சினிமாவில் தலை காட்ட ஆரம்பித்துள்ளது. தமிழ் படங்களை, நாயக நாயகிகளை நையாண்டி செய்த `தமிழ் படம்`  இதற்கொரு நல்ல உதாரணம்.  மனித ரத்தத்தை இறையாய் பருகும் ஸோம்பீஸ்களை கிண்டலடித்துள்ள படம் தான் "கோ கோவா கான்". 

நடிகர் சைப் அலிகானின் தயாரிப்பில், ராஜ்-டி.கே (ராஜ் நிடி மொரு-கிருஷ்ணன் டி.கே) என இரு இயக்குனர்களின் கூட்டணியில் வெளிவந்துள்ள படம்.  ஒரே வீட்டில் சிகரெட் குடியுடன் குடித்தனம் செய்யும் மூன்று நண்பர்கள். ஆபீசிலே சக பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொள்ள முனையும் ஒரு நண்பனுக்கு வேலை போகிறது,


 காதலுக்காக கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கும் மற்றொரு நண்பனை ஏமாற்றும் காதலியின் துரோகம்.  வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவை என இவ்விரு பிறவிகளும் யோசிக்க, வீட்டிற்குள் நுழையும் மூன்றாவது நண்பன் தனது வேலை விஷயமாக கோவா செல்லவிருக்கும் செய்தியை உறைக்கிறான். அவ்வளவுதான் பணிப் பயணம் உல்லாசப் பயணமாய் மாறுகிறது.

 


கோவாவிற்குச் சென்று கூத்தடிக்கும் நண்பர்களுக்கு அருகாமையில் உள்ள தனித்தீவில் ரஷ்யன் மாபியா நடத்தும் பார்ட்டியைப் பற்றித் தெரிய வர, இவர்கள் பயணம் தீவை நோக்கி நகர்கிறது.  தீவில் வினோத போதை மாத்திரை எடுத்துக் கொள்ளும் அனைவரும் காலை எழுந்து பார்க்கையில் ஸோம்பீஸ் என்கிற ரத்தக் காட்டேரிகளாக மாற, அவர்களிடம் மாட்டிக் கொள்ளும் மூன்று நண்பர்கள் கூடவே குளு குளு நாயகி. ‘ஐ கில் டெட் பீபிள்‘ என்று கூறி பெரிய துப்பாக்கிகளுடன் வந்திறங்கும் போரிஸின் (ஸைப் அலிகான்) துணையால் இந்த நால்வரும் எப்படி தீவிலிருந்து தப்பிக்கிறார்கள் என்பதுதான் மீதிக் கதை.

‘டெல்லி பெல்லி‘ பட வெற்றியின் தாக்கம், இரட்டைப் பொருளல்ல நேரடியாக கொச்சைப்படுத்தும் கெட்ட வார்த்தை நெடி படம் முழுவதும் திணித்துக் கிடக்க, பாட்டி முதல் பேத்தி வரை ஒருவரையும் பாரபட்சம் பார்க்காமல் திட்டும் வசனங்கள் முதற்பாதி முழுவதும், ஸைப் அலிகானின் வருகைக்குப் பின் ஸோம்பீஸின் வேட்டை என்று திகிலாக சூடுபிடிக்கும் என எண்ணினால் அதுவும் முதல்பாதியின் பிரதிபலிப்பாக இருப்பது ஏமாற்றம்.


 


கோவாவின் அழகையும் மறக்கடிக்கச் செய்யும் கதாநாயகி பூஜா குப்தாவின் அழகு.  கவர்ச்சிகரமான உடை அணிந்தும் கலாசாரம் கெடாமல், பெண்மைக்குரிய வரையறை மீறாமல் இவர் நடித்துள்ள விதம் சபாஷ்.  வசனகர்த்தா மற்றும் படத்தின் நாயகன் என டபுள் ரோலில் குனால் கேமு, வெகுளித்தனமான பார்வையுடன் விஷமத்தனம் செய்யும் வீர்தாஸ், ‘த்ரீ இடியட்ஸ்‘ ஓமி வைத்யாவை நினைவூட்டும் ஆனந்த் திவாரியும் மனதில் பதிகின்றனர். சச்சின் ஜிட்காரின் பின்னணியும், அறிந்தாம் கதக்கின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

போதைப் பவுடர் (கோக்கைன்) மேலே பட்டவுடன் ‘ஸாம்பீஸ்கள்‘ ஸ்தம்பித்துப் போவது, இல்லாத கோக்கு மாக்குத்தனம் எல்லாம் செய்து கடைசியில் நர்யகர்கள் நன்நெறி பேசுவது தான்  செம்ம காமெடி. தயாரிப்பாளர் என்பதால் ஸைப் அலிகானுக்கு சிறப்புத் தோற்றத்தைத் தாண்டி கொஞ்சம் அதிகமான ரோல் அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர் பட்டறையில் இவர் மட்டும் முதுமையாகத் தோன்றுகிறார். 


 


ஹாலிவுட்டில் ‘வேகஸ்‘ நகரமென்றாலே கப்பல், காஸினோ, சூது இவைகளைச் சுற்றியே படத்தின் களம் அமைந்திருக்கும். நம் நாட்டில் ‘கோவா‘ என்ற ஊர் வந்தாலே இயக்குனர்கள் மது, மாது, போதை போன்ற லாகிரி வஸ்துக்களை மையப் பொருளாக எடுத்துக் கொள்கின்றனர்.  இந்தப் படமும் இதற்கொரு விதிவிலக்கல்ல. என்ன.. இந்த அம்சங்களுடன் ஸாம்பீஸை இணைத்துள்ளனர் அது தான் புதுமை.

படம் முழுக்க விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை எனக் கூறுவது மிகை.  படத்தில் தொய்வடையும் தருணங்கள் இல்லை போரடிக்காமல் நகர்கின்றது என்று கூறலாம்.

மொத்தத்தில் கோ கோவா கான் – போய் பார்க்கலாம் ஒரு முறை.

  • நடிகர் : சைப் அலிகான்
  • நடிகை : பூஜா குப்தா
  • இயக்குனர் :ராஜ்-டி.கே
 a

thanx - dinamalar

Tuesday, August 23, 2011

NOT A LOVE STORY - சினிமா விமர்சனம்

http://www.andhrulamusic.com/wp-content/uploads/2011/08/Not-A-Love-Story-Songs.jpgராம்கோபால்வர்மா நம்ம ஊரு ஷங்கர் பாதி + மணி ரத்னம் பாதி .அதாவது பரபரப்பான நாட்டு நடப்பை படமா எடுத்து காசாக்கனும், மற்றபடி  ஷங்கரிடம் உள்ள அழகியல் நேர்த்தி , மணி ரத்னத்திடம் உள்ள கலை நுணுக்கம் இதெல்லாம்  அவருக்கு தேவை இல்லை.. 2008 இல்  மும்பையில் நடந்த உண்மைச்சம்பவத்தை அப்டியே எடுத்திருக்காரு..

கன்னட நடிகையும், மாடலுமான மரியா சூசைராஜை நினைவில் இருக்கிறதா? 2008ம் ஆண்டு, தனது காதலன் ஜெரோம் மாத்யூஸுடன் இணைந்து தனது பாய் ஃப்ரெண்ட் நீரஜ் க்ரோவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டாரே... அவரேதான். அவரது வாழ்க்கை வரலாறு தான், குறிப்பாக நடந்ததாக சொல்லப்படும் அந்தக் கொலைதான், ‘நாட் எ லவ் ஸ்டோரி’ இந்திப் படத்தின் கரு.



இந்தியாவையே அதிர வைத்த இந்தக் கொலை சம்பவங்கள் குறித்து பத்திரிகைகளில் வெளியான தகவல்கள் ரத்தத்தை உறைய வைப்பவை.

கன்னடப் படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்த மரியா சூசைராஜுக்கு ஒரு காதலன் உண்டு. பெயர் ஜெரோம் மாத்யூஸ். இந்திய கப்பற்படையில் பணி
புரியும் ஜெரோமை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக மரியா அறிவித்திருந்தார். அதேநேரம், பெரிய நடிகையாக உயர்ந்த பிறகே அத்திருமணம் என்பதிலும் உறுதியாக இருந்தார். ( ஆஹா, என்ன ஒரு உயர்ந்த உள்ளம்? )


ஆனால், நாட்கள்தான் சென்றதே தவிர, சொல்லிக் கொள்ளும்படி கன்னடத்தில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. ( வந்ததெல்லாம் ஜொள்ளிக்கற மாதிரிதானா? )எனவே மும்பைக்கு வந்தார். இந்திப் படங்களில் நடிக்க சான்ஸ் தேடினார். அப்போது அவருக்கு அறிமுகமானவர்தான் நீரஜ் க்ரோவர். நட்பாக ஆரம்பித்த அந்த அறிமுகம், ஒரு
கட்டத்தில் இருவரும் மும்பை அப்பார்ட்மெண்டில் ஒன்றாக வசிக்கும் அளவுக்கு வளர்ந்தது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh72sFCBzcE5be1pQyZ-09_vcA6SupkeDUZkm24H553Q3IiRqNwbqk0l_z2NCmPK8EeRsQg0H9VUCzR25vkcEkDpX-NtkvrZo-ZdaJe_t5FY_PTmfmHxRoK5tVrkzdrq9HpyDbiizkFFyES/s1600/Bollywood+Movie+Not+A+Love+Story+2011+First+Look%252CBanner%252CCast%252CWallpaper%252CStill%252CTrailer%252CCrew%252CMovie+Plot%252CBudget%252CPosters.jpg
ஒருநாள் இருவரும் வசிக்கும் அந்த ப்ளாட்டுக்கு ஜெரோம் மாத்யூஸ் வந்தார். தனது காதலி, வேறொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்தார்.

இதனையடுத்துதான் அந்த விபரீதம் நடந்தது. மரியா சூசைராஜும், ஜெரோமும் இணைந்து அதே ப்ளாட்டில் நீரஜ் க்ரோவரை துடிக்கத் துடிக்க வெட்டிக்கொன்றார்கள். அந்த சடலத்தின் முன்னாலேயே உறவு கொண்டார்கள். பிறகு அந்தச் சடலத்தை பகுதிப் பகுதியாக வெட்டி, பையில் அடைத்து, தூக்கிப் போட்டார்கள். பிறகு போலீஸ் உண்மையை கண்டறிந்து இருவரையும் கைது செய்தது.


மேலே சொல்லப்பட்ட உண்மைக்கதையில் ஒரே ஒரு திருத்தம்  மட்டும் , படத்தில் காதலன் தான் கொலை செய்கிறான், காதலி அதை வேடிக்கை பார்க்கிறாள், அவ்வளவு தான் வித்தியாசம்.


தேவ் டி’ படம் வழியாக புகழின் உச்சத்தில் இருக்கும் மஹி கில், இப்படத்தின் நாயகி, பார்ட்டி சுமாரான ஃபிகர் தான், ஒண்ணும் மோசம் இல்லை.




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2shKa4b_VBDKaPk_kNp2I3rcr-aFEuE_r85C2-6eUn_qjBNe-1mPnaxakW2bzXeO90TZOSqraY9769Tin7syidVXcfMhjZTH9tACcy5-9TGPSyKTn-mduKpYJ8Z8n05EIbcSHV59mmA93/s1600/Not_A_Love_Story_movie_wallpaper_5.jpg

படத்தில் இயக்குநரிடம் சில கேள்விகள்

1. தனது காதலன் ஃபோன் பண்ணும்போது ஹீரோயின் அதை அவாய்டு பண்றா... பல முறை ட்ரை செஞ்ச காதலன் உடனே ஃபிளைட் பிடிச்சு ஸ்பாட்க்கு வந்துடறான்.. ஏன் அட்டெண்ட் பண்ணலை? இப்போ மூடு அவுட் அப்புறம் கூப்பிடுங்கன்னா வேலை முடிஞ்சுதே? ( ச்சே, அநியாயமா ஒரு சீன் போச்சே?)

2. காதலன் காலிங்க்  பெல் அடிக்கும்போது ஹீரோயின் உடனே ஏன் கதவை திறக்கனும்? அவளோட பாய் ஃபிரண்ட்டை டிரஸ் பண்ணச்சொல்லி ஒளிந்து கொள்ளச் சொல்லி இருக்கலாமே? ஏன் கதவை திறக்க லேட்னு காதலன் கேட்டா குளிச்சுட்டு இருந்தேன்னு சொல்லி இருக்கலாமே? ( இனி தப்பு பண்றவங்க நோட் திஸ் ஐடியா - பை ஐடியா மன்னன் அய்யா சாமி  )

3. தன் கண் முன்னே காதலி தப்பு பண்றதை பார்த்து கோபப்பட்ட காதலன் அவனை போட்டுத்தள்ளறது ஓக்கே, ஆனா காதலியை ஒண்ணுமே செய்யலையே? அது ஏன்? நியாயமா அவ மேல தானே கோபமே வரனும்?அட, எதும் செய்யாட்டி பராவால்ல, தப்பு பண்ணுன காதலி கூட இவனும் தப்பு பண்றானே? உவ்வே!!  இதைத்தான் முள்ளை முள்ளால எடுக்கறதுன்னு சொல்வாங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

4. ஹீரோயின் கடை வீதி போய் பட்டாக்கத்தி வாங்கிட்டு வர்றா, அவ வாங்கறது ஒரு சைஸ் கத்தி.   அப்புறம் ஹீரோயினோட கேர்ள் ஃபிரண்ட் சில நாட்கள் கழிச்சு விசிட் பண்றப்ப என்ன இவ்வளவு பெரிய கத்தின்னு கேட்கறாளே அப்போ காட்றது ஒரு கத்தி. அப்புறம் போலீஸ் விசாரணை பண்றப்ப காட்றது ஒரு கத்தி. ஏன்? கண்டிநியூட்டி மிஸ்ஸிங்க்?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1BgXynq5cevtttHye4GBJnSM0al4Q-8LALwmkTCfhgBDY7wzfFo-qITZxr8syHeuXintkr7MGITqWC0mjKsjGXsg1jxUwEmvaY9tCZnX9hSVeziNM5icH19LIlUiUYXenGeMEgxtwpdA/s640/not-a-love-story-movie-stills-3.jpg

5. கொலை நடக்க, பாடியை கட் பண்ண யூஸ் பண்ண கத்தியை டிஸ் போஸ் பண்ணாம வீட்லயே யாராவது ஷோ கேஸ் மாதிரி வெச்சிருப்பாங்களா?

6. கொலை செய்யப்பட்ட ஆளோட பேண்ட் பாக்கெட்ல இருக்கற செல்ஃபோனை எடுத்து அதை அழிக்காம ஹீரோ அதை சும்மா தூக்கி வீசறாரே? அது எப்படி? யார் கைலயாவது கிடைச்சா கடைசியா கால்  யாருக்கு பண்ணுனாங்கன்னு தெரிஞ்சிடாதுங்கற பயம் இல்லையா? அதுக்கு தண்ணிக்குள்ள தூக்கிப்போட்டிருக்கலாமே?( பக்கத்துலயே ஒரு ஏரி ஓடுது. )

7. டெட் பாடியை கண்டம் துண்டமா வெட்டி கேரி பேக்ல போட்டு  அபார்ட்மெண்ட்டை விட்டு தூக்கிட்டு போறப்ப  பேடு ஸ்மெல் அடிச்சிருக்குமே? ஏன் யாருமே அதை கண்டுக்கலை? அப்படி ஸ்மெல் அடிக்காம இருக்க ஹீரோ ஏன் எந்த பர்ஃபியூமும் யூஸ் பண்ணலை?

8. கிட்டத்தட்ட 4 லிட்டர் ரத்தம் வாஸ்பேசின்ல வாஸ் பண்றப்ப வெளியாகுது.. அதை அபார்ட்மெண்ட்ல யாரும் நோட் பண்ணலையா? அது எபப்டி? 



http://3.bp.blogspot.com/_xK1yCysw9ak/TKy4F_p9LYI/AAAAAAAAQRg/cKSPToYPX1k/s1600/mahi-gill-hottest-bikini-pictures-03.jpg

9. டெட் பாடியை டிஸ்போஸ் பண்ண ஹீரோயின் ஃபிரண்ட் கிட்டே கார் வாங்கிட்டு வர்றா.. வேலை முடிஞ்சதும் கார் பேனட்டை வாஸ் பண்ணாம அப்படியே திருப்பி தர்றா. அது எப்படி? ஸ்மெல் காட்டிக்கொடுக்காதா?

10. கொலை செய்ததை நேரில் பார்த்தது தவிர ஹீரோயின் எந்த தப்பும் பண்ணலை, ஆனா என்னமோ அவ தான் கொலையாளி மாதிரி போலீஸ் ஏன் அவளை அப்படி டார்ச்சர் பண்ணுது..?

11. ஹீரோ பொறுப்பான பதவில இருக்கற ஆள், எதிர்பாராத விதமா கொலை நடந்துடுது, ஓக்கே, ஆனா அவர் என்னமோ சைக்கோ மாதிரி அப்படி நடக்க காரணம் என்ன?எதுக்கு தேவை இல்லாம ஓவர் பில்டப்பு?


12. ஹீரோயினை போலீஸ் விசாரணை பண்றப்ப ஹீரோயின் கூலிங்க் கிளாஸ் போட்டிருக்காங்க, அதெப்பிடி  அலோ பண்ணுனாங்க?
 குற்ற வாளியை விசாரணை பண்றப்ப அவன் உண்மை பேசறானா? பொய் பேசறானா? என்பதை அவன் கண்கள் தானே காட்டிக்கொடுக்கும்? விசாரணை அதிகாரி கேள்விகள் கேட்கறப்ப அவங்க முகத்தையே பார்க்காம எங்கேயே பார்த்துட்டு ஸ்டைல் பண்றாங்க, அது எப்படி?

13. பெண் கைதியை மாலை 6 மணிக்கு மேல லாக்கப்ல வெச்சிருக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கறப்ப மிட் நைட்ல எப்படி விசாரண நடக்குது?எடுத்த எடுப்புலயே ஹீரோயினை போலீஸ் ஏன் அப்படி அடிக்குது?


14. ஆரம்பத்துல சினிமா சான்ஸ் தர தன் கற்பை விலை பேசும் ஆளை ஹீரோயின் கோபமா பேசி  ரிட்டர்ன் வந்துடறா, ஆனா அதே கற்பை இன்னொரு ஆளுக்கு தாரை வார்க்கறாளே? அவன் பர்சனாலிட்டி பிடிச்சுப்போனதாலா?






https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn9VvxkM7idEhpwWYMCCiPVlspu6InvfppuDcHVlBCsALHMt50AeY2ZtSSVnR_AqkGpuYqu_Hrii5AwQzF1BoNJ42m9pn1Hde6oQJvUx_0LBn5kEAaj7p6OMUuMYgDSr1uLQTPUft31Dc/s400/Mahi+Gill2.jpg
ஹீரோவாக வருபவர் நடிப்பு ஓக்கே ரகம்.. ஹீரோயின் தனது திறமையை
 பல இடங்களில் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஹி ஹி 

இயக்குநர் படத்தை கிட்டத்தட்ட ஒரு டாக்குமெண்ட்ரி போலவே எடுத்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். நிஜமாகவே கொலை நடந்த அதே அபார்ட்மெண்ட்டில் ஷூட்டிங்க் நடந்தது ஒரு பிளஸ். பின்னணி  இசை இன்னும் பிரமாதப்படுத்தி இருக்கலாம்.


ஹிந்திப்படத்துக்கு விகடனில் மார்க் போடுவதில்லை

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே.

சி .பி  கமெண்ட். - க்ரைம் ஸ்டோரி ரசிகர்கள் பார்க்கலாம்.


விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு ஒரு தகவல்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi37HD9w9foeEDhKClQuNMHobr55zewyLFs3fvG2fnjr9abXam_qk-euhN29i08-7sQ6OI3AFDuHlZyNm1NcDApyZzjoa6ACQsqOfQf0wU2BA9PWawUGLbXqK1IEaMk5g9bkT-HepwSoEs/s1600/maria-susairaj-2.jpg

கொலை வழக்கிலிருந்து தப்பிய மரியா சூசைராஜை தனது படத்தில் நடிக்க வைக்க ராம் கோபால் வர்மா விருப்பம்

டிவி தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் வழக்கிலிருந்து தப்பி வெளியே வந்துள்ள கன்னட நடிகை மரியா சூசைராஜை தனது அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.



http://www.bestactress.info/wp-content/uploads/2011/08/Mahie-Gill-hot-cleavage-photos.jpg

பின்னர் ஜெரோமும், மரியாவும் சேர்ந்து குரோவரின் உடலை 300 துண்டுகளாக வெட்டி காட்டில் போட்டு விட்டனர்.


இந்த கொலை வழக்கில் இருவரும் கைதாகினர் ஜூலை 11 2011 இவர்களுக்கான தண்டனையை மும்பை கோர்ட் அறிவித்தது. அதில், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஜெரோம் கொலை செய்யவில்லை. எனவே அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தடயங்களை அழிக்க முயன்ற குற்றத்திற்காக மரியாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அளிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

மேலும் மரியா ஏற்கனவே 3 ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டதால் அவரை விடுவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து மரியா இன்றைக்குள் விடுதலையாகவுள்ளார்.

இந்த நிலையில் பரபரப்பு இயக்குநரான ராம் கோபால் வர்மா, மரியாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்கப் போவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்வீட்டரில் கூறுகையில், மரியா ஒரு பிரபல நாயகியாக வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் மிகப் பிரபலமான கொலையாளி என்ற பெயர்தான் அவருக்குக் கிடைத்தது. எல்லாம் சரியாக அமைந்திருந்தால் அவருக்கும் ஒரு ரங்கீலா கிடைத்திருக்கும்.

இப்போது அவர் சிறையிலிருந்து வெளியே வரும் நிலை உருவாகியுள்ளது. எனவே எனது அடுத்த படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்புகிறேன் என்றார்.


ஏற்கனவே குரோவர் கொலை வழக்கை அடிப்படையாக வைத்து நாட் எ லவ் ஸ்டோரி என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்கியவர் வர்மா என்பது நினைவிருக்கலாம். இப்போது மரியாவை வைத்து படம் எடுக்க வர்மா தீர்மானித்திருப்பதால் மரியாவின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்குவதாக கருதப்படுகிறது.

 http://reviews.in.88db.com/images/Not-a-love-story-hot-stills/not-a-love-story-hot-still.jpg