Showing posts with label ஹாலிவுட் படம். Show all posts
Showing posts with label ஹாலிவுட் படம். Show all posts

Saturday, March 26, 2011

SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGewYRXApehgg9oWKWg7_ekhMFh9kHWHxt3FAKkhGh4s2Hicgi2J_XCl5DPwFqxuU1Bqg7UWEdix6tNo7wwYJxIVNBXXoUDobgPXp2V8KcVrZW9mtbBAsn_R9lEfw5WLCGNXoyKVzatvE2/s1600/Sucker+Punch+Wallpaper.jpg 

டைட்டிலையும், போஸ்டரையும் பார்த்தாலே சில படங்கள் பார்த்துடலாம்னு நினைக்க வைக்கும்.. ( இல்லைன்னா மட்டும் நீ பார்க்காமயா விடப்போறே..)சில படங்கள் போலாமா? வேணாமா?ன்னு டைலம்மாவை ஏற்படுத்தும்..(அம்மா ஆதரவாளர்கள் மன்னிக்க)

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல இந்தப்படம் ரிலீஸ் ஆனதுமே இந்தப்படம் போக எனக்கு மனசே இல்லைதான்... சாந்தி அல்லது நித்யா படம் ரிலீஸ் ஆகாததால நமீதா இல்லாத மானாட மயிலாட நிகழ்ச்சியை மும்தாஜை வெச்சு அட்ஜஸ் பண்ணுன மாதிரி இந்தப்படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணுனேன்.( சாந்தி அல்லது நித்யா படம் பார்க்க முடியாம ரிட்டர்ன் ஆன ரசிகர்கள் மட்டும் தமிழகம் முழுக்க ஒண்ணே முக்கால் லட்சம் பேராம் # நான் லட்சத்தில் ஒருவன் ஹி ஹி )

சரி.. மேட்டருக்கு வருவோம்..படத்தோட கதை என்ன?ஒரு கில்மா கிளப்.. அதுல நிறைய பொண்ணுங்க மாட்டிக்கறாங்க..அவங்கள்ல 6 பேரு தப்பிக்க நினைக்கறாங்க.. அவங்க முயற்சி வெற்றி பெற்றதா? அல்லது வை கோ நிலைமை மாதிரி ஆச்சா? என்பது தான் கதை..
http://www4.pictures.zimbio.com/gi/Vanessa+Hudgens+Sucker+Punch+Red+Carpet+2010+BEB0p-9mMTGl.jpg
படத்தோட ஓபனிங்க் சீன்ல ஏகப்பட்ட ஃபிகருங்களைப்பார்த்ததும் நம்மாளுங்க மூச்சுக்காத்து கூட விடாம சைலண்ட்டா பார்க்கறாங்க.. ( சத்தம் போட்டு அந்த ஃபிகருங்க கோவிச்சுட்டுப்போயிட்டா..?)அதுல வேற வில்லன் அடிக்கடி பாஸ் வருவார்.. நீ ரெடியா இருந்துக்க.. அவர் உன்னை அடையாம  விட மாட்டார்னு பஞ்ச் டயலாக் சொன்னதால எவனும் வெளில போகவே இல்ல..( போன நேரத்துல சீன் போய்ட்டா..?)

ஒரு ஹால்ல எல்லாரும் வெயிட் பண்றாங்க.. இந்த பொண்ணுங்க எல்லாம் வந்து நிக்கறாங்க..டான்ஸ் நடக்கப்போகுதாம்... (அட போங்கப்பா.. எதுக்கு டான்ஸ்? ஸ்ட்ரைட்டா மேட்டருக்குப்போக வேண்டியதுதானே?ன்னு ஆடியன்ஸ் தரப்புல அவனவன் கமெண்ட் அடிக்கறான் )

ஹீரோயின் டான்ஸ் பண்ணப்போறான்னு ஏகப்பட்ட பில்டப் குடுத்துட்டு ஹீரோயின் கண்ணை மூடி ஒரு கற்பனை உலகத்துல சஞ்சரிக்கறா.. அதுல 3 பயங்கர வில்லன்களை வாள் சண்டை போட்டு கொல்றா...( ஹாலிவுட் விட்டலாச்சார்யா படத்துக்கா வந்தோம்னு அவனவன் செம காண்ட் ஆகறான்.# அதென்ன ? காண்ட் ஆகறது? வை கோ வை கேட்கவும்.. ஹி ஹி )
http://www.flicksandbits.com/wp-content/uploads/2011/03/abbie-cornish-sucker-punch.jpg
முதல் டைம் இப்படி நடந்ததும் ஏதோ டைரக்‌ஷன் டச் போல .. போனாப்போகுது புடவை பறக்குது புடிச்சுக்கோ அப்படின்னு விட்டா .. இதே மாதிரி 4 தடவை டான்ஸ் ஆடறேன்னு சொல்லிட்டு ஒரு ஸ்டெப் கூட ஆடாம இப்படியே காமிக்ஸ் படம் காண்பிச்சா மனுஷனா பிறந்தவனுக்கு கோபம் வருமா? வராதா? சொல்லுங்க.. ( ஹி ஹி எனக்கு எந்த கோபமும் வர்லை..கிடைப்பதை வைத்து சந்தோஷப்படு.. ஓட்டுனவரை ரசி என்பதே என் பாலிசி என்பதால்.. ஹி ஹி )

ஏதோ ஒரு தமிழ்ப்படத்துல நான் ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன், ஆண்டவனைத்தேடுகிறேன் வா வா  அப்படின்னு அம்மா பாடுவாங்களே (அநேகமா ஆயிரத்தில் ஒருவன் என நினைக்கிறேன்) அந்த மாதிரி ஹீரோயின் அடிக்கடி வில்லன் கட்டாயத்தால பாடறாங்க.. நம்மால தாங்க முடியல...

ஹீரோயின் தப்பிக்க போடும் திட்டங்கள் எல்லாம் படு திராபை...ஒரே ஒரு சீனில் ஹீரோயின் இமைகள் இரண்டும் மூடும்போது க்ளோசப் ஷாட்டில் ஒரே ஒரு துளி கண்ணீரை முத்து போல ஓட விடுவது ஒண்டர் ஃபுல் ஷாட்...ஆனா ரசிகர்கள் அந்த ஷாட்டை ரசிக்கற மனோ நிலைலயா இருக்கான்?
http://www.celebdirtylaundry.com/wp-content/uploads/Vanessa-Hudgens-Sucker-Punch.jpg
எதிர்பார்த்த அளவு சீன் இல்லையே என விசனப்பட்ட ரசிகனின் மனதில் தங்கிய வசனம்

1.  வில்லன் - என்னோட கான்செண்ட்ரேஷன் ஃபுல்லா அந்த ஃபிகரை கரெக்ட் பண்றதுலயே இருக்கு.குருடோ, நொண்டியோ கோழியை அமுக்கறதுன்னு முடிவான பிறகு கப்புன்னு அமுக்கிடனும். யோசிச்சுட்டு இருக்கப்படாது.. ( கவுண்டமணி டயலாக்கை பேசறானே..?)

2. இது ஒரு நரகம் மாதிரி இருக்கு.. நான் தப்பிக்கப்போறேன்...

முடிஞ்சா தப்பி.. நானா வேண்டாம்கறேன் .?. வெளில போனா எனக்கு லெட்டர் போடு...

3. சண்டை நடக்கறப்ப அவங்களை சாகடிக்கத்தயங்காதீங்க..ஏன்னா அவங்க ஏற்கனவே செத்துட்டாங்க.. ( ஏதாவது புரிஞ்சுது..? படிச்ச உங்களுக்கே இப்படி இருந்தா பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்..?)

http://www.flicksandbits.com/wp-content/uploads/2010/12/sucker-punch-image-1.jpg
இயக்குநருக்கு சில கேள்விகள்

1. கொழந்தைப்பசங்களுக்கு அம்புலிமாமா கதை எடுக்கறதுன்னா ஹாரிபாட்டர் மாதிரி எடுங்க வேணாம்னு சொல்லலை.. சீன் படம் எடுக்கற மாதிரி பில்டப் குடுத்து ஏமாத்தாதீங்க.. ஏன்னா ஆண் பாவம் பொல்லாதது.. அவ் அவ் .. ஒரு ஆணோட கஷ்டம் இன்னொரு ஆணுக்குத்தான் தெரியும்.. ஹி ஹி 

2.தப்பிக்க பிளான் போடும் ஹீரோயின் அந்த பிளான் போட்ட மேப்பை அப்படியே லூஸ் மாதிரி வில்லன் வந்து பார்க்கட்டும்னு அழிக்காம விட்டுட்டு வந்துடுவாளா?

3.கற்பனை உலகத்துல சஞ்சரிக்கற ஹீரோயின் கவுதமி கணக்கா இருக்காங்க.. அவங்க கடோத்கஜன் மாதிரி இருக்கற அரக்கனை , டைனோசரை எப்படி சர்வ சாதாரணமா வெல்றாங்க..?

4. காது வலிக்கற மாதிரி டப டப னு சுட்டுட்டே இருந்தா மனுஷன் தியேட்டர்ல உக்காந்திருக்க வேணாமா?

5. லட்டு மாதிரி 6 ஃபிகர் இருந்தும் என்ன பிரயோஜனம்? உங்களுக்கு ஏதாவது பிரயோஜனம் இருந்திருக்கலாம்.. அது உங்க பர்சனல் மேட்டர்.. ரசிகனுகு என்ன யூஸ்..?
http://cdn.buzznet.com/media/jjr//2009/08/vanessa-sp/vanessa-hudgens-sucker-punch-vancouver-02.jpg
டிஸ்கி -1.  இங்கே இருக்கற ஸ்டில்ஸ்களைப்பார்த்துட்டு சி பி ஏமாத்தறான்.. படத்துல சீன் இருக்கும் போல .. போய்த்தான் பார்ப்பமே என நினைப்பவர்களுக்கு.. ரஜினி டயலாக் தான்.. உங்களை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது.. ஹி ஹி


டிஸ்கி 2 - - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி 3 - சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம்