Showing posts with label ஹரிப்ரியா. Show all posts
Showing posts with label ஹரிப்ரியா. Show all posts

Monday, August 05, 2013

PILLA JAMINDAR - சினிமா விமர்சனம்

 

ஒண்ணே  முக்கால் லட்சம் கோடி அடிச்ச குரூப் எல்லாம் கமுக்கமா  இருக்கும்போது ஆஃப்டர் ஆல் 5000 கோடி சொத்துக்கு அதிபதி ஆகப்போகும் ஜமீன் தார் வாரிசு ஹீரோ  ஓவரா  அலப்பறை பண்றார் .அளவுக்கதிகமா  வகுப்பறை ல பாடம் நடத்தும் டீச்சரும் , வாழ்க்கைல அலப்பறை பண்ற டார்ச்சரும்  நல்லா  வாழ்ந்ததா சரித்திரம் இல்லை அப்டிங்கற பழமொழிக்கு  ஏற்ப   அவருக்கு ஒரு ஆப்பு காத்திருக்கு . 


 அதாவது அவரோட   தாத்தா  உயில் ல ஒரு கொக்கி வெச்சுட்டு போயிடறார் . டக்னு கழட்ட அது   ஃபிகரோட   ஜாக்கெட் கொக்கி இல்லை . சட்ட சிக்கல் நிபந்தனைக்கொக்கி . அதாகப்பட்டது  சில கண்டிஷன்ஸெல்லாம் போடறார் . ரொம்ப ரொம்ப கஷ்டமான அந்த கண்டிஷன் ஸ் என்னான்னா 

1. ஹீரோ  காலேஜ்ல டிகிரி முடிக்கனும் ( டிகிரியையே முடிச்சுக்கட்டக்கூடாது , படிச்சு பாஸ் ஆகனும் ) 


2. காலேஜ் சேர்மென் எலக்‌ஷன்ல ஜெயிச்சு   பதவில நிலைக்கனும் 


இந்த கேவலமான கண்டிஷன்ஸை  ஹீரோ எப்படி எதிர் கொள்ளறார் என்பதே  கோமாளித்தனமான திரைக்கதை



ஹீரோ நான் ஈ பட ஹீரோ வான நானி . அந்தப்படத்துல  பிரமாதமா நடிச்சவர் இந்தப்படத்துல சொதப்ப 2  காரணங்கள்  


1.  திரைக்கதை  புளிச்சுப்போன மாவு


2. இளைய தளபதி  விஜய் , புரட்சித்தளபதி விஷால்  மாதிரி  எல்லாம் இமிடேட் பண்ணி நடிச்சு சின்னத்தளபதி பரத் ரேஞ்சுக்கு கேவலமா  இவர் இறங்கிப்போனது ( பரத்துக்கு எங்காவது எந்த  மூலைலயாவது  ரசிகர்கள் ரசிகைகள்  இருந்தால் மன்னிக்க ) 


டான்ஸ் மூவ்மெண்ட்ல  விஜய் , காமெடி காட்சிகள் ல விஷால் இதுதான் நானியோட டார்கெட் . ஆனா அதுல என்ன காமெடின்னா டான்சில்கூட ஓக்கே , காமெடி சீன்கள் ல படு கேவலமான பாடி லேங்குவேஜ் , முடியல 


ஹீரோயின் 2 பேரு. ஆந்திராவில  எப்பவும் 2 ஹீரோயின்ஸ் தான் . படத்துல  ஒரு கதையும்  உருப்படியா இல்லைன்னாக்கூட  தமிழன் தேடித்தேடி தெலுங்குப்படம் பார்க்கக்  காரணமே   உருப்படியா  2  ஃபிகராவது  படத்துல மேம்போக்கா  , பதவிசா ,இளசா,  சொகுசா இருப்பாங்கன்னுதான் ( இந்த பத்தில தமிழன்னு சொன்னது  என்னைத்தான்  ஹிஹி )



ஒரு ஹீரோயின்   பிந்து மாதவி . மன்மதன் படத்துல  சீன் காட்டுச்சே  அந்த பாப்பா . ஸ்லீவ்லெஸ்   டாப் போட்டுக்கிட்டு   படம் பூரா ஆங்காங்கே வந்து சம்பந்தமே இல்லாம கெக்கே பிக்கேனு  சிரிச்சுட்டுப்போகுது.  ஹீரோவுக்கு
பாப்பா லவ்வரா ? ஜஸ்ட் கேர்ள் ஃபிரண்ட்டா ?  டேட்டிங்க் கேர்ளா? எதுவுமே டீட்டெயிலா இல்லை . ( டீட்டெயில் சொல்லிட்டா மாட்டும் நீ என்ன செய்யப்போறே? ) 


 மெயின் ஹீரோயின் ஹரி ப்ரியா . பாப்பா கையில் 10 லட்சம் ரூபா குடுத்து   சிரி அப்டினு சொன்னாக்கூட   உம்முனு இருக்கற உப்புமா  ரகம் போல . எப்போ பாரு உம்முன்னு இருக்கு  . சிரிச்சாலே பார்க்க சுமாரா தான் இருக்கும் உம்மானாம்மூஞ்சி ஃபிகருங்க எல்லாம் உம்முன்னு இருந்தா எப்ப டி?  மற்ற படி  லோ கட்  , லோ ஹிப்  , ஸ்லோ மோஷன் , லூஸ் மோஷன் காட்சிகள் எல்லாம் உண்டு . கண்டு பயன் பெறுக 




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிச்ச  தம்பிக்கு எந்த ஊரு படத்தைத்தான்   நகாசு வேலை  பண்ணி   படம் எடுத்து இருக்கோம்கறதை   மூச்சு விடாதது 



2.  படத்துல  இருக்கோ இல்லையோ  ஏகப்பட்ட சீன்கள் இருப்பது மாதிரி 2 ஹீரோயின்களை வெச்சு  கிளாமர்  ஸ்டில்ஸோட  போஸ்டர் ரெடி பண்ணினது 





 இயக்குநரிடம்  சில  கேள்விகள்:


1. என்ன தான் ஜமீன் தாரா  இருந்தாலும் நைட் படுக்கும்போது நைட் டிரஸோ , லுங்கி , வேட்டி, கைலி யோதானே கட்டிட்டு படுப்பாங்க .  நீட்டா பேண்ட் ,சர்ட்  போட்டு  டக் இன் பண்ணி டை கட்டி  கோட் சூட் போட்டுட்டு  ஷூ கூட கழட்டாம ஃபுல் மேக்கப்போட   எந்த கேனயனாவது  டெய்லி படுத்து  தூங்குவானா? ஓப்பனிங்க் சீன்லயே இந்த சொதப்பல் 


2.   ஹீரோ  ஏதோ  கோபத்துல  ஒருஆளை  கன்னத்துல  வெட்டுக்காயம்  வர்ற அளவு தாக்கிடறார்.   ஃபாரீன்ல போய் சிகிச்சை பண்ணாலே  அந்த காயம்  மறைய 6 மாசம் ஆகும். ஆனா அடுத்த நாளே   மழு மழுனு   அவர் கன்னம் இருக்கு , என்னய்யா  கண்ட்டிநியூட்டி பார்த்து கிழிச்சீங்க . இந்த  லட்சணத்துல   படத்துக்கு அசிஸ்டெண்ட்  டைரக்டர்ஸ்  24 பேராம் 



3.  ஒரு  காட்சில  ஹீரோ  வெங்கடாசலபதி  ஒயின்ஷாப்ல மீட் பண்ணலாம்கறார். ஆனா காட்சில  பார்வதி ஒயின் ஷாப் போர்டு இருக்கு 



4. ஹீரோ கைல காசு இல்லை . ஏ டி எம் கார்டு டி ஆக்டிவேட்டட் . ஜமீன் பணம் கிடையாது . மாசம் ரூ 2,500  மட்டுமே   கல்விச்  செலவுக்கு  தரப்படுது. அடிக்கடி   ஹீரோ பணமே இல்லைனு புலம்பறார்  . ஆனா   ஒருசீன்ல  5லட்சம் செலவு  பண்ணி  டான்ஸ் பார்ட்டி வைக்கறார் . அவர் என்ன டி எம் கே எம் எல் ஏவா?

5. சிக்கிமுக்கி கல்பாட்டு  மியூசிக் அச்சுஅசல்   அழகியதமிழ்மகன் பாட்டான “ மதுரைக்குப்போகாதடி” பாட்டுஇசை   உல்டா




மனம் கவர்ந்த வசனங்கள்

1. நான்   பேசனும்னு நினைக்கும்போதுதான்பேச முடியும்  .  நீ  பேசநினைக்கும்போது   முடியாது. ஏன்னா  நான் பாஸ்


2.  நான் பீட்சா டைப், நீ   தாம்பூலம் டைப், நம்க்குள்ளே  சிங்க்   ஆகாது


3. எத்தனை  சேவல் கூவுனாலும்  , கூடுனாலும்  முட்டை போடாத  கோழி அது , ஹி ஹி



4. பொட்டு  வைக்கக்கூட  மறக்கற பொண்ணுங்க  மருதாணி  வைக்க  ஆரம்பிச்சுட்டா   காதலிக்கறா -னு அர்த்தம்



5.  எக்சாம் ஹாலில் -

  டேய், எனக்கு ஒரு பிட் கொடு



 இதென்ன டீக்கடை   பஜ்ஜியா? எடுத்துத்தர?



6. சிங்கம்  காட்ல இருந்தாலும்  , ஜூ வில் இருந்தாலும்  வேட்டையாடித்தான்  சாப்பிடும்



7. நம்பிராஜனைப்பார்த்தியா?


 பக்கத்துல ஏதாவது  ஒயின்  ஷாப் இருக்கா பார்த்தியா?




8.  அம்மா  , தர்மம் பண்ணுங்கம்மா, ஆண் குழந்தையாப்பொறக்கும்

 அட போப்பா  , என் புருஷன்  ஓடிப்போய்  7வருஷம் ஆகுது , இவன்  வேற கடுப்பைக்கிளப்பிட்டு 


9. நாங்க வாழ நினைச்ச   எங்க வாழ்க்கையையும்   சேர்த்து நீ வாழனும்  ,இதுதான் எங்க  ஆசை



10.  வெற்றில  என்ன  இருக்கு?  ஒரு முறை   தோற்றுப்பார் .  இந்த  உலகமே  உனக்கு  புரிபட ஆரம்பிக்கும் 



11.  யோவ்,குளிக்கறியா?

 இல்லை , சைக்கிளுக்கு பஞ்சர் போட்டுட்டு இருக்கேன் , ஆத்தங்கரைல வந்து என்ன கேள்வி இது ராஸ்கல் ?






ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- தெலுங்கு படத்துக்கு விகடன்ல மார்க் போடறதில்லை , இருந்தாலும் ஒரு ஒப்பீட்டுக்காக   36



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =  2.5  / 5


சி பி கமெண்ட் - பத்து பைசாவுக்குக்கூட படம் தேறாது , டிவி ;ல போட்டாக்கூட யாரும்  பார்க்கவேணாம்