Showing posts with label ஹிந்தி. Show all posts
Showing posts with label ஹிந்தி. Show all posts

Friday, March 22, 2019

KESARI (HINDI - சினிமா விமர்சனம்

Image result for kesari movieஇது ஒரு  போர் முனை கதை,. வழக்கமான கதைகளைக்கண்ட ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட கதைக்களம், இது ஒரு உண்மைச்சம்பவம்.


1897 ஆம் ஆண்டு  ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  இந்துகுஷ் மலை அருகே  சரஹர்ஹி போர் சம்பவங்களைத்தொகுத்து அளித்து இருக்கும் படம் தான் கேசரி


ஓப்பனிங் சீனே எம் ஜி ஆர் ஃபார்முலா.கணவனோடு வாழப்பிடிக்காத ஒரு முஸ்லீம் பெண், அவரை விட்டுப்பிரிந்து போனபோது ஒரு கும்பல் அவரைத்துரத்தி வருது.கணவனும் அந்த கும்பல்ல. துரத்துனவங்க பிடியில் மாட்டிக்கிட்ட அந்தப்பெண் கிட்டே “ கடைசி வாய்ப்பு, அவன் கூட வாழ்றியா? இல்லையா? இல்லைங்குது. உடனே கணவன் கையால் வாளால் வெட்டப்பட இருக்கும் தருணம்  நாயகன் எண்ட்ரி


ஹீரோ எண்ட்ரி சும்மா பட்டாசா இருந்த படங்களில் முக்கியமானவை கேப்டன் பிரபாகரன் , ஊமை விழிகள் , வெற்றி விழா . அதே மாதிரி இதிலும் செம எண்ட்ரி

ஹீரோவா அக்சய் குமார் அபாரமான நடிப்பு . 21 சீக்கிய வீரர்களுக்கு தலைமை தாங்கி போரை வழி நடத்தும் பாத்திரம். இந்த 21 வீரர்களைக்கொண்டு 10,000  படை வீரர்களை அழித்தார்கள் என்றால் யாரும் நமப மாட்டார்கள்< ஆனால் அதுதான் நடந்தது. நம்புற மாதிரி அதை திரைக்கதை ஆக்கியதில் இயக்குநரின் வெற்றி

இதில் காமெடி  டிராக் கிடையாது, நாயகியின் ஜெனீலியாத்தனங்கள் , பிக் பாஸ் ஜூக்லித்தனங்கள் கிடையாது, மசாலா கமர்ஷியல் ஐயிட்டங்கள் ஏதும் இல்லை., ஆனால் ஒரு சீன் கூட போர் அடிக்காமல் டெம்ப்போ குறையாமல்  திரைக்கதை பயணிக்கிறது


Image result for kesari movie


நச் டயலாக்ஸ்

1  உன் உயர் அதிகாரியை விட நீ சிறந்தவன் என்ற எண்ணம் உன் மனதில் இருந்தால் நீ நல்ல அடிமை ஆக முடியாது (hindi)


2 முகலாயர்களுக்கு நாம அடிமையா இருந்தோம்,இப்போ ஆங்கிலேயர்களுக்கு.நம்மை நாம் ஆள்வது எப்போது? (hindi)


3 இத்தனை நாளா என்னை ஒரு படை வீரன்னு நினைச்ட்டு இருந்தேன்.இப்பதான் உயர் அதிகாரிக்கு எந்நாளும் நாம் அடிமை என்பதை உணர்ந்தேன் (hindi)


4 நீ என் அருகில் இருக்கும்போது மட்டும் "நேர் கொண்ட பார்வை" பார்க்க முடிவதில்லை,அது ஏன் பெண்ணே !? (hindi)


5 ஒரு போர்வீரன் ட்யூட்டி டைம் ல யூனிபார்ம்ல தான் இருக்கனும். போர் நடக்குதோ ,இல்லையோ அது இரண்டாம் பட்சம் (hindi)


6 படை வீரர்கள் பட்டினியா இருக்கும்போது படைத்தளபதி சாப்பிட முடியாது (hindi)


7 சமூக சேவைங்கறது மனமுவந்து தானா செய்யறது.பலவந்தப்படுத்தி ஒருவரை சேவை செய்ய வைக்கக்கூடாது,முடியாது (hindi)


8 எப்படியும் நீ ஜெயிக்க முடியாது,சரணடைஞ்சுட்டா உயிராவது மிஞ்சும்


போராடறதுன்னா இறுதி வரை போராடனும்.இறுதி மூச்சு இருக்கும் வரை போராடனும்,அதுதான் போர் வீரனுக்கு அழகு (hindi)



சபாஷ் டைரக்டர்

1  ஒரு படை வீரன் தப்பு பண்றான், அவனுக்கு அசைவ உணவு  2 நாட்கள் கட்னு தண்டனை. உடனே மற்ற வீரர்கள் நாங்களும் சாப்பிட மாட்டோம் என அடம் பிடிக்க படைத்தளபதியும் சாப்பிடாமல் இருப்பது  உருக்கமான காட்சி


2   ஆங்கிலேயர்களை எதிர்த்து எழுதபப்ட்ட வசனங்கள்  அக்மார்க் புரட்சி ரகம்

3  படைவீரர்களாக வரும் அனைவரின் நடிப்பும் அருமை

4   திரைக்கதையில்  75% போர்க்காட்சிகளே என்றாலும் போர் அடிக்கவில்லை என்பது ஆச்சரியம்




லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)


1  நம்ம மூன்றாம் கலைஞர் சுமதி என்ற் இயற்பெயர் கொண்ட தமிழச்சி தங்கபாண்டியனை அழகி என பாராட்டி ஓட்டுக்கேட்டது எப்படி தேவை இல்லாத ஆணி என அவங்க கட்சிக்காரர்க்ளாலேயே விமர்சிக்கப்படுதோ அது மாதிரி படத்தில் அந்த  நாயகி வரும் காட்சிகள்  தேவை இல்லாத தாவணி. போர்க்காட்சிகள் ஆக்ரமித்து இருப்பதால் ஒரு ரிலாக்ஸ்க்கு லவ் சீன் இருக்கட்டும் என இயக்குநர் நினைத்து இருக்கக்கூடும், ஆனால் ராங்க் மூவ்


2 இந்தப்படத்துக்கு 8 இசை அமைப்பாளர்கள்., அஷ்டமத்துல சனி. இளையராஜாவா இருந்தா ஒத்தை ஆளு ஆனா துவம்சம் பண்ணி இருப்பாரு. படத்தில் பல +களுக்கு நடுவே பிஜிஎம்  அந்த அளவு பிரமாதம் இல்லை


3   திருநங்கை  மாதிரி தோற்றத்தில் வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது எதுக்கு? மாற்றுத்திறனாளிகள், திருநந்கைகள் இவர்களை வில்லன்களாக காட்டாமல் இருப்பது சமூகப்பொறுப்புணர்வு


4   அந்த  வில்லன் கடும் வெய்யிலில்  பாலைவனத்தில்  போர் புரியும்போது அவருக்கு மட்டும் க்ளோசப் காட்சியில் ஓவர் மேக்கப் துருத்திக்கொண்டு தெரியுது. போர்க்களத்தில்  பவுடர் அடிக்க எல்லாம் டைம் இருக்கா?



சி.பி கமெண்ட் -kesari ( hindi) முழுக்க முழுக்க போர் முனையில் திரைக்கதை பயணிக்கிறது.ஏ சென்ட்டர் பிலிம்.வசனம் ,ஒளிப்பதிவு,நடிப்பு அருமை.பிஜிஎம் இன்னும் பிரமாதப்படுத்தி இருக்கலாம்.அக்சய்குமாருக்கு இது (நிஜமான) 300 கோடி கலெக்சன் படமாக அமையும், ரேட்டிங் 3 / 5


கேரளா கோட்டயம் தன்யா வில் படம் பார்த்தேன். மொத்தம் 8 பேர்தான் ஆடியன்ஸ். டோட்டல் கெபாசிட்டி 468 சீட்ஸ். பாவம் எப்படி கட்டுபடி ஆகுதோ, இது ல ஏசி வேற

Wednesday, July 03, 2013

ENEMMY - சினிமா விமர்சனம்

 

தலையைச் சுற்றி மூக்கை தொடும் கதை. புரிந்து கொள்வதற்குள் ‘போதும் ‌போதும்’ என்றாகி விடுகிறது. நேர்கோட்டில் சொல்லப்பட்டிருந்தால், ஒரு மணி நேரத்தை தாண்டியிருக்காது இந்த 140 நிமிட படம்.

ஆர்.ஜி.என்கிற ராம் கோவர்தன் (அக்ஷய் கபூர்) ஒரு கட்சித் தலைவர். கட்சியின் பணம் ஐநூறு கோடியை, மும்பைக்கு கொண்டுவரும் பொறுப்பு முக்தரிடம் (ஜாகிர் உசேன்) ஒப்படைக்கப்படுகிறது. வழியில்... நான்கு முகமூடி கில்லாடிகள் அதை களவாடி விடுகிறார்கள். களவாடியது, போட்டி தாதா கும்பல் என சந்தேகப்படுகிறான் முக்தர்.



 வெடிக்கிறது இரு தரப்பிற்கும் துப்பாக்கி சண்டை. ‘கேங் வார்’ என சொல்லப்படும் படுகொலைகளை தடுக்க ஏவப்படுகிறார்கள் ‘யூனிட் 9’ காவல் அதிகாரிகள். ஏக்லவ்யா கர்மார்கர் (சுனில் ஷெட்டி), நசீம் ஷேக் (கே கே மேனன்), எரிக் கொலாக்கோ (ஜானி லீவர்), மாதவ் சின்கா (மகாக்‌ஷே சக்ரவர்த்தி) என்னும் அந்த நான்கு பேரும், அதிரடியாக நுழைந்து ரவுடிகளை பந்தாடி, முக்தரை கைதுசெய்து சிறையில் அடைக்கிறார்கள். 



பணம் போன இடம் தெரியாமல், சிபிஐ அதிகாரி யுகந்தர் ஷர்மாவை (மிதுன் சக்ரவர்த்தி), கோவர்தன் வரவழைக்கிறார். தடயங்களை வைத்து, ‘யூனிட் 9’ஐ நெருங்குகிறார் யுகந்தர். விரிகிறது க்ளைமாக்ஸ். வலிக்கிறது நம் மனது!

கே.கே.மேனன், ‘உதயம்’ படத்தில் அசத்திய அதே போலீஸ் வேடம். பின்னுகிறார்! சுனில் ஷெட்டி, நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிரடி அவதாரம் எடுத்திருக்கிறார். மகாக்ஷேவுக்கு, நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். பாராட்டுக்கள். மிதுன் சக்ரவர்த்தி, புத்திசாலி போலீசாகக் காட்டிக்கொள்ள முயற்சிகள் எடுத்திருக்கிறார். பாவம்... முயற்சி எதுவும் பலிக்கவில்லை!

‘இன்றைய சினிமா ரசிகர்கள் புத்திசாலிகள்’ என்பதை நினைவில் கொண்டு, இயக்குனர் அஷு டிரிக்கா அடுத்த படம் இயக்கினால் நல்லது!


ரசிகன் குரல்: முமைத்கான் ‘டான்ஸ்’ மட்டும் இல்லாம இருந்திருந்தா, செத்திருப்பேன் மச்சான்!

மொத்தத்தில்  சொதப்பல்

  • நடிகர் : மிதுன் சக்ரவர்த்தி, சுனில் ஷெட்டி
  • நடிகை : ..ப்ரியங்கா உபேந்திரா
  • இயக்குனர் :அஷு டிரிக்கா



நன்றி - தினமலர்

Saturday, September 01, 2012

JOKER - பாலிவுட் சினிமா விமர்சனம்

http://movies.ndtv.com/images/reviews/joker.jpgஹீரோ நாசாவில் பணி புரியும் ஒரு ஆராய்ச்சியாளர்.வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சி. அவங்களோட எப்படி தொடர்பு கொள்வது? இதை கண்டுபிடிக்கறதுதான் அவர் வேலை.. அவர் பண்ணிட்டிருக்கற இந்த பிராஜக்ட் ஒரு மில்லியன் டாலர் மதிப்பு உள்ளது.. 


ஹீரோவோட அப்பா இந்தியாவுல இருக்கார். அவர் கிட்டே இருந்து ஒரு தகவல்.. சீரியஸ்.. உடனே வரவும்னு.. ஹீரோவுக்கு போக இஷ்டம் இல்லை.. ஆனா ஹீரோயினுக்கு அந்த ஊரை பார்க்க ஆசை. ஏன்னா ஹீரோ ஹீரோயின்கிட்டே தான் ஒரு அநாதைன்னு டகால்டி விட்டிருக்கார்.. உண்மை என்னன்னு தெரிஞ்சுக்க  ஹீரோயினுக்கு ஆசை.. 


பொதுவா ஆம்பளைங்க யார் சொன்னாலும் கேட்க மாட்டாங்க.. ஆனா தன் மனைவி, அல்லது காதலி, அல்லது கேர்ள் ஃபிரண்ட் யாராவது சொன்னா கேட்டுடுவாங்க.. கேட்டே ஆகனும்.. அப்படி கேட்கலைன்னா என்ன ஆகும்?கறது பட்டினி இருந்தவங்களுக்கு தெரியும்.. 


இந்தியா கிளம்பறாங்க.. பாக்ளாபூர் தான் அவங்க ஊர்.. 600 பேர் மட்டும் உள்ள மிகவும் பின் தங்கிய கிராமம் அது.. நோ மின்சாரம், நோ தண்ணீர். அங்கே போன பிறகுதான் தெரியுது ஹீரோவோட அப்பா கலைஞரை விட  திறமையா டிராமா போட்டிருக்காருன்னு.. .


அவர் சீரியஸா எல்லாம் இல்லை.. தான் வாழும் கிராமம் ரொம்ப மோசமான நிலைமைல இருக்கு ..உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி  அதை முன்னேற்றனும்.. அதுக்கு தன் மகன் உதவி செய்யனும்.. இதான் அவர் எண்ணம்.. 




http://bollyspice.com/wp-content/uploads/2012/08/12aug_joker-musicreview02.jpg



ஹீரோ அரசியல்வாதிகளை போய் பார்க்கறாரு.. தூள் விக்ரம் மாதிரி  கோரிக்கை வைக்கறாரு,.. ஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஆத்தோட போக மாட்டான், ஆதாரம் இல்லாம போலீஸ் யாரையும் லாக்கப்ல போட மாட்டான்ன்னு ஒரு பழமொழி இருக்கு, அது மாதிரி ஹீரோ சந்திச்ச அரசியல்வாதி ஆ ராசா மாதிரி தூய்மையான கரங்களுக்கு சொந்தக்காரர்.. வேலை நடக்கலை. 


ஹீரோ ரிட்டர்ன் ஆகி யோசிக்கறாரு.. சிட்டிசன் படத்துல அஜித் அத்திப்பட்டி கிராமத்தை  உலக மக்கள் கவனத்தை திசை திருப்ப ஐடியா பண்ண மாதிரி இவரும் ஒரு ஐடியா பண்றாரு..


 அதாவது வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுல அங்கே வந்து இறங்கி இருக்காங்க அப்டினு ஒரு புரளியை கிளப்பி விடறாரு. உடனே மீடியாவுல இருக்கற பறக்கா வெட்டிகள் எல்லாம் வீடியோ கேமராவை தூக்கிட்டு முதல்வன் படத்துல குவியற மாதிரி குவிஞ்சிடறாங்க..


பூசணிக்காய், தர்பூசணி ( கோசாப்பழம்) , பாகற்காய் இதை எல்லாம் யூஸ் பண்ணி ஏலியன்ஸ் மாதிரி ஒரு ஆளை செட் பண்ணி டிராமா பண்றாங்க.. மிலிட்ரி, போலீஸ் எல்லாம் அங்கே குவிஞ்சுடுது.. என்ன நடக்குது என்பதை காமெடியா சொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க.. 



இந்தப்படத்தை நான் ஈ எடுத்த ராஜ்மவுலி கையிலோ ஷங்கர் கையிலோ கொடுத்திருந்தா பட்டாசை கிளப்பி இருப்பாங்க.. ஏன்னா  சி ஜி ஒர்க் எனப்படும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் படத்துக்கு மெயினா ப்ளே பண்ணறதால அவங்க தான் குட் சாய்ஸ்.

http://timesofindia.indiatimes.com/photo/15376027.cms


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கிராமத்தில் ஹீரோ நுழைந்ததும் அங்கே இருக்கும் அப்பாவி  மக்கள் எல்லாம்  மரத்தின் கிளை நுனியில் அமர்ந்து  அடி பாகத்தை வெட்டுவதும் எல்லாம் பொத் பொத் என கீழே விழுவதும்1980 இல் 7ஆம் கிளாஸ் பாடத்தில் வந்த பழைய காமெடி என்றாலும் சிரிக்க முடிகிறது


2. மின்சாரம் இல்லாத கிராமம் என்பதால் ஒளிக்காக பெரிய பெரிய கண்ணாடித்தொட்டிகளில்  மின்மினிப்பூச்சிகளை விட்டிருப்பது கொள்ளை அழகு..  ஸ்ரீ ராம் ஆல்ரெடி மீரா படத்துல் அந்த மாதிரி காட்டி இருந்தாலும் பார்க்க நல்லா இருக்கு.. 


3. படத்தோட ஓப்பனிங்க் பாடல் காட்சில அந்த மூங்கில்களால் வேயப்பட்ட அரங்கம் அட்டகாசம்.. ஆர்ட் டைரக்டர்க்கு ஒரு சல்யூட்.. அதை ரெடி பண்ண 100 பேர் கொண்ட குழு வேலை செஞ்சாலும் ஒரு வாரம் ஆகி இருக்கும்.. 


4. மீடியாவில் இருந்து மிடி போட்டு வரும் ஜிகிடி மழையில் நனைந்து ஆடுவது செம கிளு கிளு..  அந்த சீனில் கேமரா தனது பணியை செவ்வனே செய்து இருக்கு.. 


5. பாக்ளாபூர் மக்கள் எல்லாம் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட ஆஃப் லூஸ் என்று  காட்டி விட்டதால் பல லூஸ்தனங்கள் செய்வது மாதிரி காமெடி செய்ய ரொம்ப சவுகரியம்.. 


http://image3.mouthshut.com/images/ImagesR/2012/8/Joker-Movie-925642540-5234382-1.jpg
இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள், மார்க்கெட்டிங்கில் சில  யோசனைகள்



1. போஸ்டர் டிசைன் மகா மட்டம்.. படத்தோட போஸ்டர் தான் ஆடியன்சை தியேட்டருக்கு இழுத்துட்டு வரும்.. ஆனா இது சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமா? காமெடி படமா? என்று குழம்பி ரெண்டுங்கிட்டானாக போஸ்டர் அடிச்சிருக்கீங்க..  ஹாலிவுட் படத்தை எதுக்கெல்லாமோ காப்பி அடிக்கிறோம்.. போஸ்டர் டிசைன்ல காப்பி அடிச்சா என்ன? 


2. கோடாலியால மரத்தை வெட்டி எல்லாரும் பொத் பொத்னு கீழே விழும் காமெடி காட்சியில் என்னமோ ஹெலிகாப்டர் தரைல இறங்கற மாதிரி கிழே விழறாங்க.. தலை குப்புற த்தானே விழுவாங்க? படு மோசமான காட்சி அது.. 


3. ஹீரோதான் தன் சொந்த ஊருக்கு வர்றார்..  அப்பாவை பார்க்கறார்.. அவர் தான் முகத்துல சந்தோஷ எக்ஸ்பிரஷன் காட்டனும், ஆனா அவரை விட ஹீரோயின் தான் வாங்குன காசுக்கு மேலயே எல்லாத்தையும் காட்டறாங்க.. ஓவரோ ஓவர் ஆக்டிங்க்.. அண்ணன் அக்‌ஷய் ரொம்ப ரொம்ப அடக்கி வாச்சிங்க்.. சம்பளம் சரியா தரலையா? 


4.  என்னதான் ஹீரோயின் யூ எஸ் ரிட்டர்னா இருந்தாலும் அப்படியா டிரஸ்சிங்க் பண்ணி இருப்பாங்க.. எங்க ஊர் கரகாட்டக்காரிங்க கூட முந்தானையை  அப்பப்ப மூடுவாங்க.. அது என்னமோ பப்ளிக் பார்க் மாதிரி 24 மணி நேரமும் ஓப்பனாவே இருக்கு.. படு கண்றாவி. ( கிளுகிளுப்பே வர்லை யுவர் ஆனர் )


5. ஹீரோ எல்லாரையும் ஏமாத்த வயல்வெளில ஒரு செவ்வக இடம் மார்க் பண்ணி அங்கே விண்கலம் வந்த மாதிரி காட்ட எல்லா புற்களையும் கட் பண்றாரு.. பின் அந்த எல்லை வகுத்த கயிறை அப்படியா லூஸ் மாதிரி விட்டு வைப்பாங்க? 


6. ஹீரோ நாசாவுல ஒர்க் பண்றார்.. மீடியாக்கள் கேமராவுடன் வருது.. அட்லீஸ்ட் முகத்துல ஒரு மரு மச்சம் கூட ஒட்டிக்க துப்பில்லையா? முழு மாறு வேஷம் தான் போட கையாலாகலை.. 


7. ஹீரோவுக்கு எந்த மாமா பெண்ணோ, முறைப்பெண்ணோ இல்லை.. ( 2ம்  1 தான் ) பின் ஏன் தனக்கு மேரேஜ் ஆகிடுச்சு, இவதான் அவன்னு அப்பாவுக்கு அறிமுகம் பண்ணாம ஜஸ்ட் ஃபிரண்ட்னு அறிமுகம் பண்றார்? ஆனா எல்லார் கண் முன்னாலயும் 2 பேரும் ஜோடியா எப்போ பாரு சுத்திட்டே இருக்காங்க.. 



8. நாட்டோட ராணுவம் வந்த பின் வேற்றுக்கிரக வாசி மாதிரி வேஷம் போட்டு காமெடி பண்ணிட்டு இருப்பது மகா எரிச்சல்..  அவங்களும் ஷூட் பண்ணாம என்னமோ  ஜெயமாலினி டான்ஸ் பார்க்கும் ஆர்வத்துடன் வாயை ஆ-ன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க ( ஏன் பழைய உதாரணம்னா. அந்தக்காலத்துல அது ஆச்சரியம், இப்போ எல்லாம்  அது சர்வ சாதாரணம் ஆகிடுச்சு )


9. பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் அந்த கிராமத்துக்கு வந்த பின் ஹீரோ அவங்க முன் கால் மேல கால் போட்டு பேசறது எல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்.. அடக்கி வாசி அண்ணாத்தே.. அண்ணன் அழகிரியே அடங்கி இல்லை? 


10. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டாக நிஜமாவே  ஏலியன்ஸ் வருவது நல்ல சீன் தான்.. ஆனா ஜீன்ஸ் எலும்புக்கூடு டான்ஸ் மாதிரி அது  5 நிமிஷம் ஒரு குத்தாட்டம் ஆடிட்டு பின் விண்கலம் ஏறி தாயகம் திரும்புவது  கேட்கறவன் கேனயனா இருந்தா  கே டி விக்கு ஓனரே கே ஆர் விஜயா தான்னு  ஐ கிருஷ்  சொல்ற மாதிரி இருக்கு 

11. எங்கூர்ல 25 வது படத்துக்கே ஓவரா சலம்பல் பண்ணுவாங்க. அக்‌ஷய் குமாரின் 100 வது படம்னு பட்டாசா போஸ்டர் ஒட்டவேணாமா? அட 100 வது படமா? அப்போ ஏதாவது வித்தியாசமா இருக்கும்னு சில ஏமாளிங்க  வர  வாய்ப்பு இருக்கே? 

12. தமிழ்ல ஜி வி பிரகாஷ் குமார் செம ஃபேமஸ். அவர் ஹிந்திப்படத்துக்கு இசை அமைச்சதை  டி வி விளம்பரங்கள்ல அண்டர்லைன் பண்ணி காட்ட வேண்டாமா?

http://www.bolegaindia.com/images/gossips/akshay_sonakshi_joker_trailer_post_1342084543.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்


 காட்சி ரீதியான மொக்கை காமெடி என முடிவு செஞ்சதால இயக்குநர் வசன காமெடி தேவை இல்லைன்னு முடிவு பண்ணுனது படு முட்டாள்த்தனம். இந்தப்படத்துல கிரேசி மோகனை விட்டுருந்தா தாளிச்சிருப்பாரு.. அவரை தமிழ்ல எழுதச்சொல்லி ஒரு துபாஷை விட்டு ஹிந்தில மொழி பெயர்த்து இருக்கலாம்.. 

1.  உன் மேல இவ்வளவு பாசம் வெச்சிருக்கும் பெற்றோரை விட்டுட்டு உன்னால எப்படி இங்கே ஃபாரீன்ல டைம் பாஸ் பண்ண முடியுது?


2. கண்ணா.. உங்க கிராமம் வளர்ச்சி அடைஞ்சா அதுல எனக்கு என்ன லாபம்? எந்த வேலை செஞ்சாலும் அதுல ஒரு ஆதாயம் பார்க்கறவன் தான் உண்மையான அக்மார்க் அரசியல்வாதி 


3. Hamara mazaak mat udaao"( எங்க சந்தோஷத்தை  கெடுக்காதே)


அய்யய்யோ துபாஷ் - Don't fly our jokes." 


http://www.glamsham.com/music/reviews/images/joker.jpg

சி.பி கமெண்ட் - படம் குழந்தைத்தனமா இருக்கு. அதனால குழந்தைங்களை கூட்டிட்டு போலாம், ஜாலியா சிரிப்பாங்க.. நீங்க இதை இப்படி கேவலமா எடுத்து இருக்காங்களேன்னு சிரிச்சுட்டு வரலாம் .. அக்‌ஷய் குமாரின் 100 வது படம் ஊ ஊ ஊ ஊ - ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன், மொத்தமாவே 36 பேர்தான் இருந்தாங்க ,அதுல 28 பேர் சேட்டுகள், அவ்வ்வ்

Star Cast: Akshay Kumar, Sonakshi Sinha, Prakash Raj, Sreyas 

Talpade, Minisha Lamba

Director: Sirish Kunder

Producer: Farah Khan, Akshay Kumar


Music: G.V. Prakash Kumar

Genre: Adventure Fantasy

http://timesofindia.indiatimes.com/photo/15200153.cmsa



டிஸ்கி -

முகமூடி -சினிமா விமர்சனம்

Friday, July 08, 2011

MURDER -2 - சினிமா விமர்சனம் 18 +

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoxN9VLGMDwY7CxwZeL8O-Myr5nGdsGrPH8HN87Ws-lnoboLaZC_hBwp__Xferu-RE-bMn_IE81Q_u_A10chBM9wUZiyvUNy4OsX7X49R_mSB-D5uv4izgAbFGwRyCQPSM1SfX3h2ucsY/s1600/Murder2.jpg 

நம்ம ஆளுங்க பண்ற பெரிய தப்பே ஒரு படத்தை எப்படி மார்க்கெட் பண்றதுங்கற டெக்னிக் தெரியாம சொதப்பறதுதான்,படத்தை எடுக்க தெரியாம எடுத்து சொதப்பறதைக்கூட தாங்கிக்கலாம்,ஆனா ஒரு படத்தை ரிலீஸ் பண்றப்போ அது என்ன மாதிரி படம்கறதை தெளிவா  சொல்லாம குழப்பிடறதுதான் தாங்க முடியாத கொடுமை

பிரமாதமான படம்னு சொல்ல முடியாட்டியும்,ஓரளவு சுமாரான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் தான் இது. ஆனா மாஸ் ஓப்பனிங்க்க்கு ஆசப்பட்டு இந்தப்பட போஸ்ட்டர் டிசைன்களில்,விளம்பரங்களில் இது ஒரு கில்மா படம்ங்கற மாதிரி ஒரு பில்டப்பை தேவை இல்லாம தூண்டி விட்டுட்டாங்க. (சரி. விட்டுத்தள்ளு.. எதுக்கு எமோஷனல் ஆகறே?)

பிரசாந்த் நடிச்ச அப்பு படத்துல பிரகாஷ்ராஜ் அரவாணி கேரக்டர்ல வருவாரே, அந்த கெட்டப்ல வில்லன்,இவன் ஒரு சைக்கோ கொலைகாரன்.. பெண் போல மேக்கப்,உடை போட்டுக்கிட்டு பெண்களை கொலை பண்ணி கிணத்துல போட்டுடறான்.அவன் ஏன் அந்த கொலைகளை பண்றான், என்ன மேட்டர்?அப்டிங்கறதை படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க. (ஏன்னா கடைசி வரை எனக்கு காரணம் தெரியலை. இந்த லட்சனத்துல எம் ஏ ஹிந்தியாம் )





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXyPfGytP0ORIt_yCQOsQzpLxb-d0Hbn9Y2p_pi81_1TK-oFkfotZ7n6_CX7VkrMlLrjOwU5Zfi9_DDf8g4Du-1glA_5JJalRdZpx0lGjLWLc-4oEj7gd1J0My1Fezx2kC_kZMxpxsgNco/s1600/jacqueline-fernandez-murder-2-stills-8.jpg
மர்டர் முதல் பாகத்துல பாலிவுட் ஏஞ்சலினா ஜூலின்னு தன்னைத்தானே அழைச்சுக்கற( !!!!) மல்லிகா ஷெராவத் கூட கில்மா பண்ணுனாரே. அவர் தான் இதுல ஹீரோ..(emraan hashmi), ஹீரோயின் Jacqueline Fernandez, தயாரிப்பு - மகேஷ்பட்

வில்லனோட வீட்ல பாத்ரூம்ல ரத்தக்கறை பார்த்துட்டு ரேஷ்மா அலறுதே அந்த சீன் செம. பின்னணி இசை இளையராஜா மாதிரியே போட்டிருக்காங்க.. அவர் படத்திலிருந்து சுட்டுட்டாங்களோ என்னவோ?

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0dVciomvRjjUVucPFe4RV1-CDSp8vPqt5t8djXf9SXK9OoYe-IuVUkGrd3GweTn0I1TWVujZKbMsj9da_55gknAN0YiP0fuoGisCV_a6M5anfojMiSASIgccrFCJG1Pvl7SQhVboRSXcs/s640/Jacqueline+Fernandez+Hot+Pics+1.jpg

வில்லனை பெண் போலீஸ் உயர் அதிகாரி விசாரிக்கும் சீன் அப்படியே பேசிக் இன்ஸ்டிங்க்ட் ல இருந்து சுட்டுட்டாங்க.


ஆனா படத்துல பாராட்ட வேண்டிய நடிப்பு வில்லனுக்குத்தான். செமயான ,மிரட்டலான நடிப்பு.. ஆனா திருநங்கையா வர்றவங்க கிட்டே இந்த அளவு கம்பீரம் வருமா? பெண்மையின் நளினமும், அந்த தளுக்கும் மிஸ்ஸிங்க்.. ஒரு வேளை பாத்திரத்தின் சைக்கோத்தனம், கொடூரம் இவற்றை உயர்த்திக்காட்ட வேண்டி இயக்குநர் அப்படி கேரக்டரைசேஷன் பண்ணீட்டாரோ?என்னவோ?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1mGMPi9QPKeLRLnt5q_BjZRoIxG0-r1iNlRVS1qYFR7_yl7YW38ozaneO-WNrkFr6Qt3EfNDMGgOAMQlgASnUCsDl0GtdKsbSRprwxI0EHVVhbHBXE3GPoQIB4gKPGcJkap8bP1G8Tr8m/s1600/m6.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. வில்லன் ஒரு பாழுங்கிணத்துல பிணங்களை சேமிக்கிறான். (அதென்னா டெட் பாடி பேங்க்கா?)2 நாள் ஆனாலே செம ஸ்மெல் அடிக்குமே பல நாட்களா பிண வாடை அக்கம் பக்கம் அடிக்காதா?

2.ஹீரோயினை கண்டபடி தாக்கி (கிட்டத்தட்ட கஜினி படத்துல அசின் அடி வாங்கற மாதிரி )20 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லா கிணற்றுல தூக்கிப்போடறாரே. பாப்பாவுக்கு சின்னதா கால் எலும்பு கூட முறியலையே ஏன்?

3. சரி. அந்த லாஜிக் தான் போகட்டும் கீழே விழுந்த ஹீரோயின் 47 பிணங்கள் தன்னை சுற்றி இருக்கறதை பார்த்ததும் பயத்துல இயக்குநர் சொல்லிக்கொடுத்தபடி அலறுது ஓக்கே. ஆனா ஸ்மெல் தாங்காம முகத்தை ,அட்லீஸ்ட் மூக்கைக்கூட பொத்திக்காம இருக்கே அது எப்படி?அதுவும் 9 மணீ நேரமா. 

4. வில்லனை விசாரனை பண்ண ஒரு பெண் அதிகாரி தெனாவெட்டா  சேர்ல உக்காந்து போஸ் கொடுக்கறாங்க. கொஞ்சம் கூட பாதுகாப்பே இல்லாம அப்படித்தான் அசால்ட்டா ஒரு கொலைக்கைதி அதுவும் சைக்கோவை விசாரிப்பாங்களா?(அவனை சேரோட கட்டிப்போட்டல்ல விசாரிக்கனும்?)

5. வில்லன் அந்த லேடி ஆஃபீசரை பாய்ஞ்சு கை விலங்கால கழுத்தை நெரிக்கும்போது அந்த ஆஃபீசர் தப்பிச்சா போதும்னு பாக்குதே ஒழிய ஒரு போலீஸ் ஆஃபீசருக்கான பாடி லேங்குவேஜ் இல்லையே?

6. க்ளைமாக்ஸ்ல வில்லன், ஹீரோ ஃபைட் ரொம்ப கொடூரம். ஹீரோவைப்போட்டு சட்னி ஆக்க்குன பின்னாடியும்,அண்ணன் அசால்ட்டா எந்திரிச்சு வர்றாரே அது எப்படி?அதே போல செத்துட்டதா நினைச்ச வில்லன் மறுபடி பாய்ஞ்சு வந்து தாக்கறார்.



7. எந்த ஊர் போலீஸ் ஃபங்க்ஹேர் ஸ்டைல்  வெச்சுக்க  பர்மிஷன் கொடுத்தது?

http://mimg.sulekha.com/hindi/murder-2/stills/murder-2-film-030.jpg

போலீஸ் விசாரனை நடைபெறும்போது வசனகர்த்தா நெஞ்சில் நிற்கிறார்


இந்த வண்டி யாருது?

வில்லன் - என் மாமாவுது. 

அவர் பேர் என்ன?

ஞாபகம் இல்ல. அவர் பேரு டைரில எழுதி வெசிருக்கேன்.. ஆனா டைரி வீட்ல வெச்சுட்டு வந்துட்டேன். 

சரி.. வீட்டு அட்ரஸ் சொல்லு. 

சாரி.. அதுவும் எனக்கு ஞாபகம் இல்லை. 

என்னது?உன் வீட்டு அட்ரஸ் கூட உனக்கு ஞாபகம் இல்லையா?


--------------

ஹீரோ - இந்தா. நீ கம்ப்பெனி கொடுத்ததுக்கு பரிசா இந்த ஒரு லட்சம் எடுத்துட்டு கிளம்பு.


என்ன இவ்வளவு தர்றே.?பிளாக் மணியா?

அதைப்பற்றி உனக்கு என்ன?

-------------

நீ இப்போ யார் கிட்டே பேசிட்டு இருந்தே? உன் பாய் ஃபிரண்டா? (BOY FRIEND)


இல்லை..

அப்போ பாய்ல படுக்கற ஃபிரண்டா?

------------

கில்மா ரசிகர்களை சூடேத்துற மாதிரி படத்தோட ஓப்பனிங்க்ல சம்பந்தமே இல்லாம 2 கில்மா சீன்கள் உண்டு. ஆனா சென்சார் விதிகளூக்குட்பட்டது. நம் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டது. அடக்கி வாசி அண்ணாத்தே. 



http://www.viewsbuzz.com/wp-content/uploads/2011/02/Jacqueline-Fernandez-Murder-2-wallpaper-3.jpg

ஈரோடு ஸ்ரீநிவாசா,ஸ்ரீ லட்சுமி ஆகிய 2 தியேட்டரில் படம் ஓடுது. நான் ஸ்ரீநிவாசா தியேட்டர்ல தான் படம் பார்த்தேன். 

சி .பி . கமெண்ட் - க்ரைம் ரசிகர்கள் பார்க்கலாம் ,